புதன், 18 செப்டம்பர், 2019


மூன்றசையோடு முத்தள எத்தலப்பரின் மண்ணில்
பிறந்தவர்களுக்குப் பிறந்திட்ட முத்தே சுpயாம் சுதிர் சிவாவே
 உந்தன் பதினோறாம் ஆண்டு பிறந்த நாள் இன்று நேற்றுதான்
உன்னுடன் உன் பிஞ்சுக் கைகளைப் பிடித்து விளையாடினேன்.
அதற்குள் நீ ஆளாகும் அளவிற்கு வளர்ந்துவிட்டாய்
இந்தப் பதினோறு ஆண்டுகள் ஏப்படிக் கழிந்தது,
எப்படிப் போனது . தினந்தோறும் சூரியன் காலையில்
உதித்து மாலையில் மறைகிறது.
ஆனால்,  உந்தன் முகமோ எப்போதும் என் உள்ளத்தில் உதித்துக்கொண்டே இருக்கிறது எப்படி. . மறக்க முடியாத தாத்தாக்களையும் பாட்டிகளையும்
உன் நினைவிற்கு நான் கொண்டு வரும்
முன்பே என்னுள் இருக்கும் நீ என்
அப்பாவாகவும், அம்மாவாகவும்
உருவெடுத்து திருவாகிப் பேசுகிறாயே . . . ஓ. .
என்னுள் இருக்கும் என் தகப்பனே நீதான்
என்னை குழந்தை முதல் பெரியவனாக்கி
தந்தைக்கிருக்கும் துணிவும், அன்பும் பாசமும்
அத்தனையும் அழகாகவும் அன்பாகவும்
மனதிற்குள்ளேயே அசைபோடும் அன்புள்ளமடா . . நீ.
ஏத்தனை பெரிய வீரனடா உந்தன் செயல்கள்
சிலம்பு சுற்றும்போதும், குதிரையின் லகானைப் பிடித்து
குதிரையேற்றம் செய்யும் போதும்
உந்தன் வீரம் நான் அறியவில்லை.
ந Pபள்ளியில் போட்டிகளில் பரிசுகள் பெறும் போதுகூட
 நான் உன்னை வாழ்த்தியதில்லை. உன் மனதில்
மிகப்பெரிய ஆளாக உன்னையே நீ
உருவாக்கி என்னை வழி நடத்தும்
என் மனசாட்சியே நீதானடா. ..
சொல்ல முடியாத வார்த்தைகளை
என் கண்ணீர் வடிக்கும்போது உன் செயல்கள்
என் மனதிற்கு மாமருந்தாகத் தந்திடும்
மகனே நீதான். இவன் தந்தை
எந்நோற்றான் கொல் எனும்
அய்யனின் திருக்குறளும்
உனக்கும் எனக்குமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.
உன்னை மகனாகப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
உன்னுடன் ஆண்டுகள் பலவாயினும் எனக்கு நீ
இன்னமும் குழந்தையே . . .
வாடா மகனே வா.
என் நெஞ்சில் ஏறி விளையாடு . .
என் முதுகைத் தட்டி உறவாடு . .
என் கால்களுக்குள் புகுந்து வெளியேறு . .
உனக்காக என் முதுகுத் தண்டுவடங்கள்
யானை சவாரி செய்ய இன்னமும் காத்திருக்கிறது.
வாடா .. . மகனே. . .
மீண்டும் சிறு குழந்தையாய்
விளையாடுவோம்.
வயதுகள் மட்டும் ஏறிப்போகாமல் இருந்தால்
நானும் குழந்iதான் என்ன செய்யா . . .
உன் குழந்தைத் தனம்
என்னை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.
ஆண்டுகள் கடந்திடட்டும் - உன் செயல்பாடுகள்
ஆளாகட்டும் ஆளாவாய் . . . என்னை மட்டும் அல்ல . .
அனைவரையும் ஆள (ழ) வைக்கும்
ஆளாவாய்.
வா . . . பிறந்த நாள் தினம் கொண்டாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக