நம்மவூரு நண்பர் ஷாஜஹான் சார் கிட்ட ...டெல்லியில் உள்ள உங்க வீட்டு பூனை குட்டிகள் எப்படி இருக்கு சார் ..னு கேட்டேன் ..ஒரு பதிவே பூனை பற்றி பதிவிட்டுள்ளார் ....நன்றி
சர்வதேச பூனைகள் தினம்
இன்று உலக பூனைகள் தினம். உங்கள் வீட்டுப் பூனைகள் எப்படி இருக்கின்றன என்று இன்பாக்சில் கேட்டார் நண்பர் ஒருவர். என் பதிவுகளை அவர் படிக்கவில்லை போலிருக்கிறது. மனதுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அப்புறம், “பாவம் இவனொரு பூனைகுட்டிக்காரன்” இன்னும் முடிக்காமலே வைத்திருக்கிறேன் என்ற நினைவு வந்தது. நூலாக வெளியிடாவிட்டாலும் ஈ-புக் ஆக வெளியிடலாமா என்ற யோசனை பிறந்திருக்கிறது. பார்ப்போம்.
புத்தகத்தில் நான் வளர்த்த பூனைகளைப் பற்றி மட்டுமின்றி பூனைகளைப் பற்றிய தகவல்களையும் நிறைய சேர்த்திருக்கிறேன். சில மட்டும் கீழே.
• பூனையின் மோப்ப சக்தி அபாரமானது. பூனையின் மோப்ப சவ்வு சுமார் 6 சதுர செ.மீ. அளவு இருக்கும் - மனிதருக்கு உள்ளதைவிட இரண்டு மடங்கு பெரியது. மனிதர்களின் மோப்பத் திறனைவிட 14 மடங்கு அதிகம்.
• பூனைகளுக்கு செவித்திறனும் அபாரமானது. எலிகள் போன்ற சிறிய உயிரினங்கள் எழுப்பும் மென்மையான ஒலியையும்கூட உணரக்கூடிய திறன் கொண்டது பூனை. அல்டிராசவுண்ட் ஒலிகளைக்கூட பூனைகளால் கேட்க முடியும் என்பதால்தான் அவற்றால் வேட்டையாட முடிகிறது. பாலூட்டும் விலங்குகளிலேயே மிகுந்த செவித்திறன் உடையது பூனை. அசையக்கூடிய காது மடல்கள், ஒலிகளை பெரிதுபடுத்தி உள்ளே அனுப்பவும், எந்தத் திசையிலிருந்து ஒலி வருகிறது என்று உணரவும் உதவுகின்றன.
• பூனையின் மீசை போன்ற மயிர்கள், தொடுகை மூலமாகவும், காற்றின் வேகத்தின் மூலமாகவும் ஒரு பொருள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை இருட்டிலும்கூட உணர்த்தக்கூடியவை. பூனைக்கு மீசை இருப்பது, நானும் நீங்களும் படம் வரையும்போது சுலபமாக கோடு இழுப்பதற்காக மட்டுமல்ல என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
• பூனையின் பார்வைத்திறனும் அபாரமானது. மனிதனுக்குத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளி இருந்தாலும் போதும், இரவிலும்கூட அதனால் பார்க்க முடியும். நிறங்களைப் பிரித்தறியும் திறன் பூனைக்குக் குறைவு. பழுப்பு, மஞ்சள், நீலம் ஆகியவை தெரியும்; சிவப்புக்கும் பச்சைக்கும் வித்தியாசம் தெரியாது.
• பூனையின் கண்களுக்கு உள்ளேயும் மூடித் திறக்கும் இமை உண்டு. அது மட்டுமல்ல, மனிதர்களின் கண்களில் கருமணிக்கு நடுவே இருக்கும் பாவை (pupil) வட்டமாக இருக்கும். பூனைக்கு நெடுக்கை வசத்தில் நீளமாக இருக்கும். (சில பாம்புகள், முதலைகள், பறவைகளுக்கும்கூட நீளவாக்கில் இருக்கும்.) பாவை நெடுக்கை, நீள்வட்டம், வட்டம் என வெவ்வேறு வடிவங்களில் இருப்பது குறித்து 2015இல் வெளியான ஓர் ஆய்வறிக்கை இவ்வாறு கூறுகிறது : நெடுக்கைவசத்தில் நீளமாக இருந்தால் வேட்டையாடும் விலங்குகள், இரவிலும் பகலிலும் இயங்குபவை. படுக்கைவசமாக நீளவாக்கில் இருந்தால் இரையாகும் உயிரினங்கள். நெடுக்கைவசமான பாவை இருக்கும் உயிர்களுக்கு பார்வைத் தெளிவு இருக்கும், படுக்கைவசமான பாவை இருந்தால் குறிப்பிட்ட தொலைவில் இருக்கும் பொருட்கள் மங்கலாகத் தெரியும். அதன் காரணமாகவே வேட்டையும் எளிதாகிறது, இரையாவதும் எளிதாகிறது!
*
பண்டைய மதங்களில் பூனைகளைப் பற்றி பலவிதமான நம்பிக்கைகள் உலவுகின்றன. ஜப்பானில் ஆசிவழங்கும் பூனை பொம்மையை வைத்திருப்பது அதிர்ஷடம் என கருதப்படுகிறது. பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பல நாடுகளில், பூனைக்கு 9 ஜென்மங்கள் உண்டு என்று நம்புகிறார்கள். ஜெர்மனி, பிரேசில், கிரீஸ் போன்ற நாடுகளில் 7 ஜென்மங்கள் என்று நம்புகிறார்கள். இதன் அடிப்படை என்னவென்றால், பூனை அபாயகரமான சூழல்களிலும் உயிர் தப்பிவிடுவதுதான். உதாரணமாக, உயரத்திலிருந்து விழும் பூனை பிழைக்காது என்று நாம் நினைத்திருக்க, அது தன் உடலை லாகவமாகத் திருப்பி, கால்கள் தரையில் படும்படி அடிபடாமல் இறங்கியிருக்கும். 32 மாடியிலிருந்து விழுந்தாலும் உயிர் பிழைத்து விடும் என்று ஒரு செய்தியைப் பார்த்தேன். இதுவும்கூட அளவுக்கு மீறிய மூட நம்பிக்கைதான். பல சமயங்களில் கீழே விழுந்து அடிபடுவதும் உயிரிழப்பதும் உண்டு.
*
ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் ஆரம்பத்தில் மனிதனை அனுப்ப மிகவும் அஞ்சினார்கள். குரங்கு, நாய், எலி, முயல் போன்ற விலங்குகளை அனுப்பினார்கள். சில விலங்குகள் வெற்றிகரமாகத் திரும்பி வந்தன. சில விலங்குகள் சில மணி நேரத்தில் இறந்து போனதும் உண்டு, இன்னும் சில விலங்குகள் சில நாட்களுக்குப் பிறகு இறந்ததும் உண்டு. பல விலங்குகள் ராக்கெட்டுகளோடு எரிந்து போனதும் உண்டு. 1963 அக்டோபர் 18ஆம் தேதி பிரெஞ்சு விண்வெளி ஆய்வாளர்கள் ஃபெலிசெட் Felicette என்ற பூனையை அனுப்பினார்கள். அது வெற்றிகரமாகத் திரும்பியும் வந்தது. அதற்கு அடுத்து பிரான்ஸ் மற்றொரு பூனையை அனுப்பியது, ஆனால் உயிரிழந்தே திரும்பி வந்தது. ஆக, விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பிய ஒரே பூனை ஃபெலிசெட் மட்டுமே. இதிலும் இன்னொரு சுவையான கதை உண்டு. உண்மையில் அவர்கள் அனுப்ப இருந்தது ஃபெலிக்ஸ் என்ற பூனை. அதற்குப் பயிற்சி கொடுத்திருந்தார்கள். ஆனால், ராக்கெட் ஏவப்படுவதற்கு சில நாட்கள் முன் அது தப்பியோடி விட்டது. பிறகு தெருவில் திரிந்து கொண்டிருந்த ஒரு பூனையைப் பிடித்து வந்து அனுப்பினார்கள். அதுதான் ஃபெலிசெட்
இதுபோல இன்னும் பல சுவையான செய்திகளைத் தாங்கி வெளிவர இருக்கிறது — பாவம் இவனொரு பூனைகுட்டிக்காரன். முகப்புப்படம் - சலீம்
*
எங்கள் வீட்டிலிருந்து சுரேஷ் பரதன், வனிதா எடுத்துச் சென்ற பூனை எப்படி “வாழ்கிறது” என்பதை முதல் கமென்ட்டில் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக