கேள்வி : படிக்கும் பிள்ளைகளின் 2020 வருடத்தின் நிலை என்ன?
என் பதில் :..
படிக்கும் மாணவர்களுக்கு இந்த வருடம் ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்துள்ளது..
தனக்கு யார் வகுப்பாசிரியர் என தெரியாமல் வாட்ஸ் ஆப் குட்மார்னிங் தினம் போடும் தனியார் பள்ளி மாணவர்கள்
.தான் எப்படி தேர்ச்சி பெற்றேன் என்ற குழப்பத்தில் பல அரசு பள்ளி மாணவர்கள்.
பத்தாம் வகுப்பு தேர்வில் பரிச்சை இல்லாததால் மாணவிகளை விட முதன்முறையாக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி!.
தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வு வைத்து ,முதல் காலாண்டை முடித்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழியாக கல்வி அரசு பள்ளிகளில் பாடம் என தொடங்கி உள்ளது.இதில் எத்தனை மாணாக்கர்கள் பார்த்தனர் என்பது தெரியாது.
தினம் புத்தகப்பை, சாப்பாடு டப்பா, தண்ணீர் குடுவையென நொந்த குழந்தைகள், தற்போது எப்படா பள்ளிக்கு செல்ல முடியும் என ஏக்கத்துடன் தெருவை வெறித்து பார்த்து கொண்டுள்ளார்கள், காரணம் அம்மாக்களின் தொல்லை அதிகம் என போராடும் நிலையில் குழந்தைகள்.
Pre KG,LKG,UKG குழந்தைகள் நேரடியாக ஒன்றாம் வகுப்பில் கையை வளைத்து மற்றோரு காதை தொட்டால் சேர்க்கை என்ற நிலை.
இவ்வளவு விடுமுறை இருந்தும் வெளியே சென்று விளையாட முடியாமல் தவிக்கும் குழந்தைகள்.
நீட் தேவையா, இல்லையா என்பது மாறி இந்தாண்டு அது நடக்குமா,நடக்காதா என்ற குழப்பம்.
தனிக்குடித்தனம் நடத்தும் வேலைக்கு போகும் பெற்றோரில் யார் விடுப்பெடுத்து குழந்தைகளை கவனிப்பது என தினம் சண்டை.
இறுக்கமான மனநிலையில் பதின்ம வயது பள்ளி மாணவர்கள்.
வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க நினைத்த மாணவர்கள் இந்த வருடம் போகலாமா,வேண்டாமா என்ற குழப்பம்.
அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியேதும் இன்றி இருந்தாலும், சம்பளம் கிடைத்தாலும் இந்த விடுப்பு பயணற்றதாகி விட்டதே என வருத்தம்.மேலும் இந்த கல்வி ஆண்டு 2021 ஜுன் வரை தொடர வாய்ப்பு அதிகம்.ஆசியர்களுக்கு ஐயோ வடை (ஆண்டு விடுமுறை )போச்சே என்ற நிலை.
கைபேசியை பார்த்து பார்த்து கண்கள் பூத்துப்போச்சு என மாணவர்கள் புலம்ப தொடங்கி விட்டனர்.
கல்லூரி , பள்ளி பஸ்கள் ஓடாமலே பாதி கல்வி ஆண்டு சென்ற நிலையில் பள்ளி,கல்லூரி வாழ்க்கை கைபேசியில் ஒருசாராருக்கும், ஒரு வேலை சாப்பாடு பள்ளியில் உறுதி என்பது மாறி கிராமத்தில் சரியான உணவின்றி சுற்றும் மாணவர்கள்.
கலைக்கல்லூரியில் அடிக்கடி நடைபெறும் தேதி குறிப்பிடாமல் மூடுவது IDC (Indefinitely Closed) பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பிரபலமாகி போச்சு.
விடியலை நோக்கி மாணவர்கள்!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக