சனி, 14 செப்டம்பர், 2019

உடுமலை வரலாறு🌳🌳🌳🌳with V.K.Selvaraj...in Udumalaipettai..

1967 ல் சென்னை மாநில சட்டமன்றத்
தேர்தல் நடைபெற்ற பொழுது,
உடுமலை தொகுதி சட்டமன்ற தேர்தலில் "புனிதர்" சாதிக் பாட்சா அவர்கள் தி.மு.கழகத்தின் சார்பில்
வேட்பாளராக நின்றார்.

அந்த தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தேர்தல் பிரச்சாரத்திற்க்காக மேற்கொண்டார்.

உடுமலையில் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.
அண்ணா அவர்கள் முனீர் அவர்கள்
இல்லத்தில் தங்கி இருந்தார்.

ஜல்லிபட்டியில் நடைபெறும் கூட்டத்திற்க்கு செல்ல தயாராக இருந்தார்.

அதற்க்கு முன் அங்கு செல்வதற்க்கு ஒரு அம்பாசிடர் காரில், வேட்பாளர் சாதிக்,
உடுமலை வெ.காளியப்பன்( எனது தந்தையார்) , நிருபர் சீனிவாசன்
மற்றும் பலர் சென்றனர்.

அப்போது உடுமலை போடிபட்டியில்,
அண்ணா அவர்களை தாக்குவதற்க்கு
பலர் கும்பலாக தயாராக இருந்தனர்.

அங்கு வேல், கம்பு , தடிகள் , எண்ணெய் காய்ச்சிய பாத்திரங்கள் சகிதமாக இருந்தனர்.

கார் வருவதைப் பார்த்த அவர்கள் அண்ணா தான் வருகிறார் என்று நினைத்து அந்த காரை தாக்கினார்கள்

எது நடந்தாலும், காரை நிறுத்தாமல்
செல்ல சொல்லி அங்கு இருந்தவர்கள் தாக்கியும் கார் நிற்க்காமல் அடியை வாங்கிக்கொண்டு ஜல்லிபட்டி சென்றது.

அங்கிருந்து அண்ணாவுக்கு தகவல் சொல்லப்பட்டு, அண்ணா அவர்கள் அந்த கூட்டத்திற்க்கு வருவது தவிற்க்கபபட்டது.

பின்னர் காரில் சென்றவர்கள்
தளி, வழியாக கோமங்கலம்
சென்று அங்குள்ள தபால் நிலையத்தில் டில்லியிலுள்ள நாஞ்சில் மனோகரன் அவர்களுக்கு "தந்தி' மூலம்
பேரறிஞர் அண்ணா அவர்களை
கொல்ல முயற்சி! என்று தகவல் கொடுக்கின்றனர்.

அந்த தந்தியை பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் காலையில் டில்லி பாராளுமன்றத்தில்,
நாஞ்சில் மனோகரன் அவர்கள்,

தமிழகத்தில் எங்கள் இயக்கத்தின் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை கொல்ல முயற்சி செய்துள்ளனர், என்று கொந்தளிப்புடன் பேசினார்.


அந்த செய்தி கேட்டு நாடே கொந்தளிப்பை ஏற்படுத்தியது🌱🌳🌳🌳🌳

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக