வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

 தளி எதுலப்ப மன்னருக்கு நினைவு தூண் மற்றும் மணிமண்டபம் (25-08-2017)

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தளி எதுலப்ப மன்னர் குறித்தான ஆய்வுப் பணிகள் முனைவர் க .இந்திரசித்து அவர்கள் ஒத்துழைப்பில் நடைபெற்று வருகிறது .தளி பாளையக்காரர்களில் கடைசி மாமன்னர் தளி எதுலப்பரின் வீரத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் கடந்த 2014 தளி எத்தலப்ப மன்னர் அறிமுகம் எனும் தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது .கடந்த 20.09.2014 இல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் உடுமலை நாராயண கவி மற்றும் தளி எதுலப்ப மன்னரின் எனும் இரு பெரும் வரலாற்றுத் திருவிழா நடைபெற்றது .அதில் எதுலப்ப மன்னரின் வீரத்தைப் போற்றும் வகையில் இனிவரும் சந்ததினியர்க்கு வரலாற்றை அறியும் வகையில் திருமூர்த்தி மலை அணைப்பகுதி அருகே பயணியர் விடுதி எதிரில் நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது .






இதன் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டதன் விளைவாக இன்று 24-08-2017 திருமூர்த்தி மலையில் தமிழக கால்நடை துறை அமைச்சர் மாண்புமிகு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் திருமூர்த்தி மலை சுற்றுலாத்த  தலமாக அமைக்கும் பொருட்டு அணைப்பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் .அப்போது இந்த பாளையக்காரர்களின் சிலைகள் பற்றியும் எதுலப்ப மன்னரின் வீரத்தையும் பற்றி 1801 ஏப்ரல் 23 ஆண்ட்ரே கேதீஸ் எனும் ஆங்கிலேயர் தூக்கிலிடப்பட்ட செய்தியும் கேட்டறிந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் தளி எதுலப்ப மன்னருக்கு நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்கதமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்து பேசி நினைவு தூண் மற்றும் மணிமண்டபம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகத்துறை நண்பர்களான தந்தி தொலைக்காட்சி ரகுமான் மற்றும் நியூஸ் 18 பரணி மற்றும் உள்ள ஏனைய ஊடகவியாளர்களுக்கும் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் .தன் நெஞ்சார்ந்த நன்றியினைப் பதிவு செய்கிறது ....


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக