மணிராஜ் சவுண்டு அண்ட் லைட்டிங்ஸ்
Maniraj Sounds and Lightings....
பொட்டையம்பாளையம் -உடுமலைப்பேட்டை
தினேஷ் மாப்பிளை தந்தை கூலி வேலைக்கு சென்று தன் உழைப்பின் மூலம் சிறு அளவில் இந்த ஒளி ஒலி அமைப்பு ஏற்படுத்தி நடத்திவந்தார் ..அதன் பின் நம் மாப்பிள்ளைகள் தினேஷ் கோவையில் தொழில் துறை பயிற்சி படித்துவிட்டு
தன் தந்தைக்கு உதவுவதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு தற்பொழுது நல்ல முறையில் வளர்ந்து வருவது மகிழ்ச்சி .தற்பொழுது மணிராஜ் தம்பியும் பி.காம் படித்துவிட்டு அண்ணனுக்கு உதவியாக உள்ளது மகிழ்ச்சி ..
நமது சமுதாய சொந்தங்களின் எந்த ஒரு திருவிழா என்றாலும் பொட்டையம்பாளையம் "மணிராஜ் சவுண்ட் சர்வீஃச்"தான். கல்யாணம், கோவில் திருவிழா, சடங்கு , வாலிபர்களின் கைப்பந்து விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும், மணிராஜ் சவுண்ட் சர்வீஃச் தான் ஒலி&ஒளி அமைப்பு செய்வார்கள். முதன் முதலில் ஊரில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இரண்டு சக்கர மோட்டார் பைக்கில் குழாய் ஃச்பீக்கரை பக்கவாட்டில் கட்டிக்கொண்டு ஒரு வண்டியும், ஆம்பிளிபையர் மற்றும் ரிக்கார்டுகளை கேரியரில் வைத்துக்கொண்டு ஒரு வண்டியும், ட்யூப் லைட் மற்றும் சீரியல்செட் லைட்டுகளை இன்னொரு வண்டியிலும் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் கெளம்பிவிடுவார்கள். தற்பொழுது மாப்பிள்ளைகள் நான்கு சக்கர ஜீப் புதுவரவு ....
ஒரே நேரத்தில் பல விழாக்களுக்கு ஒலி & ஒளி அமைப்பு செய்யும்போது, நம் மாப்பிள்ளைகள் போன்ற பல இளவட்டங்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிடும். மைக் செட் ஓனர் தினேஷ் , யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்வார். இரவு முழுக்க விழித்து , இடைவிடாமல் பாட்டுப் போடும் பணி தம்பி மணிராஜ்க்கு கிடைக்கும். அதில் இடை இடையே மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கும். பதின்ம வயதில் ஊரில் இப்படி குரல் ஒலிப்பது பெரிய கெத்தாக எடுத்துக்கொள்ளப்படும். "பழைய மற்றும் புத்தம் புதிய பாடல்களுக்கு, மணிராஜ் சவுண்ட் சர்வீஃச். உங்களின் திருமணம் மற்றும் அனைத்து இல்ல விழாக்களுக்கும் சிறந்த முறையில் ஒலி ஒளி அமைத்துக்கொடுக்கப்படும்" என்று நட்ட நடு ராத்திரியில் விளம்பரம் செய்துவிட்டு அதை இமாலய வெற்றியாக அடுத்த நாள் டீக்கடையில் கொண்டாடப்படும். அதுவும் பகல் நேரத்தில் ஊர் குமரிகள் ரோட்டில் நடமாடும்பொது, தங்கள் வெளம்பரக் குரலை ஒலிக்க விட பெரும் போட்டி இருக்கும் விடலைகளிடம்.
கல்யாண வீடுகள் அல்லது பொதுவான குடும்ப விழாக்களில் ஒலி&ஒளி அமைப்பது பெரிய விசயமாக இருக்காது. வீட்டில் போடப்பட்டுள்ள கொட்டகையில் இரண்டு குழாய் ஃச்பீக்கர் , அந்த வீடு இருக்கும் தெரு முக்கில் ஒன்று அல்லது இரண்டு குழாய் ஃச்பீக்கர் என்று கட்டிவிட்டால் ஒலி அமைப்பு முடிந்துவிடும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப குழாய் ஃச்பீக்கர் எண்ணிக்கை மாறும். ஃச்பீக்கர் கட்டி முடிந்தவுடன் மூங்கில் கம்புகளை தெருவில் நட்டு அதில் ட்யூப் லைட்டுகளை கட்டி , சீரியல் பல்புகளையும் போட்டுவிட்டால் ஒளி & ஒலி அமைப்பு வேலை முடிந்துவிடும். அதற்குப்பிறகு விடிய விடிய ஏதாவது பாடல்களைப் போட்டுக்கொண்டு இருந்தால் போதும். சில நேரங்களில் விழாநடக்கும் வீட்டில் இருந்து யாராவது பொடுசுகள் வந்து "எங்க மாமா இந்தப் பாட்டு போடச் சொன்னாக" , "எங்க அக்கா இந்தப்பாட்டு போடச் சொன்னாக" என்று நேயர் விருப்ப பட்டியல் கொடுத்துவிட்டுப்போவார்கள். தெரிந்த குமரிப் பொண்ணுகள் இருந்தால் அவர்களுக்கான ஃச்பெசல் பாட்டுக்கள் கேட்காமலேயே ஒலிபரப்பு செய்யப்படும்.தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகள் விழாக்களில் கலக்குவார்கள் ...இப்படித்தான் நம் ஊரு விழாக்களில் மக்கள் மனதில் இடம்பிடித்து ..மணிராஜ் சவுண்டு சர்வீஸ் வளர்ந்து கொண்டு உள்ளார்கள் ..தற்பொழுது புதிய தொழிநுட்ப வசதிகளுடன் ஒளி பெருக்கிகள் வந்துள்ளதால் ..விழாக்களுக்கு தேடி வந்து பணிகளை தந்துகொண்டுள்ளார்கள் ..இனி வரும் காலம் அரசியல் ,கோவில் திருவிழா .எந்த ஒருவிழா என்றாலும் தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகளை காணலாம் ..முத்து மஹால் ,GK மஹால் ,ST ரத்தினவேல் மண்டபம் ,.என்று கல்யாண மண்டபத்திலும் காணலாம் ..கடந்த வாரத்தில் நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு விழாவிற்கு ஒலி அமைப்பு செய்த மாப்பிளைகளின் திறமைகளுக்கு கிடைத்த வரவேற்பு அவர்களின் சுய தொழில் காட்டும் ஆர்வம் ..பொது தளத்தில் எப்படி பெயரை நிலைநாட்டவேண்டும் என்பதை கடந்த இரண்டு வருடங்களாக பார்த்து வருகிறேன் ....இரண்டு மாப்பிள்ளைகள் பணிகள் இப்படி என்றால் ..தினேஷ் மாப்பிள்ளையின் இளையவர் ஒருவர் திரு .கார்த்திகேயன் -சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்துகொண்டுள்ளார் ..இவர் இரண்டு சகோதர்களுக்கு தக்க வழிகாட்டியாக உள்ளதை அறிந்து நம் சமுதாயத்தில் இப்படி இளைய சொந்தங்கள் இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..இனி நம் கம்பள சமுதாய விருச்சத்தின் விதைகளாக ,கிளைகளாக வளர வாழ்த்துக்கள் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம்
www.kambalavirucham.in
எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு (KVE )
உடுமலைப்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக