சராசரி வியாபார வியூகங்கள்........
நண்பர் கணேஷ் , அவருடைய புது வியாபாரத்தை பற்றி விளக்கி, ஆலோசனை பெற அழைத்து இருந்தார்..
அவருடைய அந்த retail வியாபாரத்தின் முக்கிய இலக்கு ,அவரின் சுத்து வட்டாரம் அஞ்சு கிலோ மீட்டர் மக்கள் அவருடைய கடையை சார்ந்தே இருக்க வேண்டும் என்பது..அதில் பல்வேறு யுத்திகளை விவாதித்தாலும், consumer attraction ல் முக்கியமான விதி, 'குறைந்த விலை' என்பதில்தான் சுற்றி வளைத்து நின்றது. நிறைய விவாதங்களுக்கு அப்புறமா கடைசியில், முதல் வருடம் வாடிக்கையாளர் சேர்ப்பில் ( customer acquisition) மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்யபட்டது.
அதற்கு ,அவர் கொடுக்க முன் வந்த விலை,முதல் வருடம் லாபமில்லாமல் விற்று வாடிக்கையாளர்களை ஈர்த்து , தக்க வைத்து கொள்ளவேண்டும் என்பது..
ஆனால் , அதிலும் எனக்கு இருந்த ஒரு சிறு கேள்வியை முன்வைத்து சிந்திக்க சொல்லி வந்தேன் . அவ்வளவு அலசி ஆராய்ந்து வாங்க வரும் வாடிக்கையாளர் இதே போல ஒரு வருடம் கழித்து நீங்கள் விலையேற்றினால், உங்களுக்கு loyal customer ஆக இருக்க வேண்டிய அவசியம் customersக்கு என்ன என்பதை !! அவரும் யோசிக்க ஆரம்பித்தார்..
இதே போன்ற நிலையை பெரும் கார்பரேட் நிறுவனங்கள் வேறு விதங்களில் கையாளும்..,
இரண்டு உதாரணங்கள், முதல் ஒன்று OLA , JIO போன்ற நிறுவனங்கள் தங்கள் அதீத விலை குறைப்பில் போட்டியாளர்களை நிலை குலைய வைக்கும்.பின்னர் அதை முடிந்த அளவிற்கு நீட்டித்து ,தனக்கு எந்த போட்டி நிறுவனமும் இல்லாத படி செய்து பின்னர் ஆழமாக வேறூன்றி , அதன் மூலம் மார்க்கெட்டை தன் கைக்குள் monopoly யாக கைபற்றி எக்கசக்க விலை ஏற்றி இழந்த நட்டத்தை மீட்டி, அதீத லாபத்தை எட்டுவது ..
மற்றொரு உதாரணம் , Zomotto , swiggy போன்றவர்கள் consumer behavior யே மாற்ற வல்லவர்கள்.. கிட்ட தட்ட 30~50% discount offer கொடுத்து , even வெளியே உலாத்தும் மக்களை கூட, வீட்டுலேயே சோம்பேறிகளாக உக்கார வைப்பது ,அவர்களின் முக்கியமான முதல் வியாபார இலக்கு. அது எங்கே போய் முடியும் தெரியுமா ? ஒரு கட்டத்தில் ஓட்டல்களின் வியாபாரத்தில் பெரும் சதவீதத்தை இவர்கள் கைபற்றி இருப்பார்கள் . மட்டுமல்ல , மக்கள் எதை சாப்பிடவேண்டும் என்பதை கூட தங்கள்APP கள் மூலம் கட்டுபடுத்தி consumer behaviorயை கூட மாற்றி அமைப்பார்கள் ..
மேற்கூறிய உதாரணங்களில் மட்டுமே பாருங்க , நாம எங்க சிக்கபோகிறோம் என புரியும்.. சோம்பேறிகளாய் ஆன்லைனில் பொருட்கள் வாங்க கம்பெனிகள், அதற்காக தடையற்ற internet data plan களை கம்பெனிகள், வெளியே கால் பதித்தால் உங்களை கடத்தி செல்ல online வாடகை வாகனங்கள் ஏற்படுத்தி கொடுக்கக்கூடிய கம்பெனி.. நீங்கள் இனி எதுவும் உங்களுக்காக decide பண்ண இயலாது , அவர்கள் உங்கள் தேவைகளை , அதற்கான தீர்வுகளை தீர்மானிப்பார்கள்..
அட டே!! உணர்ச்சி வசபட்டு எங்கெங்கயோ சிக்கிட்டேன் .. நம்ப கணேஷ் இப்போது நான் கேட்ட கேள்வியில் தூங்கி இருப்பாரா தெரியவில்லை .ஒன்று அவர் தொழில் மிகசிறிய அளவில் quality யை முன்னிறுத்தி trail basis ல் இறங்க வேண்டும்..அல்லது அந்த கார்பரேட்கள் போல , பெரும் முதலீட்டில் அந்த சுத்துவட்டார அஞ்சு கிலோமீட்டர் ,சக வியாபாரிகள் சிதறி ஓடிகிற மாதிரி மெகா ப்ளானுடன் இறங்கவேண்டும் ..
சராசரி வியாபார வியூகங்கள் வழக்கொழிந்து விட்டது போல தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக