கல்வி தன்னார்வலர்கள் .......
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகனுக்கு வேலை வாய்ப்புத் தொடர்பாக ..எனது HR நண்பரிடம் கேட்டு குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களை, வாய்ப்புகளை அனுப்பி வை என்று சொல்லியிருந்தேன். தினமும் அள்ளி தந்து கொண்டேயிருக்கிறார் ...
பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனங்களில், இந்திய முழுக்க உள்ள நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள், பயிற்சி சார்ந்த தகவல்கள்.
ஆனால் சமூக வலைதளங்களில் எவரும் இது போன்ற தகவல்களைப் பகிர்வதை நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை. நான் சந்திக்கும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், படித்து முடித்து வெளியே சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் அலைபேசிகளில் உள்ள செயலிகள் அனைத்தும் அவர்களின் கொண்டாட்டத்திற்கு உதவக் கூடியதாகத்தான் இருக்கின்றது.
மேலாதிக்க தகவல்கள்.
தற்போது ரவுடி பேபி பாடல் யூ டியுப் ல் 40 கோடி பார்வையாளர்களைக் கடந்து அடுத்த நகர்வுக்குச் சென்று கொண்டிருக்கின்றது.
கனா படத்தில் வரும் வாயாடி பெத்த புள்ள பாடல் இருபது கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்த யூபிஎஸ்சி தேர்வில் வென்றவர்கள், அவர்களின் பேட்டிகள், அந்தத் தேர்வுக்கு எப்படித் தயார் ஆவது, அது சார்ந்த ஆலோசகர்களின் பேச்சு உரைகள் போன்றவைகள் பத்தாயிரம் பார்வையாளர்களைக் கடந்து செல்ல தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் என்னன்ன தேர்வுகள் உள்ளது? என்ன வாய்ப்புகள் உள்ளது? எப்படி அதனை அணுகுவது போன்ற தகவல்கள் அடங்கிய காணொளித் தொகுப்பு ஐந்தாயிரம் பார்வையாளர்கள் அளவுக்குக்கூடத் தாண்டுவதில்லை.
சென்ற வருடம் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு மத்திய அரசாங்கம் நடத்தியது. மாநில அளவில் தேர்ச்சி பெற்றால் மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். அடுத்த கட்டமாகத் தேசிய அளவில் வென்றால் தொகை அதிகமாகும். இந்தத் தொகை இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வாங்கும் வரைக்கும் மத்திய அரசாங்கம் வழங்குகின்றது. தனியார் பள்ளிக்கூடங்கள் பொருட்படுத்தவில்லை. எப்போதும் போல நீட் கோச்சிங் சொல்லிக் கொடுக்க ஆட்களைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் சத்திய மங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள மாணவர்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
வருடந்தோறும் பத்தாம் வகுப்பு முடித்து வெளியே வருபவர்கள் 9 முதல் பத்து லட்சம் பேர்கள். இளங்கலை கல்லூரியில் படிப்பவர்கள் 10 முதல்15 லட்சம் பேர்கள். (எல்லாவிதமான படிப்புகளையும் சேர்த்து)
தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள். தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மூன்று கோடி பேர்கள். இந்த எண்ணிக்கையில் இன்றைய சூழலில் நிச்சயம் முப்பது சதவிகித பேர்களின் கையில் நவீன ரக அலைபேசிகள் உள்ளது.
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..
9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக