இன்று கோவையில் நடந்த மு .கண்ணப்பன் அவர்களின் "வாழ்வும் பணியும் " நூல் வெளியிட்டு விழாவில் ..தளபதி அவர்கள் கலந்துகொண்ட விழாவில் ...நூல் ஆசிரியர் வழக்கறிஞர் சுந்தரம் அவர்களுடன் ...கோவையில் சந்தித்தது பொழுது .
மாப்பிள ..இந்த நூல் முன்னோட்டம் எல்லாம் ..அடுத்த வரப்போகும் நமது வரலாற்று நூலுக்கான ...முன்னோட்டம் ...பதிவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன் சார் ..
மாப்பிள ..இந்த நூல் முன்னோட்டம் எல்லாம் ..அடுத்த வரப்போகும் நமது வரலாற்று நூலுக்கான ...முன்னோட்டம் ...பதிவுகளை குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன் சார் ..
ஆசிரியர் தினத்தில் ஒரு வேண்டுகோள்.
பொதுவாக வாசிப்புச் சூழல் குறைந்து வருவதாக அனைவரும் குறைபட்டுக்கொள்ளும் காலம் இது. அதற்குப் பல காரணங்களை நாம் சொல்லலாம். எதைக்காட்டிலும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. இன்றைய ஆசிரியர்கள் படிப்பதில்லை என்பதுதான் அது. அல்லது, படித்ததை மாணவர்களைக் கவரும் வகையில் எடுத்தியம்புவதில்லை. நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்குபோது ஒரு ஆசிரியர் 'தாய்' நாவலைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினார். உலகின் மிகச்சிறந்த10 நாவல்களில் ஒன்று என்றார். அதைப் படிக்காத ஒருவனின் வாழ்வு முழுமையடையாது என்றார். இதை அவர் சொல்லி 5 ஆண்டுகள் கழித்து, நடைபாதைக் கடைகளில் தேடிப்பிடித்து வாங்கியது தாய் நாவல்தான். ரஷியாவின், மாஸ்கோ வெளியீடான அது இப்பொழுதும் என் சேமிப்பிலுண்டு. இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கிடையில் ஒரு தகவலாக, மாணவர்களுக்கு நல்ல நூல்களையும் அறிமுகம் செய்துவிட்டால், அது அவர்களின் மனதில் நல் விதையாகப் பதியும். அவர்களின் பிற்காலங்களில் நூல்களைத் தேடி வாங்கிப் படிக்கும் பழக்கத்திற்கு வழிவகுக்கும்.
20 ஆண்டுகளுக்கும் முந்தைய காலங்களோடு ஒப்பிடும்போது, இப்போது ஆசிரியராக உள்ள இளம்வயதுடையவர்கள் மற்றும் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் அனைவரும் ஆங்கில வழிக் கல்வியையே முதன்மையாகப் படித்து முடித்தவர்கள். அவர்களுக்கு தமிழார்வம் இருந்தாலும் அதில் புலமையோ, வகுப்புகளில் அதிகம் பயன்படுத்தும் மொழியாகவோ தமிழ் இல்லை. இவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் முழுமையாக தமிழைவிட்டு விலகிவிடும் அபாயகரமான காலகட்டம் இது. இந்தச் சூழலை, ஓர் அரசே ஊக்குவிப்பதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் திட்டமிட்டு நடக்கும் பெரும் மொழித் துரோகம்.
அனைத்தையும் கடந்து நாம் அன்றாடம் சந்திக்கும் பல நம்பிக்கைக்குரிய நல் ஆசிரியர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அதன் விகிதாச்சாரம் மிகவும் குறைவாக உள்ளது என்பதுதான் நமது கவலை.
மாணவர்களின் எதிர்காலம், ஆரோக்யமான சமூகத்துக்கான எதிர்காலம், தமிழின் எதிர்காலம், தமிழர்களின் எதிர்காலம் என அனைத்தும் நம் கையில்தான் உள்ளது எனும் உண்மையைப் புரிந்து இன்றைய ஆசிரியர்கள் தங்களின் பணியைத் தொடர வேண்டும் என்று இந்த ஆசிரியர் தினத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக