கேள்வி : குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு வந்து வாழ வேண்டுமானால் எங்கு வசிக்கலாம்? கொசு இல்லாமல், குளிரான வானிலை கொண்ட இடங்கள் எவை? கோயம்பத்தூர் - கோவை புதூர் எப்படி? அங்கு ஏதேனும் குடிநீர் பிரச்சினைகள் உண்டா?
பதில் : நண்பர் ராஜகோபால் பதிவுகளுடன்,நானும் 23 வருடம் கோவையில் வசித்தவன் என்ற முறையில் ......
அமெரிக்கா to இந்தியா - விற்கு திரும்ப வரும் எண்ணத்தை மனமாற வரவேற்கிறோம்.
தங்கள் கேள்வியிலேயே கோவைபுதூர், கோயம்புத்தூர் தெற்கு மண்டலம் என்று குறிப்பிட்டு விட்டதால் நீங்கள் இந்த Satellite city ஏரியா என்று ஏற்கனவே முழுமனதாக முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.
இருந்தாலும் சில தகவல்களை பகிர்கிறேன். தங்களுக்கு பயனுள்ளதை மட்டும் ஆய்ந்தறிந்து எடுத்துக் கொள்ளுங்கள்
நாங்கள் கோவையின் மத்திய மண்டலத்தில் வசித்தாலும் கோவைபுதூர் எவர்பிரைட் அருகே 100 அடி சாலையில் இடம் வாங்கி வீடு கட்டிய அனுபவத்தில் இந்த பதிலளிக்கிறேன்.
பொதுவாக, ஒரு இருப்பிடத்தை தேர்ந்தெடுக்கும் போது கீழ் காணும் பிரதான காரணங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிவரும். நீங்கள் அதனை செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
01. சொந்த ஊர் / இந்தியாவில் இருந்த போது வெகு காலம் வாழ்ந்து - வளர்ந்த ஊர் / சொந்த ஊர் - சொந்த மாநிலத்திற்கு (கேரளா) செல்லும் பிரதான வழியில் உள்ளபடியால் .... இப்படி பல காரணங்கள்.
02. நீங்களோ உங்கள் வீட்டில் உள்ள இதர அங்கத்தினர்களோ அனுதினமும் பணிக்கு செல்லவோ அல்லது சொந்த தொழில் செய்யவோ, பிரதான கோவை நகர பிற பகுதிகளிலிருந்து குறைந்தது 8 - 12 கிமீ தள்ளி உள்ள கோவைபுதூர் உங்களுக்கு தோதுபடும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
03. உங்கள் குழந்தைகளுக்கு பள்ளி / கல்லூரி Academic Coaching classes / Hobbies - Skill - Sports Development classes கோவைப்புதூருக்கு அருகில் உள்ளதா ? அருகில் இருந்தால், நெரிசலான சாலைகளில் பயணித்து வீடு வந்து சேரும் பயண நேரத்தை பெருமளவு குறைக்கும். விரைவில் வீட்டே அடைந்தால் பயண களைப்பு குறையும், Family time - ஐ கூட்டும்.
04. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டில் வயோதிகர்கள் இருந்தால் இந்த செம்மண் பூமி நிலத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்வது, சிலு சிலு காற்றுடன் ஒரு படு சுவாரசியமான அனுபவம். ஏன்னா, Switzerland of Coimbatore எனப்படும் கோவைபுதூர் ஒரு மினி சொர்க்கபுரி தான்.
குளிரான இடங்களை பற்றியும் கேட்டிருந்தீர்கள். கோவைபுதூர் போன்றே, பொதுவாக இரவில் குளிருடன் கூடிய இதமான தட்பவெப்பநிலை கொண்ட இதர இடங்கள் தொண்டாமுத்தூர், சொமையம்பாளையம், பாலமலை, நரசீபுரம், வடவள்ளி, சரவணம்பட்டி, சுண்டப்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம், கணுவாய், வீரகேரளம், ஆலாந்துறை, கரடிவாவி, கீரணத்தம், மாதம்பட்டி, வெள்ளானைபட்டி எனவாம். இவையெல்லாம், நகரின் மையத்தில் சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளன.
05. இதே வயோதிகர்கள், அல்லோபதி - ஹோமியோபதி - சித்தா - ஆயுர்வேத - Dialysis - Physiotherapy என்று மாதமிருமுறை கோவை நகருக்குள் சௌகரியமாக வர வேண்டிய சூழல் இருந்தால் சொந்த கார் / Call Taxi வசதி இருந்தால் நலம். அவசரத்துக்கு, கோவைபுதூருக்கு அருகில் உள்ள ஒரு mid sized hospital என்றால் பொள்ளாச்சி சாலை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள அபிநந் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி ஆஸ்பிடல்ஸ் என்று வரவேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அவை தங்கள் கோவைபுதூர் வீட்டிலிருந்து அருகில் தானா என்பதை அறிக. பின்னர் அங்கிருந்து multi speciality மருத்துவமனை போக வேண்டி வரும் என்றால், Royal Care Hospital, Kovai Medical Center & Hospital,
G. Kuppusamy Naidu Memorial Hospital, PSG Hospitals, Ramakrishna Hospitals, Ganga Hospitals, Kumaran Hospitals என்று 15 - 20 கிமீ தூரம் நேரத்தை பொறுத்து நெரிசலான சாலைகளில் பயணம் வேண்டியிருக்கும்.
06. தாங்கள் அமெரிக்காவில் இருந்து Returning Indian என்ற வகையில் transfer of residence - ல் ஊர் திரும்புவதால் கோவைபுதூரில், Beverly Hills, Villa Gardenia, Paripoorna Estates, SM Gardens போன்ற gated community - யில் உள்ள single family villa - வில் இருப்பது, தங்களுக்கு பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் இருப்பின் adaptability to live in India சிறிது இலகுவாகும். கோவைபுதூர் A to Z Block ல் உள்ள தனி வீடு என்றாலும் வளமான மண் என்பதால் Home Garden, தென்னை மரங்கள் என்று குளு குளு என வாழலாம்.
ஒரே ஒரு விஷயம் : Termite protection அவசியம். கோவைபுதூரில், செம்மண்ணில் termite ன் கோபுர குடியிருப்புகள் அதிகம் உண்டு. கூடவே கொஞ்சம் பாம்புகளும்.
07. கொசுவை பற்றி கேட்டிருந்தீர்கள். எங்கு தான் அவை இல்லை ?
உலகெங்கும் அனேக இடங்கள் அவை வியாபித்துள்ளன.
இங்கு அப்படியல்ல, அவை நம்முடனே டிக்கெட் இல்லாமல் பஸ் / கார் / ரயில் / விமானம் / வீட்டினுள் என நம்முடன் பயணம் செய்து காதுகளில் இந்த கொசுக்கள் ரீங்காரமிடும். இடம் கொடுத்தால், நம்மிடமே blood sampling செய்யும்.
கோவைபுதூரில், உங்கள் வீட்டில் RK Ecran போன்ற net mesh போட்டுக்கொண்டால் ஒரளவு அழையா விருந்தாளியை தடுக்கலாம். வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில், Underground drainage இருந்தால் இன்னும் கொஞ்சம் நிம்மதி.
நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது கொசுவை அல்ல. அது, பட்டுனு அடிச்சா பொட்டுனு போயிடும்.
நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் குடியிருப்பு அருகில் யானை நடமாட்டம் உள்ளதா என்று.
(Elephant creates panic in Kovaipudur)
08. உங்களுக்கு ஏற்கனவே கோவைபுதூரில் சொந்த வீடு உள்ளதென்றால் இந்தியா வந்தவுடன் சில மாதங்கள் அங்கேயே இருந்து, உங்கள் தேவைகள் முழுமையாக பூர்த்தி ஆகிறதா, பாதுகாப்பாக உணருகிறீர்களா என்று பாருங்கள்.
உங்க ஏரியா Jio / BSNL போன்றோர் வழங்கும் FiberNet speed எப்படி ? Log in செய்ய feasibility உள்ளதா என்று கவனிங்க. இன்றைய online காலகட்டத்தில் இது மிகவும் அவசியம்.
இல்லையேல், சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, நீங்கள் வேறு ஒரு gated community - க்கு மாறுவதை பற்றி அப்போது யோசிக்கலாம்.
09. நீங்கள் இந்தியா வந்து, இனிமேல் தான் வீடு வாங்க வேண்டும் என்றால் உங்கள் பட்ஜெட் மற்றும் convenience - ஐ கருத்தில் கொண்டு சிங்காநல்லூர், சரவணம்பட்டி, ராமநாதபுரம், துடியலூர், விளாங்குறிச்சி, காளப்பட்டி, வடவள்ளி, RS புரம், கணபதி, டாடாபாத், மீனா எஸ்டேட்ஸ், தொப்பம்பட்டி, ஒண்டிப்புதூர், ஆவாரம்பாளையம், கிருஷ்ணா காலனி, வெள்ளளூர், சாய்பாபா காலனி, மணியகாரன் பாளையம், வேடப்பட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில் நிறைய residential units விலைக்கு கிடைக்கும். நீங்களே சென்று நேரில் பார்த்து முடிவு செய்யலாம். எங்கள் பகுதியில் குடிநீர் சப்ளை (சிறுவாணி + அத்திக்கடவு cocktail mix) தற்போது மழை பெய்ந்து வருவதால், 5 நாளுக்கு ஒரு முறை 15 மணி நேரம் குடிநீர் குழாயில் வரும். கோடை காலங்களில் 10 - 12 நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கும்.
10. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா ? என்று அன்று பாடித்திரிந்த NRI என்ற வகையில் .. நான் நம்மூருக்கு திரும்பியதிலிருந்து square peg in a round hole ஃபீலிங் தான் இங்கே அவ்வப்போது எனக்கு தலைதூக்குகிறது. Wrong side ல் வண்டி ஓட்டுவது இங்கு சாதாரணம். Lane discipline ஃபாலோ செய்து கார் ஓட்டினால், single lane - ல் கூட ஓவர்டேக் செய்து வந்து கசமுசவென்று திட்டுவார்கள்.
Overspeeding செய்யும் பைக் ஓட்டுனர்கள் ஏராளம். நிழல் தரும் மரங்களின் கீழ் Traffic Seargent + team PoS மெஷின் வைத்து spot fine வசூலிப்பது அங்கங்கே மாதக் கடைசியில் நிறைய பார்க்கலாம். இன்று ஹெல்மெட், நாளை டிரைவிங் லைசென்ஸ், அடுத்த நாள் ஓவர் ஸ்பீடிங், அப்புறம் dark sunfilm, பின்னர் பைக்கில் டிரிப்பிள்ஸ், அதன் பிறகு jumping traffic signal என்று category wise பிடிப்பதுண்டு. ஒரு இரு சக்கர வாகனத்தை பிடித்தால், அனைத்து ஆவணங்கள் சரியாக உள்ளதா என செக் செய்தால் நிறைய fine போட முடியும். என்னமோ போங்க …
.அமெரிக்காவில் T Junction - ல் நின்று நிதானமாக காரோட்டிவிட்டு இங்கு சைக்கிள் gap - ல Tata Nexon EV - ஐ எந்த சேதாரமும் இன்றி defensive driving mode - ல் ஓட்டிட, அமெரிக்காவை விட்டு வந்து தான் ஆகணுமா என்று நன்றாக யோசித்து ஒரு நல்ல முடிவெடுங்கள்.
அப்படியே கனடா, ஆஸ்திரேலியா, UAE, கத்தார், சிங்கப்பூர்னு ஃப்ரீயாக ஒரு ரவுண்டு பார்த்திட்டு தான் வாங்களேன்.
நம்ம ஊரு தானே, எப்ப வேணும்னு தோணுதோ அப்ப வரலாம்.
என்ன ஒன்னு, துவரம் பருப்பு முதல் மரச்செக்கு எண்ணை வரை இங்கே எல்லாம் செம விலை ...
அன்று, RS Puram உழவர் சந்தையில் வெறும் 400 ரூபாய்க்கு நான்கு Sree Devi Textiles இலவசமாக கொடுத்த கட்டை பையில் நிறைய நிறைய fresh காய்கறி கிடைக்கும். இன்று, அதே நானூறு ரூபாய்க்கு ஒரு சின்ன carry bag - ல் ஒரு வாரத்திற்கான காய்கறிகள் தான் கிடைக்கும். நிலைமை அப்படி.
இன்றைய தேதிக்கு நாட்டு காய்கறிக்கும் exotic காய்கறி வகைக்கும் பெரிய விலை வித்தியாசமில்லை.
அன்று, RS புரம் Rengas - ல் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் ரூ. 1500/= க்கு கிடைத்தது. இன்று, அதே கடையில், அதே rack - ல் உள்ள அதே மளிகை லிஸ்ட் ரூ. 4500/= ஐ தாண்டுகிறது. 27-ம் தேதியே shortage என்று எங்க சமையலறையில் இருந்து சத்தம். வாணலியை அடுப்பில் வைத்தவுடன், பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.
முடியலிங்க .... Life is tough for a common man … நல்லவனா இருந்தா நசுக்கிடறாங்க …
இக்கேள்விக்கான பதில் எழுத எனக்கு பரிந்துரைத்த ராஜகோபாலன் ஜெ சாருக்கும் மனமார்ந்த நன்றி....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக