ஞாயிறு, 31 அக்டோபர், 2021

 கேள்வி : உங்கள் மனதை கவர்ந்த ஒன்றை கூறமுடியுமா?


என் பதில் :


நிறைய பேர் இந்த படத்தை கடந்து வந்திருப்பீர்கள் என்று நெனைக்கிறேன்…

இந்த புகை படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரிகிறது..?


ஆனால் எனக்கு அந்த மிதிவண்டியை ஓட்டும் ஆண்மகனின் வியர்வை படிந்த சட்டை தான் தெரிகிறது..


இன்று நடைமுறை வாழ்க்கையில் எவ்வளவு பேர் மோட்டார் சைக்கிள், கார்,ஏரோபிளேன் ,நகை, வீடு, அமெரிக்கா,ஐரோப்பா குடியுரிமை வேணும் என்று கேட்கும் பலரை நான் பார்த்து இருக்கிறேன், காதால் கேட்டு இருக்கேன்.அந்த பெண்களை விட இவள் உயர்ந்தவளா..?உண்மையானவளா..?இல்லையா?என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை.ஆனால் ஒரு ஒரு விடயம் மட்டும் சொல்கிறேன்.. அம்பானி,பில் கேட்ஸ்க்கு மகளாய் பிறந்தவளை விட இவள் பாக்கியசாலி..


இயந்திரம் இழுத்து செல்லுகையில் இருக்கும் காதல் உயிரோட்டத்தை விட,இவர்கள் செல்லும் மிதிவண்டியில்,போகும் காதல் பயணம் உயிரோட்டமானது..


அவன் வேர்த்து இருக்கிறான், அவளுக்கு வியர்க்காத படி.


அவன் உடலில் இருந்து வேர்வை நாற்றம் வர போகிறது…ஆனால் அவள் உடலில் வாசனை குறையவில்லை.


அவனுடைய வேர்வை நாற்றத்தை பார்த்து முகம் சுழிக்கமாட்டாள், ஏனென்றால் அவளுக்காக அவன் பட்டு இருக்கும் பாட்டை பார்த்து வந்த வேர்வை அவளுக்கு நறுமணம் தான்…


கடைசியா அவன் அவளை இறக்கி விடும் தருவாயில் அவள் அவனுக்கு கொடுக்க போகும் முத்தம் இந்த உலகத்தில் தன்னுடைய காதலிக்காக தாஜ்மஹால் கட்டினானே அந்த ஷாஜகான், அவனை காட்டிலும் இவன் வாங்க போகும் அந்த முத்தம் 1000 தாஜ்மஹாலை விட சிறந்தது..


காதலி கிடைப்பது வரமல்ல ஆனாலும் உன் ஏழ்மையிலும் இன்பமாய் வாழத் தெரிந்தவளே காதலியாக கிடைப்பது வரம்..


நன்றி ...


 தளி எத்தலப்பர் புகழ் ..அவரின் ஆசிர்வாதங்களோடு ...


கம்பளத்தார் இனத்தின் கலாச்சார இயக்கமாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் புதிய பரிணாமம் பெறுகிறது. காலம் எமக்களித்த கொடை புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது. 

பொதுச்செயலாளராக திருப்பூர் தொழிலதிபர் அண்ணன் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ..மற்றும் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தலைவர்களுக்கும் 


உடுமலைப்பேட்டை கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக 

வாழ்த்துக்கள் ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

இன்று உடுமலையில் அருமையான சந்திப்பு 


இன்று அருமை மாப்பிள்ளை கேப்டன் நித்தியுடன் ...மதிப்புமிக்க சொந்தம் பொறியாளர் பெருமாள்சாமி (Squad Wing -TNEB ) 20 நிமிட சந்திப்பு ..கலந்துரையாடலில் அருமையான தகவல்களை பரிமாறிக்கொண்டோம் ..

நித்தி மாப்பிள்ளையின்  குடும்ப உறவில் புதிய குழந்தைச்செல்வம் ..அதற்கு தித்திக்கும் இனிய சுவைமிகுந்த காபியுடன் உபசரித்து சந்தித்து உரையாடியது இன்றய ஞாயிறு மகிழ்ச்சியுடன் அமைந்தது ..


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681..

புதன், 27 அக்டோபர், 2021

 “ஜவுளி வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..2🌹🌹  

(நேற்றையத் தொடர்ச்சியாக இன்று.....வாசிக்க)

“ பெண்களுக்கு கைரேகை பார்க்கத் தெரியாவிட்டாலும், ஆண்களின் முகரேகை வாசிக்கத்

தெரியும்.” என்ன தான் கணவனை நம்பி ஒரு களத்தில்

இறங்குமுன் தன்கையிலும் தனியே காசுபணம் வைத்துக் கொண்டு தான்  துணிவாக இறங்குவார்கள்.

ஆண்களும் தன் பர்ஸுக்கு வேட்டு வச்சிருவாங்களோ.?

என நினைத்தவாறு தான் முகத்தை ‘ஐயோ பாவமாக’

வைத்திருப்பார்கள். ஒரு பிரசவ வார்டில் நடப்பதைப்

போல மனசு திக் திக் என இருக்கும் என்பதை பலர்

நகைச்சுவையாகக் கூறுவதைக் கேட்டு இருக்கிறேன்.

“ இம்புட்டு நேரமாவா  புடவையை செலக்ட் பண்ணுவாங்க...காலையில அவசரத்தில கம்மியா இட்லி சாப்பிட்டது  இப்ப வயிறு வேற பசிக்கு..இவங்களுக்கெல்லாம் பசிக்கவே பசிக்காதா..? என தன்னுடன் வந்தவர்களுடன் ஆதங்கப்பட்டுக் கொள்ளும் ஆண்கள் ஒரு வகை .(இதுக்காகத்தான் இப்ப காஃபி,கூல்டிரிங்ஸ் கொடுக்க ஆரம்பிச்சிருப்பாங்களோ..?)ஆனாலும் நல்லதாகப் புடவை அமையும்போது  மனதளவில்

பெண்கள் காசைப் பார்ப்பதில்லை.மனநிறைவையே

முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மருமகளுக்கு

முகூர்த்தப் புடவை எடுப்பார்கள். சிலர்’ஒருநாள்

கூத்துக்கு மீசை எதுக்கு..?’ என்பது மாதிரி  பேசுவார்கள். ஆனால் அந்த ஒருநாளின் பிரதிபலிப்பு

எந்தக் கல்யாணத்திற்குச் சென்றாலும்  நம் மருமகள்

உடுத்தப்போகும் புடவை  மனசைவிட்டு நீங்காது

இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர்.முதலில்

எந்த வீட்டுக் கல்யாணம் என்றாலும், அவரவர்களின்

முகூர்த்தச் சேலையை கட்டுவது வழக்கமாக இருந்தது.

இப்பல்லாம் ‘செக்கு கனம் கனக்கே.. இதையா ஒருநாள் முழுவதும் சுமந்துகிட்டு நடக்கிறது..? என

அப்போதைய தலைமுறையினரே ஓரங்கட்டி விட்டனர்.

இப்ப விதவிதமாக நேரத்திற்கு ஒரு மாடலாக மணப்பெண் சிங்காரிக்கப்படுகிறாள்.

வீட்டுப்பெண்கள் இப்படி என்றால் வேலைக்குச் செல்லும் பெண்கள் வேறுவிதமாக இருப்பர்.அவர்கள்

கோ-ஆப்டெக்ஸ்,காதி பவன் போன்ற கடைகளில்

ஜவுளி எடுப்பார்கள்.தங்களின் நெருக்கமான தோழிகளுடன் குறைந்தது சுமார் ஐந்துபேர் ஒரு

கூட்டமாகச் செல்வதுண்டு.அங்கமர்ந்து எதைச்

செலக்ட் பண்றது என எதையோ எடுத்துக் கையில்

வைத்து  யோசனைசெய்து கொண்டு இருப்பார்கள்.

“ ஏய்..! என்னப்பா இது..? இந்த க்ரீன் கலர் ஏற்கனவே

உங்கிட்ட இருக்கே.. வேற கலர் எடுப்பா..?எனச் சொல்லும்போது ,பெண்களின் ஆழ்மனது புரியும்.

‘நாம் தினம் பீரோவில் சேலை பார்க்கிறோம்..நமக்குக்

கூட ஞாபகம் வரலே..இவங்க எப்படி ஞாபகம் வச்சிருக்காங்க பாரேன் ‘என வியந்து போவதுண்டு.

இந்தக் கலர்ல அந்த டிசைன் வருமா..? என்று சிலர்

புதுசாக செலக்‌ஷன் அம்பு விடுவார்கள்.அது ஆர்டர்

கொடுத்தால் இரண்டு,மூணு வாரத்தில வரும் என

கஸ்டமரைச் சமாளிப்பார்கள்.அதுக்காகவே நடையாய்

நடந்து  எப்படியும் வாங்கி விடுவார்கள் சிலர்.

‘இருக்கிறதுல ஒண்ணை எடேன்..ஏன் இப்படி அலையுற..? எனச் சிலர்  பட்னு கேட்ருவாங்க.

அப்ப  அவங்க வாய்க்குள்ள நாக்கு ‘கதகளி’ ஆடும்.

‘நம்ம என்ன சும்மாவா தூக்கிட்டு வரப்போறோம்..

நாம கஷ்டப்பட்டு உழைச்ச காசு..நாலு கடை ஏறி

இறங்கி நல்லதாகப் பார்த்து வாங்கணும்ல ‘ என்று

சொல்லும்போது அங்கே நியாயம் இருப்பது புரியும்.

ஆனால் எல்லாம் எடுத்துப்போட்டு,கலைச்சு வச்சிட்டு

அடுத்த கடைக்குச் செல்லும் நிலை எளிது. அது ஒரு சிலருக்குச்  ஜாலியாக இருந்தாலும்,அதற்குப் பின்புறம்

அதை அழகாக மடித்து அட்டியில் ஏத்தும்  பணியாளர்களின் நிலைமையையும் யோசிக்கணும்ல..!

ஒரு புடவை ஐந்தாறு பேர்கள் கலந்தாலோசித்து

எடுத்துக் கட்டும்போது,அதன் பின்புற நிகழ்வுகள்

மனத்திரையில் ஓடத்தானே செய்கிறது..! முன்பு

பேத்திகளுக்குப் பாவாடையாக  பாட்டிகள் தன் பட்டுச்சேலைகளைத் தருவதுண்டு.இப்ப யாரு பாவாடை

கட்றாங்க..? அதிலும் ரெடிமேடு வந்தவுடன் விதவிதமாக  டிசைனில் வாங்கி  தரைதூர்க்க உபயோகப்படுத்தமுடிகிறது.

அப்போ கிராமங்களில் கைமிஷின் (தையல் இயந்திரம்)ஒருத்தர் தோளில்  கைவைத்தநிலையில்

சுமந்து செல்வார். பழைய பட்டுப்புடவையோ,புது

சீட்டித் துணியோ வைத்து இருப்பவர்கள் கைதட்டி

அழைப்பார்கள். “பாவாடை தைக்கணும்..நல்லா சுருக்கு வச்சு தைக்கணும்..டக்கு பிடிச்சு தைக்கணும்..” என்ற குரலை மனதில் உள்வாங்கி

தைக்க  முன்அறையில் அமர்வார்.அவர் வீட்டில் வந்தமர்ந்து ,முதலில் அளவெடுத்து ,பின் துணிகளை கத்திரிக்கோலால் வெட்டி, சுருக்குகள் வைத்து பின்

இரண்டு பகுதிகளையும் இணைத்து,இறுதியில்

பாவாடை நாடாவை அடிக்கும்போது ஒரு பாவாடை

கண்முன் உருவாகுவதை பார்த்த சந்தோஷம்

எல்லோர் முகத்திலும் எழும்.திறமைசாலியான ஒவ்வொரு கலைஞனும் பிரம்மாவிற்கு இணையாக நினைக்க வைக்கும். இடையே  வெயிலுக்காகஅவருக்கு

மோர்,தண்ணீர் எனக் கொடுத்து உபசரிப்பு நடத்துவார்கள்.அப்படியே பக்கத்து வீட்டுக்காரர்கள்

வந்து பார்த்து ‘அங்க முடிச்சுட்டு இங்க வாப்பா’ எனச்

சொல்லி  அவர் முகத்தில் சந்தோஷரேகை தோன்றச்

செய்வதுண்டு.கடைசியில் ரூபாயைக் கண்ணில் ஒற்றி,

தையல்காரர்  பையில் எடுத்துச் செல்வதுண்டு.

அதற்கப்புறம் காலால் மிதித்து தைக்கும் இயந்திரம்

வந்தது.அதற்கு முன்னால்  கிழிந்து போனவைகளை

கையில் ஊசியால் தைத்துக் கொண்டிருந்தவர்கள்

மிஷினுக்கு மாறிட்டாங்கன்னே சொல்லலாம்.

‘வீட்டுவீட்டுக்கு ஒரு தையல் மிஷின் ‘மூடி போட்டு

வைத்திருப்பார்கள். ஆண்களுக்கு இணையாகத்

தைப்பதற்கு பெண்களும் வெளிவந்தார்கள்.

ப்ளவுஸ் சரியாகத் தைத்துவிட்டால் போதும்.

எல்லோரும் அளவுப்ளவுஸ் சுற்றி எடுத்து வந்துவிடுவார்கள். பெண்களும் சரியாக ப்ளவுஸ்

அமையும் வரை டெய்லர்களை விடுவது இல்லை.

தீபாவளியன்று கிடைக்கும்வரை கஜினிமுகமதாக

படையெடுத்து  நடந்து ஜெயித்தவர்கள் உண்டு. 

இப்ப ஆன்லைன் கலாச்சாரம் வந்தாச்சு.அவர்களே

தோளில் வைத்துக் காட்டுகிறார்கள்.முந்தானை,

ப்ளவுஸ் துணியெல்லாம் விரித்துக் காட்டுகிறார்கள்.

வீட்டில் இருந்தே ‘செலக்ட்’ பண்ணி ஆர்டர்

கொடுக்கிறாங்க.ஆனால் தொட்டுப் பார்த்து உணரும்

நிலை தான் இல்லை.சிங்கிளாகவே  தேர்வு

செய்வதில் அந்த பழைய ‘த்ரில்’ இல்லை என அறிகிறோம்..!

இந்த தீபாவளியில் இதை வாசிக்கும் அனைவர்க்கும்

நல்ல புத்தாடைகள் கிடைக்கட்டும்.வாழ்த்துகள்.

இப்பதிவிற்காக புகைப்படம் அனுப்பிய முகநூல்

நட்பு திரு.கோ.ரா. ரவி பட்டு நெசவாளர் அவர்களுக்கு

என் அன்பின் நன்றி. தொ.பேசி.எண் 94448 45044

93821 16111🥰📚📚✍️✍️✍️🌈🌈

“ ஜவுளி வாங்குவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு..”🌹
தீபாவளிக்கு ஜவுளி வாங்குவது என்றால் இரண்டு
மாதத்திற்கு முன்னாலே முடிவெடுக்கும் விசயம்.
இப்ப உள்ளது போல ‘ரெடிமேடு’ எல்லாம் வராத
காலநிலை அது. அப்போ ஊரில் ஒன்றிரண்டு
டெய்லர்களே உண்டு.அவர்கள் குடும்ப டாக்டர் போலத் தான் அப்போ இருந்தார்கள்.டாக்டருக்கு நோயாளிக்குத் தக்க மருந்து கொடுக்கத் தெரிந்திருப்பது போல ,இவருக்கு நம் அளவு,ஸ்டைல்,
எல்லாம் தெரிந்திருக்கும்.அந்த தீபாவளி மாதம் புது
சினிமாவுக்கு இணையான மவுசு இவர்களுக்கு உண்டு.
‘இன்னிக்கு சாயங்காலம் தாரேன்..’என்பதே எல்லோருக்கும் பாரபட்சமற்ற சொல்லாக இருக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை எடுப்பதே அப்போதெல்லாம்
வாடிக்கை.சில சமயம் சைக்கிளில் ஜவுளி மூட்டை
சுமந்து வரும் சிலரிடம் எடுப்பவர்கள் உண்டு.
அதற்கெனவே ஊரில் உள்ள பிரபலமான பெரிய வீடு
ஒன்றில் தான் கடை விரிப்பார். “ உங்க முகராசி அப்படி ..” என்று அடிக்கடிஅவர் ஆச்சியிடம் சொல்லிச் சொல்லியே ஆச்சி அதற்கு தகுந்த அந்தஸ்து
பெற்றிருந்தார்.ஆச்சி குறைந்தது இரண்டு சேலைகளாவது எடுப்பார். ஆச்சியும் பதிலுக்கு ‘அவர் கைராசியான கை ‘ என்று சிலாகித்துச் சொல்வதால் எல்லோரும் எடுக்க முன் வருவார்கள். ஆச்சியின் பேச்சு எடுக்காதவரைக் கூட எடுக்க வைத்து விடும்.
அந்த வீட்டுக்கார ஆச்சி தெருவில் பக்கத்து வீடுகளுக்கு ‘ ஜவுளி மூட்டைக்காரர் வந்திருக்கிறார்’எனச் சொல்லி விட்டு வரும்படி
குட்டிப் பசங்களைத் தூதுவராக்கி விடுவார்.உடனே
ஐந்து நிமிடங்களில் வீட்டில் போட்டது போட்டபடி
இருக்க ,உடனே ஆஜராகி விடுவார்கள்.பெரியவங்க
கூப்பிட்டால் அவ்வளவு மரியாதை அப்போது..!
எல்லோரும் வருவதற்கு முன் இரண்டு பாய்கள்
விரிக்கப்பட்டு,அதில் ஒரு வெள்ளைத்துணி விரித்திருக்கும். எல்லோரும் அதைச் சுற்றி வட்டமாக
அமர்வார்கள். அவர்களுக்கு வாயால் உத்தரவு
பிறப்பித்து ஆச்சி இடம் இல்லாதவர்க்கு தகுந்த இடத்தை அமைத்து தந்து விடுவார்.
அவர் வெள்ளைநிற மூட்டையை சைக்கிளில் இருந்து
எடுத்து தோளுக்கு மாற்றி தரையில் வந்து இறக்குவார்.
அவர் நடுநாயகமாக அமர்ந்து கொண்டு ,முதலில் அதன்
நான்கான மடிப்பில் உள்ள முடிச்சுகளை அவிழ்த்து,
தன் கைகளால் தொட்டுக் கும்பிட்டபடி முதல் சேலையை எடுத்து பூப்போல வைப்பார்.எல்லோர்
கண்களும் அதில் லயித்து இருக்கும். அப்புறம் அடுத்தது
என்ன..? என்றவாறு நெற்றியில் ஒரு சுருக்கம் விழ
பார்ப்பார்கள்.ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக
இருக்கும். அவர் அனைத்தையும் எடுத்துப் போடுவதற்குள் சிலர் கைகளால் ஸ்பரிசித்துப் பார்ப்பார்கள்.சிலர் தனக்கு அந்தக் கலர் பிடித்துள்ளது
என யாருக்கும் தராமல் கைக்குள் பாதுகாப்பாக
வைத்துக் கொள்வர்.கீழே போட்டால் திரும்பக்
கிடைக்காது என்ற உளவியல் தெரிந்தவர்கள் அவர்கள்.
“ இன்னும் இருக்கிற இரண்டையும் எடுத்துப் போடு...”
என ஆச்சி தான் அவரை உரிமையோடு சொல்லி
விரித்து காட்டச் சொல்வார்.எல்லாத்தையும் நல்லாப்
பாருங்க.. என கண்களைச் சுழலவிட்டு ,கண்சிமிட்டி
ஒரு ‘சிக்னல்’ தருவார். அவர் கலைச்சுப்போட்ட பிறகு
நல்லா இருக்கதை எடுங்க..மடிப்பு கலையாமயா
பார்ப்பே..? என்ற சொன்ன பிறகு தான் ‘ இப்படியும்
பார்க்கணுமோ..?’ என்று புதுசாக வாங்குபவர்களுக்குத்
தெரியும். அப்புறம் ஆச்சியிடம் கீழே விழுந்து
கும்பிட்டு ,ஆசி பெறுவது தனிக்கதை.
‘என்ன உனக்கு பிடிச்சிருக்கா ?இல்லையா..?
பணம் இல்லைன்னு மருகுதையா..? அதெல்லாம்
நான் தாரேன்..அப்புறம் கொடு எனச் சொல்லும்போது
அந்தக் கண்களில் தோன்றும் அதிக பிரகாசத்திற்கு
ஆச்சி மகிழ்ந்து (மகுண்டு) போவார். அப்போதெல்லாம்
பெண்கள் வேலைக்குச் செல்லாத காலம். ஆச்சி
எடுக்கச் சொன்னதால் எடுத்தோம் என்றால் வீட்டில்
அப்பீலே இல்லை என்பதால் தைரியமாக எடுப்பார்கள்.
அப்படி ஒண்ணும்,மண்ணுமாகப் பழகிய காலம்..!
அந்தச் சேலையின் வாசத்தையும்,மடமடப்பையும்
உணர்கையில்,ஆச்சியின் பேச்சு வார்த்தை
நடைபெறும்.எப்படியோ சொன்ன விலையில் சற்றே
குறைத்துக் கேட்டு, உனக்குச் சரியா..? என்பது போல
ஒரு ஏற்றப் பார்வை பார்த்து உறுதி செய்வார்.இந்த
கண்ணசைவுகள் அவர் வேறு ஒருவர்க்கு சேலை
விரித்துக் காட்டும்போது நடைபெறும் .
பெண்கள் வெயிலில் வைத்துப் பார்ப்பதும், தோளில்
போட்டு கண்ணாடியில் பார்த்து மகிழும் இன்பம்
அலாதியானது. அந்த இன்பம் இப்போ இருக்கா..?
தெரியல.தீபாவளி எப்போ வரும்..? என்று நாட்காட்டியைப் பார்த்து அந்த நாளை மடித்து
வைப்பதுண்டு.
பெண்களுக்கு முகூர்த்தப்பட்டு எடுக்கும்போது குடும்பம்
சுற்றி இருக்கையில் ,பாயில் விரித்துக் காட்டும்
அழகே தனி..! இப்படித் திருப்பி புடவைத் தலைப்பைக்
(முந்தானை) காட்டும்போது அதிலுள்ள ஓவியங்கள்
கண்ணைக் கவர்ந்து விடுகின்றன. சேலை எடுத்துக் காட்டுபவர்கள் கூட ‘இது லேட்டஸ்ட்டாக வந்திருக்கு..இந்தக் கலர் நல்லாயிருக்கும் எனச் சொல்லி ஆசை காட்டுவது உண்டு.பெண்கள் கவனம் முதலில் விலைப் பட்டியலைத் தான் பார்க்கும். தன் மனதில் நினைச்சு வச்சிருக்கும் ரேட்டுக்கு
ஒத்து வருதா..? என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும் வரை ஓய்வதில்லை கடல் அலைகளைப் போல..!
சேலை எடுத்தாலும் அதிலுள்ள ப்ளவுஸ் பிடிக்காது.அதை அட்டியில் இருந்து எடுத்துப் போடச் சொல்லி ,கரைக்ட் மேட்சிங் என கடைக்காரர் சொல்லி ,லைட் வெளிச்சம் பொய் சொல்லும் என
வெளியில் சென்று வச்சுப் பார்த்து திருப்தியாகி
பார்த்து எடுப்பதற்குள் ஒரு ஆறுமணி நேரமாவது
ஆகும். சில பேர் அலுக்காமல் எல்லாத்தையும்
எடுத்துப் போடச் சொல்லி வேலை வாங்குவார்கள்.
ஆண்கள் முகம் போகும் போக்கைப் பார்க்கணுமே..?

செவ்வாய், 26 அக்டோபர், 2021

 பெரியகடைவீதி-ஒப்பணக்காரவீதி

ஜவுளிக்கடைகளில் ஜனங்களின் நெரிசலில் குடும்பத்துக்கு புத்தாடைகள், இனிப்புகள் வாங்க கூடிய மக்களின் உள்ளம் நிரம்பிய பாசம் . . .

நாள்முழுதும் அன்ன ஆகாரம் அருந்தாமல் கால்நோக வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றும் பணியாளர்களின் உபசரிப்பு...

கூட்டத்தில் கையேந்தி யாசகம் கேட்கும் ஏழையின் விழிகள்,
காகித எண் பதித்த ரூபாய் நோட்டுகள் கைவசம் இல்லாமல் பண்டிகை கனவுகளை தியாகம் செய்த சக ஜீவன்கள், லாபம் இவிக்கும் பெரிய நிறுவன முதலாலிகள் சிலருக்கு அருகே சிறு வியாபாரிகளின் அவள நிலை...

தேர்ந்தெடுத்த ஆடை மானம் மறைக்க தான் என உணர்ந்தவன் மனிதன்- ஆடம்பரம் செய்ய ஒஸ்தி வீண் கவுரவ செலவு செய்பவன் இயல்புகளுக்கு பொருந்தாதவன் ஆகிறான்..

காவல் காக்கும் காவியுடை காவலனுக்கு புத்தாடை அணிய காலம் ஏது?
போர்க்கால தரைவழி வான்வழி தாக்குதல் போல விழாக்கால பட்டாசு சப்தத்தில் கடைவீதியில் சைக்கிளில் உலா வரும் இவனின்...
மாநகரத்துச் சாலைகளில் என் பயணங்கள் ...

 உடுமலை தொழிலதிபர் கிரிகண்ணன்  அவர்களுக்கு உடுமலை வரலாறு பரிசளிப்பு..


உடுமலையில்  கிரி கிளாத் ஸ்டோர்ஸ், விஜயதீப் எனும் இரு பெரிய துணி வணிக நிறுவனத்தை நடத்தி வந்தவர், உடுமலை லயன்ஸ் கிளப் திருமணமண்டபத்தை கட்டும்போது லயன்ஸ் சங்கத்தின்  பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர்.


உடுமலை வியாபாரிகள் சங்கத்திலும், ஜவுளி வியாபாரிகள் சங்கத்திலும் பல ஆண்டு காலம் பொறுப்பில்  இருந்தவர்.


உடுமலை விளையாட்டுக் கழகத்திலும் பொறுப்பாளராகப் பல்வேறு உதவிகள் செய்தவர். 


உடுமலையின் சுற்று வட்டார மக்களின் கோவில் திருவிழாக்களுக்கு  அதிகளவு உதவி செய்தவர். 


அகவை நிறைந்தாலும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் 

உடுமலை கிரிகண்ணன் அவர்களுக்கு உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது. 


உடுமலை கனகராசன் குறித்தான தரவுகளையும், முத்துசாமி கவிராயர் குறித்தான தகவல்களையும், மாம்பழக் கவிராயர் குறித்தான தரவுகளையும் தந்தவர்.


உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நீண்ட நாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தார்.


இன்று அவரது  வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில்  உடுமலை வரலாறு நூல் பரிசளிக்கப்பட்டது.


உடுமலைக்கான சிறப்பானதொரு நல்ல அடையாளத்தை, அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு பணியை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் செய்தமைக்காக அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.


 அய்யா கிரிகண்ணன் அவர்களுக்கு உடுமலை மக்களின் சார்பிலும், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பிலும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் நன்றிகளையும் பதிவு செய்வோம். 


திங்கள், 25 அக்டோபர், 2021

 நமது கம்பளத்தார் இன தலைவர் திருப்பூர்  இராமகிருஷ்ணன் அண்ணன் தலைமையில் 

திருப்பூரில் இன்று ,3,000 -த்ற்கும் மேற்பட்ட  கம்பளத்தார்கள் பெருந்திரளாக சென்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அதிகளவில் கிரைண்டர்  தயாரிக்கின்ற தொழிற்கூடங்களும், அதற்க்கு தேவையான கற் குவாரிகளும் நம்மவர்கள் வசம் அதிகளவிலே தொழிலாக திகழ்கிறது.

அந்த தொழிலை நம்பி நம்மவர்கள் சுமார் 3,000, குடும்பங்களின் வாழ்வாதாரம் நடந்து கொண்டுள்ளது..

தற்ப்போது அந்த தொழிற்கூடங்களை முடக்கி சீழ் வைத்து 3,000,குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை சீர்குழைக்கின்ற விதமாக நடந்து கொண்ட அதிகாரிளை கண்டித்தும், உடணடியாக தொழிற்கூடங்களை திறக்க உடனடி தீர்வு காண வேண்டியும்,

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டியும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

கம்பளத்தார் அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் ....வளர்க சமுதாய பணி ..நன்றி வாழ்த்துக்கள் ....


ஞாயிறு, 24 அக்டோபர், 2021

எட்டு வருட பயணம் ...

 கடந்த ஒருமாத காலமாக ..ஜனவரி 2022..தென்கொங்கு நாட்டின் ...நூல் வெளியீட்டுக்கான பணிகள் ...முக்கியமான தொல்லியல் துறை அறிஞர்களின் சந்திப்புகள் ..விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களின் தேதி வாங்குதல் ,நூலுக்கான அணிந்துரைகள் ...வாங்குவதற்கான பணி பயணங்கள் ..புதிய புதிய நட்புவட்டங்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான உடுமலை வரலாற்று குடும்பத்துடன் பயணங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அருமையான மனிதர்களை சந்திக்காமல் இருந்திருக்கிறோம் மனதில் சிறு குறையாக இருந்தது ...எனது அலுவுலக பணியையையும் தடைபடாமல்  பார்த்துக்கொண்டு,  அதையெல்லாம் கடந்த 8 வருடங்கள் மலரும் நினைவுகளாக எண்ணி பார்க்கிறேன் ...ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைபடாமல் இருப்பது எவ்வளவு ஆனந்தம் ..மகிழ்ச்சி ...


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..


வெள்ளி, 22 அக்டோபர், 2021

கேள்வி : உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சியில் , கோயம்புத்தூரில் வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு என்ன செலவாகும ?


பதில் : 


 நீங்கள் கேட்ட கேள்விக்கான நேரடி பதில், தற்போதைய சந்தை விலையில் தனி வீடு கட்ட Civil work க்கு மட்டும் தோராயமாக சதுரடிக்கு ரூ. 1750/= ஆகும். இது உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி,கோயம்புத்தூருக்கும் பொருந்தும்.


இந்த ஒரு வருட காலத்தில் ( Aug 2020 - Aug 2021) - யில் மணல், சிமெண்ட், wire cut செங்கல், ஸ்டீல் TMT கம்பிகள் போன்றவை விலை கூடியதால் கம்பெனிக்கு கட்டுப்படியாகலைனு கட்டிட பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


செங்கல் / மணல் / சிமெண்ட் கொள்முதல் செய்திட தற்போது நிறைய செலவாகிவிட்டது. வீட்டு முன் கார் பார்க்கிங் செய்ய car porch உடனே கட்ட முடியவில்லையா என்ற வருத்தமா ? கவலையே வேண்டாம். இடத்தை மட்டும் விட்டு வையுங்கள். பிறகு கட்டலாம்.


அது வரை, இந்த சிறிய வகை TN  99 W 007 மாருதி ஜென் நிறுத்திட இவரை போலவே உங்கள் காரை முன்புறத்திலிருந்து மாடிக்கு செல்லும் படிக்கட்டு அடியில் இரவில் நிறுத்திட ஆவண செய்யுங்கள் ..நன்றி 


என்றும் அன்புடன் சிவக்குமார் 


Sivakumar.V.K




Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com.....

 கேள்வி : குடும்பத்தோடு அமெரிக்காவில் இருந்து தமிழ்நாடு வந்து வாழ வேண்டுமானால் எங்கு வசிக்கலாம்? கொசு இல்லாமல், குளிரான வானிலை கொண்ட இடங்கள் எவை? கோயம்பத்தூர் - கோவை புதூர் எப்படி? அங்கு ஏதேனும் குடிநீர் பிரச்சினைகள் உண்டா?


  பதில் : நண்பர் ராஜகோபால் பதிவுகளுடன்,நானும்  23 வருடம் கோவையில் வசித்தவன் என்ற முறையில் ......


அமெரிக்கா to இந்தியா - விற்கு திரும்ப வரும் எண்ணத்தை மனமாற வரவேற்கிறோம்.

தங்கள் கேள்வியிலேயே கோவைபுதூர், கோயம்புத்தூர் தெற்கு மண்டலம் என்று குறிப்பிட்டு விட்டதால் நீங்கள் இந்த Satellite city ஏரியா என்று ஏற்கனவே முழுமனதாக முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.

இருந்தாலும் சில தகவல்களை பகிர்கிறேன். தங்களுக்கு பயனுள்ளதை மட்டும் ஆய்ந்தறிந்து எடுத்துக் கொள்ளுங்கள் 

நாங்கள் கோவையின் மத்திய மண்டலத்தில் வசித்தாலும் கோவைபுதூர் எவர்பிரைட் அருகே 100 அடி சாலையில் இடம் வாங்கி வீடு கட்டிய அனுபவத்தில் இந்த பதிலளிக்கிறேன்.

பொதுவாக, ஒரு இருப்பிடத்தை தேர்ந்தெடுக்கும் போது கீழ் காணும் பிரதான காரணங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிவரும். நீங்கள் அதனை செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

01. சொந்த ஊர் / இந்தியாவில் இருந்த போது வெகு காலம் வாழ்ந்து - வளர்ந்த ஊர் / சொந்த ஊர் - சொந்த மாநிலத்திற்கு (கேரளா) செல்லும் பிரதான வழியில் உள்ளபடியால் .... இப்படி பல காரணங்கள்.

02. நீங்களோ உங்கள் வீட்டில் உள்ள இதர அங்கத்தினர்களோ அனுதினமும் பணிக்கு செல்லவோ அல்லது சொந்த தொழில் செய்யவோ, பிரதான கோவை நகர பிற பகுதிகளிலிருந்து குறைந்தது 8 - 12 கிமீ தள்ளி உள்ள கோவைபுதூர் உங்களுக்கு தோதுபடும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

03. உங்கள் குழந்தைகளுக்கு பள்ளி / கல்லூரி Academic Coaching classes / Hobbies - Skill - Sports Development classes கோவைப்புதூருக்கு அருகில் உள்ளதா ? அருகில் இருந்தால், நெரிசலான சாலைகளில் பயணித்து வீடு வந்து சேரும் பயண நேரத்தை பெருமளவு குறைக்கும். விரைவில் வீட்டே அடைந்தால் பயண களைப்பு குறையும், Family time - ஐ கூட்டும்.

04. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டில் வயோதிகர்கள் இருந்தால் இந்த செம்மண் பூமி நிலத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்வது, சிலு சிலு காற்றுடன் ஒரு படு சுவாரசியமான அனுபவம். ஏன்னா, Switzerland of Coimbatore எனப்படும் கோவைபுதூர் ஒரு மினி சொர்க்கபுரி தான்.

குளிரான இடங்களை பற்றியும் கேட்டிருந்தீர்கள். கோவைபுதூர் போன்றே, பொதுவாக இரவில் குளிருடன் கூடிய இதமான தட்பவெப்பநிலை கொண்ட இதர இடங்கள் தொண்டாமுத்தூர், சொமையம்பாளையம், பாலமலை, நரசீபுரம், வடவள்ளி, சரவணம்பட்டி, சுண்டப்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம், கணுவாய், வீரகேரளம், ஆலாந்துறை, கரடிவாவி, கீரணத்தம், மாதம்பட்டி, வெள்ளானைபட்டி எனவாம். இவையெல்லாம், நகரின் மையத்தில் சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளன.

05. இதே வயோதிகர்கள், அல்லோபதி - ஹோமியோபதி - சித்தா - ஆயுர்வேத - Dialysis - Physiotherapy என்று மாதமிருமுறை கோவை நகருக்குள் சௌகரியமாக வர வேண்டிய சூழல் இருந்தால் சொந்த கார் / Call Taxi வசதி இருந்தால் நலம். அவசரத்துக்கு, கோவைபுதூருக்கு அருகில் உள்ள ஒரு mid sized hospital என்றால் பொள்ளாச்சி சாலை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள அபிநந் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி ஆஸ்பிடல்ஸ் என்று வரவேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அவை தங்கள் கோவைபுதூர் வீட்டிலிருந்து அருகில் தானா என்பதை அறிக. பின்னர் அங்கிருந்து multi speciality மருத்துவமனை போக வேண்டி வரும் என்றால், Royal Care Hospital, Kovai Medical Center & Hospital,

G. Kuppusamy Naidu Memorial Hospital, PSG Hospitals, Ramakrishna Hospitals, Ganga Hospitals, Kumaran Hospitals என்று 15 - 20 கிமீ தூரம் நேரத்தை பொறுத்து நெரிசலான சாலைகளில் பயணம் வேண்டியிருக்கும்.

06. தாங்கள் அமெரிக்காவில் இருந்து Returning Indian என்ற வகையில் transfer of residence - ல் ஊர் திரும்புவதால் கோவைபுதூரில், Beverly Hills, Villa Gardenia, Paripoorna Estates, SM Gardens போன்ற gated community - யில் உள்ள single family villa - வில் இருப்பது, தங்களுக்கு பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் இருப்பின் adaptability to live in India சிறிது இலகுவாகும். கோவைபுதூர் A to Z Block ல் உள்ள தனி வீடு என்றாலும் வளமான மண் என்பதால் Home Garden, தென்னை மரங்கள் என்று குளு குளு என வாழலாம்.

ஒரே ஒரு விஷயம் : Termite protection அவசியம். கோவைபுதூரில், செம்மண்ணில் termite ன் கோபுர குடியிருப்புகள் அதிகம் உண்டு. கூடவே கொஞ்சம் பாம்புகளும்.

07. கொசுவை பற்றி கேட்டிருந்தீர்கள். எங்கு தான் அவை இல்லை ?

உலகெங்கும் அனேக இடங்கள் அவை வியாபித்துள்ளன. 

இங்கு அப்படியல்ல, அவை நம்முடனே டிக்கெட் இல்லாமல் பஸ் / கார் / ரயில் / விமானம் / வீட்டினுள் என நம்முடன் பயணம் செய்து காதுகளில் இந்த கொசுக்கள் ரீங்காரமிடும். இடம் கொடுத்தால், நம்மிடமே blood sampling செய்யும்.

கோவைபுதூரில், உங்கள் வீட்டில் RK Ecran போன்ற net mesh போட்டுக்கொண்டால் ஒரளவு அழையா விருந்தாளியை தடுக்கலாம். வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் பகுதியில், Underground drainage இருந்தால் இன்னும் கொஞ்சம் நிம்மதி.

நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது கொசுவை அல்ல. அது, பட்டுனு அடிச்சா பொட்டுனு போயிடும்.

நீங்கள் கவனிக்க வேண்டியது உங்கள் குடியிருப்பு அருகில் யானை நடமாட்டம் உள்ளதா என்று.

(Elephant creates panic in Kovaipudur)

08. உங்களுக்கு ஏற்கனவே கோவைபுதூரில் சொந்த வீடு உள்ளதென்றால் இந்தியா வந்தவுடன் சில மாதங்கள் அங்கேயே இருந்து, உங்கள் தேவைகள் முழுமையாக பூர்த்தி ஆகிறதா, பாதுகாப்பாக உணருகிறீர்களா என்று பாருங்கள்.

உங்க ஏரியா Jio / BSNL போன்றோர் வழங்கும் FiberNet speed எப்படி ? Log in செய்ய feasibility உள்ளதா என்று கவனிங்க. இன்றைய online காலகட்டத்தில் இது மிகவும் அவசியம்.

இல்லையேல், சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, நீங்கள் வேறு ஒரு gated community - க்கு மாறுவதை பற்றி அப்போது யோசிக்கலாம்.

09. நீங்கள் இந்தியா வந்து, இனிமேல் தான் வீடு வாங்க வேண்டும் என்றால் உங்கள் பட்ஜெட் மற்றும் convenience - ஐ கருத்தில் கொண்டு சிங்காநல்லூர், சரவணம்பட்டி, ராமநாதபுரம், துடியலூர், விளாங்குறிச்சி, காளப்பட்டி, வடவள்ளி, RS புரம், கணபதி, டாடாபாத், மீனா எஸ்டேட்ஸ், தொப்பம்பட்டி, ஒண்டிப்புதூர், ஆவாரம்பாளையம், கிருஷ்ணா காலனி, வெள்ளளூர், சாய்பாபா காலனி, மணியகாரன் பாளையம், வேடப்பட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில் நிறைய residential units விலைக்கு கிடைக்கும். நீங்களே சென்று நேரில் பார்த்து முடிவு செய்யலாம். எங்கள் பகுதியில் குடிநீர் சப்ளை (சிறுவாணி + அத்திக்கடவு cocktail mix) தற்போது மழை பெய்ந்து வருவதால், 5 நாளுக்கு ஒரு முறை 15 மணி நேரம் குடிநீர் குழாயில் வரும். கோடை காலங்களில் 10 - 12 நாட்களுக்கு ஒரு முறை தான் கிடைக்கும்.

10. சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா ? என்று அன்று பாடித்திரிந்த NRI என்ற வகையில் .. நான் நம்மூருக்கு திரும்பியதிலிருந்து square peg in a round hole ஃபீலிங் தான் இங்கே அவ்வப்போது எனக்கு தலைதூக்குகிறது. Wrong side ல் வண்டி ஓட்டுவது இங்கு சாதாரணம். Lane discipline ஃபாலோ செய்து கார் ஓட்டினால், single lane - ல் கூட ஓவர்டேக் செய்து வந்து கசமுசவென்று திட்டுவார்கள்.

Overspeeding செய்யும் பைக் ஓட்டுனர்கள் ஏராளம். நிழல் தரும் மரங்களின் கீழ் Traffic Seargent + team PoS மெஷின் வைத்து spot fine வசூலிப்பது அங்கங்கே மாதக் கடைசியில் நிறைய பார்க்கலாம். இன்று ஹெல்மெட், நாளை டிரைவிங் லைசென்ஸ், அடுத்த நாள் ஓவர் ஸ்பீடிங், அப்புறம் dark sunfilm, பின்னர் பைக்கில் டிரிப்பிள்ஸ், அதன் பிறகு jumping traffic signal என்று category wise பிடிப்பதுண்டு. ஒரு இரு சக்கர வாகனத்தை பிடித்தால், அனைத்து ஆவணங்கள் சரியாக உள்ளதா என செக் செய்தால் நிறைய fine போட முடியும். என்னமோ போங்க …

.அமெரிக்காவில் T Junction - ல் நின்று நிதானமாக காரோட்டிவிட்டு இங்கு சைக்கிள் gap - ல Tata Nexon EV - ஐ எந்த சேதாரமும் இன்றி defensive driving mode - ல் ஓட்டிட, அமெரிக்காவை விட்டு வந்து தான் ஆகணுமா என்று நன்றாக யோசித்து ஒரு நல்ல முடிவெடுங்கள்.

அப்படியே கனடா, ஆஸ்திரேலியா, UAE, கத்தார், சிங்கப்பூர்னு ஃப்ரீயாக ஒரு ரவுண்டு பார்த்திட்டு தான் வாங்களேன்.

நம்ம ஊரு தானே, எப்ப வேணும்னு தோணுதோ அப்ப வரலாம்.

என்ன ஒன்னு, துவரம் பருப்பு முதல் மரச்செக்கு எண்ணை வரை இங்கே எல்லாம் செம விலை ...

அன்று, RS Puram உழவர் சந்தையில் வெறும் 400 ரூபாய்க்கு நான்கு Sree Devi Textiles இலவசமாக கொடுத்த கட்டை பையில் நிறைய நிறைய fresh காய்கறி கிடைக்கும். இன்று, அதே நானூறு ரூபாய்க்கு ஒரு சின்ன carry bag - ல் ஒரு வாரத்திற்கான காய்கறிகள் தான் கிடைக்கும். நிலைமை அப்படி.

இன்றைய தேதிக்கு நாட்டு காய்கறிக்கும் exotic காய்கறி வகைக்கும் பெரிய விலை வித்தியாசமில்லை.

அன்று, RS புரம் Rengas - ல் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் ரூ. 1500/= க்கு கிடைத்தது. இன்று, அதே கடையில், அதே rack - ல் உள்ள அதே மளிகை லிஸ்ட் ரூ. 4500/= ஐ தாண்டுகிறது. 27-ம் தேதியே shortage என்று எங்க சமையலறையில் இருந்து சத்தம். வாணலியை அடுப்பில் வைத்தவுடன், பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு ஓடுவது வாடிக்கையாகிவிட்டது.

முடியலிங்க .... Life is tough for a common man … நல்லவனா இருந்தா நசுக்கிடறாங்க …

இக்கேள்விக்கான பதில் எழுத எனக்கு பரிந்துரைத்த ராஜகோபாலன் ஜெ சாருக்கும் மனமார்ந்த நன்றி....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 (whatsapp )Call or sms
siva19732001@gmail.com..

https://youtu.be/xLsgOBwzkXE



வியாழன், 21 அக்டோபர், 2021

வீரமாத்தி அம்மன் ...


 இன்று நம் சொந்தம் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தேன் ..வீரமாத்தி அம்மனை வழிபடுபவர்கள் எந்த குலம் என்று தகவலுக்குக்காக கேட்டேன் ..அவர் சொன்னதும் ..குஜ்ஜபொம்மு ..கொடையணி பொம்மு ..விடையளித்தார் ..இது மறுபடியும் என் அம்மாவிடம் இந்த சந்தகேத்தை கேட்டேன் .. குஜ்ஜபொம்மு குலம் தான் வீரமாத்தி அம்மனை வழிபடுவார்கள் ..நம் சொந்தம் எறங்காட்டு பெரியையன்(JN பாளையம் ) அவர்களும் வீரமாத்தி அம்மனை வழிபடுவார்கள் உனக்கு தெரியாத என்று என்னிடம் வினாவை திருப்பினார் ...சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டேன் ..நன்றி ...தகவலுக்கு ..


என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் -9944066681

திங்கள், 18 அக்டோபர், 2021

கேள்வி :  முதல் திருமணம் தோல்வி. அதன் தாக்கம் மனதில் பதிந்து விட்டது. அதனால் மறுபடியும் திருமணம் என்றாலே மனதில் ஒரு வித பயம், விரக்தி. திருமண முறிவு ஆகி 8 வருட இடைவெளி ஆகிவிட்டது. எப்படி மீள்வது?


என் பதில் : 


வணக்கம் .எட்டு வருடம் என்பது மிக நீண்ட இடைவெளி


.ஆனால் அந்த அளவுக்கு உங்களின் காயங்களையும் வலிகளையும் உணர முடிகிறது.மற்றொன்று மற்றவர்கள் யாரும் உணர முடியாத உங்கள் உண்மையையும் உணர முடிகிறது.


வேறு யாரும் உங்கள் மனதில் நுழையாத இந்த எட்டு வருடங்கள் உண்மைக்கு மே மிகப்பெரிய கஷ்டமான காலம் தான்.


ஆனால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்கக் கூடாது .அப்படி என்றால் மருந்து வேலை செய்யாது என்பார்கள் .நீங்கள் ஒவ்வொரு முறையும் மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் .


அப்படி எனில் ஒரு குரங்குக்கு காயம் ஏற்பட்டு, அதனை சொறிந்து, சொறிந்து பெரிதாக்கி இறந்து விடுவது போல நீங்களும் ஏறத்தாழ அதே நிலைமைக்கு எட்டு வருடங்கள் போய்விட்டீர்கள் .


நீங்கள் இருக்கும் இடம்,சூழ்நிலை,வேலை போன்ற ஒரு சில விஷயங்களை மாறுதல் செய்யுங்கள். புது நட்பு ,சொந்தங்களுக்கு சற்று அதிக நேரமும் ,வாய்ப்பும் தினசரி வாழ்க்கையிலும் இடம் கொடுங்கள்.


மெல்ல,மெல்ல பட்டுப்போன மணிபிளான்ட் செடி போல காயங்கள் மறைந்து மனம் மறுபடியும் துளிர்விட ஆரம்பிக்கும்.


ஒரு ஆறு மாத காலங்களில் நீங்கள் மறுபடியும் பத்து வருடத்திற்கு முந்தைய பழைய பருவத்திற்கு வந்து விடுவீர்கள் .அப்போது உங்கள் மனம் உங்களுக்கு தேவையான முடிவை கண்டிப்பாக சொல்லும்


.எந்த ஒரு ஆணும் ,பெண்ணும் கடைசிவரையிலும் துணை இல்லாமல் வாழ்க்கையை கடக்க முடியாது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு துணை தேவை.


சென்ற முறை உங்களுக்கு தவறும் தீங்கும் இழைத்தபழைய உறவுகளை மறுபடியும் மனதில் இடம் கொடுக்காமல் ,குரங்கின்புண் போல நினைக்காமல் தவிருங்கள் .


அது உங்களால் கண்டிப்பாக இயலும் .அதன்பின் உங்களுக்கு எங்களால் ஆன பிரார்த்தனைகள் கண்டிப்பான முறையில் பலனளிக்கும் .


உங்களின் எண்ணம் ,செயல் ,மனம் அனைத்தும் புரிந்த நல்ல ஒரு ஜீவன் உங்களை கை கொடுத்து தூக்கி நெஞ்சோடு அணைத்து வாழ்க்கை முழுக்க வளமுடன் ,நலமுடன் சந்தோஷமாக உடன் நடத்திச் செல்லும் வாழ்த்துக்கள்.


நன்றி.....


சனி, 16 அக்டோபர், 2021

 #சலகெருது

(சாமி மாடுகள்)
கம்பளத்து நாயக்கர் சமுதாய சொந்தங்களின் பாரம்பரியமான சலகெருது மரித்தல்.
இது வருடாவருடம் தைப்பொங்கல் திருநாளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்து ஊர்பொது இடத்தில்ஊர்நாயக்கர், பூசாரிநாயக்கர்,கம்பளி நாயக்கர்,கோடங்கி நாயக்கர்,கும்மல்நாயக்கர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் முன்னிலையில் சலகெருது மாடுகளுக்கு பூஜைகள் செய்து உருமி வாத்திய இசை முழங்க சலகெருதாட்டம் (இரு கைகளில் பெரிய மூங்கில் தடிகளுடன் உருமி இசைக்கேற்ப சலகெருது முன் ஆடும் ஆட்டம்) நடைபெறும்.
சலகெருதாட்டம் மாட்டுப் பொங்கல் முடிந்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படுகிறது.பின்னர் அந்தந்த ஊர்ப்பொதுமக்கள் வீடுகளுக்கு சலகெருது மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டு உருமி வாத்திய இசையுடன் பூஜைகள் செய்யப்படுகிறது.பின்னர்,
காணும்பொங்கல் தினத்தன்று சலகெருது மாடுகள் அலங்கரிக்கப்பட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசி தேவராட்டக்கலைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் கோயில்களில் பூஜைகள் செய்து கும்மல்நாயக்கர் அவர்களால் @"கட்டு மந்திரித்தல்" நிகழ்த்தப்பட்டு, அருகிலுள்ள #சோமவாரபட்டி அருள்மிகு ஸ்ரீ #ஆல்கொண்டமால் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று அங்கு தேவராட்டம் மற்றும் சலகெருது மரித்தல் மிகுந்த ஆர்வம் மற்றும் பரவசத்துடன் நிகழ்த்தப்படுகிறது.ஆல்கொண்டமால் திருக்கோயிலில் சலகெருது மாடுகளுக்கு மற்றும் ஊர்பொதுமக்களுக்கு பூஜைகள் செய்து தீர்த்தம்தெளித்து,விபூதிஇடப்படுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
பின்னர் சலகெருது மாடுகள் ஊருக்கு அழைத்து வந்து பாரம்பரிய முறைப்படி ஊர்ப்பொதுமக்கள் முன்னிலையில் சலகெருது கும்மல் பொங்கல் எனும் பொங்கல் வைத்து பூஜைகள் செய்து சலகெருது பாடல்கள் #சாலி பாடல்கள்) பாடும்பொழுது சலகெருது மாடுகள் தானாக முன்வந்து பால், பழம், பொங்கல் சாப்பிடும் நிகழ்வு உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த ஆர்வத்துடனும் பாரம்பரியத்துடனும் போற்றி நிகழ்த்தப்படுகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கொங்கல்நகரம் லிங்கம்மாவூரில் சலகெருது கதாநாயகனாக விளங்கிய சலகெருது வயது மூப்பு காரணமாக இறந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தையும் சோகத்தையும் அளித்தது காண்போரைக் கண்கலங்க வைத்தது.பின்னர் பாரம்பரிய முறைப்படி சலகெருது நல்லடக்கம் செய்யப்பட்டது.
LIC முகவர்
6382568688

வியாழன், 14 அக்டோபர், 2021

கேள்வி :  தங்களை பொறுத்தவரையில் வாழ்க்கையின் நோக்கம் என்றால் என்ன?


என் பதில் :


1. சாதிக்கனும்.


2. ஜெயிக்கணும்.


3. நினைத்ததை முடிக்கனும்.


4. செமையா வாழனும்.


5. எனக்கு அடுத்து மூன்றாவது தலைமுறையே.. என்னை மறந்துறாமல்.. நான் தான். நான் தான். (🔥 🔥 🔥 யா) அவர்களுக்கெல்லாம்..முன்னோடியா இருக்கணும்.


6. என் பெயரை எனது பிள்ளை நெஞ்சை நிமிர்த்தி சொல்லனும்.


7. எனது பேரன் ,பேத்தி ;அவள் கையால் சமைத்து போட்டு.. அதை வயிறார சாப்பிடணும்.


எனது நோக்கம் அவ்வளவுதாங்க. 😁😁😁


நன்றி.....

 இன்று சரஸ்வதி பூஜை ..புதிய மூன்று புதிய திட்டங்கள் (ப்ரொஜெக்ட்ஸ் )மகிழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது ...14-10-2021 இருந்து 2024-ம்  வருடம்  முடிய..வரலாறு மற்றும் ..தொல்லியல் திட்டங்களுடன்  .களப்பயணங்களுடன் 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

குறிப்பு : தளி எத்தலப்பர் (வரலாறு )கடந்த மாதத்துடன் முடிவடைந்தது இனி இது குறித்து இனி பதிவுகள் இனி வராது (தேவைப்பட்டால்அதற்கான தரவுகளுடன் முன்னெடுப்பேன்  )

திங்கள், 11 அக்டோபர், 2021

 கேள்வி : 30 வயதை அடையும் முன் நீங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் என்னென்ன?


என் பதில் : 


ஒரே ஒரு மாத சம்பாளத்தை மட்டும் நம்பி இல்லாமல், share market (SIP/Stocks) போன்ற விஷயங்களை பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்து, சிறிதளவே ஆயினும் (மாதம் 500, 1000 கூட போதும்) முதலீடு செய்ய தொடங்குங்கள். வரும் காலங்களில் பங்குசந்தையில் முதலீடு செய்யாத ஆட்களே இல்லாத நிலை விரைவில் உருவாகப்போகிறது.


பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு கண்டிப்பாக எடுத்து வையுங்கள். எதிர்பாராத மருத்துவ செலவில் தான் நிறைய நடுத்தர வயதினரின் சேமிப்பு கரையத் தொடங்குகிறது.


பெண்/ஆண் தயாராக இருந்தால், கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள். கால தாமதம் வேண்டாம். கட்டாயம் இல்லை, ஆனாலும் 30க்குள் திருமணம் செய்தால் சிறந்தது.


உடல் நம் சொல்பேச்சு கேட்காமல் போகக்கூடிய நேரம் விரைவில் வரும். நடை பயிற்சி அல்லது ஏதேனும் ஒத்த உடற்பயிற்சியில் வாடிக்கையாக ஈடுபட தொடங்குங்கள். கலோரிகள் அதிகம் உள்ள உணவை தவிர்க்கத் தொடங்குங்கள்.


உங்கள் துறையில் ஏதேனும் பயிற்சி அல்லது சான்று தேவைபட்டால், கண்டிப்பாக அதை தொடங்குங்கள் (உதாரணம்: Scrum Master, PMP, Agile, Foreign Language courses >C1 Level, etc.,) 30க்கு மேல் படிப்பில் ஆர்வம் இருந்தாலும் மூளை முழுதாக ஒத்துழைக்காது .


ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்காவது சென்று வாருங்கள். துபாய்க்கு டிக்கெட் விலை 8000க்கும் குறைவாக கிடைக்கிறது. உங்கள் சிந்தனை விரிவடையும். உலகத்தை பற்றிய உங்கள் பார்வை முற்றிலும் மாறும்.


கோபத்தை காட்டியே ஆக வேண்டும் என்ற வீம்பு குணத்தை குறைத்து கொள்ளுங்கள். 30 வயதிற்கு மேல் எளிதாக எதிரிகளை சம்பாதிக்க முடியும். தவறாக எடுத்துக்கொள்ள கூடிய சிறிய வார்த்தை கூட போதுமானது. பேச்சில் கவனத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.


சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். நம்மில் பலர், முக்கியமாக ஆண்களுக்கு வாழ்நாள் முழுதும் அம்மாவோ, அக்காவோ, மனைவியோ சமைத்து கொடுத்திருப்பார்கள். நம்மை நாமே அவசர காலத்தில் காப்பாற்றிக்கொள்ள எளிமையான சில உணவு வகைகளை சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். கைகொடுக்கும்.


DIY (Do It Yourself) வாழ்க்கைமுறையை முயற்சி செய்யத்தொடங்குங்கள். பிளம்பிங், வயரிங், தோட்டவியல் போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்ட தொடங்குங்கள். பிளம்பர், electrician போன்றவர்களை எப்போதும் நம்பி இருக்க வேண்டாம். குறிப்புகள்: 1) Warranty உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை சோதனை செய்ய வேண்டாம். 2) போதுமான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடியுங்கள்.


10. போனஸ்: ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள் (கீபோர்ட், கிட்டார், புல்லாங்குழல்). இவை மிகவும் மலிவு விலைக்கு Amazonஇல் கிடைக்கும். YouTube பயன்படுத்தி கற்றுக்கொள்ளுங்கள்.மற்றும் வலைத்தளங்களில், எழுதி பகிரதொடங்குங்கள் ...


நன்றி ....

சிவக்குமார் .V .K 

Sivakumar.V.K

Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet
Mobile --09944066681 Call or sms
siva19732001@gmail.com

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கேள்வி : நான் மாதம் 20000 சம்பளம் வாங்குகிறேன். அதுவும் எனது சொந்த ஊரில். மேலும் எனது சொந்த வீட்டில் இருந்தும் கூட என்னால் சேமிக்க முடியவில்லை, ஏன்?


என் பதில் : 


உங்கள் சம்பளம் எந்த வங்கியில் வருகிறதோ அதே வங்கியில் ஒரு ரெகரிங் டெபாஸிட் கணக்கு துவங்குங்கள். 

வங்கிக்கு, "உங்கள் சம்பளம் க்ரெடிட் ஆனவுடன் அதிலிருந்து ரூ.2000 உங்கள் ரெகரிங் டெபாஸிட் டில் போட்டு விடச் சொல்லி ஒரு அனுமதிக் கடிதம் கொடுத்து விடுங்கள். பிறகு உங்களால் ரூ.18,000 தான் செலவழிக்க இயலும். இது தான் கட்டாய சேமிப்பு வழி.


 உங்களிடம் க்ரெடிட் கார்டு இருந்தால் துண்டு துண்டுகளாக வெட்டி தூர எறியுங்கள். 

டெபிட் கார்டு பரவாயில்லை. ஆனால் அதை மின் கட்டணம் தண்ணீர் கட்டணம் வாடகை முதலியவற்றுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். 

அரிசி பருப்பு எண்ணெய் சோப்பு வாங்கல்களுக்குப் பணப் பரிவர்த்தனை தான் நல்லது. எளியது. சுகமானது. ஆன்லைன் வர்த்தகம் கூடவே கூடாது.


டிஜிட்டல் இண்டியா தொடப்பக்கட்டை எல்லாம் உங்களைச் சுரண்டும் ஏற்பாடுகள்.


பணம் கொடுத்து பொருட்கள் வாங்க சென்றால் தான், வாங்கும் பொருள் தேவைதானா? அவசியமா? இது இல்லாமல் இருக்க இயலாதா போன்ற நல்ல சிந்தனைகள் வரும். 

உழைத்து சம்பாதித்த. பணத்தை எண்ணி கொடுக்கும் போது தான் அதன் அருமை தெரியும். வெறும் ப்ளாஸ்டிக் கார்டை உரசி வாங்கும் பழக்கம் இருந்தால் கண்டதையும் கடியதையும் வாங்கத் தோன்றும். சேமிக்க இயலாது.


நன்றி ....


வெள்ளி, 8 அக்டோபர், 2021

 🌳எத்தனை நகரங்கள் அசுர வளர்ச்சி அடைந்து மெட்ரோ சிட்டியாக மாறினாலும்


நமது உடுமலைப்பேட்டை மட்டும்🌱🌱🌱 இன்னும் டவுண் என்னும் அந்தஸ்து மாறாமல்.. கிராமங்களின் தலைநகரமாக விளங்குகிறது...🌱🌱🌱🌱💐💐


1.எங்கள் ஊர்ப் புறங்களில் மாட்டுச் சாணி வாசம் வீசும்.. சாக்கடை நாற்றம் வீசாது...


2. போக்குவரத்து இருக்கும்.. ஆனால் நெரிசல் இருக்காது..


3 சில நகரங்களில் இரவு விடிய விடிய பஸ் வசதி இருக்கும் போது எங்கள் டவுணில் எல்லா ஊருக்கும் கடைசி பஸ் ஒன்பது மணிக்கு மேல் இல்லை.. காரணம் தோட்டத்தில் மாடுகன்றுகளோடு விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாக வெளியூர் போக மாட்டாங்க.. அப்படியே போனாலும் கோயிலுக்குப் பழனி, வேலைக்குத் திருப்பூர், பெரிய வேலைனா கோயம்புத்தூரு அவ்வளவு தான்.. எதுக்கு விடிய விடிய பஸ்..


4..பாண்டிச்சேரி, கோவா, ஊட்டி னு போய் காசக் கரியாக்கி கூட்டத்துல நிம்மதி இல்லாமல் வர்றத விட குறைவான செலவில் திருமூர்த்தி அமராவதி னு அமைதியாக தனிமையில்  சொர்க்கத்திற்குப் போயிட்டு வந்திரலாம்..


5.சுத்தமான கடைவீதிகள். மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாத இடங்கள்.கனிவான பேச்சு.. அமைதியை உடைய நகரம்..


6.கரிசல் மண் சேறு, கரும்புச் சாறு வாசம், கன்னுக்குட்டியின் ஓட்டம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ், எப்போதாவது வரும் இரயில், பிராண்டட் மினிஷோரூம்ஸ், திருமூர்த்தி தண்ணீர், காற்றாலை அழகு, எல்லாவற்றிற்கும் மேலாக நாகரிகம் கலந்த எதார்த்தமான வஞ்சகம் இல்லாத வாங்.. போங்.. கொங்கு தமிழ்.


மற்ற பெரிய நகரங்களுக்குக் கிராமமாக


நமது ஊர் கிராமங்களுக்குத் தலைநகரமாக..


இதெல்லாம் பார்க்கையில் இன்னும் பல  நூற்றாண்டுகள் உடுமலைப்பேட்டை நகரம் இப்படியே இருக்க வேண்டும் என்ற ஆசை விரிகிறது...😀😍😊😊ஏன் என்றால் 


உடுமலையில் சுற்றி நம் கிராம சொந்தங்கள் இருக்கும் மக்கள் ...மனதில் சூது ..வாது  தெரியாத ...வெள்ளந்தியான  மனம் கொண்ட நம் மக்கள் இருப்பதால் தான் ..மண் மனம் மாறாது ...இருப்பதால் ..அரசு துறை என்றாலும் ..தனியார் துறை என்றாலும் ...இங்கு வரும் மக்கள் ..உறவு முறை சொல்லி அழைப்பதால் ...வேற ஊருக்கு மனசு வரமாட்டேங்கதுங்க ....வாழ்க வளமுடன் .. .🌱🌱🌱👍👍🌳🌳

 கேள்வி : வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், நாம் எதைப் பெரிதுபடுத்த வேண்டும்?


பதில் :


நாம் நம்மைச் சுற்றி ஒரு மாய வட்டம் போட்டுக் கொள்கிறோம். ஆங்கிலத்தில் Comfort Zone என்று சொல்வார்கள்.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், இந்த Comfort zone என்னும் " வசதி வட்டம் ", என்பதை விட்டு வெளியே வா!, என்று சில சுயமுன்னேற்ற புத்தகங்கள் சொல்லும்.

ஆனால் நான் சொல்லுவேன், நீங்கள் உங்கள் வசதி வட்டத்தை விட்டு, வெளியே வராதீர்கள், உங்கள் வசதி வட்டத்தை பெரிதாக மாற்றுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேறி கொண்டே போகலாம்.

முதலில் இந்த " வசதி வட்டம் ", என்ன என்பதே தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. Comfort என்றால், அந்தக் காலத்தில், என் எஸ் கிருஷ்ணன் டி ஏ மதுரம் ஒரு பாட்டு பாடுவார்.

விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி, மாவு அரைக்கும் மிஷின், துவைத்துப் போட மெஷின் என்று இயந்திரங்களை, நம்பி வாழும் வாழ்க்கையே Comforts in life என்று நமக்கு நுகர்வுக் கலாச்சாரம் சொல்லிக் கொடுத்துள்ளது.

இது ஒரு வசதி போல் தோன்றினாலும், இந்த Comfort உங்களை, பின்னாளில் பெரிய சிக்கலில் மாட்டி விடும்.

நீங்கள் ஆபிசுக்கு நடந்து போகாமல், காரில் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம், அல்லது டூவீலரில் செல்கிறீர்கள். டூவீலரில் செல்வது என்பது Comfort தான். ஆனால் உங்கள் உருவம், ஒரு உசிலைமணி, அல்லது பிந்துகோஷ் போல சீக்கிரம் மாறிவிடும்.

நீங்கள் குண்டாக இருந்தால், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால், இருபது வருடங்களில், Obesity என்பது அத்தனை வியாதிகளையும், உங்கள் உடலுக்குள் கொண்டுவரும்.

Comfort என்று நீங்கள் நினைத்த விஷயங்கள், காலப்போக்கில் உங்களுக்கு எமனாக மாறி, உங்கள் உயிருக்கே உலை வைக்கும்.

A/C என்பது Comfort. ஆனால் அது உங்களுக்கு மட்டுமல்ல, கொரோனா வைரஸ்க்கும் அதுதான் கம்போர்ட் Comfort!

ஆனால் Comfort Zone, வசதி வட்டம் என்பது, நீங்கள் மனநிலையில், எதில் மிகவும் பழகி உள்ளீர்கள், வேலை உங்களுக்கு சுலபமாக உள்ளதோ, அந்த வேலையை மட்டும் செய்து திருப்தியாக வாழ்வது, என்பதே உளவியல் ரீதியாக, Comfort Zone, வசதி வட்டத்தின் விளக்கம்!

இந்த வசதி வட்டத்தை நமக்கு போட்டுவிடுவது, நமது பெற்றோர்கள் தான்.

நீங்கள் ஒரு இசையமைப்பாளராக மாறப் போகிறேன், என்று சிறுவயதில் சொன்னால், எல்லோரும் இளையராஜாவாக மாற முடியாது, நாம் எல்லாம் படித்து, ஒரு நிரந்தர வருமானம் பெரும் அரசு வேலை அல்லது Engineer வேலைதான் செய்ய வேண்டும். Music என்பது Risk. வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பவர்களை இந்த சமூகம், மதிப்பதில்லை.

ரிஸ்க் எடுக்காத, என்ஜினீயர் ஒருவருக்குத் தான் பெண் கிடைக்கும். நான் என்னுடைய வேலையை ரிசைன் செய்துவிட்டு, Startup Business செய்யப்போகிறேன் என்று சொன்னால், கட்டிய மனைவி சோறு போட மாட்டாள்!

இந்த மனநிலை வசதி வட்டம், இதைத்தான் நான் பெரிதுபடுத்த வேண்டும் என்கிறேன். நீங்கள் காரில் வேலைக்கு செல்வது வசதி என்று சொன்னால், எனக்கு நடந்து அல்லது சைக்கிளில் போவது தான் வசதி, என்று நான் சொல்லுவேன்.

நடை பயிற்சி என்பதை Comfort Zone உள்ளே சேர்த்து விட்டேன். எப்படி தெரியுமா? இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு, பருவமே புதிய பாடல் பாடு, என்று இசை கேட்டுக்கொண்டே நடக்கும்பொழுது, அது உங்கள் Comfort Activity ஆக மாறி விடுகிறது!

நான் எதற்காக இந்த வசதி வட்டத்தை பெரிதாக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா?

புதுப்புது முயற்சிகள் செய்யும்பொழுது, உங்கள் அறிவு மேலும் விசாலம் ஆகிறது.

Reward வேண்டுமென்றால் Risk எடுக்கத்தான் வேண்டும். Risk எடுப்பது என்பது, நமக்கு Rusk சாப்பிடுவது போல் இருக்க வேண்டும்.

புதிது புதிதாக நீங்கள், கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் கற்றுக் கொண்டதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வீர்கள்.

நீங்கள், இப்பொழுது கஷ்டப்பட்டாலும், பிற்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Smartphone இல்லாமல் வாழ முடியாது, என்று சொன்னவர்கள் எல்லாம், Chennai Flood வந்தபோது, செயலற்றுப் போனார்கள். நான் நடந்து ( நீந்திக் கொண்டு ) நான் செய்ய வேண்டிய, வேலைகளை செய்தேன். சிரமங்களுக்கு பழகிவிட்டால், அந்த சிரமங்கள் எளிதாகிவிடும்.

நீங்கள் இதுநாள் வரை எவையெல்லாம், உங்களுக்கு வசதி என்று நினைத்தீர்களோ, அந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள் என்று நான் சொல்லவில்லை, அந்த வட்டத்தை பெரிதாக்குவது, உங்கள் கையில் தான் உள்ளது.

தமிழர்கள் மிகச் சிறிய வட்டம் போட்டுக் கொள்கிறார்கள். எனக்குத்தெரிந்து தமிழர்கள், வடக்கே சென்றதே இல்லை.

என் நண்பர்களிடம், நீ வடக்கே எவ்வளவு தூரம் சென்று உள்ளாய்? என்று நான் கேட்டால், திருப்பதி வரை சென்று உள்ளேன், என்று பெரும்பாலானவர்கள் பதில் சொல்வார்கள்.

திருப்பதி தான் வடக்கு எல்லை நமக்கு. ஆனால் மலையாளிகள், லடாக், அசாம், நாகாலாந்து என்று எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.

நீங்கள் நாகாலாந்தில், ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பதைப் பார்க்கலாம். அசாமில் கூட, அவர் மலையாளம் தான் பேசுவார். மலையாள வட்டம் பெரிதாகிறது.

தமிழன் பெங்களூர் சென்று விட்டால் கூட, ஆங்கிலம் தான் பேசுவான். மணிரத்னம் திரைப்படங்கள் பாருங்கள். பொன்னியின் செல்வன் படத்தில், மலையாளிகளை இந்திக்காரர்கள் வைத்து, வட இந்தியாவில் படமாக்குகிறார்.

மணிரத்னம் ஒருவர்தான், வட இந்தியாவுக்குச் சென்றார். ஆனால் கொடுமை, அவர் தமிழர்களை, கிணற்றுத் தவளை போல் கருதி, எந்த தமிழர்களையும், தன்னைப்போல் ஒரு வட்டத்தை தாண்டி வெளியே வர அனுமதித்தது இல்லை. அவர் ஒரு வெளிநாட்டவர் ஆகவே மாறிவிட்டார்.

இந்தியாவிலேயே அவர் ஒருவர்தான், வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஷூட்டிங் நடத்தும் ஒரு இந்திய டைரக்டர். ஆனால் அவர் வெளிநாட்டு விஷயங்களை வெளிக் கொண்டு வருகிறார். அதற்கு நான் பாராட்டுகிறேன், ஆனால் அதேவேளையில், தமிழ்நாட்டில் உள்ள திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்பதால், மலையாளிகள் இந்திக்காரர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தன் வட்டம் பெரிதானால் மட்டும் போதாது, நம் தமிழ்மொழியின் வட்டம் பெரிதாக வேண்டும். அவர் ஒரேயடியாக தமிழ்நாடு என்ற வட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

நான் அவரைப் போல், உங்கள் வட்டத்தை விட்டு வெளியே போகச் சொல்லவில்லை, உங்கள் வட்டத்தை பெரிதாக மாற்றுங்கள். பிற மொழிகளில் இருக்கும் அனைத்தையும், தமிழில் கொண்டு வந்து சேருங்கள். 


புதன், 6 அக்டோபர், 2021

இன்று அருமை தம்பி கோவை மன்சூர் தம்பியை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..🥰🥰🥰📚✍️

 இன்று அருமை தம்பி கோவை மன்சூர் தம்பியை 

சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..🥰🥰🥰📚✍️


கடந்த இரண்டு வருடங்களாக கரோண காலம் என்பதால் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது ..இன்று தம்பி அலுவலக வேலையாக வந்தபொழுது நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..


என் நலனில் என்றும் கடந்த காலத்தில்  வங்கியில் பணிபுரிந்தபோது குழுமனப்பாண்மையுடன் பணியாற்றியது மலரும் நினைவுகளாக இனிப்பு தேங்காய் பருப்பியுடன் ,தேநீருடன் பகிர்ந்து கொண்டது அருமை ..தம்பி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கு நிதியளிப்பது துறையில் என்னுடன் பணியாற்றியது வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க சேவைகள் செய்தது மறந்த போன நினைவுகளை மீட்டுஎடுத்தோம் ...


தம்பி இப்பொழுது பத்திரப்பதிவு துறையில்சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அதில் ஆர்வம் அதிகம் என்பதால் அத்துறையில் கடந்த 7 வருடங்களுக்கு மேல் இத்துறையில் வாடிக்கையாளர்களுக்கு மனப்பூர்வமாக பணியாற்று கொண்டுஇருப்பது எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் மன்சூர் தம்பி ...

சிவக்குமார் .V.K 

Sivakumar.V.K


Home Loan Consultant

(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell) 

Coimbatore,Pollachi, Udamalpet

Mobile --09944066681 Call or sms

siva19732001@gmail.com📚📚✍️✍️👍🏡🏡🏡🏡🏡

திங்கள், 4 அக்டோபர், 2021

இன்றைய சந்திப்பு ...பொள்ளாச்சி புளியம்பட்டி ..

 இன்றைய சந்திப்பு ...பொள்ளாச்சி புளியம்பட்டி ..


பொள்ளாச்சி என் மதிப்புமிக்க வாடிக்கையாளரை சந்தித்த பின்பு மாலை நேரம் ..வங்கி அதிகாரி பிரபாகர் உடன் ...சிஞ்சுவாடி பாளையக்காரர் என் அருமை மாப்பிள்ளை சோலார் தண்டபாணி அவர்களின் இல்லத்தில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..அத்துடன் பொய்கைப்பட்டி அரண்மனை பாக்கியலட்சுமி பாப்பா அவர்களின் தாயாரையும் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி .


என் அருமை மாப்பிள்ளை சோலார் தண்டபாணி அவர்களிடம் ஒருமணிநேர கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது,கொரோன காலம் இரண்டு வருடங்களுக்கு மேல் சந்திக்க முடியாமல் இருந்தது மாப்பிளையை . தற்பொழுது உள்ள சோலார் பற்றியும் அதன் புதிய தொழில் நுட்பங்கள் பற்றியும் கேட்டு தகவல்களை எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது . என் அருமை தம்பி வங்கி அதிகாரி அருளுடன் கலந்துரையாடியது பயனுள்ள பயணமாக அமைந்தது ...


பாக்கியலட்சுமி பாப்பா அவர்களின் தாயாரிடம் நமது சொந்தங்கள் எங்குகெங்கு உள்ளனர் .என்று அவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன் .அவர்களிடம் பேசும்பொழுது என் நெருங்கிய சொந்தங்கள் தான்  என்று  தெரிந்துகொண்டேன்..மாப்பிள்ளையின் இல்லத்தில் நான் சென்ற நேரம்    மழை நேரம் ,சுவையான தேநீரும் இனிப்பும் காரம் நிறைந்த எங்கள் மகளின் உபசரிப்பும் மனதிற்கு இனியது .

பொள்ளாச்சி புளியம்பட்டி சந்திப்பு  மன நிறைவான சந்திப்பு ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...

சனி, 2 அக்டோபர், 2021

 கேள்வி : கோயம்புத்தூரில் குறைந்த செலவில் எங்கே தங்களாம? 1 நாளைக்கு 100.இரூக்குற மாறி சொல்லுங்க..


பதில் : சில்லென்ற கோவையில் ..........


ரூ. 100 என்று அதிகபட்ச வாடகை வரம்பை நீங்களே நிர்ணயித்து விட்டதால், இந்த பதில் Kottai Raj.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஒரு பாரம்பரிய கட்டிடத்தை தற்போது ஒரு அடிப்படை தங்குமிடமாக மாற்றியுள்ளார்கள். வசதியாக தங்க விரும்புவோருக்கு பரிந்துரைக்கப்படும் இடம் அல்ல.

நான் அறிந்தவரை, கோயம்புத்தூர் காந்திபுரம் (வெளியூர்) பேருந்து நிலையத்தின் 1 - ம் எண் பேருந்து தளத்தில் இருந்து இருந்து 1 நிமிட நடை தூரத்தில் உள்ள ஒரு Ratsons Bachelor Dormitory ( Ratsons Dormitory ) 12 மணி நேர வாடகை ரூ. 100/= என்ற வகையில் கிடைக்கும். தனியறைகள் கிடையாது. Transit ஆண் பயணிகள் தங்கலாம் - குளிர்ந்த நீரில் குளிக்கலாம் - உறங்கலாம். பொதுவான (common rooms) படுக்கை - குளியல் - கழிப்பறைகள் கொண்டு சுமாராக இருக்கும். குளிக்க வெந்நீர் கேட்டால் கூடுதலாக 20 ருபாய் செலுத்த வேண்டும்.

கொசுறு தகவல் : இந்த இடத்திலிருந்து 5 நிமிட தூரத்தில் குடும்பத்துடன் தங்கிட பல தங்கும் விடுதிகள் / Stanza Living / Ecorganic Stays / Oyo Hotel Apartments / AirBNB Homestays ரூ .1500 - 2500/= என்ற நாள் வாடகைக்கு கூடுதல் வசதிகளுடன் கிடைக்கின்றன. குளியல் அறையுடன் இணைத்த தனியறையில் தங்கலாம்.

தகவல் / பட உதவி : DuckDuckGo


வெள்ளி, 1 அக்டோபர், 2021

 தளி எத்தலப்பர் ....


நாங்க என்ன பண்ணுன மணிமண்டபம் அறிவுப்பு வரும்னு நினச்சமோ அதை தெளிவா பண்ணினோம் அறிவிப்புவந்தது, 


நாங்க எந்த எடத்துல மணிமண்டபம் கட்டணும்னு நினைச்சோமோ அதே இடத்தில் கட்டடத்தை கட்ட அரசை சம்மதிக்கவைத்திருகிறோம் 


நாங்க எந்த பட்ஜெட்ல மணிமண்டம் அமைக்கணும்னு நினைக்கறோமே அதே அளவு பட்ஜெட் (நிதி) ஒதுக்குவதற்க்கான முயற்சி செய்துகொண்டு உள்ளோம்.. 


நாங்கள் பெருமைக்காக எதையும் செய்வது இல்லை  மற்றவர்கள் நம்மை பார்த்து பெருமைப்படவைக்கவே முயற்சி செய்கிறோம்.. 


நாங்கள் எத்துலப்பரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திக்கான மன்னர் சாதிய தலைவர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைக்க விரும்பவில்லை.. எத்துலப்பர் எல்லா தரப்பு மக்களுக்குமான மன்னர் என்ற அடிப்படையில்லே அனுக விரும்புகிறோம்..  


இன்று இனிஷியல் யார்வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் விதை எங்களுடையது..


தமிழரசன் பொன்னுராஜ் ..ராஜாவூர்