கேள்வி : எந்தெந்த காரணங்களுக்காக நம் வங்கி கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகின்றன?
என் பதில் :
என்ன..சார் .... நீங்க எல்லார்ட்டையும் மிட்டாய் கேள்வி கேட்டுட்டு என்-ட்ட மட்டும் எகனாமிக்ஸ் கேக்குறீங்க?
கடன் மறுப்புக்கு பல்வேறு காரணங்களும் தாக்கங்களும் இருக்கக்கூடும். சில நேரங்களில் இது முகவரி சரிபார்ப்பு முடிவில்லாமல் இருப்பது போன்ற ஒரு சிறிய சிக்கலாக இருக்கலாம். சில நேரங்களில் இது மோசமான கடன் மதிப்பீடு (bad credit rating) போன்ற தீவிரமான சிக்கலாக இருக்கலாம்.
வருமானம் குறைவாக இருந்தால்(low income): உங்கள் வருமானம் போதுமானதாக இல்லை என்று வங்கி உணரும்போது, கடன் வழங்குவதைத் தடுக்கலாம். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறன், கடன் வாங்குபவருக்கு இருப்பதை வங்கிகள் உறுதிப்படுத்த விரும்புகின்றன. அதனால் தான் வங்கிகள் வருமான ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் குறித்த விரிவான ஆவணங்களை கேட்கின்றன.
மோசமான கடன் மதிப்பீடு: மோசமான கடன் மதிப்பீடு என்பது ஒரு வங்கி கடனை மறுப்பதற்கான பொதுவான காரணம். உதாரணமாக, ஒரு சிபில் மதிப்பெண் 300-900 மதிப்பெண்களுக்கு இடையில் இருக்கும். ஒரு நபருக்கு 750க்கு மேல் இருந்தால் நல்லது என்று கருதப்படுகிறது. 750 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற நபர்களுக்கு 79% கடன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று சிபில் கூறுகிறது.
கடன் மதிப்பீட்டில் பிழைகள்(errors in credit ratings): விரிவான கடன் அறிக்கையை பெற்றவுடன் அதை நன்றாக சரி பார்க்க வேண்டும். அதில் பிழைகள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். உதாரணமாக, நீங்கள் செலுத்தி முடித்த கடன் சில சமயங்களில் நிலுவையில் இருப்பதாக காட்டலாம். இது போல் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை கடன் மதிப்பீடு நிறுவனதிற்கு சென்று சரி செய்ய வேண்டும்.
கடன் இல்லையென்று சொல்வதற்கு இதுதாங்க காரணம் ..நான் வைச்சுகிட்ட வஞ்சகம் பண்ணறேன் ...
நன்றி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக