திங்கள், 17 ஆகஸ்ட், 2020


கேள்வி : தனிக்குடித்தனம் மகிழ்ச்சி தருவதாக இன்றைய பெண்கள் நினைக்கிறார்கள், ஆனால் தனிக்குடித்தனம் தான் இன்றைய கள்ளக்காதல், விவாகரத்து பிரச்சினைகளுக்கு காரணம் எனவும் கூறுகிறார்கள். எது சரி?


என் பதில் :உங்கள் கேள்வியின் ஒரு பகுதிக்கு என்னால் விடையளிக்க முடியும்.

என் வெளிநாடுவாழ் நண்பர் மஹேந்திரன் அவர்களின் மனைவி  ராஜேஸ்வரி  ·லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுது வசிக்கிறார் ..கூட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர் ..அவரின் பகிர்வு ..உங்களுக்காக 


தனிக்குடித்தனம் தான் மகிழ்ச்சி என இன்றைய பெண்கள் நினைக்கிறார்கள். இதற்கு


இந்த காலத்தில் மாமனார், மாமியாரோடு இருப்பதே கூட்டுக் குடும்பம் என்கிறார்கள். நான் என் சிறுமிப்பருவத்திற்கு flashback செய்து பார்க்கிறேன்.


என் தாத்தா வீட்டில் 6 மகன்கள், 2 மகள்கள். இவர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்ந்த காலங்கள் உண்டு.


ஒவ்வொரு மகனும், வேலைக்கு வந்தபின், சம்பளத்தை தாத்தாவிடம் தான் கொடுக்க வேண்டும், ஒரு 3–4 வருடம் கழித்து கல்யாணம் முடிப்பார்கள். மருமகள் தன் கொழுந்தன், நாத்தனார் என சேர்ந்துதான் இருக்க வேண்டும்.


ஆண்கள் எல்லாம் hall இல் உறங்க, பெண்கள் உட்புற அறைகளில் ஒன்றாக உறங்குவார்கள். மருமகளின் நகை, சீதன சாமான்களை அத்தைகள் உபயோகப்படுத்தலாம். என் சிறுவயது photo வில் அத்தை, எங்கம்மாவின் அட்டிகையில், புடவையில் இருப்பார்.


என் அம்மா, டிகிரி முடிக்காத போதே திருமணம் முடிந்ததால், அப்பப்ப தாத்தா, பாட்டி அவரை கேலி செய்வார், அத்தை நகைப்பார்கள் (அவர்கள் இருவரும் Msc),


என் அம்மா பெரும்பாலும் அடுப்படியில் தான் இருப்பார். என் அ்அப்பா, தன் சம்பளத்தில் ஒருமுறை எங்கம்மாவுக்கு புடவை வாங்கி, தாத்தாக்கு தெரியாமல் கொடுக்க, வீட்டில் கண்டுபிடித்து ரகளையானது, ‘பெண்டாட்டி பேச்ச கேட்கிறயா’ என.


என் அம்மா தன் degree ஐ முடிக்க நினைத்தாலும், அனைவருக்கும் சமையல், வீட்டு வேலை என உழன்றார், விறகடுப்பில் சில நேரம் கரியில் சூடுபட்டு அழுவார் (gas cylinder இத்தனை பேருக்கு கட்டுப்படியாகாது, மேலும் அவர் மிகவும் வசதியாக வளர்ந்தவர், அந்த காலத்தில் கட்டிக் கொடுத்தால் தலையிட மாட்டார்கள்)


என் அம்மாவிடம் கடுமையாக இருந்த தாத்தா, பாட்டி அத்தைகள் என்னிடம் மிக அன்பாக இருப்பார்கள், என் அப்பாவிற்கு அடுத்த மகன், என் சித்தப்பாக்கு ஒரு school teacher ஐ மணமுடித்தார்கள். என் சித்தி வீட்டில், ‘மூத்த மருமகள எப்படி நடத்தறாங்க பாரு, நீ பேசாம எங்க கூட இரு’ என தூபம் போட, என் சித்தப்பா-சித்தி வேறு வீடு சென்றனர்.


என் இரு அத்தைகள் திருமணம் வரை என் அப்பாவின் சம்பளம் முழுக்க தாத்தா கையில்தான், கூட்டுக்குடும்பம்தான்.


அம்மா அடிக்கடி அழுவார். 30 வயதிலேயே, ஆர்த்ரடிஸ் வந்தது, வலது கை 60% மட்டுமே நகரும். நான் 4 ஆம் வகுப்பு வரும் வரை அதாவது ஒரு 10 வருடம் என் அம்மா-அப்பா-நான் தனியாக எங்குமே சென்றதில்லை. என் தந்தை நன்றாக சம்பாதித்தும், எனக்கோ, அம்மாவுக்கோ, எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை. பிறகு transfer வர, சுதந்திர காற்றை சுவாசித்தோம்.


எல்லா மகன்களும் என் அம்மாவின் நிலை தன் மனைவியருக்கு வராமல் இருக்க, வேறு ஊர், மாநிலம் என மாறி சென்றனர்.


தாத்தா தான் இறக்கும் வரை, அப்படியேதான் அதிகாரம் செய்பவராக, மருமகள்களை ஏளனம் செய்பவராக, தன் மகன்களின் சம்பளத்தில் தனக்குதான் உரிமை என்பவராக இருந்து, மடிந்தார்.


அவர் இறந்தபின், என் பாட்டியை எல்லாரும் அரவணைத்து பார்த்துக்கொண்டோம், நல்ல கதியில் என் மகள் பிறந்தபின், இறைவனடி சேர்ந்தார்.


கடைசி காலத்தில் என் அம்மா கைபிடித்து அழுதார், நான் உன்னை கொடுமைப்படுத்தியதற்கு மன்னித்துக்கோ என்று. காலம் கடந்த மன்னிப்பு, போன இளமையும், அந்நியோன்மையான வாழ்க்கையும் என் பெற்றோருக்கு திரும்பி வருமா?


எனக்கு மாப்பிள்ளை பார்த்த போது என் அம்மாவின் ஒரே நிபந்தனை, சிறிய குடும்பமாக இருக்கும் பையன்தான் வேண்டும் என.


சொல்லுங்கள் என் தாய் சொன்னது தவறா? அவர் பட்டது நான் படக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வுதான் காரணம்.


கூட்டுக் குடும்பங்கள் மருமகள்களை கடுமையான சூழ்நிலையில் தள்ளுகின்றன். தன் படிப்பு, தன் வேலை என இருக்கும் பெண்கள் அதை விரும்புவதில்லை.


இது சரியா தவறா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இதுதான் யதார்த்தம். Just stating what is happening, not passing any judgement.


மற்றபடி இந்த கள்ளக்காதல் செய்யும் கோணல் புத்திக்காரர்கள், மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. அவர்கள் கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிய்த்துக் கொண்டோ, பெரியோர் அறியாமலோ, வேறு உறவை நாடமாட்டார்களா என்ன?


Edit- பதிலில் என் தாத்தாவை மோசமாக சித்தரித்தது போல இருந்தது. என் தாத்தா இன்னொரு dimension உண்டு, அவர் ஒரு நேர்மையான customs officer, எல்லா மகன், மகளையும் நல்ல நிலையடைய வைத்தார். ஓய்வுக்கு பிறகு நம்ம traffic ராமசாமி போல பொதுநல வழக்கு தொடர்வார். ஆக்கிரமிப்பு அகற்றுதல், அங்க இருந்த ஏழைகளுக்கு பட்டா வாங்கிக் கொடுத்தல் என. பல local leaders தொடர்பில், எதிரிகளையும் சம்பாதித்தார். இன்று நாங்கள் வளமாக இருக்க, ஆணிவேர் அவரே! ஆனால் வீட்ல சர்வாதிகாரம் தான். என் அத்தைகள் இப்போது பாந்தமாக இருப்பார்கள், என் பிரசவத்தில், திருமணத்தில் அவர்களும் உதவினார்கள். வயது அனைவரையும் மாற்றியது. என் அம்மா நலம்,

 நன்றி...வாழ்த்துக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக