உடுமலை தொழிலதிபர் கிரிகண்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு பரிசளிப்பு..
உடுமலையில் கிரி கிளாத் ஸ்டோர்ஸ், விஜயதீப் எனும் இரு பெரிய துணி வணிக நிறுவனத்தை நடத்தி வந்தவர், உடுமலை லயன்ஸ் கிளப் திருமணமண்டபத்தை கட்டும்போது லயன்ஸ் சங்கத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர்.
உடுமலை வியாபாரிகள் சங்கத்திலும், ஜவுளி வியாபாரிகள் சங்கத்திலும் பல ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தவர்.
உடுமலை விளையாட்டுக் கழகத்திலும் பொறுப்பாளராகப் பல்வேறு உதவிகள் செய்தவர்.
உடுமலையின் சுற்று வட்டார மக்களின் கோவில் திருவிழாக்களுக்கு அதிகளவு உதவி செய்தவர்.
அகவை நிறைந்தாலும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும்
உடுமலை கிரிகண்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
உடுமலை கனகராசன் குறித்தான தரவுகளையும், முத்துசாமி கவிராயர் குறித்தான தகவல்களையும், மாம்பழக் கவிராயர் குறித்தான தரவுகளையும் தந்தவர்.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீண்ட நாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தார்.
இன்று அவரது வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.
உடுமலைக்கான சிறப்பானதொரு நல்ல அடையாளத்தை, அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு பணியை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் செய்தமைக்காக அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
அய்யா கிரிகண்ணன் அவர்களுக்கு உடுமலை மக்களின் சார்பிலும், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பிலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் பதிவு செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக