செவ்வாய், 9 அக்டோபர், 2018

எத்தனை நகரங்கள் அசுர வளர்ச்சி அடைந்து மெட்ரோ சிட்டியாக மாறினாலும்

நமது உடுமலைப்பேட்டை மட்டும் இன்னும் டவுண் என்னும் அந்தஸ்து மாறாமல்.. கிராமங்களின் தலைநகரமாக விளங்குகிறது...

1.எங்கள் ஊர்ப் புறங்களில் மாட்டுச் சாணி வாசம் வீசும்.. சாக்கடை நாற்றம் வீசாது...

2. போக்குவரத்து இருக்கும்.. ஆனால் நெரிசல் இருக்காது..

3 சில நகரங்களில் இரவு விடிய விடிய பஸ் வசதி இருக்கும் போது எங்கள் டவுணில் எல்லா ஊருக்கும் கடைசி பஸ் ஒன்பது மணிக்கு மேல் இல்லை.. காரணம் தோட்டத்தில் மாடுகன்றுகளோடு விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாக வெளியூர் போக மாட்டாங்க.. அப்படியே போனாலும் கோயிலுக்குப் பழனி, வேலைக்குத் திருப்பூர், பெரிய வேலைனா கோயம்புத்தூரு அவ்வளவு தான்.. எதுக்கு விடிய விடிய பஸ்..

4..பாண்டிச்சேரி, கோவா, ஊட்டி னு போய் காசக் கரியாக்கி கூட்டத்துல நிம்மதி இல்லாமல் வர்றத விட குறைவான செலவில் திருமூர்த்தி அமராவதி னு அமைதியாக தனிமையில்  சொர்க்கத்திற்குப் போயிட்டு வந்திரலாம்..

5.சுத்தமான கடைவீதிகள். மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாத இடங்கள்.கனிவான பேச்சு.. அமைதியை உடைய நகரம்..

6.கரிசல் மண் சேறு, கரும்புச் சாறு வாசம், கன்னுக்குட்டியின் ஓட்டம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ், எப்போதாவது வரும் இரயில், பிராண்டட் மினிஷோரூம்ஸ், திருமூர்த்தி தண்ணீர், காற்றாலை அழகு, எல்லாவற்றிற்கும் மேலாக நாகரிகம் கலந்த எதார்த்தமான வஞ்சகம் இல்லாத வாங்.. போங்.. கொங்கு தமிழ்.

மற்ற பெரிய நகரங்களுக்குக் கிராமமாக
நமது ஊர் கிராமங்களுக்குத் தலைநகரமாக..

இதெல்லாம் பார்க்கையில் இன்னும் பல  நூற்றாண்டுகள் உடுமலைப்பேட்டை நகரம் இப்படியே இருக்க வேண்டும் என்ற ஆசை விரிகிறது...😀😍😊😊ஏன் என்றால்


உடுமலையில் சுற்றி நம் கிராம சொந்தங்கள் இருக்கும் மக்கள் ...மனதில் சூது ..வாது  தெரியாத ...வெள்ளந்தியான  மனம் கொண்ட நம் மக்கள் இருப்பதால் தான் ..மண் மனம் மாறாது ...இருப்பதால் ..அரசு துறை என்றாலும் ..தனியார் துறை என்றாலும் ...இங்கு வரும் மக்கள் ..உறவு முறை சொல்லி அழைப்பதால் ...வேற ஊருக்கு மனசு வரமாட்டேங்கதுங்க ....வாழ்க வளமுடன் .. .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக