ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கேள்வி : நான் மாதம் 20000 சம்பளம் வாங்குகிறேன். அதுவும் எனது சொந்த ஊரில். மேலும் எனது சொந்த வீட்டில் இருந்தும் கூட என்னால் சேமிக்க முடியவில்லை, ஏன்?


என் பதில் : 


உங்கள் சம்பளம் எந்த வங்கியில் வருகிறதோ அதே வங்கியில் ஒரு ரெகரிங் டெபாஸிட் கணக்கு துவங்குங்கள். 

வங்கிக்கு, "உங்கள் சம்பளம் க்ரெடிட் ஆனவுடன் அதிலிருந்து ரூ.2000 உங்கள் ரெகரிங் டெபாஸிட் டில் போட்டு விடச் சொல்லி ஒரு அனுமதிக் கடிதம் கொடுத்து விடுங்கள். பிறகு உங்களால் ரூ.18,000 தான் செலவழிக்க இயலும். இது தான் கட்டாய சேமிப்பு வழி.


 உங்களிடம் க்ரெடிட் கார்டு இருந்தால் துண்டு துண்டுகளாக வெட்டி தூர எறியுங்கள். 

டெபிட் கார்டு பரவாயில்லை. ஆனால் அதை மின் கட்டணம் தண்ணீர் கட்டணம் வாடகை முதலியவற்றுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். 

அரிசி பருப்பு எண்ணெய் சோப்பு வாங்கல்களுக்குப் பணப் பரிவர்த்தனை தான் நல்லது. எளியது. சுகமானது. ஆன்லைன் வர்த்தகம் கூடவே கூடாது.


டிஜிட்டல் இண்டியா தொடப்பக்கட்டை எல்லாம் உங்களைச் சுரண்டும் ஏற்பாடுகள்.


பணம் கொடுத்து பொருட்கள் வாங்க சென்றால் தான், வாங்கும் பொருள் தேவைதானா? அவசியமா? இது இல்லாமல் இருக்க இயலாதா போன்ற நல்ல சிந்தனைகள் வரும். 

உழைத்து சம்பாதித்த. பணத்தை எண்ணி கொடுக்கும் போது தான் அதன் அருமை தெரியும். வெறும் ப்ளாஸ்டிக் கார்டை உரசி வாங்கும் பழக்கம் இருந்தால் கண்டதையும் கடியதையும் வாங்கத் தோன்றும். சேமிக்க இயலாது.


நன்றி ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக