திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள இரண்டாம் நிலை நூலகம் சார்பில் நூலகர் தினத்தை முன்னிட்டும் , நூலக தந்தை எஸ் .ஆர்.ரங்கநாதன் அவர்களின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் நிலை நூலகத்தில் பள்ளி மாணவ மாணவி களுக்கு ஓவிய போட்டிகள் நடத்தபட்டது.ஓவியர் திரு .கு .நடராஜன் (84)அவர்களின் தலைமையில் குழந்தைகளின் புதிய பொருளை ,கூர்நோக்கு ஆற்றலை வெளிகொண்டுவருவதற்கு இந்த ஓவியப்போட்டிகுழந்தைகளின் அறிவாற்றலை சோதிப்பதற்கும் வளர்பதுக்கும் இது ஒரு நல்ல களமாக அமைந்தது . இதில் ஜம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஓவிய போட்டியில் கலந்து ஆர்வமாக ஓவியங்களை வரைந்தனர் .மேலும் இவ் நிகழ்வில் உடுமலை மற்றும் தளி காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.மேலும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஓய்வு பெற்ற நூலகர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக