வெள்ளி, 8 அக்டோபர், 2021

 கேள்வி : வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், நாம் எதைப் பெரிதுபடுத்த வேண்டும்?


பதில் :


நாம் நம்மைச் சுற்றி ஒரு மாய வட்டம் போட்டுக் கொள்கிறோம். ஆங்கிலத்தில் Comfort Zone என்று சொல்வார்கள்.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், இந்த Comfort zone என்னும் " வசதி வட்டம் ", என்பதை விட்டு வெளியே வா!, என்று சில சுயமுன்னேற்ற புத்தகங்கள் சொல்லும்.

ஆனால் நான் சொல்லுவேன், நீங்கள் உங்கள் வசதி வட்டத்தை விட்டு, வெளியே வராதீர்கள், உங்கள் வசதி வட்டத்தை பெரிதாக மாற்றுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேறி கொண்டே போகலாம்.

முதலில் இந்த " வசதி வட்டம் ", என்ன என்பதே தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. Comfort என்றால், அந்தக் காலத்தில், என் எஸ் கிருஷ்ணன் டி ஏ மதுரம் ஒரு பாட்டு பாடுவார்.

விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி, மாவு அரைக்கும் மிஷின், துவைத்துப் போட மெஷின் என்று இயந்திரங்களை, நம்பி வாழும் வாழ்க்கையே Comforts in life என்று நமக்கு நுகர்வுக் கலாச்சாரம் சொல்லிக் கொடுத்துள்ளது.

இது ஒரு வசதி போல் தோன்றினாலும், இந்த Comfort உங்களை, பின்னாளில் பெரிய சிக்கலில் மாட்டி விடும்.

நீங்கள் ஆபிசுக்கு நடந்து போகாமல், காரில் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம், அல்லது டூவீலரில் செல்கிறீர்கள். டூவீலரில் செல்வது என்பது Comfort தான். ஆனால் உங்கள் உருவம், ஒரு உசிலைமணி, அல்லது பிந்துகோஷ் போல சீக்கிரம் மாறிவிடும்.

நீங்கள் குண்டாக இருந்தால், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால், இருபது வருடங்களில், Obesity என்பது அத்தனை வியாதிகளையும், உங்கள் உடலுக்குள் கொண்டுவரும்.

Comfort என்று நீங்கள் நினைத்த விஷயங்கள், காலப்போக்கில் உங்களுக்கு எமனாக மாறி, உங்கள் உயிருக்கே உலை வைக்கும்.

A/C என்பது Comfort. ஆனால் அது உங்களுக்கு மட்டுமல்ல, கொரோனா வைரஸ்க்கும் அதுதான் கம்போர்ட் Comfort!

ஆனால் Comfort Zone, வசதி வட்டம் என்பது, நீங்கள் மனநிலையில், எதில் மிகவும் பழகி உள்ளீர்கள், வேலை உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, அந்த வேலையை மட்டும் செய்து திருப்தியாக வாழ்வது, என்பதே உளவியல் ரீதியாக, Comfort Zone, வசதி வட்டத்தின் விளக்கம்!

இந்த வசதி வட்டத்தை நமக்கு போட்டுவிடுவது, நமது பெற்றோர்கள் தான்.

நீங்கள் ஒரு இசையமைப்பாளராக மாறப் போகிறேன், என்று சிறுவயதில் சொன்னால், எல்லோரும் இளையராஜாவாக மாற முடியாது, நாம் எல்லாம் படித்து, ஒரு நிரந்தர வருமானம் பெரும் அரசு வேலை அல்லது Engineer வேலைதான் செய்ய வேண்டும். Music என்பது Risk. வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பவர்களை இந்த சமூகம், மதிப்பதில்லை.

ரிஸ்க் எடுக்காத, என்ஜினீயர் ஒருவருக்குத் தான் பெண் கிடைக்கும். நான் என்னுடைய வேலையை ரிசைன் செய்துவிட்டு, Startup Business செய்யப்போகிறேன் என்று சொன்னால், கட்டிய மனைவி சோறு போட மாட்டாள்!

இந்த மனநிலை வசதி வட்டம், இதைத்தான் நான் பெரிதுபடுத்த வேண்டும் என்கிறேன். நீங்கள் காரில் வேலைக்கு செல்வது வசதி என்று சொன்னால், எனக்கு நடந்து அல்லது சைக்கிளில் போவது தான் வசதி, என்று நான் சொல்லுவேன்.

நடை பயிற்சி என்பதை Comfort Zone உள்ளே சேர்த்து விட்டேன். எப்படி தெரியுமா? இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு, பருவமே புதிய பாடல் பாடு, என்று இசை கேட்டுக்கொண்டே நடக்கும்பொழுது, அது உங்கள் Comfort Activity ஆக மாறி விடுகிறது!

நான் எதற்காக இந்த வசதி வட்டத்தை பெரிதாக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா?

புதுப்புது முயற்சிகள் செய்யும்பொழுது, உங்கள் அறிவு மேலும் விசாலம் ஆகிறது.

Reward வேண்டுமென்றால் Risk எடுக்கத்தான் வேண்டும். Risk எடுப்பது என்பது, நமக்கு Rusk சாப்பிடுவது போல் இருக்க வேண்டும்.

புதிது புதிதாக நீங்கள், கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் கற்றுக் கொண்டதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வீர்கள்.

நீங்கள், இப்பொழுது கஷ்டப்பட்டாலும், பிற்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Smartphone இல்லாமல் வாழ முடியாது, என்று சொன்னவர்கள் எல்லாம், Chennai Flood வந்தபோது, செயலற்றுப் போனார்கள். நான் நடந்து ( நீந்திக் கொண்டு ) நான் செய்ய வேண்டிய, வேலைகளை செய்தேன். சிரமங்களுக்கு பழகிவிட்டால், அந்த சிரமங்கள் எளிதாகிவிடும்.

நீங்கள் இதுநாள் வரை எவையெல்லாம், உங்களுக்கு வசதி என்று நினைத்தீர்களோ, அந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று நான் சொல்லவில்லை, அந்த வட்டத்தை பெரிதாக்குவது, உங்கள் கையில் தான் உள்ளது.

தமிழர்கள் மிகச் சிறிய வட்டம் போட்டுக் கொள்கிறார்கள். எனக்குத்தெரிந்து தமிழர்கள், வடக்கே சென்றதே இல்லை.

என் நண்பர்களிடம், நீ வடக்கே எவ்வளவு தூரம் சென்று உள்ளாய்? என்று நான் கேட்டால், திருப்பதி வரை சென்று உள்ளேன், என்று பெரும்பாலானவர்கள் பதில் சொல்வார்கள்.

திருப்பதி தான் வடக்கு எல்லை நமக்கு. ஆனால் மலையாளிகள், லடாக், அசாம், நாகாலாந்து என்று எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

நீங்கள் நாகாலாந்தில், ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பதைப் பார்க்கலாம். அசாமில் கூட, அவர் மலையாளம் தான் பேசுவார். மலையாள வட்டம் பெரிதாகிறது.

தமிழன் பெங்களூர் சென்று விட்டால் கூட, ஆங்கிலம் தான் பேசுவான். மணிரத்னம் திரைப்படங்கள் பாருங்கள். பொன்னியின் செல்வன் படத்தில், மலையாளிகளை இந்திக்காரர்கள் வைத்து, வட இந்தியாவில் படமாக்குகிறார்.

மணிரத்னம் ஒருவர்தான், வட இந்தியாவுக்குச் சென்றார். ஆனால் கொடுமை, அவர் தமிழர்களை, கிணற்றுத் தவளை போல் கருதி, எந்த தமிழர்களையும், தன்னைப்போல் ஒரு வட்டத்தை தாண்டி வெளியே வர அனுமதித்தது இல்லை. அவர் ஒரு வெளிநாட்டவர் ஆகவே மாறிவிட்டார்.

இந்தியாவிலேயே அவர் ஒருவர்தான், வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஷூட்டிங் நடத்தும் ஒரு இந்திய டைரக்டர். ஆனால் அவர் வெளிநாட்டு விஷயங்களை வெளிக் கொண்டு வருகிறார். அதற்கு நான் பாராட்டுகிறேன், ஆனால் அதேவேளையில், தமிழ்நாட்டில் உள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்பதால், மலையாளிகள் இந்திக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தன் வட்டம் பெரிதானால் மட்டும் போதாது, நம் தமிழ்மொழியின் வட்டம் பெரிதாக வேண்டும். அவர் ஒரேயடியாக தமிழ்நாடு என்ற வட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

நான் அவரைப் போல், உங்கள் வட்டத்தை விட்டு வெளியே போகச் சொல்லவில்லை, உங்கள் வட்டத்தை பெரிதாக மாற்றுங்கள். பிற மொழிகளில் இருக்கும் அனைத்தையும், தமிழில் கொண்டு வந்து சேருங்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக