கேள்வி : உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சியில் , கோயம்புத்தூரில் வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு என்ன செலவாகும ?
பதில் :
நீங்கள் கேட்ட கேள்விக்கான நேரடி பதில், தற்போதைய சந்தை விலையில் தனி வீடு கட்ட Civil work க்கு மட்டும் தோராயமாக சதுரடிக்கு ரூ. 1750/= ஆகும். இது உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி,கோயம்புத்தூருக்கும் பொருந்தும்.
இந்த ஒரு வருட காலத்தில் ( Aug 2020 - Aug 2021) - யில் மணல், சிமெண்ட், wire cut செங்கல், ஸ்டீல் TMT கம்பிகள் போன்றவை விலை கூடியதால் கம்பெனிக்கு கட்டுப்படியாகலைனு கட்டிட பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
செங்கல் / மணல் / சிமெண்ட் கொள்முதல் செய்திட தற்போது நிறைய செலவாகிவிட்டது. வீட்டு முன் கார் பார்க்கிங் செய்ய car porch உடனே கட்ட முடியவில்லையா என்ற வருத்தமா ? கவலையே வேண்டாம். இடத்தை மட்டும் விட்டு வையுங்கள். பிறகு கட்டலாம்.
அது வரை, இந்த சிறிய வகை TN 99 W 007 மாருதி ஜென் நிறுத்திட இவரை போலவே உங்கள் காரை முன்புறத்திலிருந்து மாடிக்கு செல்லும் படிக்கட்டு அடியில் இரவில் நிறுத்திட ஆவண செய்யுங்கள் ..நன்றி
என்றும் அன்புடன் சிவக்குமார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக