திங்கள், 31 ஆகஸ்ட், 2020

வருமானவரி பாதிப்பு யாருக்கு அதிகமாகும்.

 கேள்வி :  நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்கை சரியா? இதானால் வருமானவரி பாதிப்பு யாருக்கு அதிகமாகும்.

என் பதில் :

பதினெட்டு வயது நிரம்பிய சொத்துக்குரியவர் யார் ஒருவரும் யாருக்கு வேண்டுமானாலும் தகுதியின் அடிப்படையில் எந்தவித பிரதிபலனும் பெறாமல், தானம் கொடுக்கலாம். தந்தை மகன் இவர்களுக்கிடையில் நடந்த தனமாக இருந்தாலும் தானம் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்போதே தானம் பெற்றவர் மேற்கண்ட சொத்தைப்பெற சம்மதம் தெரிவிக்க வேண்டும். மாறாக, தானம் பெற்றவர் அந்த தானத்தை ஏற்க மறுத்தால், பதியப்பட்ட தானப்பத்திரம் செல்லத்தக்கதல்ல. மேலும் இந்த தனபாத்திரம் முந்தய சட்டப் படி தானம் ஏற்பவர் சம்மதமின்றி பதியப்பட்டுவிட்டாலும் மகனானவர் தான ஏற்புப்பத்திரம் தயார் செய்து தானம் கொடுத்தவர் உயிருடன் இருக்கும் போதே பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இதனால் வருமானவரி பாதிப்பு இருவருக்குமே கிடையாது. ஆனால், தானப்பத்திரம் பதிவதற்கான 8 % முத்திரைத்தாள் கட்டணம், 4 % பதிவுக் கட்டணம் மற்றும் செலவுத்தொகை முழுவதும் திரும்பப்பெற இயலாது. சொத்து கைமாறியதும் செல்லாது. முந்தைய நிலையிலே சொத்து தந்தையிடமே இருக்கும்.

சிவக்குமார்..V .K  
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681


சனி, 29 ஆகஸ்ட், 2020

வைராக்கியம்தான் வசந்தகுமார்.......

 வைராக்கியம்தான் வசந்தகுமார்.......

(அதிஷா)


விஜிபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அரசியலிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தார் வசந்தகுமார். விஜிபிக்கு அது பிடிக்காமல் வசந்தகுமாரை மும்பைக்கு மாற்றல் கொடுத்து வேறு ஊருக்கு அனுப்ப திட்டமிட்டனர். அரசியலை விட்டுவிட்டு இங்கேயே வேலை செய்யலாம் என இன்னொரு வாய்ப்பும் கொடுத்தார்கள். வசந்தகுமார் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். பத்தாண்டுகள் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து ஒரே நாளில் தூக்கியெறியப்பட்டார். அது அவரை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். எவ்வளவு விசுவாசமாக இருந்தும் என்ன எஞ்சியது என்கிற கேள்வியே… இனி எங்கும் வேலை பார்க்கப்போவதில்லை சுயதொழில்தான் என்று முடிவெடுக்கச்செய்தது. அந்த வைராக்கியம்தான் வசந்தகுமார். அதுதான் அவரை வியாபாரத்தில் முதலிடத்தை பிடிக்க செய்தது.


அடுத்து வந்த நாள்களில் பசி பட்டினிதான். குடும்பத்தின் உதவிகளைக்கூட வைராக்கியத்தோடு பெற மறுத்துவிட்டார். சைதாப்பேட்டையில் எப்போதும் திறந்தே கிடக்கும் கூரை கொண்ட ஒரு குடிசைவீட்டில் ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறார். ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் வெறும் வயிற்றோடு சாலைகளில் படுத்து உறங்கியிருக்கிறார். விஜிபிக்கே திரும்பவும் சென்று வேலைக்கு சேர்ந்தவிட நண்பர்கள் சொன்னபோதும் வைராக்கியத்தை விடவில்லை. வேறு சில நிறுவனங்கள் அழைத்தபோதும் மறுத்துவிட்டார். தன் முடிவில் உறுதியாக இருந்தார். அந்த வைராக்கியம்தான் வசந்தகுமார். வெறும்வயிற்றோடு திரிந்தாலும் எதற்காகவும் யாருக்காகவும் தன்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர்.


பின்னாளில் ஒரு சிறிய கடையாக வசந்த் அன்கோவை ஆரம்பித்து வயர் நாற்காலிகள், கட்டில் பீரோ, ரேடியோ டிவி எல்லாம் டீலர்ஷிப் எடுத்து தவணைமுறையில் விற்க ஆரம்பிக்கிறார். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் சிறிய டீலராக இருந்தபோதும் சாலிடேர் அவருக்கு பெரிய அளவில் தோள்கொடுத்து உதவுகிறார்கள்.


படிப்படியாக வளரத்தொடங்கிய நேரம்… ஒனிடா டிவி மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக இருந்தது. ஒனிடாவிடம் டீலர்ஷிப் எடுத்து தன் கடையில் வியாபாரம் பண்ணிவிட ஆசைப்பட்டார். அது அத்தனை சுலபமில்லை என்பதை அறிந்திருந்தார். சிறிய கடை வைத்திருப்பவர். சைக்கிளில் சென்றுதான் பெரிய நிறுவனங்களை சந்திப்பார். எளிமையான உடைகளைதான் அணிந்திருப்பார். அதனாலேயே சின்ன சின்ன நிறுவனங்கள் கூட டீலர்ஷிப் கொடுக்க தயங்குவார்கள், பெரிதாக மதிக்கமாட்டார்கள். (பின்னாளில் எப்போதும் கோட் அணிய காரணமும் அதுதான்.)


இருப்பினும் நம்பிக்கையோடு ஒனிடா அலுவலகத்துக்கும் டீலர்ஷிப் கேட்டு செல்கிறார். மேனேஜரை சந்திக்க அனுமதி கேட்டு தினமும் ஒனிடா அலுவலகத்துக்கு சென்றுவிடுவார். ஆனால் அந்த மேனேஜர் வாய்ப்பே தரவில்லை. இருப்பினும் தினமும் தவறாமல் சென்று சந்திக்க வாய்ப்பு கேட்டு அமர்ந்திருப்பார். திறக்கப்பாடத எந்தக்கதவையும் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பதன் மூலம் திறப்பதுதான் வசந்தகுமாரின் பாணி. பத்து நிமிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கிடைத்தால போதும் எப்படிப்பட்டவருக்கும் தன் மீது நம்பிக்கை வரும்படி செய்துவிடுவார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்வும் அப்படி உருவாக்கிய நம்பிக்கையில் எழுந்ததுதான். தன் மீதான நம்பிக்கையை காப்பதற்காக எதையும் செய்யவும் இழக்கவும் தயங்காதவர் அவர். வசந்த் அன் கோ லோகோவில் இடம்பெற்ற Trust and Quality தான் வசந்தகுமார்.


அந்த ஒனிடா மேனேஜரோ இவரை நாளைக்கு நாளைக்கு என அலைகழித்திருக்கிறார். சும்மாவே தன் சீட்டில் அமர்ந்திருந்தாலும் இவரை சந்திக்காமல் தவிர்க்கிறார். எத்தனையோ வாரங்கள் ஓடுகிறது. இந்த மேனேஜர் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறார் என்பதை புரிந்துகொண்டவருக்கு கோபம் வந்துவிட்டது. ஒருநாள் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் ஆவேசமாக மேனேஜர் அறைக்குள் நுழைந்துவிட்டார்.


‘’இனி உங்களை சந்திக்க அனுமதி கேட்டு இங்கே வரமாட்டேன். ஒனிடா இல்லாமலும் என்னால் பிஸினஸ் பண்ணமுடியும். இப்படி என்னை தினமும் அலைகழிக்கிற நீங்க ஒருநாள் என்னுடைய அலுவலக வாசலில் வந்து காத்திருப்பீர்கள். அன்றைக்கு நான் உங்களை சந்திக்கிறேன்.’’ என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பிவிட்டார். அந்த மேனேஜர் அன்றைய நாளில் நிச்சயமாக கேலியாக சிரித்திருப்பார். யாருக்காய் இருந்தாலும் அப்படித்தான் தோன்றும்.


ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்டம் மாறிவிட்டிருந்தது. ஒனிடாவுக்கு போட்டியாக ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் களத்திற்கு வந்துவிட்டன. ஒனிடா மார்க்கெட்டை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டிருந்தது. வசந்த் அன் கோ வோ சாம்சம்,எல்ஜி என டீலர்ஷிப் எடுத்து ஒவ்வொரு மாதம் பல ஆயிரம் டிவிக்களை விற்க ஆரம்பித்திருந்தார். ஒனிடா நிறுவனம் வசந்த் அன் கோவோடு டீலர்ஷிப் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். அந்த மேனேஜர் வசந்தகுமாரை சந்திக்க அவருடைய அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார்.


தோல்விகள் கண்டபோதும் அரசியல் ஈடுபாட்டை யாருக்காகவும் விட்டுக்கொடுத்திடாதவர். தோல்விகளில் இருந்து மேலெழுந்த கடினமான உழைப்பாளி. சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதவர். லாபமும், வாய்ப்புகளும் தற்காலிகமானவை, சுயமரியாதை ஒன்றே நிரந்தரமானது என்பதை வாழ்வின் வழி காட்டியவர். டிவி ப்ரிட்ஜ் மாதிரி ஆடம்பரமான விஷயங்களை மிடில் கிளாஸ் மக்களுக்கும் கிடைக்க வழிவகுத்துக்கொடுத்தவர். போட்டிகள் நிறைந்த சூழலில் எப்படி எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவது என்பதை தானே செய்துகாட்டியவர். என்னை போல Zero Backup மனிதர்களுக்கெல்லாம் பெரிய முன்மாதிரி. அதனால்தான் அந்தக்காலம் மட்டுமல்லாது இந்தக்காலமும் வசந்த் அன் கோ காலமாக இருந்தது.


வசந்தகுமாருக்கு அஞ்சலிகள்.....

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

கேள்வி : கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் எவ்வாறு உதவுகிறது?

 கேள்வி : கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் எவ்வாறு உதவுகிறது?


என் பதில் :.

இப்பொழுதெல்லாம் என்னை போன்ற  வங்கி மேலாளர் உங்களுக்கு கடன் வழங்குவதற்கு எந்தவித சலுகைகளை அல்லது அறிமுகத்தையோ அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.


உங்களது சொத்து மதிப்பு வங்கி பரிமாற்றம், செலவு செய்யும் விதம் மற்றும் ஊர் முழுக்க வாங்கிய கடன்கள், வீட்டுக் கடன் , நகை கடன், கடன் அட்டை விபரம் மற்றும் வரி விவரம் போன்ற பணம்சார்ந்த , பணம் சாரா அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து உங்களுக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் எத்தனை சதவிகிதம் வட்டியில் வழங்கலாம் என்ன ரிஸ்க் உள்ளது என்பதை ஆராய்ந்து இறுதி முடிவை எட்டுவதற்கு சிபில் ஸ்கோர் உதவுகிறது.


900 என்பது டாப் ஸ்கோர்.


இவர் நல்ல கடனை பெறுவதற்கு தகுதியானவர் கேட்கும் தொகையை அவரது சம்பள விவரத்தின்படி ஐம்பது மாத ஊதியங்களை கடனாக பெற தகுதி உள்ளவர் . இந்த வாடிக்கையாளரை நம்பலாம். இவருக்கு கடன் கொடுத்தால் ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிடலாம்.க


800–850 ஸ்கோர் உள்ளவர்கள் நல்ல வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் சில பணம் நடவடிக்கைகளில் தவறி உள்ளதால் சில நிபந்தனைக்கு உட்பட்டு அவர் கேட்கும் தொகையை வழங்கலாம் ரிஸ்க் உள்ளதால் விதிக்கப்படும் வட்டியுடன் ரிஸ்க் ஃபேக்டர் வட்டியை இணைத்து விதிக்கலாம். நம்பலாம். முதலுக்கு மோசமில்லாத ஆசாமி.


மேற்கண்ட விகிதத்தில் உங்களை 300 முதல் 900 புள்ளிகள் கொண்ட அளவுகோலால் உங்களை அளந்து அதிக மதிப்பெண் பெறுபவர் தக்கவைக்க வங்கிகள் முயற்சி செய்யும் . அவருக்கு கடன் தொகையை வழங்கும். வட்டி விகிதத்தை குறைத்தாவது அல்லது சலுகை தந்து கடன் வழங்கி தக்க வைத்துக் கொள்ளும்.


இந்த அளவுகோலை நிதி நிறுவனங்களும் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களும் ஒரு நபரின் கடன் பெறும் தகுதியை நிர்ணயிப்பதில் பயன்படுத்திக்கொண்டு கடன் வழங்குகின்றன . மேலும் இந்த அளவுகோல் தற்போது புதுப்பிக்கப்பட்டு சிபிள் 2.0 என்ற புதிய அளவுகோலும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


இந்த சிபில் மதிப்பெண்ணை நீங்கள் உயர்த்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவதில்லை . மேலும் பிறர் நினைத்தாலும் அதை அதிகப்படுத்த இயலாது. எனவே கடன் பெற்று அதை உரிய நேரத்தில் திரும்ப செலுத்துபவர் , சரியான விதத்தில் பல்வேறு கடன்களை பயன்படுத்துபவர், நல்ல நிதி ஒழுக்கத்தை கடைபிடிக்கிற வரைக்கும் இந்த சிபில் அளவுகோல் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு வேண்டும் நிதி வசதியை பெற்றுத்தர நிச்சயம் உதவும்.


இதுவரை வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் எந்த ஒரு கடனும் பெறாத ஒருவர் கடன் பெற இந்த அளவீடு உதவுமா? என்ற வினா எழும். இது மாதிரியான பழைய மற்றும் புதிய நபர்களுக்காகத்தான் இந்த இரண்டாவது அளவுகோல் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாதிரியான புது ஆட்களை கண்காணிப்போடு கடன் தகுதியை அடிக்கடி ஆய்ந்து அளவிட்டு கடன் வழங்கப்படும்.


அப்ப… எப்படி சார் ஒரு சில ஆட்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு ஓடி விட்டனர் என்று கேட்கத் தோன்றும்…..அவுங்க ஸ்கோர் என்னாச்சி?….கேள்வி கேக்காதீங்க…. அவங்க எங்க முன்னாடி மலையளவு நிற்கும்போது நாங்க ஒரு அடி அளவுகோலை வைத்து என்னைக்கு அளந்து முடிகிறது? அதனால பார்த்து பார்வையாலயே அளந்துட்டோம்னு சொல்லுவாங்க.


சிபில் தனி நபர் கடனுக்குதான். மத்ததுக்கு ப்ராஜெக்ட் அப்ரைசல்..

நன்றி 

சிவக்குமார்..V .K  
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...

WHATSAPP.. :9944066681


கேள்வி : எந்தெந்த காரணங்களுக்காக நம் வங்கி கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகின்றன?

கேள்வி : எந்தெந்த காரணங்களுக்காக நம் வங்கி கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகின்றன?


என் பதில் : 

என்ன..சார் .... நீங்க எல்லார்ட்டையும் மிட்டாய் கேள்வி கேட்டுட்டு என்-ட்ட மட்டும் எகனாமிக்ஸ் கேக்குறீங்க?


கடன் மறுப்புக்கு பல்வேறு காரணங்களும் தாக்கங்களும் இருக்கக்கூடும். சில நேரங்களில் இது முகவரி சரிபார்ப்பு முடிவில்லாமல் இருப்பது போன்ற ஒரு சிறிய சிக்கலாக இருக்கலாம். சில நேரங்களில் இது மோசமான கடன் மதிப்பீடு (bad credit rating) போன்ற தீவிரமான சிக்கலாக இருக்கலாம்.


வருமானம் குறைவாக இருந்தால்(low income): உங்கள் வருமானம் போதுமானதாக இல்லை என்று வங்கி உணரும்போது, ​​கடன் வழங்குவதைத் தடுக்கலாம். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறன், கடன் வாங்குபவருக்கு இருப்பதை வங்கிகள் உறுதிப்படுத்த விரும்புகின்றன. அதனால் தான் வங்கிகள் வருமான ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் குறித்த விரிவான ஆவணங்களை கேட்கின்றன.


மோசமான கடன் மதிப்பீடு: மோசமான கடன் மதிப்பீடு என்பது ஒரு வங்கி கடனை மறுப்பதற்கான பொதுவான காரணம். உதாரணமாக, ஒரு சிபில் மதிப்பெண் 300-900 மதிப்பெண்களுக்கு இடையில் இருக்கும். ஒரு நபருக்கு 750க்கு மேல் இருந்தால் நல்லது என்று கருதப்படுகிறது. 750 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற நபர்களுக்கு 79% கடன்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று சிபில் கூறுகிறது.


கடன் மதிப்பீட்டில் பிழைகள்(errors in credit ratings): விரிவான கடன் அறிக்கையை பெற்றவுடன் அதை நன்றாக சரி பார்க்க வேண்டும். அதில் பிழைகள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். உதாரணமாக, நீங்கள் செலுத்தி முடித்த கடன் சில சமயங்களில் நிலுவையில் இருப்பதாக காட்டலாம். இது போல் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை கடன் மதிப்பீடு நிறுவனதிற்கு சென்று சரி செய்ய வேண்டும்.

கடன் இல்லையென்று சொல்வதற்கு இதுதாங்க காரணம் ..நான் வைச்சுகிட்ட வஞ்சகம் பண்ணறேன் ...

நன்றி ...

சிவக்குமார்..V K ...... 
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...
WHATSAPP.. :9944066681



வியாழன், 27 ஆகஸ்ட், 2020

 கேள்வி : Overdraft வசதி என்றால் என்ன ..? 

அதன் பயன்கள் ..!!!!!!

என் பதில் : 


வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் நீங்கள் பணம் எடுக்கலாம்: அதுதான் Overdraft வசதி!!


திடீரென்று உங்களுக்கு பணம் தேவைப்பட்டு, உங்கள் வங்கிக் கணக்கு காலியாக இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பணம் கேட்பீர்கள், அல்லது அலுவலகம் அல்லது வங்கியில் (Bank) கடன் வாங்குவீர்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்களா அல்லது வங்கி உங்களுக்கு கடனை வழங்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நீங்கள் தனிப்பட்ட கடனை (Personal Loan) பெற்றாலும், அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.


அத்தகைய சூழ்நிலையில், ஓவர் டிராஃப்ட் (Overdraft) எனப்படும் வங்கி வசதி நமக்கு துணையாக வருகிறது. இது ஒரு அற்புதமான விஷயம், இதன் மூலம் உங்கள் கணக்கில் பூஜ்ஜிய இருப்பு (Zero Balance) இருக்கும்போது கூட உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். கொஞ்சம் வட்டி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். ஓவர் டிராஃப்ட் அநேகமாக அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NFBC) வழங்கப்படுகிறது.


எப்படி விண்ணப்பிப்பது?


ஓவர் டிராஃப்ட் (Overdraft) வசதியைப் பெற, நீங்கள் வங்கிக்கு செல்லலாம், அல்லது ஆன்லைனிலும் விண்ணபப்பிக்கலாம். இந்த வசதிக்காக பல வங்கிகள் 1% செயலாக்க கட்டணம் (Processing Fees) வரை வசூலிக்கின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களில் சிலருக்கு இந்த வசதியை தானாக வழங்குகின்றன. சில வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.


எத்தனை வகையான ஓவர் டிராஃப்ட்கள் உள்ளன?


வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப ஓவர் டிராஃப்ட் வழங்கப்படுகிறது. இது ஒரு வகையான கடன் ஆகும். அதில் வங்கி வட்டியும் வசூலிக்கிறது. ஓவர் டிராஃப்ட் உத்தரவாதம் மற்றும் உத்தரவாதமற்ற சூழ்நிலைகளில் கிடைக்கிறது. இது வங்கியுடனான உங்கள் உறவு எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்தது.


1. சம்பளத்தின் மீது ஓவர்டிராஃப்ட்: வாடிக்கையாளர் தனது சம்பளக் கணக்கில் ஓவர் டராஃப்ட் எடுக்கலாம். பொதுவாக, சம்பளத்தின் 2-3 மடங்கு ஓவர் டிராஃப்ட் கிடைக்கும். அதாவது, உங்கள் சம்பளம் மாதம் ரூ .50,000 என்றால், நீங்கள் ரூ .1.5 லட்சம் வரை ஓவர்டிராப்ட் பெறலாம். சம்பளக் கணக்கைக் கொண்ட அதே வங்கியில் இருந்து ஓவர்டிராப்ட் எடுக்கும்போதுதான் இந்த வசதியின் நன்மை கிடைக்கும். இதை ஒரு வகையில் குறுகிய கால கடன் என்றும் அழைக்கலாம்.


2. வீட்டிற்கான ஓவர்டிராஃப்ட்: வங்கிகள் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியையும் வழங்குகின்றன. சொத்தின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் வரை ஓவர்டிராப்டின் மதிப்பு இருக்கலாம். உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவை ஓவர்டிராப்ட் அளிப்பதற்கு முன் மதிப்பிடப்படுகின்றன.


3. காப்பீட்டுக் கொள்கையில்: வாடிக்கையாளர்கள் தங்கள் காப்பீட்டுக் கொள்கையை செக்யூரிடியாக வைத்து ஓவர்டிராப்ட் எடுக்கலாம். ஓவர்டிராப்டின் அளவு காப்பீட்டின் மதிப்பைப் பொறுத்தது


4. FD இல் ஓவர் டிராஃப்ட்: வாடிக்கையாளர் FD இன் மொத்த மதிப்பில் 75% வரை ஓவர்டிராஃப்ட் பெறலாம். இதில் வாடிக்கையாளரிடமிருந்தும் வங்கி குறைந்த வட்டியை பெறுகிறது. வங்கிகள் வழக்கமாக FD இல் கிடைக்கும் வட்டியை விட 2% அதிகமாக வசூலிக்கின்றன. எஃப்.டி மற்றும் காப்பீட்டுக் கொள்கையில் வட்டி எடுப்பது மிகவும் எளிதானது. ஏனென்றால் அதன் மதிப்பீடு உடனடியாக செய்யப்படுகிறது. ஆனால் வீட்டில் ஓவர் டராஃப்ட் எடுப்பது சற்று சிக்கலானது. ஏனென்றால் அதற்கு அதிக நேரம் எடுக்கும்.


ஓவர் டிராஃப்ட் எவ்வாறு செயல்படுகிறது?


உங்கள் வங்கி ஏற்கனவே உங்களுக்கு ஓவர்டிராஃப்ட் வசதியை வழங்கியிருந்தால், நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்கள் ஓவர்டிராஃப்ட் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். அது தானாகவே ஓவர் டிராப்டுக்கு சென்றுவிடும். ஓவர்டிராப்டின் அளவு வாடிக்கையாளரைப் பொறுத்தது. அதன் பிறகு நீங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்துவது போல அதை செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் செலுத்தும் வரை வங்கி தொடர்ந்து வட்டி வசூலிக்கும்.


நிலுவைத் தொகைக்கு வட்டி தினமும் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் கணக்கில் பணத்தைச் சேலுத்த செலுத்த நிலுவைத் தொகை குறைகிறது. இதற்காகத்தான் தினசரி அடிப்படையில் வட்டி வசூலிக்கப்படுகிறது.

நன்றி :உங்களுக்காக ....

என்றும் அன்புடன் 

சிவக்குமார்.V.K 

வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681





புதுமனை புகுவிழா ... (பதிவு -சிவா ஹோம் லோன்ஸ் )

 புதுமனை புகுவிழா ...

(பதிவு -சிவா ஹோம் லோன்ஸ் )

சொந்த வீடு கட்ட வேண்டும் என எல்லோருக்கும் கனவு இருக்கும். ஆனால் அப்படிக் கட்ட முடிவுசெய்த பிறகு சில விஷயங்களில் நாம் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அவசர, அவசரமாக இடத்தைத் தேர்வுசெய்துவிட்டால் பின்னால் சிரமப்படுவது நாமாகத்தான் இருப்போம். அதனால் ஆயுள் முழுக்க இருக்கப்போகும் இடத்தை நிதானத்துடன் தேர்வுசெய்ய வேண்டும்.

இடம் தேர்வு செய்தல்

முதலில் எந்த ஊரில் எங்கு மனை வாங்குவது என்பது குறித்துத் தெளிவாக முடிவு செய்யுங்கள். அந்த மனைக்குச் செல்லும் வழி முக்கியமான பேருந்துகள் அதிகம் செல்லும் சாலையுடன் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம். மனைக்குச் செல்லும் சாலை குறைந்தது இருபத்து மூன்று அடி அகலம் இருக்க வேண்டும். மனை வாங்கும் ஏரியா வளர்ச்சி பெறக் கூடியதாக (development) இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாகவும், வீடுகட்ட உபயோகிக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். மனைக்கு அரசு ஒப்புதல் கிடைத்திருக்க வேண்டும். மனை வாங்குமிடம், மனைவி மற்றும் குழந்தைகள் மனதுக்குப் பிடித்திருக்க வேண்டும். அக்கம் பக்க மனைகளில் ஒரு சில வீடுகளாவது உள்ளதா, அப்படியானால் எத்தனை ஆண்டுகளாக அவர்கள் அங்கு வசிக்கிறார்கள் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி வேகத்தைத் தெரிந்துகொள்ள முடியும். எதிர் காலத்தில் அந்தப் பகுதியில் அரசு அல்லது தனியார் எவரேனும் ஏதேனும் கட்டுமானப் பணிகள் செய்ய இருக்கின்றனரா என்பதை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அப்படி இருக்கும்பட்சத்தில் அதனால் நாம் வாங்க இருக்கும் மனைக்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற விவரங்களை நமக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நேரே சென்று அந்தந்தத் துறையினரைச் சந்தித்து விவரங்கள் கேட்பது நல்லது. குறைந்தது வீட்டிற்கு வெளியே தினமும் செல்லும் குழந்தைகளின் கல்விச்சாலை அல்லது கணவன் மனைவி இவர்களின் அலுவலகம் வீட்டிலிருந்து எளிதில் சென்று வரக்கூடியதாக அமைய வேண்டும். அவசரத்தேவைகளுக்குச் சிறிய பெட்டிக் கடையாவது அந்தப் பகுதியில் இருக்க வேண்டும். ஆவணங்களைச் சரிபார்த்தல் இப்போது நாம் வாங்க இருக்கும் மனை விற்பவரிடம் சென்று, அவரிடம் உள்ள ஆவணங்களைப் பார்க்க வேண்டும். ஆவணங்கள் பார்க்கத் தெரிந்தவர்கள் எவரேனும் உடன் இருத்தல் அவசியம். அந்த இடத்திற்கு வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate - EC) வாங்க வேண்டும். வில்லங்கம் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு பத்திரப்பதிவு செய்யலாம். தேவைப்பட்டால் வழக்கறிஞர் அறிவுரைக்குப்பின் பத்திரம் பதிவுசெய்யலாம்.
பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தவுடன், ஒவ்வொன்றிலும் நான்கு நகல்கள் எடுத்து வைத்துக்கொள்வது பின்னர் உதவிகரமாக இருக்கும். மனை சம்பந்தப்பட்ட மூல ஆவணங் களைத் தேவை இல்லாமல் வெளியேகொண்டு செல்வதைத் தவிர்க்கவும். நகல்களை மட்டுமே எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொள்ளவும்.

திட்டமிடல்

நமக்கு எத்தனை அறை தேவை, கழிப்பறை எத்தனை, சமையல் செய்ய அறை, ஹால், கார் நிறுத்தும் இடம், மற்ற தேவைகள் என்ன என்பதனையும், கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்துதல் முதலியவற்றையும் வீட்டில் உள்ள அனைவரும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் கடன் தரும் வங்கிகளில் வாங்கப் போகும் கடன் தொகைக்குத் தவணைத்தொகை (Equated Monthly Instalment -EMI) பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் எனத் தெரிந்து வைத்துக்கொள்வது நலம். தரையில் இரண்டு படுக்கை அறைகள் போதுமானது. தேவைப்பட்டால் மாடியில் குளியலறையுடன் கூடிய ஓர் அறை கட்டிக்கொள்ளலாம். இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது. அனுமதி பெற்ற கட்டிடப் பொறியாளரிடம் உங்கள் தேவைகளைச் சொல்லி வீட்டின் வரைபடம் வரைந்து முறையான அனுமதிபெற வேண்டும்.

வீட்டுக் கடன்

இனி நீங்கள் எந்த வங்கியில் வீடு கட்ட கடன் வாங்க முடிவு செய்தீர்களோ அங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி கடிதம், உங்கள் வருமானச் சான்று, மற்றும் கடன் விண்ணப்பம் இவற்றுடன் செல்லாம். அங்கு வீட்டு வசதி கடன் பிரிவு அதிகாரியை நேரில் சந்தியுங்கள். இடைத்தரகர் எவரும் தேவை இல்லை. நீங்கள் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். அவர் கேட்கும் கேள்விகள் உங்கள் வருமானம், குடும்பத்தில் உள்ள நபர்கள், உங்களால் மாத தவணை எவ்வளவு செலுத்த இயலும், உங்களின் இதர கடன் சுமை போன்றவற்றைக் குறித்ததாக இருக்கும்.
பொறியாளரைத் தேட வேண்டும்

கடன் தொகை கிடைத்துடுவிடும் என்றவுடன் நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன? சுமார் பதினைந்து அல்லது இருபது வருடங்கள் அனுபவமிக்க பொறியாளரைத் தேடிப்பிடிக்க வேண்டும். பொருட்களை நீங்களே வாங்கித்தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது. அதற்கு முன் அவர் சமீபத்தில் கட்டிய இரண்டு அல்லது மூன்று கட்டிடங்களைப் பார்வையிடுவது அவசியம். அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் பேசி பொறியாளரின் பணிகள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. அதனால் பின்னால் வரக்கூடிய பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

கட்டுமானப் பொருள்கள்

வேலை தொடங்கியவுடன் அடுத்த நாள் செய்யப்போகும் வேலைகள் என்ன? அதற்கு தேவையான பொருட்கள் நம்மிடம் உள்ளனவா எனத் தெரிந்து கொள்வதும் அவசியம். மற்றபடி இதற்கு முன்பு சமீபத்தில் வீடுகட்டிய உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆலோசனை பெற்று தச்சர், பெயின்டர், கிரானைட் அல்லது மார்பிள் வேலை செய்பவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம். இம்மாதிரி திட்டமிட்டு வேலைகள் செய்ய வேண்டும். கடைசியாகக் கட்டிடப் பணிகள் முடிந்ததும் மின் இணைப்புப்பெற விண்ணப்பிக்க வேண்டும். மின் இணைப்பு பெற்றதும், சொந்தவீட்டுக்குக் குடிபுகுந்து, ஆனந்த வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்.

நன்றி ...

சிவக்குமார்...V .K .
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com














மச்சு வீடோ குச்சு வீடோ

 மச்சு வீடோ குச்சு வீடோ

சொந்த வீடு கட்டிக் குடியேறும் நபர்களுக்குச் சமூகத்தில் ஒரு மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. அதனால் தான் விவசாயக் கூலிகள் முதல் வேலை பார்ப்பவர்கள் வரை வீட்டுக்கடனைப் பெற வங்கிகளை எதிர்பார்க்கிறார்கள். சிலநேரங்களில் வீட்டுக் கடன்கள் அவர்களைக் கனவிலும் கூடத் தொல்லை செய்கிறது. ஆகையால் நீண்ட கால வீட்டுக் கடன்களைப் பெறும்போது, தவணை முறைகளையும் கவனமாகத் திட்டமிட்டு கையாள வேண்டும்

ஆகப் பெரும்பாலானோர் ஒரு கனவு வீட்டைக் கட்டி முடக்கவோ, வாங்கிப் போடுவதற்காகவோ வங்கிக் கடன்களை வாங்குகிறார்கள். இன்னொரு சாஸ்வதமான அசையாச் சொத்துக்களால் வருமான வரிச்சட்டம் 80 மற்றும் 24 ஆம் பிரிவுகளின் கீழ் வட்டி செலுத்துவதில் இருந்து இன்னபிற சலுகைகளைப் பெறலாம் என்ற எண்ணமும் வீட்டுக் கடன்களை வாங்கத் தூண்டுகிறது. அதேநேரம் இதில் சங்கடங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். 30 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒரு நீண்டகாலக் கடன்கள் உங்கள் நிம்மதிக்கு வேட்டு வைப்பதாக அமையும். இதனைக் கடந்து செல்ல உங்கள் தவணைகளைச் சரியாக நிர்வகி க தெரிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் எங்களால் ஆன சில குறிப்புகளை உங்களுக்குத் தருகிறோம்.

தவணை காலம் தேர்வு

கடனுக்கான தவணைத் தொகை கையைக் கடிக்காமல் இருப்பதற்காக நீண்டகாலக் கடன்களைத் தேர்வு செய்கிறோம். குறைந்த தொகையைத் தவணை தவறாமல் எளிதாகச் செலுத்திவிட முடிகிறது.எனினும் நீண்ட காலத்துக்கு வட்டி செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால் கடன்தொகை அதிகரிக்கிறது. இதனால் கடனாளிக்கு கூடுதல் சுமைதான். ஆகையால் வீட்டுக்கடன்களைத் தேர்வு செய்யும்போது, உங்கள் வயது, வருமானம் மற்றும் கடனை அடைக்கும் திறனை மனதில் இருத்த வேண்டும். வீட்டுக் கடன்கள் அதிகக் கடன்தொகையைக் கொண்டிருப்பதால் கடனாளிகள் குறுகிய காலக் கடனுதவியைக கண்டறிதல அவசியம், இது மற்றவர்களின் வாழ்முறை ம்ற்றும் வட்சியங்களில் சமரசம் செய்யாமல் இருக்க வேண்டும். இதர தவணைக்காலங்கள் குறித்து ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தலாம். கடன் தொகை. வட்டி, தவணைக் காலம் குறித்துத் தெளிவு பெறலாம்.

தவணைத்தொகையை உயர்த்தல்

ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு பெறும்போது, திரப்பிச் செலுத்தப்படும் கடனுக்கான தவணைத் தொகையை அதிகரிக்க வேண்டும். ஈ.எம்.ஐ தொகையை உயர்த்திச் செலுத்தும்போது தவணைக்காலம் தானாகவே குறைகிறது. மேலும் நிலுவையில் உள்ள கடன் தொகையும் கணிசமாகக் குறையும்.மீண்டும் தவைணத்தொகையைக் குறைவாகச் செலுத்தினால் கடன்தொகை கழியாது. சுமைதான் அதிகரிக்கும். உதாரணத்துக்கு, 50 லட்கம் ரூபாய் வீட்டுக்கடன் பெற்ற ஒருவர் 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளுக்குத் தவணைக்காலத்தை முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவணைதொகைபில் 10 விமுக்காடு அதிகரித்துச் செலுத்தும்போது தவணைக்காலம் 10 வருடமாகக் குறையும்.

கடன்தொகையை முன்கூட்டி செலுத்தல்

தவணை காலம்வரை காத்திருக்காமல் கடனை முன்கூட்டியே செலுத்துவதால், நிலுவையில் கடனையும், தவணைக் காலத்தையும் ஒரு சேர் குறைக்கலாம். இதற்கு வங்கிகள் தண்டம் விதிக்க முடியாது. பிரதான கடன்தொகையை நேரடியாகக் குறைக்க உதவுவதோடு வட்டிச் செலவினங்களையும் குறைக்க இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,20,000 ருபாய் முன்கூட்டியே செலுத்தினால் மாதம் 10,000 ரூபாய் சேமிக்க முடியம். தவணைக் காலத்துக்கு முன்னரே கடன் தொகை முடிவடையும்.
கடன் சமநிலைப் பரிமாற்ற தேர்வு

வீட்டுக்கடன் பெறுபவர்கள் சாதகமான கடன்சமநிலைப் பரிமாற்றத்தை தேர்வு செய்ய வேண்டும். தற்போது உங்களுக்குக் கடன் அளிக்க இருப்பவர், போட்டியாளர்களைக் காட்டிலும் குறைவான வட்டி விகிதம், இதர சேவைகளைத் தர மறுக்கலாம். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் கடன் வாங்கியவர்கள் பொதுவாகத் தங்கள் வட்டிக்கு ஒரு முக்கியப் பகுதியைச் செலுத்தி இருப்பார்கள் என்பதால், வீட்டுக் கடன் சமநிலை பரிமாற்றமானது மீண்டும் ஒரு நீண்ட காலக் கடன் சேமிப்புக்கு உதவாது. உங்கள் தற்போதைய வீட்டு கடன் கவணைக் காலத்தைப் போலப் புதிய கடன் கவணைக் காலக் கடனை பெறும்போது கூடுதல் வட்டி சுமையைக் குறைக்கும். கூடுதலாக, புதிய கடனுக்கான நீண்ட தவணைக் காலத்தைத் தேர்வு செய்வது, EMI சுமையை எளிமையாக்கும் ஒரு நல்ல கடன்சமநிவைப் பரிமாற்றத்தேர்வு செயலாக்கக் கட்டணம் இன்ன பிற செலவுகளில் இருந்து காப்பாற்றும்.......என்னங்க யோசனை பண்ணிட்டே இருக்கிறீங்க ..ஆடி போயி ..ஆவணியே ..வந்துருச்சு ...இனி வர மாசம் எல்லாம் ..சொத்துகள் வாங்கும் மாதம் தான் ...தவணையை ஸ்மார்ட்டாகச் செலுத்துவது எப்படி?..என்னைய மறக்காம கூப்பிடுங்க ...நான் சொல்லித்தரங்க ....

Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com


கேள்வி : கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?

கேள்வி : கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது?

என் பதில் :

நம்மில் நிறைய பேர் கார் வைத்து இருக்கிறோம். நிறைய பேர் தினமும் காரில் சென்று வருகிறோம். நிறைய பேர் தொலைதூர பயணமும் காரில் மேற்கொள்கிறோம். நிறைய தூரம் நிற்காமலும் வண்டி ஒட்டி செல்கிறோம். ஆனால் நிறைய பேர் காரை ஒரு மெஷின் என்று பார்ப்பதில்லை அடித்து போடவேண்டியது அது காட்டும் சிவப்பு கொடியை (red flag) எல்லாம் மதிப்பதே இல்லை .


சிலர் இன்னும் மோசம் கார் வாங்கவேண்டியது கார் மக்கும் வரை அதை ஓட்டாமல் பூஜை போட்டு வைத்து இருப்பார்கள் இது எல்லாம் நான் தினமும் பார்ப்பது தான் - உண்மையில் இந்த கார் வாங்கி மக்க வைக்கும் கூட்டம் எனக்கு எரிச்சலை தான் தரும். சரி விடைக்கு வருவோம் :


கார் வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாதது எது? :


Service விடமால் இருப்பது : கார் என்பது மனிதரை போல் தான் அதற்கும் சில கோளாறுகள் வரும். இதனால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கார் செக் செய்வது நல்லது. ஏன் என்றால் கண்டிப்பாக நமக்கும் தெரியாத பிரச்சனை காரில் வரும். பெரிய வினை ஆகும் முன் சரி செய்வது அல்லது செக் செய்வது நல்லது


Burnout செய்வது (அதாவது டயர் எரியும் வரை அதை ஓடவிடுவது) : இதை இளைஞர்கள் அதிகம் விரும்பினாலும் இது மிகவும் தவறான செயல் ஏன் என்றால் டயர் புகை மற்றும் டயர் விலை மற்றும் வண்டியின் செயல் பாடு இதனால் பாதிக்கப்படும் மேலும் வண்டியை டயர் மாற்றாமல் அப்படியே ஓடுவது மிகுந்த ஆபத்தை தரும்


பெட்ரோல் / டீசல் காலி ஆகும் வரை வண்டியை ஓட்டுவது : நம்மில் நிறைய பேர் செய்யும் தவறு இது. இப்படி செய்தால் கண்டிப்பாக என்ஜின் உள் இருக்கும் கம்போஸ்ட் சிஸ்டம் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். மேலும் விளைவு பில் அருமையாக வைக்கும். உங்கள் வண்டியின் கம்போஸ்ட் சிஸ்டத்தை மட்டும் பகைத்துக் கொள்ளவேண்டாம்

வண்டிக்கு ஆயில் மாற்றாமல் இருப்பது : நம்ப ஆளுங்க காசு சேமிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வண்டி என்ஜின் ஆயில் கூட போடாம பழைய ஆயில் வெச்சு ஓட்டிட்டு இருப்பாங்க காரணம் கேட்டா என்ஜின் ஆயில் விலை அதிகம் மேலும் மாத்திவிடலாம் மேலும் பார்த்துக்கலாம் என்று கூறுவார்கள். என்ஜின் ஆகிவிடும். பின்பு மர்கயா சாலா தான். தயவு செய்து வண்டி ஆயில் விஷயத்தில் கஞ்ச தனம் படவேண்டாம்


கை பிரேக் உபயோகம் : நம்ப ஆளுங்க இந்த விஷயத்தில் மிகவும் மோசம். ஒருமுறை என் நண்பரின் ஷெட்டில் ஒரு கார் செம்ம அடி வாங்கி இருந்தது காரணம் கை பிரேக் ஒழுங்காக பயன் படுத்தாமல் வண்டி புரண்டு இருக்கிறது. எனவே கை பிரேக் போடும் போது ஜாக்கிரதை

காரில் தம் அடிப்பது : தயவு செய்து இதை தவிர்க்கவும் ஏன் என்றால் இது பல விளைவுகளை ஏற்படுத்தும் உதாரணமாக நீங்கள் சுவாசிக்கும் காற்று கார் உள்ளே தான் இருக்கும் மற்றவர்களுக்கு இது பிரச்சனை தரும் மேலும் குலிங் சிஸ்டம் உள்ளே இது சென்றால் மிகவும் ஆபத்து


துரு பிடிக்க ஆரமித்தால் துரு தானே என்று விட்டுவிடாதீர்கள் : ஒரு பழைய மாருதி ஆம்னி வண்டியில் ஒருமுறை ஸ்டேரிங் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்னவென்று பார்த்தால் அதில் துரு தான் பிரச்சனை. எப்படியோ தண்ணீர் நுழைந்து ஸ்டேரிங் சிஸ்டம் உள்ளே துரு. இது நல்லவேளை சேவை நிலையத்தில் கண்டறியப்பட்டது இல்லை என்றால் அவளவுதான்.

ரின் , Surf Excel போட்டு வண்டி கழுவாதீர்கள் : சிலர் இன்னும் மோசம் இருப்பு என்று சபீனா போட்டாலும் போடுவர். தயவு செய்து இதை தவிர்க்கவும் ஏன் என்றால் இது வருங்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனை எல்லாம் ஏற்படுத்தும். தயவு செய்து அது கார் என்று நினைவில் கொள்ளுங்கள். பாத்திரம் துலக்க வேண்டாம்.


வண்டியை பல நாள் கழித்து எடுத்து அப்படியே ஓட்டுவது : இதை மட்டும் செய்யாதீர்கள் முதலில் ஒரு மணி நேரம் ஆவது கதவுகளை திறந்து வைத்து கழுவுவது அல்லது ஏதாவது வென்டிலேட் செய்யுங்கள் பின்பு என்ஜின் சூடு செய்து பின்பு ஏதாவது சத்தம் வருகிறதா என்று பார்த்து வண்டியை எடுங்கள் முக்கியமாக குளிர் சாதனத்தை செக் செய்யுங்கள் ஏன் என்றால் விஷவாயு தாக்கி இறந்த கதைகள் ஆயிரம்

காரை மக்கவிடுவது : தயவு செய்து இதை செய்யாதீர்கள் "ஏன் என்றால் ஏன் என்றால் எனக்கு கஷ்டமா இருக்கு". உண்மையில் கார் உங்களுக்கு தேவை இல்லை என்றால் விற்று விடுங்கள். அது மற்றவர்களுக்கு பயன் படும். அதை விட்டுவிட்டு அதை மங்க செய்யாதீர்கள். ஏன் என்றால் அது ஒரு கார் மட்டும் இல்லை கனவுகள் இருக்கும் ஒரு விஷயம் அது மக்குவதற்கு பதில் வேறு எங்கயாவது நன்றாக இருக்கட்டும் என்று விற்றுவிடுங்கள்

சிலருக்கு கார் என்பது கனவு. அந்த கனவை நீங்கள் வைத்து இருந்தால் அதை சரியாக வைத்து கொள்ளுங்கள் ஒழுங்காக பராமரியுங்கள்.


நன்றி..

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com🏡🏡🏡🌱🌱🌳🌳🚗🚗🚗🚗

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கூட்டு நிதி பெறுதல் (crowdfunding)

கூட்டு நிதி பெறுதல் (crowdfunding) 

 சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எளிதாக மக்களை சென்றடைகின்றன. இதை தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முறையாக பயன்படுத்துவதன் மூலம்  முதலீட்டுக்கான நிதி /நன்கொடையை எளிதாக பெறலாம் .

இதன் மூலம், நிறுவனங்களின் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள இயலும். 'ஆன்லைன்' வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 'ரிவார்டு' முறை செயல்பாட்டில் உள்ளது. கூட்டு நிதி திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள், இளைஞர்கள் மூலம் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த இயலும்....

தொழில் அபிவிருத்தி செய்ய நினைப்போர் மருத்துவம் ,கல்வி ,பெண்கள் மேம்பாடு ,மற்றும் இதர தனிநபர் தேவைகளை நிதி ஆதாரத்தை கூட்டு நிதி திட்டத்தின் மூலம் பெறலாம் .அதையும் மேலும் எளிதாக இப்பொழுது நிதி சந்தையில் இந்த ரெய்ச்சேர் எனும் நிறுவன இணைதளம் மூலம் Reward (அன்பளிப்பு ) மற்றும் நன்கொடையை எளிதாக பெற இயலும் ,மேலும் நிதி மற்றும் நன்கொடை அளிப்போர் இவ்விணையத்தளம் வாயிலாக தங்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய இயலும் .மேலும் விவரங்களுக்கு ..

இந்த காணொளி கண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் ..

https://www.youtube.com/watch?v=gjTzTmeeA00

இதில் இணைய விரும்புவோர் ..இந்த லிங்க் பயன்படுத்தி கொள்ளலாம் 

Signup ...
https://app.reicher.in/signup?refer_id=47312192

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கேள்வி : பிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan

 

கேள்வி : பிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan


என் பதில் :..நன்றி கௌதமன் -விகடன் .


Pradhan Mantri Awas Yojana 


வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் ஆசை, சொந்தமாக ஒரு வீடு வாங்குவதுதான். சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டமே பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின்கீழ் வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.


விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சிருஷ்டி என்ற வாசகி இந்தத் திட்டம் குறித்து ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். ``பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தும், வீடு வாங்கி இஎம்ஐ கட்டிக் கொண்டிருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி மானியம் பெற இயலுமா?" என்பதுதான் அவரது கேள்வி.


Pradhan Mantri Awas Yojana 


"பொதுவாக, இந்த வட்டி மானியத்தைப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்குகின்றன. ஏற்கெனவே வங்கிக்கடன் பெற்று வீடு வாங்கி, தற்போது இஎம்ஐ கட்டிக்கொண்டிருப்பவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி மானியம் பெறமுடியாது. வீட்டுக்கடனுக்காக வங்கியை அணுகும்போது, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கடனை வழங்கும்படி விண்ணப்பித்தால், அதற்கான தகுதியைப் பரிசீலித்தபின் வழங்குவார்கள்.


விண்ணப்பிக்க தகுதி:


விண்ணப்பதாரரின் குடும்பத்துக்கு வேறெங்கும் சொந்த வீடு இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்பத்துக்குச் சொந்த வீடு தொடர்பாக இந்திய அரசின் வேறெந்த திட்டத்தின் பயனும் கிடைத்திருக்கக் கூடாது. திருமணமானவர்கள், தனியாகவோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ விண்ணப்பிக்கலாம். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.


எங்கெல்லாம் வீடு கட்டலாம்?


மாநகரம், நகரம், பேரூராட்சி, டவுன் பஞ்சாயத்து என இந்தியா முழுவதும் வீடு கட்டுபவர்களுக்கு/ புதிய வீடு வாங்குபவர்களுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது. வீட்டுக்கான உரிமையில் குடும்பத்தலைவிக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தும்விதமாக இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் இருக்கின்றன. வீட்டுக்கு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ குடும்பத்தலைவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடும்பத்தலைவரின் பெயரில் அந்த வீடு இருக்கும்பட்சத்தில், குடும்பத்தலைவியை துணை விண்ணப்பதாரராகவோ அல்லது உத்தரவாதம் அளிப்பவராகவோ காட்ட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.


வீட்டுக்கடனின் வகைகள்:


விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், வீட்டு விலை, வீட்டின் பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்படும் வீட்டை நான்காகப் பிரித்துள்ளார்கள். ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS); ஆண்டு வருமானம் 6 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை குறைந்த வருவாயுள்ள பிரிவினர் (LIG); ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 1 (MIG I); ஆண்டு வருமானம் 18 லட்சம் ரூபாய்வரை இருப்பவர்களை நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 2 (MIG II) என்று பிரித்துள்ளனர்.


வீட்டுக்கடன் கணக்கிடும் முறை:


வீட்டுக்கடனுக்கான மானியத்தைக் கணக்கிடுவதற்கு வீட்டுக்கடன் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் குறைந்த வருவாயுள்ள பிரிவினருக்கு வீட்டுக்கான கடனில் 6 லட்சம் ரூபாய் மட்டும் கணக்கில் கொள்ளப்படும். அதற்கு 6.5 சதவிகிதம், அதாவது 2,67,280/- வரை வட்டி மானியமாக வழங்கப்படும். நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 1-ஐச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுக்கான கடனில் 9 லட்சம் ரூபாய் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டு, அதற்கு 4.0 சதவிகிதம், அதாவது 2,35,068/- வரை வட்டி மானியமாக வழங்கப்படும். நடுத்தர வருவாயுள்ள பிரிவினர் 2-ஐச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுக்கான கடனில் 12 லட்சம் ரூபாய் மட்டும் கணக்கில்கொள்ளப்பட்டு, அதற்கு 3.0 சதவிகிதம், அதாவது 2,30,156/- வரை வட்டி மானியமாக வழங்கப்படும்.


இரண்டு முறை வீட்டுக் கடன்... வரி விலக்கு எப்படி?


அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் அதிகபட்சமாக, ஆண்டு வருமானத்தைப்போல் ஐந்து மடங்கு தொகைவரை வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம். வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது வழக்கமாக வங்கிகள்தரப்பில் கேட்கப்படும் ஆவணங்களே இதற்கும் கேட்கப்படும்.



விண்ணப்பதாரரின் வங்கிக்கணக்குக்கே மானியத்தொகை அளிக்கப்பட்டுவிடும். மானியம் போக மீதமுள்ள தொகையை மட்டும் மாதத்தவணையாகச் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்தின்கீழ், வீட்டுக்கடனாக 20 லட்சம் ரூபாய் வரை பெறுபவருக்கு, வீட்டு மதிப்பில் 90 சதவிகிதம் வரை வங்கிக்கடன் அளிக்கப்படும். 10 சதவிகிதம் மட்டும் விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்கும். 20 லட்சம் ரூபாயிலிருந்து 75 லட்சம் ரூபாய்வரை வங்கிக்கடன் பெறுபவருக்கு, வீட்டு மதிப்பில் 80 சதவிகிதம் வரை வங்கிக்கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவிகிதம் தொகை, விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்கும். 75 லட்சம் ரூபாய்க்குமேல் வங்கிக்கடன் பெறுபவருக்கு, வீட்டு மதிப்பில் 75 சதவிகிதம்வரை வங்கிக்கடனாக வழங்கப்படும். 25 சதவிகிதம் தொகை விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்கும். முதன்முறையாக வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் அனைவருக்குமே இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."


நன்றி .


சிவக்குமார்.V.K.

வீட்டு கடன் பிரிவு 🏡🏡🏡🏡

உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

Email:siva19732001@gmail.com📚📚✍️✍️🏡



கேள்வி :வீட்டுக்கடனில் வீடு வாங்கி அதனை வாடகைக்கு விடலாமா?


என் பதில் :


சரியான நிதி மேலாண்மை திட்டமிடுதல் உங்களிடம் இருந்தால் நீங்கள் வீட்டுக் கடனில் வீடு வாங்கி அதை வாடகைக்கு விடலாம் .


இதன் மூலம் வாடகை எனும் வருவாயை பெருக்கிக் கொள்வதோடு ( 30% வாடகையை பராமரிப்பு செலவாக காட்டலாம் ) வருமான வரி கணக்கில் வீட்டுக் கடனுக்கு செலுத்திய வட்டி தொகையை ரூபாய் 2 லட்சம் வரை கழித்துக் கொள்ளலாம்.


மேலும் பிரிவு 80 C ல் வீட்டுக் கடனுக்கு செலுத்திய அசல் தொகையையும் ₹1.5 இலட்சம் வரை கழித்துக் கொள்ளலாம்.


ஒருவருக்கு ஒரு வீடு கடனில் வாங்கி இருந்தாலும் இன்னொரு வீட்டையும் வீட்டுக் கடனில் வாங்கலாம் .


மேலும் வாங்கிய வீடு குடி இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. வீடு வாங்கிய இடத்தில் வசிக்க வில்லை என்றாலும் வருமானவரிச் சலுகைகள் உண்டு .


மேலும் வேறு இடத்தில் பணிபுரிந்து வாழ்ந்து வருவதால் வாடகையாக பெறப்படும் தொகையையும் வருமான வரியில் கழித்துக் கொள்ளலாம்.


பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் செலுத்திய வட்டியில் ரூபாய் விண்ணப்பித்து கடனில் தள்ளுபடியும் பெறலாம்.


எல்லாவற்றையும்விட நீங்கள் வாங்கும் வீடு வருங்காலத்தில் நல்ல விலைக்கு போகும் என்ற பட்சத்தில் கடனும் எளிதாக கிடைக்கும் எனில் அதை ஒரு முதலீடாக நினைத்து வாங்கி வருங்காலத்தில் நல்ல விலைக்கு விற்று சட்டப்படி இலாபம் பார்க்கலாம்.


பயப்பட வேண்டாம். சரியாக திட்டமிடுங்கள். கடன் பெற்றதை ஒரு சுமையாக பார்க்காமல் முதலீட்டுல் அருமையான சொத்து பலநேரங்களில் கைகொடுக்கும் ..


சிவக்குமார்.
வீட்டு கடன் பிரிவு 
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681

கேள்வி : இளைஞர்கள் ஏன் அரசியல் பேச வேண்டும்?


என் பதில் :..


அரசியலுக்குச் சொந்தக் காரர்களே அரசியல் ஏன் பேச வேண்டுமென்றால் என்று கேட்டால் என் செய்வது அன்பரே?


சித்தாந்ததின் படிப் பார்த்தால் அரசியல் செய்ய வேண்டியது இளைஞர்கள் மட்டுமே! அவர்கட்கு வழி காட்டவேண்டியது மூத்தோர்களே! ஆனால் இங்கே அப்படியா? எல்லாம் தலைகீழ் தான். இளைஞர்கள், பணத்தைத் தேடுவதிலும், அந்தப் பணத்தினைப் பதுக்கும் வேலையில் அரசியல்வாதிகளும் ஈடுபட்டுள்ளனரே!

எனக்கு இந்தக் கொரோனாவின் விடயத்திலும் நம்பிக்கையில்லை. இதன் பின்புலம் மிகவும் வலுவான (உலக) அரசியலாக இருக்கும் என்பது என் துணிபு!


சரி! இருப்பதெல்லாம் இருக்கட்டும். நாம் உங்கள் கேள்விக்கு வருவோம். உலக அரசியலே அந்தந்தக் காலகட்டத்தில் இருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் நுகர்வோரினைச் சார்ந்தே கட்டமைக்கப்படும். இதுவே உலக அரசியலின் எழுதப்படாத விதி! நீங்கள் வரலாற்றின் வழிநெடுகிலும் இதனை உணரலாம். துவக்கமே முடிவோ எந்தவொரு கண்டுபிடிப்பும் அன்றைய முதல்நிலை நுகர்வோரினைச் சார்ந்தே இருக்கும்.


அவ்வகையினில் நோக்கினால், இன்றைய இளைஞர்களே அரசியலை தீர்மானிக்கின்றனர். அவர்களைச் சார்ந்தே அனைத்து தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படுகிறது. அந்த தொழிநுட்பங்களைக் கட்டமைப்பதில் ஒரு நாட்டின் அரசும் அதைச் செய்யும் அரசியல்வாதிகளும் முக்கியப்பங்கு ஆற்றுகின்றனர். அதனால் இளைஞர்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அவற்றில் உள்ள அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்வதனாலேயே தூய்மையான அரசியலை இங்கே காலூன்றச் செய்ய முடியும்!


இளைய சமூதாயத்தின் எழுச்சியே உலக வரலாற்றில் பலநாடுகளில் நிலையான மற்றும் அழுத்தமான தாக்கங்களை நிகழ்த்தியுள்ளது. அதனால் இளைஞர்களே மிக மிக அவசியமாக அரசியல் பேச வேண்டும். அவர்களுக்குள் ஒரு தெளிவு வேண்டும். ஆரோக்கியமான சிந்தனைகள் வேண்டும்.


நானும் என் நண்பனும் பெரும்பாலான விடயங்களை விவாதிப்போம். ஆனால் ஒருவருக்கொருவர் அவ்வளவு இலகுவாக தங்கள் பக்கங்களை விட்டுக்கொடுக்காமல் தத்தமது பேச்சுக்களே சரியெனப் பேசுவோம். நாங்கள் கூறுவதே சரியென நிரூபிக்க நிறைய மெனக்கெடுவோம் (பொய்யால் அல்ல). ஒரு முறை அவனே கேட்டுவிட்டான். 'நான் தான் நீ எதைச் சொன்னாலும், உடனடியாக ஏற்காமல் எதிர்விவாதம் செய்வேனே. ஆனால் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் தான் பெரும்பாலானோர் பேசுவர். நீ என்ன இப்படி?' என்றான்.


நான் கூறினேன், 'இதுவே ஆரோக்கியமான விவாதம். எளிதில் ஏற்றுக்கொள்ளாதவரையே தான் முதலில் நாம் நம்பவைக்க வேண்டும். எதிர்வினை இருக்கும் இடத்தில் திறனைக் காட்டுவதாலேயே நமது திறன் நமக்கே புலப்படும். எதைச் சொன்னாலும் ஏற்கும் கூட்டத்தில் பேசுவதால் பொய்களே பெருகும். ஆனால் ஏற்காத கூட்டத்தில் விவாதிக்கையில் தான், நாம் கூறுவதில் இருக்கும் நல்லவை கெட்டவை என அனைத்தும் விளங்கும். அதனால் முதலில் நம்முடைய தவறுகளை நாமே எளிதில் கண்டறிந்து திருத்திக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும். ஏற்காதவரை ஏற்கவைப்பதே சரியான விவாதம். விவாதத்தின் முடிவு எப்போதும் அறிவின் சுடராக இருத்தல் நலம். அது எதிர்வாதம் செய்பவருடன் எளிதில் கிட்டும். எதிர் தரப்பையே ஏற்கும் அளவிற்கு தெளிவாகவும் உண்மைகளுடனும் நான் பேசும் திறனையும் வளர்த்துக்கொள்வோம் அல்லவா?


அதுவே பல உண்மைகளை நமக்கும் எதிர் தரப்பிற்கும் புரியவைக்கும். ஆகையினால் அரசியலை இளைஞர்கள் அதிகம் விவாதிக்க வேண்டும். பலவித கண்ணோட்டங்கள் இருக்கும் விவாதமே தலைசிறந்த விவாதம் (அதாவது பலர்). அத்தகைய இடத்தில் அரசியல் பேசுங்கள். எத்தகு சூழலிலும் அவ்விடத்தினை புகார் தெரிவிக்கும் களமாக மடைமாற்றாதீர். விவாதம் மட்டுமே செய்யுங்கள்.


ஒருவர் சார்ந்துள்ள கட்சியின் தவறுகளை அடுத்தவர் சுட்டிக்காட்டும் போது, பதிலுக்கு அடுத்தவர் சுட்டியவரின் கட்சியின் தவறுகளைக் கூறுதல் மிகப் பெரும் தவறு. பதிலாக, குறிப்பிட்ட தவறுகளை தவறல்ல என்று நிரூபியுங்கள். உங்களுக்கான சுட்டிக்காட்டும் நேரம் வரும் வரையில் உங்கள் தரப்பினை நிரூபிக்கும் வேலையினை மட்டும் செய்யுங்கள். அப்படியில்லையெனில் உங்கள் கட்சியின் தவறுகளை உளமாற ஏற்றுக்கொள்ளுங்கள்.


ஒரு கட்சியின் சிறு தவறுகளால் அவர்களின் அரிய சீரிய திட்டங்களை தவறு என் நிரூபிக்கத் தலைப்படாதீர். அதே போல், எதிர்கட்சி என்பதால் எதிரிக்கட்சியாக மாறிவிடவும் கூடாது.


குறிப்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விவாதம் செய்யாதீர். அது அரசியலுக்கே கேடாகும். 


இப்படிப் பல விடயங்களில் நேர்மையுடன் விவாதம் மட்டும் இளைஞர்கள் செய்தால் அரசியல் தென்றல் தவழும் மனங்களுடன் வாழும் பலரது சேவைக்களமாக மாறுதல் திண்ணம்!


நன்றி ..


சனி, 22 ஆகஸ்ட், 2020

 



திருமணவாழ்த்து மடல் 


உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

திருமண விழா ...!

ஊரடங்கு காலத்திலும்

ஓர் உற்சாகம் தரும் சங்ஙமம்

மணகன் :- கார்த்திக்குமார் ( கொங்குக் கொற்றவன்)

மணமகள் :- செல்வரம்யா

நிகழிடம் :-

உச்சி மாகளியம்மன் கோவில்

கொ. வல்லக்குண்டாபுரம்

நேரம் :- ( 23/08/2020

ஞாயிறு அதிகாலை 4.30 to 6.00 மணி)

புது மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம்

உடுமலைப்பேட்டை ..📚📚✍️✍️✍️👍🥰🥰🥰


வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

 


கொங்கு கொற்றவன் ...🥰🥰📚📚✍️✍️


T .கார்த்திக்குமார் ..செல்வரம்யா .🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 6383245466)

படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...



எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..

இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....

எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக,தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் .பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக ,


தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக ....

கம்பளத்து சொந்தங்களுக்கு  "அன்பு" செல்லப்பிள்ளையாக

நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக ..




கொங்கு மண்ணில்;  கம்பளத்தில் பிறந்திட்டாலும், காட்டையும் மேட்டையும், கழனிகளாக்கத் துடிக்கும்  வளரும் கட்டிளங்காளை, கார்த்திக் குமார் 


சமூகத்திற்காகவும், சமூகத்தின் அகழ்வாய்வுப் பணிகளுக்காகவும் அர்ப்பணிப்போடு பாடாற்றும்,துடிப்பான வீரன்


எப்பொழுதும், எந்த  நேரமும் எல்லாப் பணிகளுக்கு  எத்தலப்பரின் மண்ணில் எத்தனாக  வளர்ந்து வரும்   எத்தன்


இவர் இனிது துவங்கும் திருமண வாழ்க்கைப் பயணத்தில்  சமூகப்பற்றோடு கொஞ்சம்  குடும்பப் பற்றும் கலந்து வரும் இந்நாளில்



இவரது வாழ்க்கைத்துணையில் வந்திட்ட செல்வரம்யாவோடு இவரின் திருமண வாழ்கைப் பயணம் இனிதே  துவங்கிட கம்பளத்து சொந்தங்களின் சார்பிலும் ,கம்பள விருட்சம் அறக்கட்டளையின் துணை செயலாளர்க்கு  


திருமண விழா ...! 


ஊரடங்கு காலத்திலும் 


ஓர் உற்சாகம் தரும் சங்ஙமம்


மணகன் :- கார்த்திக்குமார் ( கொங்குக் கொற்றவன்)  


மணமகள் :- செல்வரம்யா 


நிகழிடம் :- 


உச்சி மாகளியம்மன் கோவில் 


கொ. வல்லக்குண்டாபுரம் 


நேரம் :- ( 23/08/2020 







ஞாயிறு அதிகாலை 4.30 to 6.00 மணி)


புது மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் 



கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் 


உடுமலைப்பேட்டை ..📚📚✍️✍️✍️👍🥰🥰🥰

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

 என் இனிய அருமை தினேஷ் மாப்பிளைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...


மணிராஜ் சவுண்டு அண்ட் லைட்டிங்ஸ்

Maniraj Sounds and Lightings....
பொட்டையம்பாளையம் -உடுமலைப்பேட்டை

தினேஷ் மாப்பிளை தந்தை கூலி வேலைக்கு சென்று தன் உழைப்பின் மூலம் சிறு அளவில் இந்த ஒளி ஒலி அமைப்பு ஏற்படுத்தி நடத்திவந்தார் ..அதன் பின் நம் மாப்பிள்ளைகள் தினேஷ் கோவையில் தொழில் துறை பயிற்சி படித்துவிட்டு
தன் தந்தைக்கு உதவுவதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு தற்பொழுது நல்ல முறையில் வளர்ந்து வருவது மகிழ்ச்சி .தற்பொழுது மணிராஜ் தம்பியும் பி.காம் படித்துவிட்டு அண்ணனுக்கு உதவியாக உள்ளது மகிழ்ச்சி ..

நமது சமுதாய சொந்தங்களின் எந்த ஒரு திருவிழா என்றாலும் பொட்டையம்பாளையம் "மணிராஜ் சவுண்ட் சர்வீஃச்"தான். கல்யாணம், கோவில் திருவிழா, சடங்கு , வாலிபர்களின் கைப்பந்து விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும், மணிராஜ் சவுண்ட் சர்வீஃச் தான் ஒலி&ஒளி அமைப்பு செய்வார்கள். முதன் முதலில் ஊரில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இரண்டு சக்கர மோட்டார் பைக்கில் குழாய் ஃச்பீக்கரை பக்கவாட்டில் கட்டிக்கொண்டு ஒரு வண்டியும், ஆம்பிளிபைய‌ர் மற்றும் ரிக்கார்டுகளை கேரியரில் வைத்துக்கொண்டு ஒரு வண்டியும், ட்யூப் லைட் மற்றும் சீரியல்செட் லைட்டுகளை இன்னொரு வண்டியிலும் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் கெள‌ம்பிவிடுவார்கள். தற்பொழுது மாப்பிள்ளைகள் நான்கு சக்கர ஜீப் புதுவரவு ....

ஒரே நேரத்தில் பல விழாக்களுக்கு ஒலி & ஒளி அமைப்பு செய்யும்போது, நம் மாப்பிள்ளைகள் போன்ற‌ பல இளவட்டங்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிடும். மைக் செட் ஓனர் தினேஷ் , யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்வார். இரவு முழுக்க விழித்து , இடைவிடாமல் பாட்டுப் போடும் பணி தம்பி மணிராஜ்க்கு கிடைக்கும். அதில் இடை இடையே மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கும். பதின்ம வயதில் ஊரில் இப்படி குரல் ஒலிப்பது பெரிய கெத்தாக எடுத்துக்கொள்ளப்படும். "பழைய மற்றும் புத்தம் புதிய பாடல்களுக்கு, மணிராஜ் சவுண்ட் சர்வீஃச். உங்களின் திருமணம் மற்றும் அனைத்து இல்ல விழாக்களுக்கும் சிறந்த முறையில் ஒலி ஒளி அமைத்துக்கொடுக்கப்படும்" என்று நட்ட நடு ராத்திரியில் விளம்பரம் செய்துவிட்டு அதை இமாலய வெற்றியாக அடுத்த நாள் டீக்கடையில் கொண்டாடப்படும். அதுவும் பகல் நேரத்தில் ஊர் குமரிகள் ரோட்டில் நடமாடும்பொது, தங்கள் வெளம்பரக் குரலை ஒலிக்க விட பெரும் போட்டி இருக்கும் விடலைகளிடம்.

கல்யாண வீடுகள் அல்லது பொதுவான குடும்ப விழாக்களில் ஒலி&ஒளி அமைப்பது பெரிய விசயமாக இருக்காது. வீட்டில் போடப்பட்டுள்ள கொட்டகையில் இரண்டு குழாய் ஃச்பீக்கர் , அந்த வீடு இருக்கும் தெரு முக்கில் ஒன்று அல்லது இரண்டு குழாய் ஃச்பீக்கர் என்று கட்டிவிட்டால் ஒலி அமைப்பு முடிந்துவிடும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப குழாய் ஃச்பீக்கர் எண்ணிக்கை மாறும். ஃச்பீக்கர் கட்டி முடிந்தவுடன் மூங்கில் கம்புகளை தெருவில் நட்டு அதில் ட்யூப் லைட்டுகளை கட்டி , சீரியல் பல்புகளையும் போட்டுவிட்டால் ஒளி & ஒலி அமைப்பு வேலை முடிந்துவிடும். அதற்குப்பிறகு விடிய விடிய ஏதாவது பாடல்களைப் போட்டுக்கொண்டு இருந்தால் போதும். சில‌ நேரங்களில் விழாநடக்கும் வீட்டில் இருந்து யாராவது பொடுசுகள் வந்து "எங்க மாமா இந்தப் பாட்டு போடச் சொன்னாக" , "எங்க அக்கா இந்தப்பாட்டு போடச் சொன்னாக" என்று நேயர் விருப்ப பட்டியல் கொடுத்துவிட்டுப்போவார்கள். தெரிந்த குமரிப் பொண்ணுகள் இருந்தால் அவர்களுக்கான ஃச்பெசல் பாட்டுக்கள் கேட்காமலேயே ஒலிபரப்பு செய்யப்படும்.தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகள் விழாக்களில் கலக்குவார்கள் ...இப்படித்தான் நம் ஊரு விழாக்களில் மக்கள் மனதில் இடம்பிடித்து ..மணிராஜ் சவுண்டு சர்வீஸ் வளர்ந்து கொண்டு உள்ளார்கள் ..தற்பொழுது புதிய தொழிநுட்ப வசதிகளுடன் ஒளி பெருக்கிகள் வந்துள்ளதால் ..விழாக்களுக்கு தேடி வந்து பணிகளை தந்துகொண்டுள்ளார்கள் ..இனி வரும் காலம் அரசியல் ,கோவில் திருவிழா .எந்த ஒருவிழா என்றாலும் தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகளை காணலாம் ..முத்து மஹால் ,GK மஹால் ,ST ரத்தினவேல் மண்டபம் ,.என்று கல்யாண மண்டபத்திலும் காணலாம் ..கடந்த வாரத்தில் நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு விழாவிற்கு ஒலி அமைப்பு செய்த மாப்பிளைகளின் திறமைகளுக்கு கிடைத்த வரவேற்பு அவர்களின் சுய தொழில் காட்டும் ஆர்வம் ..பொது தளத்தில் எப்படி பெயரை நிலைநாட்டவேண்டும் என்பதை கடந்த இரண்டு வருடங்களாக பார்த்து வருகிறேன் ....இரண்டு மாப்பிள்ளைகள் பணிகள் இப்படி என்றால் ..தினேஷ் மாப்பிள்ளையின் இளையவர் ஒருவர் திரு .கார்த்திகேயன் -சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்துகொண்டுள்ளார் ..இவர் இரண்டு சகோதர்களுக்கு தக்க வழிகாட்டியாக உள்ளதை அறிந்து நம் சமுதாயத்தில் இப்படி இளைய சொந்தங்கள் இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..இனி நம் கம்பள சமுதாய விருச்சத்தின் விதைகளாக ,கிளைகளாக வளர வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம்
www .kambalavirucham .in
எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு (KVE )
உடுமலைப்பேட்டை


என் இனிய அருமை தினேஷ் மாப்பிளைக்கு(மணிராஜ் சௌண்ட்ஸ் சர்வீஸ் ) பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...

திங்கள், 17 ஆகஸ்ட், 2020


கேள்வி : தனிக்குடித்தனம் மகிழ்ச்சி தருவதாக இன்றைய பெண்கள் நினைக்கிறார்கள், ஆனால் தனிக்குடித்தனம் தான் இன்றைய கள்ளக்காதல், விவாகரத்து பிரச்சினைகளுக்கு காரணம் எனவும் கூறுகிறார்கள். எது சரி?


என் பதில் :உங்கள் கேள்வியின் ஒரு பகுதிக்கு என்னால் விடையளிக்க முடியும்.

என் வெளிநாடுவாழ் நண்பர் மஹேந்திரன் அவர்களின் மனைவி  ராஜேஸ்வரி  ·லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுது வசிக்கிறார் ..கூட்டு குடும்பத்தில் இருந்து வந்தவர் ..அவரின் பகிர்வு ..உங்களுக்காக 


தனிக்குடித்தனம் தான் மகிழ்ச்சி என இன்றைய பெண்கள் நினைக்கிறார்கள். இதற்கு


இந்த காலத்தில் மாமனார், மாமியாரோடு இருப்பதே கூட்டுக் குடும்பம் என்கிறார்கள். நான் என் சிறுமிப்பருவத்திற்கு flashback செய்து பார்க்கிறேன்.


என் தாத்தா வீட்டில் 6 மகன்கள், 2 மகள்கள். இவர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்ந்த காலங்கள் உண்டு.


ஒவ்வொரு மகனும், வேலைக்கு வந்தபின், சம்பளத்தை தாத்தாவிடம் தான் கொடுக்க வேண்டும், ஒரு 3–4 வருடம் கழித்து கல்யாணம் முடிப்பார்கள். மருமகள் தன் கொழுந்தன், நாத்தனார் என சேர்ந்துதான் இருக்க வேண்டும்.


ஆண்கள் எல்லாம் hall இல் உறங்க, பெண்கள் உட்புற அறைகளில் ஒன்றாக உறங்குவார்கள். மருமகளின் நகை, சீதன சாமான்களை அத்தைகள் உபயோகப்படுத்தலாம். என் சிறுவயது photo வில் அத்தை, எங்கம்மாவின் அட்டிகையில், புடவையில் இருப்பார்.


என் அம்மா, டிகிரி முடிக்காத போதே திருமணம் முடிந்ததால், அப்பப்ப தாத்தா, பாட்டி அவரை கேலி செய்வார், அத்தை நகைப்பார்கள் (அவர்கள் இருவரும் Msc),


என் அம்மா பெரும்பாலும் அடுப்படியில் தான் இருப்பார். என் அ்அப்பா, தன் சம்பளத்தில் ஒருமுறை எங்கம்மாவுக்கு புடவை வாங்கி, தாத்தாக்கு தெரியாமல் கொடுக்க, வீட்டில் கண்டுபிடித்து ரகளையானது, ‘பெண்டாட்டி பேச்ச கேட்கிறயா’ என.


என் அம்மா தன் degree ஐ முடிக்க நினைத்தாலும், அனைவருக்கும் சமையல், வீட்டு வேலை என உழன்றார், விறகடுப்பில் சில நேரம் கரியில் சூடுபட்டு அழுவார் (gas cylinder இத்தனை பேருக்கு கட்டுப்படியாகாது, மேலும் அவர் மிகவும் வசதியாக வளர்ந்தவர், அந்த காலத்தில் கட்டிக் கொடுத்தால் தலையிட மாட்டார்கள்)


என் அம்மாவிடம் கடுமையாக இருந்த தாத்தா, பாட்டி அத்தைகள் என்னிடம் மிக அன்பாக இருப்பார்கள், என் அப்பாவிற்கு அடுத்த மகன், என் சித்தப்பாக்கு ஒரு school teacher ஐ மணமுடித்தார்கள். என் சித்தி வீட்டில், ‘மூத்த மருமகள எப்படி நடத்தறாங்க பாரு, நீ பேசாம எங்க கூட இரு’ என தூபம் போட, என் சித்தப்பா-சித்தி வேறு வீடு சென்றனர்.


என் இரு அத்தைகள் திருமணம் வரை என் அப்பாவின் சம்பளம் முழுக்க தாத்தா கையில்தான், கூட்டுக்குடும்பம்தான்.


அம்மா அடிக்கடி அழுவார். 30 வயதிலேயே, ஆர்த்ரடிஸ் வந்தது, வலது கை 60% மட்டுமே நகரும். நான் 4 ஆம் வகுப்பு வரும் வரை அதாவது ஒரு 10 வருடம் என் அம்மா-அப்பா-நான் தனியாக எங்குமே சென்றதில்லை. என் தந்தை நன்றாக சம்பாதித்தும், எனக்கோ, அம்மாவுக்கோ, எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை. பிறகு transfer வர, சுதந்திர காற்றை சுவாசித்தோம்.


எல்லா மகன்களும் என் அம்மாவின் நிலை தன் மனைவியருக்கு வராமல் இருக்க, வேறு ஊர், மாநிலம் என மாறி சென்றனர்.


தாத்தா தான் இறக்கும் வரை, அப்படியேதான் அதிகாரம் செய்பவராக, மருமகள்களை ஏளனம் செய்பவராக, தன் மகன்களின் சம்பளத்தில் தனக்குதான் உரிமை என்பவராக இருந்து, மடிந்தார்.


அவர் இறந்தபின், என் பாட்டியை எல்லாரும் அரவணைத்து பார்த்துக்கொண்டோம், நல்ல கதியில் என் மகள் பிறந்தபின், இறைவனடி சேர்ந்தார்.


கடைசி காலத்தில் என் அம்மா கைபிடித்து அழுதார், நான் உன்னை கொடுமைப்படுத்தியதற்கு மன்னித்துக்கோ என்று. காலம் கடந்த மன்னிப்பு, போன இளமையும், அந்நியோன்மையான வாழ்க்கையும் என் பெற்றோருக்கு திரும்பி வருமா?


எனக்கு மாப்பிள்ளை பார்த்த போது என் அம்மாவின் ஒரே நிபந்தனை, சிறிய குடும்பமாக இருக்கும் பையன்தான் வேண்டும் என.


சொல்லுங்கள் என் தாய் சொன்னது தவறா? அவர் பட்டது நான் படக்கூடாது என்ற பாதுகாப்பு உணர்வுதான் காரணம்.


கூட்டுக் குடும்பங்கள் மருமகள்களை கடுமையான சூழ்நிலையில் தள்ளுகின்றன். தன் படிப்பு, தன் வேலை என இருக்கும் பெண்கள் அதை விரும்புவதில்லை.


இது சரியா தவறா என்று சொல்ல முடியவில்லை. ஆனால் இதுதான் யதார்த்தம். Just stating what is happening, not passing any judgement.


மற்றபடி இந்த கள்ளக்காதல் செய்யும் கோணல் புத்திக்காரர்கள், மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. அவர்கள் கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிய்த்துக் கொண்டோ, பெரியோர் அறியாமலோ, வேறு உறவை நாடமாட்டார்களா என்ன?


Edit- பதிலில் என் தாத்தாவை மோசமாக சித்தரித்தது போல இருந்தது. என் தாத்தா இன்னொரு dimension உண்டு, அவர் ஒரு நேர்மையான customs officer, எல்லா மகன், மகளையும் நல்ல நிலையடைய வைத்தார். ஓய்வுக்கு பிறகு நம்ம traffic ராமசாமி போல பொதுநல வழக்கு தொடர்வார். ஆக்கிரமிப்பு அகற்றுதல், அங்க இருந்த ஏழைகளுக்கு பட்டா வாங்கிக் கொடுத்தல் என. பல local leaders தொடர்பில், எதிரிகளையும் சம்பாதித்தார். இன்று நாங்கள் வளமாக இருக்க, ஆணிவேர் அவரே! ஆனால் வீட்ல சர்வாதிகாரம் தான். என் அத்தைகள் இப்போது பாந்தமாக இருப்பார்கள், என் பிரசவத்தில், திருமணத்தில் அவர்களும் உதவினார்கள். வயது அனைவரையும் மாற்றியது. என் அம்மா நலம்,

 நன்றி...வாழ்த்துக்கள் 

சனி, 15 ஆகஸ்ட், 2020

 எது தலைமைப் பண்பு?


(ராஜகம்பள உறவுகள் ..-தேனீ ..)


என் வகுப்புத் தோழனான பிரகாஷுக்கு இணையான பேச்சாளர்கள் ஏழு, எட்டுப் பேர் எங்கள் கல்லூரியில் இருந்தார்கள். ஆனால் அவன்தான் மாணவர் சங்கத் தலைவன். எங்கு, யாருக்கு, என்ன சிக்கல் என்றாலும் அவனைத்தான் அழைப்பார்கள். உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று எல்லோரோடும் பேச்சு வார்த்தை நடத்துவான். அனைவரும் சமாதானம் அடையும்படி எப்படியாவது ஒரு சுமூகத் தீர்வைக் கண்டுபிடித்திடுவான். “வாய் உள்ள பிள்ளை அதனால் பிழைக்குது!” என்று அவனைப்பற்றிப் பலர் பேசுவதுண்டு.


“எங்களுக்கும் தலைவர் பதவி கிடைத்தால் நாங்கள் கூடத்தான் நாட்டாமை மாதிரித் தீர்ப்பு கொடுத்து அசத்துவோம்!’’ என அவன் மேல் பொறாமை கொண்டு பேசுபவர்களும் உண்டு. இது போன்ற பேச்சுகளுக்குச் சவால்விடும் ஒரு நாள் வந்தது.


எங்களாலும் முடியும்!


பொதுவாகவே எங்கள் கல்லூரியில் கலைத்துறை மாணவர்களுக்கும் அறிவியல் துறை மாணவர்களுக்கும் இடையில் பனிப் போர் நிலவும்.


அன்று கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் வழக்கமான வாய்ச்சவடால் அடி தடி சண்டையாக மூண்டது. பிரச்சினையைத் தீர்க்கப் பிரகாஷை தேடி ஓடி வந்தான் ஒரு மாணவன். ஆனால் அன்று பிரகாஷ் கல்லூரிக்கு வரவில்லை. உடனடியாக என் வகுப்பில் இருந்த ராஜாவும், கார்த்திக்கும் “நாங்க ஒரு கை பார்த்துட்டு வருகிறோம்!” எனப் புறப்பட்டார்கள்.


அவர்கள் இருவரும் வகுப்பை விட்டுச் சென்ற அடுத்த நிமிடம் பேராசிரியர் வகுப்புக்குள் நுழைந்துவிட்டார். என்ன நடக்கிறது என்ற ஆவலோடும், பதற்றத்தோடும் நாங்கள் எல்லோரும் வகுப்பிலேயே அமைதியாக அமர்ந்திருந்தோம்.


அரை மணி நேரம்வரை என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. “சார், உங்களை தலைமை ஆசிரியர் உடனடியாக அவர் அலுவலகத்துக்குக் கூப்பிட்டார்!” எனக் கல்லூரி அலுவலக உதவியாளர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் கூறினார். பின்புதான் நடந்த கூத்து தெரிய வந்தது. சண்டையை நிறுத்த வீறு நடை போட்ட ராஜாவும், கார்த்திக்கும் மத்தியஸ்தம் பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் தீர்ப்பை ஒப்புக்கொள்ள மறுத்த மாணவர்களையெல்லாம் அடித்துப் பெரிய கலவரம் பண்ணிவிட்டார்கள். அன்று நடந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.

சிறந்த பேச்சாளர்

என்னுடன் வகுப்பில் படித்த பிரகாஷ், ராஜா, கார்த்திக் மூவருமே பல பேச்சுப் போட்டிகளில் பலமுறை ‘சிறந்த பேச்சாளர்’ பட்டம் வென்றவர்கள்தான். மூவருமே பேசத் தொடங்கினால் வார்த்தைகள் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போலப் பாயும். நினைத்த விஷயத்தைத் தயக்கம் இல்லாமல் வெளிப்படையாகப் பேசுவார்கள்.


எல்லோரிடமும் கலகலவெனப் பேசுவார்கள். அனைவரும் ரசிக்கும்படி பேசுவார்கள். அவர்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற குணாதிசயங்கள் கொண்டவரை எக்ஸ்ட்ரோவர்ட் (extrovert) என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.


ஆனால் ராஜாவிடமும் கார்த்திக்கிடமும் இல்லாத ஏதோ ஒரு நுட்பம் பிரகாஷிடம் இருந்திருக்கிறது. அதுதான் அவனை மாணவர் சங்கத் தலைவனாக உயர்ந்தெழச் செய்திருக்கிறது. ஆகவே அவன் எக்ஸ்ட்ரோவர்டாக இருப்பதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு தனித்திறனுடன் இருந்திருக்கிறான். கார்டனர் குறிப்பிடுகிற மனிதத் தொடர்பு அறிவுத்திறன் (Interpersonal Intelligence) என்பதோடு இந்தத் திறனை நாம் ஒப்பிடலாம்.


எது தலைமைப் பண்பு?


எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி, சிறந்த பேச்சாற்றலோடு இருப்பவர்களெல்லாம் மனிதத் தொடர்பு அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது இவர்களுடைய பலம் பேச்சுத் திறன் எனத் தோன்றும். ஆனால் இவர்களுடைய உண்மையான பலம் பேசுவதில் அல்ல கேட்பதில் இருக்கிறது. பிறர் சொல்வதைக் கவனித்து, அவர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து பின்பு எதிர்வினை ஆற்றுவதே இவர்களுடைய தனிச் சிறப்பு. இவர்களால் மற்றவர்களுடைய உணர்வை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.


அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவார்கள். தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுத்துக்கூட உறவில் பிணைப்பை ஏற்படுத்த கடும் பிரயத்தனம் செய்வார்கள். அதிகாரத்தின் மூலம் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலமாட்டார்கள். அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய சூழலில், பலவிதமான மனிதர்களோடு உற்சாகமாக இணைந்து செயல்படுவார்கள். கூட்டு முயற்சியில் ஈடுபட விரும்புவார்கள். இவர்களுடைய அணுகுமுறை நல்ல தலைமைப்பண்பை வெளிப்படுத்தும்.


“நீ போகலாம் என்பவன் எஜமான். வா! போகலாம் என்பவன் தலைவன். நீ எஜமானா? தலைவனா?” எனும் வைரமுத்து வரிகளை மனிதத் தொடர்பு அறிவுத்திறனுக்கான கவித்துவமான ஒரு வரி விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம். இது அறிமுகம்தான். மனிதத் தொடர்பு அறிவுத்திறன் தொடர்பாகத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளன!


நன்றி ..