கம்பளவிருட்சம் அறக்கட்டளை -இரண்டாம் ஆண்டு பொதுக்குழு
சிறப்பு விருந்தினர் ...
திரு என் .குமரன் ...கல்வியாளர்
உடுமலை நகருக்கு பெருமை சேர்த்த என்.குமரன் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பணியில் உள்ளார் . தராசு பத்திரிகையானது உச்சகட்ட விற்பனையில் இருக்கும்போது இதழில் செய்தியாளராகவும். தராசு மக்கள் மன்றத்தில் மாநில அமைப்புச் செயலளாராகவும் பணியாற்றியுள்ளார். தராசு மக்கள் மன்றம் சார்பாக 1989 ஆம் ஆண்டு உடுமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தற்போது திருப்பூரில் குமரன் பிரஸ் பதிப்பாளராக உள்ளார். தற்போது மாணாக்கர்களின் கல்வியில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இரண்டு நூல்கள் கல்வி தொடர்பாக வெளியிட்டுள்ளார். ஸ்காலர்சிப் (தமிழில்). How to Get Educational Loans to study in India and Abroad என்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இரண்டு புத்தகங்களும் மருத்துவம். பொறியியல், வேளாண்மை கல்விகள் பயிலுவதற்கு வங்கிக்கடன் பெறுவது எப்படி? தனியார் நிறுவனங்கள் கல்வி நிதி உதவி எவ்வாறு கொடுக்கின்றன என்பதைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
இவர் எழுதி வரும் கல்வி கடன் விழிப்புணர்ச்சி பற்றி எழுதிவரும் இதழ்கள் நாணயவிகடன் ,தினமணி ,தினமலர் ,இந்தியன் எக்ஸ்பிரஸ் ,தமிழ் இந்து ,ஆகியவாகும் ..
நமது உயர் கல்வி கற்கும் குழந்தைச்செல்வங்கள் இவரின் சிறப்புரையை கேட்டு பயனடைவதற்கு நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு வருகை தருவது மிக்க மகிழ்ச்சி ...
கம்பளவிருட்சம் அறக்கட்டளை
விழா ஒருங்கிணைப்பு குழு ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக