ஆவலப்பன் பட்டி ஜமீன்..
முல்லை ஆதவன் நாட்குறிப்பு : 2020-08-10
================================
1976 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆவலப்பன் பட்டி ஜமீன் பற்றி நான் கேள்விப்பட்டேன்
அந்த ஜமீனின் அரசியாக இருந்த தமயந்தி அம்மா வாழ்ந்த வீடு அது – அங்கே நான் சென்றிருந்த போது தான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன் – அங்கே செல்லும் போது அது அப்படியான ஒரு வீடு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை
.
அது ஆறு தொட்டிக்கட்டு கொண்டிருந்த பெரிய வீடு -பெரிய பெரிய கலை வேலைப்பாடு கொண்ட தூண்கள் – பெரிய சுற்றுச் சுவர்கள் என்றெல்லாம் இருந்தன ஆனால் சில ஆண்டுகளிலேயே வாரிசுகளின் பாகப் பிரிவினைகளால் சுருங்கிப்போய் விட்டது- சில பகுதிகள் வேறு கைகள் மாறி அழிக்கப்பட்டும் போய் விட்டன . அவ்வப்போது தமயந்தி இராணி பற்றிய சில வழக்காற்றுச் செய்திகள் – சில பாடல்கள் – சில நிகழ்ச்சிகள் என்று கேள்விப்பட்டதை அவ்வப்போது தொகுத்து வைத்திருக்கிறேன். வரலாற்று ஆதாரங்களாக பெரிய அளவில் ஏதுமில்லை
ஆனாலும் ஆவலப்பன் பட்டி ஜமீன் பற்றிய வரலாறு தெரிந்துகொள்ள தேடிக்கொண்டிருந்தேன் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1982 வாக்கில் மெக்கன்சி ஆவணங்களில் சில செய்திகள் இருப்பதைக் கண்டறிய முடிந்தது. தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு செய்த ஆவணத்தொகுப்பில் இருந்து வம்சாவளி செய்திகள் அறிய முடிந்தது. அவற்றின் வழியான வரலாற்று உண்மைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் ஒரு பின்னணி நிழலை வடிவமைத்துக் கொள்ளலாம்
==========================
மெக்கன்சி ஆவணப்படுத்திய கைபியத்துகளின் அடைப்படையில் ஆவலப்பம்பட்டி ஜமீன் அரசர்கள் 1318 ஆம் ஆண்டு தொடங்கி 1745 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 15 அரசர்கள் 397 ஆண்டுகள் பட்டத்தில் இருந்திருக்கிறார்கள் -
=============================================
என்னுடைய தொடர் ஆய்வின் செல்வழியில் 1745 முதல் 1835 வரை ஏறத்தாழ நான்கு அரசர்கள் பட்டம் தரித்திருக்கிறார்கள் , பெரிய வல்லகொண்டம நாயக்கர், சொதேய வல்லகொண்டமநாயக்கர், சின்ன வல்லகொண்டம நாயக்கர், என்பவை அவர்கள் பெயர்கள் என்று தெரிகிறது -1835 ஆம் ஆண்டில் முத்துவல்லமகொண்டநாய்க்கர் பட்டம் ஏற்கிறார் அவருடைய மனைவி வெள்ளையம்மா - முத்துவல்லமகொண்டம நாய்க்கர் இளமையில் இறந்துபோகிறார்- அதனால் வெள்ளையம்மாவே தன் மகன் வல்லகொண்டம நாய்க்கர் வயதுக்கு வரும் வரை அதிகாரத்தில் இருக்கிறார் - பிறகு வல்லமகொண்டமநாயக்கர் ஆட்சிக்கு வருகிறார் - அவருடைய மனைவி இராஜம்மா - இவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை - ஒரே மகள் அவர் பெயர் தமயந்தி
அவரை மரிகந்தை ஊரைச் சேர்ந்த நாராயணசாமி என்பவ்ருக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார்கள் - வல்லகொண்டாபுரம் என்னும் ஊரையும் உருவாக்கித் தருகிறார் வல்லகொண்டம நாயக்கர் = அந்த ஊரில் இருந்தகொண்டு ( தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆவலப்பம்பட்டி ஜமீனை நிர்வாகம் செய்கிறார் தமயந்தி-
தமயந்தியின் தொடர் வாரிசுகள் பற்றிய தகவல்களும் ஓரளவு சேகரித்திருக்கிறேன் -----------------
...................................
தமயந்தி இராணி பற்றிய செய்திகளைப் பிறிதொரு பதிவில் எழுதுகிறேன்
ஆவலப்பன் பட்டி ஜமீன் வம்சாவளி
01 சொதேய நாய்க்கர்
= 49 -ஆண்டுகள் ஆட்சி
02 மேற்படியார் மகன் -குமார சொதேய நாயக்கர்
= 38 - ஆண்டுகள் ஆட்சி
03 மேற்படியார் மகன் – பெரிய சோதேய நாயக்கர்
= 36 - ஆண்டுகள் ஆட்சி
04 மேற்படியார் மகன் – ஆவல சோதேய நாயக்கர்
= 29 - ஆண்டுகள் ஆட்சி
05 மேற்படியார் மகன் – பங்காரு சோதேய நாயக்கர்
= 24 - ஆண்டுகள் ஆட்சி
06 மேற்படியார் மகன் – ஆவலப்ப நாயக்கர்
= 30 - ஆண்டுகள் ஆட்சி
07 மேற்படியார் மகன் – சோதேய நாயக்கர்
= 19 - ஆண்டுகள் ஆட்சி
08 மேற்படியார் தம்பி – குமார சோதேய நாயக்கர்
= 23 - ஆண்டுகள் ஆட்சி
09 மேற்படியார் மகன் – ராம சோதேய நாயக்கர்
= 35 - ஆண்டுகள் ஆட்சி
10 மேற்படியார் மகன் – நாகைய சோதேய நாயக்கர்
= 32 - ஆண்டுகள் ஆட்சி
11 மேற்படியார் மகன் – சின்ன சோதேய நாயக்கர்
= 27- ஆண்டுகள் ஆட்சி
12 மேற்படியார் மகன் – வேலாயுத சோதேய
நாயக்கர் = 18 - ஆண்டுகள் ஆட்சி
13 மேற்படியார் மகன் – குமாரபட்ட சோதேய
நாயக்கர் = 15 - ஆண்டுகள் ஆட்சி
14 மேற்படியார் மகன் – ராம சோதேய நாயக்கர்
= 22 - ஆண்டுகள் ஆட்சி
15 .மேற்படியார் தம்பி – ஆவலப்ப நாயக்கர்
மெகன்சி ஆவணங்கள் கைபியத்து மற்றும் அடைப்படையில் தமிழ்நாடு தொல்பொருளியல் ஆய்வுத்துறை வெளியிட்ட தகவல்கள் இருந்து பெறப்பட்ட விவரம்
=======================================
ஆவலம்பட்டி ஜமீன்தாரருக்கு அளிக்கப்பட்ட விருதுகள்
======================================
பல்லக்கு உபசாமரம் சுறுட்டி, சூரியபாண அனுமந்த டால், மகர டால், கெருட டால், பஞ்சவர்ண டால், சிவசங்கர டால், சந்திரகாவி டால், பச்சகுடை, ரணமகணம், ரணபாஷிக்கம், நிகளம், சாமதுரோகர வெண்டையம், வீரகட்டாமணி, வீர வெண்டையம், கொத்து சறப்பணி, முத்தொட்டி, பச்சோசொட்டி, கலிகுதுறாயி, ஆனைமேலம்பாரி, ஒட்டகை மேல் பேரிகை, குதிரைமேல் டப்பா, யெருதுமேல் தம்மட்டம் இவை முதலான விருதுகள் ( பிரிதுகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது )
================================
மெக்கன்சி பற்றிய ஒரு குறிப்பு
காலின் மெக்கன்சி ( 1754-1821 ) ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றியவர் = இந்தியாவிற்கு வந்து 1777 முதல் பதினைந்து ஆண்டுகள் இராணுவப் பணியில் இருந்தார். கோயமுத்தூர், திண்டுக்கல் பகுதிகளில் திப்பு சுல்தானுக்கு எதிரான போர்களில் ஈடுபட்டிருந்தார் அந்தக் காலகட்டத்தில் இந்த நிலபப்குதிகளின் வரைபடங்களையும் மக்கள் வாழ்வுச்சுழல்களையும் பதிவு செய்ய முயன்றார் பின்னர் அதுவே அவருடைய தனி ஆர்வமிக்க செயற்பணியாக அமைந்துவிட்டது 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.
தொடக்கத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயங்கள், நம்பிக்கைகள் செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை ஆயிரக்கணக்கான தகவலாளிகளின் செவி வழிச் செய்திகள் மூலமும் உள்ளூர்களில் கிடைக்கும் ஆவணங்கள் மூலமும் தொகுத்தார் அந்தக் கால கட்டத்தில் உணரப்பட்டதை விடவும் அவருடைய பணியின் சிறப்பு பிற்காலத்தில் வெகுவாக உணரப்பட்டது
அவர் தொகுத்த பல்லாயிரக்கணக்கான் ஆவணங்கள். செவிவழிக் குறிப்புகள், கல்வெட்டுக்கள் . சுவடிகள் ஆகியவை அவர் மறைவுக்குப் பிறகு அரசாஙகத்தால் கையகப்படுத்தப்பட்டன
------------------------------------------------------------------
மெக்கன்சி ஆவணங்கள் சென்னை கீழ்த்திசைச்சுவடிகள் நிலையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் டி வி மகாலிங்கம் அவற்றின் சில பகுதிகளை ஆய்வு செய்து வெளியிட்டார் – தொல்பொருளியல் துறை சார்பில் அறிஞர் நாகசாமி சில நூல்களை வெளியிட்டார் தொடர்ந்து பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்
அவருடைய ஆவணங்களுள் பாளையப்பட்டு நிர்வாக அமைப்பு வரலாறு பற்றிய பல செய்திகள் மிக முக்கியமானவை
பாளையங்களின் வரலாறு பற்றி போதுமான எழுத்துவடிவ ஆவணங்கள் இல்லாத நிலையில் பாளையக்காரரகளின் குடும்ப வரலாறு என்று அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், பாளையக்காரர்களிடம் வாய்வழித் தகவல்களை அவர் பதிவு செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக