வெள்ளி, 13 செப்டம்பர், 2019

பொன்னேரி ஜெயக்குமார் தம்பிக்கு திருமணநாள்வாழ்த்துக்கள் ...

கணவன் மனைவி உறவு என்பது மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முற்படுவதில்லை. இதை ஒவ்வொரு திருமணநாளிலும் நினைத்துப் பார்த்து மகிழவேண்டும்

ஆண்களுக்கு மனைவி அமைவது எப்படி இறைவன் கொடுத்த வரமோ அதேபோல பெண்களுக்கும் கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம்தான். எனவே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்பவர்களாக அமைந்துவிட்டால் அதைவிட சிறந்த வாழ்க்கை வேறு எதுவும் இல்லை.

அரும்பாடு பட்டுக்கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் எனில் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம். திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப் பட்டால் தான் முடியும்.

தம்பதியர் இருவரும் ஆடையைப் போல இருக்கவேண்டும் என்பார்கள். அதாவது ஆடைகள்தான் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. கணவனின் மரியாதையைக் காப்பதில் மனைவிக்கு பங்குண்டு. அதேபோல் மனைவியின் மரியாதையை காப்பதில் கணவருக்கும் பங்குண்டு. இதை அனைத்து தருணங்களிலும் தம்பதியர் உணர்ந்து கொள்ளவேண்டும்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக