வெள்ளி, 19 அக்டோபர், 2018

 திருமதி .சுதா சின்னச்சாமி -பல்லடம் ...
சாதனா ஆடை வடிவமைப்பாளர்
Sathana Fashion Designer-Palladam 
ஆள் பாதி, ஆடை பாதி என்பதெல்லாம் அந்தக் காலம். ஆடைதான் இன்று ஒருவரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெண்களின் ஆடைகள் என்றால் சொல்லத் தேவையில்லை. இழைகளே தெரியாத அளவுக்குக் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் கோலோச்சுகின்றன. திருமணம், திருவிழா, பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்ற பிரத்யேகமான உடைகள் கிடைக்காதா என்று ஆதங்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் அந்த ஆதங்கத்தையே தன் அடையாளத்துக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் திருமதி .சுதா சின்னச்சாமி . இவரின் கைவண்ணத்தில் சாதாரணத் துணியும் பளபளக்கும் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறது.
பல்லடம் ..பா வடுகபாளையத்தை  சேர்ந்த நமது சொந்தம் திருமதி சுதா சின்னசாமி , அந்தப் பகுதியின் பெயர் சொல்லும் டிசைனர். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்புப் பெண்களும் இவருடைய வாடிக்கையாளர்கள். இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடையின் அளவை மட்டும் கொடுக்கின்றனர். மற்றபடி எந்த மாடல், என்ன டிசைன் என்பதையெல்லாம் திருமதி சுதா சின்னசாமி  விருப்பத்துக்கே விட்டுவிடுகின்றனர். இதற்குக் காரணம், வாடிக்கையாளரின் உடல் வாகு மற்றும் அவரவர் முகத்தோற்றத்திற்கேற்ற வகையில் புதுப் புது டிசைன்களை சுதா சின்னச்சாமி அறிமுகம் செய்துவிடுவார்.திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் கடந்த 15 வருடங்களாக பெண்கள் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் ..பொள்ளாச்சி ,பல்லடம் ,பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் ..இவர் வடிவைமைத்த பெண்கள் ஆடைகள் தமிழ்நாட்டையும் தாண்டி பிரபல துணிக்கடைகளில் விற்பனையாகி உள்ளது என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறது கம்பளவிருட்சம் தொழில் குழுமம் ..
பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன.
சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி
பண்டிகை என்றதும் குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது புத்தாடைதான். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. ஏராளமான புதிய மாற்றங்களும், வண்ண கலவையும் கொண்ட இந்த ஆடைகள் தீபாவளி பண்டிகைக்கு ஏற்றவாறு அதிக வேலைப்பாடும், செட்டுகள் நிறைந்தவாறு உருவாக்கப்படுகிறது. 
தீபாவளி பண்டிகைக்கு என பெண் குழந்தைகள் அணியும் ஆடை சற்று பிரம்மாண்ட தோற்றத்தை அளித்திட வேண்டும். அது மட்டுமின்றி அழகிய வடிவமைப்பு, பிரகாசமான வண்ண சேர்க்கை, லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடு என அனைத்திலும் தனி கவனத்துடன் நேர்த்தியான நுணுக்க வேலைப்பாட்டுடன் ஆடைகள் உருவாகின்றன.
 பெண் குழந்தைகளுக்கு என லெஹன்கா, அனார்கலி, சுடிதார், பிராக், பாவாடை - சட்டை, மாடர்ன் டிரஸ்ஸிங், ஜீன்ஸ் டி-ஷர்ட் என பலவிதமான ஆடைகள் உள்ளன. இவையனைத்திலும் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட ஆடைகளாய் புதிய வடிவமைப்புகள் தரப்படும். அத்துடன் தீபாவளி ஸ்பெஷல் என்றவாறு சில ரகமும் வெளிவரும்.
தீபாவளிக்கு உகந்த பாரம்பரிய ஆடைகள் :
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகள் அணிவது உண்டு. தீபாவளி என்பதில் பெரும்பாலும் பாரம்பரிய ஆடைகள்தான் அணிவது உண்டு. அதாவது முன்பு பாவாடை சட்டை. பிறகு சுடிதார், பைஜாமா, அனார்கலி போன்றவை பாரம்பரிய ஆடைகளின் வரிசையில் இணைந்தன. சுடிதார் மற்றும் சல்வார் போன்றவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு அனார்கலி போன்றவை வந்தன. தற்போது மஸ்தானி, சல்வார் நீட்ஸ், லெஹன்கா சோளி, பாட்டியாலா சூட்ஸ், ரிவர்சுபின் ஜாக்கெட் போன்றவை வந்துள்ளன.
புதிய நெட் லெஹன்கா சோளி ஆடைகள் :
பெண்களின் ஆடைகள் அதிக பளபளப்பும், பிரகாசமான வண்ணத்திலும் இருக்கும். லெஹன்கா ஆடைகளின் பாவாடை மற்றும் மேல் சோளி சட்டையும் அதற்கேற்ற துப்பட்டாவும் உள்ளன. இதில் பாவாடை அமைப்பு அதிக பிரகாசமான வண்ணத்துடன் நெட் துணிவகையில் தங்க சரிகை வேலைப்பாடு முழுமையாகவும், கீழ்புறம் அகலமான லேஸ் பார்டர் (அ) சரிகை பார்டர் கொண்டவாறு உள்ளது. இதற்கேற்ற மேல் சட்டை அமைப்பு இடுப்பு பகுதி வரை நீண்டவாறு கீழ்பகுதியில் பார்டர் உள்ளவாறு உள்ளது.
லெஹன்கா சோளி செட்டில் கூடுதலாக நெட் துணியிலான மெல்லிய கோட் அமைப்பு கொண்ட மாடல்களும் வருகின்றன. இதிலேயே சில வகைகள் இரட்டை பாவாடை அமைப்பு கொண்ட முழு ஆடை அமைப்பாய் உள்ளது. இதில் கீழ் வரை பெரிய பாவாடை மற்றும் மேல் சற்று உயர்ந்த குட்டை பாவாடை மேல்புறமாய் உள்ளவாறு உள்ளது. மேல் சட்டை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு அழகுடன் விளங்குகிறது.
புதிய வரவான மஸ்தானி :
திரைக்கு வந்த ஒரு பாலிவுட் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடைதான் தற்போது மஸ்தானி என்றவாறு தீபாவளி புதிய வரவாக வந்துள்ளது. இது லெஹன்கா போன்றதும் அல்ல, சோளி அமைப்பும் அல்ல. இரண்டிலும் சற்று மாறுப்பட்ட ஆடை அமைப்பு. அதாவது மேல் சட்டை அமைப்பு கால் பகுதி வரை நீண்டவாறு உள்ளது. இதன் நடுவே ஸ்ட்ரெயிட் கட் உள்ளது. இதற்கு இணையாக கீழ் பகுதி பாவாடை அமைப்பு உள்ளது. அழகிய வேலைப்பாடு மற்றும் எம்பிராய்டரி செய்ய கோட் அமைப்பும், ஸ்லீவ்லெஸ்-யும் கச்சிதமான தோற்றத்துடன் உள்ளன. மஸ்தானி ஆடை பெண் குழந்தைகளுக்கு மிடுக்கான தோற்றத்தையும், பிரம்மாண்ட அமைப்பையும் தரவல்லதாக உள்ளது. 
நமது சொந்தம் திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் ,சின்னச்சாமி அவர்களுக்கு தன் குடும்பத்தின் சுமைகளை பெரும் பொறுப்புகளை பொறுப்புடன் இரண்டு குழந்தைச்செல்வங்களையும் பேணிக்காத்து ..தங்களின் வளரச்சி யே சமுதாயவளர்ச்சி என்று கம்பள பெண் தொழில் முனைவோர் முதன்மையாகயாகவும் நம் கம்பள பெண்குழந்தைச்செல்வங்கங்ளுக்கு வழிகாட்டியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ..நமது கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம் ..அவர்களுக்கு வியாபார வளர்ச்சிக்கு தகந்த வங்கி கடன் உதவி ஆலோசானைகள் வழங்கும் .நமது கம்பள விருட்சம் தொழில் குழுமத்தில் அவரின் பங்களுப்பும் உள்ளது ..அவரின் ஆலோசேனைகள் கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமத்திற்கு நமது பெரும் உதவியாக உள்ளது நன்றி..விருச்சத்தின் விதைகள் ..இனி ஆலமரமாக தன் விழுதுகளை கிளைபரப்பும் ..
இங்ஙனம் 
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
கம்பள விருட்சம் தொழில்சார் குழுமம் 
உடுமலைப்பேட்டை .
www.kambalavirucham.in 
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக