செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020
தளி எத்தலப்ப மன்னர் 1750 முதல் 1800 வரை இந்தப் பகுதியில் வாழ்ந்த பாளையக்காரர். ஆங்கிலேயரை எதிர்த்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்று இவரும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர். 1801 ஏப்ரல் 23 இல் ஆண்ட்ரே கேதீசு எனும் ஆங்கிலேயரைத் தூக்கிலிட்ட இந்த பாளையத்துக்காரப் போர் வீரனின் நினைவு கூறும் வகையில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 2017 ல் மே 19 அன்று உடுமலையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் நமது மண்ணின் மைந்தரும் கால்நடை துறை அமைச்சரும் கலந்து கொண்ட நிகழ்வில் தளி எத்தலப்ப மன்னர் குறித்து விரிவான விளக்கமான சமூகப்போராட்ட நூல் வெளியிடப்பெற்றது. அன்று அமைச்சர் பெருமக்களும், பாராளுமன்ற உறுப்பினரும் தளி எத்தலப்ப மன்னருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வாக்குறுதியும் வழங்கினர். ஆனால் இன்றுவரை எந்தவிதமான செயல்பாடுகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆகவே விடுதலைப்போராட்ட வீரர்களை நினைவு கூறும் இந்நன்நாளில் அவருக்காக உத்தரவிட்ட மணி மண்டப அறிவிப்பை வெறும் அறிவிப்பாக இல்லாமல் இந்த பகுதி நடைமுறைப்படுத்த ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக