கேள்வி : வாழ்க்கையில் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களை எப்படி கண்டுபிடிப்பது?
என் பதில் :.
இது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு…இதை பொது படுத்துவதை நான் விரும்பவில்லை.
நியாமாகவும் நேர்மையாக இருப்பவர்கள் விளம்பர படுத்தி கொள்வதில்லை, எவன் ஒருத்தன் அதை அடிக்கடி நான் அப்படி பட்டவன் என்று சொல்கிறானோ அவன் அவ்வாறு நடந்து கொள்வதில்லை.
பொதுவாக திருட்டுத்தனம், ஏமாற்று தனம் செய்பவன், நம்மிடம் அவ்வாறு செய்ய மாட்டான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
உங்களிடம் மற்றவர்களை பற்றி புறணி பேசுறவன் உங்களை பற்றியும் பேசுவான்.
நண்பர்களுக்கு உதவி செய்யும் போது, அதை நட்புக்காக மட்டும் செய்ய வேண்டும். அதில் லாபம் வைத்தால் அவ்வளவு தான். அவன் தான் உங்கள் அடுத்த எதிரி.
உங்களுக்காக மட்டும் உதவி செய்பவன், வெளியில் சொல்ல மாட்டான், அப்படி சொல்பவன் பொய் சொல்கிறான்.
எவ்வளவு இயல்பாக நடித்தாலும், எதோ ஒரு இடத்தில் போலி தனம் வெளிப்படும், அதை கண்டுபிடித்த பிறகு விலகி இருப்பது நமக்கு நல்லது.
யாரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கூடி இருந்தாலும் கொஞ்சம் விலகி இருக்க கற்று கொள்ள வேண்டும்….
காட்டில் மான் கூட்டமாக இருந்தாலும் எப்பொழுதும் ஒரு எச்சரிக்கை உணர்வோடு இருக்கும், ஒரு அசைவிற்கும் கூட ஓட தயாரா இருக்கும்.
ஒரு ரௌடி யாரையும் நம்ப மாட்டான், எப்போது யாரால் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரியாது.
ஆனால், நாம் கொஞ்சம் அசட்டையாக இருப்போம்…நம் நண்பன் தானே, நம் சொந்தக்காரன் தானே, நம் தம்பி தானே என்று…
எப்போதும் Survival Instinct அவசியம்…
Detached attachment is perhaps the highest form of diplomacy...
பாசமாக இருப்பதையும், அன்பாக இருப்பதையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள். பாசத்தில் ஒரு பயமும், சார்ந்து இருக்கும் மன நிலையும் ஏற்படும். அன்பில் அப்படி எதுவமே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக