சனி, 16 அக்டோபர், 2021

 #சலகெருது

(சாமி மாடுகள்)
கம்பளத்து நாயக்கர் சமுதாய சொந்தங்களின் பாரம்பரியமான சலகெருது மரித்தல்.
இது வருடாவருடம் தைப்பொங்கல் திருநாளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்து ஊர்பொது இடத்தில்ஊர்நாயக்கர், பூசாரிநாயக்கர்,கம்பளி நாயக்கர்,கோடங்கி நாயக்கர்,கும்மல்நாயக்கர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் முன்னிலையில் சலகெருது மாடுகளுக்கு பூஜைகள் செய்து உருமி வாத்திய இசை முழங்க சலகெருதாட்டம் (இரு கைகளில் பெரிய மூங்கில் தடிகளுடன் உருமி இசைக்கேற்ப சலகெருது முன் ஆடும் ஆட்டம்) நடைபெறும்.
சலகெருதாட்டம் மாட்டுப் பொங்கல் முடிந்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படுகிறது.பின்னர் அந்தந்த ஊர்ப்பொதுமக்கள் வீடுகளுக்கு சலகெருது மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டு உருமி வாத்திய இசையுடன் பூஜைகள் செய்யப்படுகிறது.பின்னர்,
காணும்பொங்கல் தினத்தன்று சலகெருது மாடுகள் அலங்கரிக்கப்பட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசி தேவராட்டக்கலைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் கோயில்களில் பூஜைகள் செய்து கும்மல்நாயக்கர் அவர்களால் @"கட்டு மந்திரித்தல்" நிகழ்த்தப்பட்டு, அருகிலுள்ள #சோமவாரபட்டி அருள்மிகு ஸ்ரீ #ஆல்கொண்டமால் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு தேவராட்டம் மற்றும் சலகெருது மரித்தல் மிகுந்த ஆர்வம் மற்றும் பரவசத்துடன் நிகழ்த்தப்படுகிறது.ஆல்கொண்டமால் திருக்கோயிலில் சலகெருது மாடுகளுக்கு மற்றும் ஊர்பொதுமக்களுக்கு பூஜைகள் செய்து தீர்த்தம்தெளித்து,விபூதிஇடப்படுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
பின்னர் சலகெருது மாடுகள் ஊருக்கு அழைத்து வந்து பாரம்பரிய முறைப்படி ஊர்ப்பொதுமக்கள் முன்னிலையில் சலகெருது கும்மல் பொங்கல் எனும் பொங்கல் வைத்து பூஜைகள் செய்து சலகெருது பாடல்கள் #சாலி பாடல்கள்) பாடும்பொழுது சலகெருது மாடுகள் தானாக முன்வந்து பால், பழம், பொங்கல் சாப்பிடும் நிகழ்வு உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த ஆர்வத்துடனும் பாரம்பரியத்துடனும் போற்றி நிகழ்த்தப்படுகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரம் லிங்கம்மாவூரில் சலகெருது கதாநாயகனாக விளங்கிய சலகெருது வயது மூப்பு காரணமாக இறந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தையும் சோகத்தையும் அளித்தது காண்போரைக் கண்கலங்க வைத்தது.பின்னர் பாரம்பரிய முறைப்படி சலகெருது நல்லடக்கம் செய்யப்பட்டது.
LIC முகவர்
6382568688

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக