கேள்வி : முதல் திருமணம் தோல்வி. அதன் தாக்கம் மனதில் பதிந்து விட்டது. அதனால் மறுபடியும் திருமணம் என்றாலே மனதில் ஒரு வித பயம், விரக்தி. திருமண முறிவு ஆகி 8 வருட இடைவெளி ஆகிவிட்டது. எப்படி மீள்வது?
என் பதில் :
வணக்கம் .எட்டு வருடம் என்பது மிக நீண்ட இடைவெளி
.ஆனால் அந்த அளவுக்கு உங்களின் காயங்களையும் வலிகளையும் உணர முடிகிறது.மற்றொன்று மற்றவர்கள் யாரும் உணர முடியாத உங்கள் உண்மையையும் உணர முடிகிறது.
வேறு யாரும் உங்கள் மனதில் நுழையாத இந்த எட்டு வருடங்கள் உண்மைக்கு மே மிகப்பெரிய கஷ்டமான காலம் தான்.
ஆனால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது .அப்படி என்றால் மருந்து வேலை செய்யாது என்பார்கள் .நீங்கள் ஒவ்வொரு முறையும் மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் .
அப்படி எனில் ஒரு குரங்குக்கு காயம் ஏற்பட்டு, அதனை சொறிந்து, சொறிந்து பெரிதாக்கி இறந்து விடுவது போல நீங்களும் ஏறத்தாழ அதே நிலைமைக்கு எட்டு வருடங்கள் போய்விட்டீர்கள் .
நீங்கள் இருக்கும் இடம்,சூழ்நிலை,வேலை போன்ற ஒரு சில விஷயங்களை மாறுதல் செய்யுங்கள். புது நட்பு ,சொந்தங்களுக்கு சற்று அதிக நேரமும் ,வாய்ப்பும் தினசரி வாழ்க்கையிலும் இடம் கொடுங்கள்.
மெல்ல,மெல்ல பட்டுப்போன மணிபிளான்ட் செடி போல காயங்கள் மறைந்து மனம் மறுபடியும் துளிர்விட ஆரம்பிக்கும்.
ஒரு ஆறு மாத காலங்களில் நீங்கள் மறுபடியும் பத்து வருடத்திற்கு முந்தைய பழைய பருவத்திற்கு வந்து விடுவீர்கள் .அப்போது உங்கள் மனம் உங்களுக்கு தேவையான முடிவை கண்டிப்பாக சொல்லும்
.எந்த ஒரு ஆணும் ,பெண்ணும் கடைசிவரையிலும் துணை இல்லாமல் வாழ்க்கையை கடக்க முடியாது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு துணை தேவை.
சென்ற முறை உங்களுக்கு தவறும் தீங்கும் இழைத்தபழைய உறவுகளை மறுபடியும் மனதில் இடம் கொடுக்காமல் ,குரங்கின்புண் போல நினைக்காமல் தவிருங்கள் .
அது உங்களால் கண்டிப்பாக இயலும் .அதன்பின் உங்களுக்கு எங்களால் ஆன பிரார்த்தனைகள் கண்டிப்பான முறையில் பலனளிக்கும் .
உங்களின் எண்ணம் ,செயல் ,மனம் அனைத்தும் புரிந்த நல்ல ஒரு ஜீவன் உங்களை கை கொடுத்து தூக்கி நெஞ்சோடு அணைத்து வாழ்க்கை முழுக்க வளமுடன் ,நலமுடன் சந்தோஷமாக உடன் நடத்திச் செல்லும் வாழ்த்துக்கள்.
நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக