உங்கள் முதல் டேட்டிங் அனுபவம் எப்படி இருந்தது?
டேட்டிங் என்பதின் முழு அர்த்தம் எனக்கு தெரியாது..அதை இப்போதே கூறிவிடுகிறேன் !
என்னை பொறுத்தவரை ஒருவருடன் தனிமையில் மனம்விட்டு பேச ..தனிப்பட்ட முறையில் தேதி …agree செய்து வெளியே சென்று விட்டு ..பிடித்த உணவு சாப்பிட்டு வீடு திரும்புவது.
அப்படியானால் எனது முதல் dating என்னுடைய மகனுடந்தான்!!! அவனுக்கு 5 வயது இருக்கும் அப்போது. குழந்தைத்தனம் மறையவில்லை ….. ஆனால் சில நல்லொழுக்கம் பழக்கவழக்கங்கள் புரியவுமில்லை என்கிற ஒரு இரண்டும்கெட்டான் வயது அவனுக்கு!
அவனை ஒரு நல்ல மன நிலைக்கு கொண்டு வந்து அவனிடம் சற்று மனம்விட்டு பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
ஒரு சனிக்கிழமை அன்று அவனிடம் இன்று நாம் வெளியே செல்கிறோம் ..நாம் இருவர் மட்டும்தான்..பின்பு Dominos Pizza செல்கிறோம் என்றேன் . அவனுக்கு ஒரே குஷி ! ( Dominos Pizza என்னுடைய favorite கிடையாது ..வருட த்திற்கு ஒரு முறைகூட நாங்கள் அங்கு செல்லமாட்டோம).
அன்றைய பொழுதை கடைத் தெருவிக்கு சென்று விட்டு பின் Dominos வந்து அமர்ந்தோம்..பிடித்த பொம்மைகள், புத்தகங்கள் சில வாங்கிய சந்தோஷம் அவன் முகத்தில் தெரிந்தது.
பிறகு Pizza order செய்து விட்டு வந்து அவனெதிரில் அமர்ந்தேன் .. பெருமூச்சு விட்டு relax செய்தேன்…பின்பு பேச ஆரம்பித்தான் ( ஆம் நான் வாயை திறக்கும் முன் அவன் பேச ஆரம்பிதது விட்டான் ????!!!!)
மகன் : அப்பா உங்ககிட்ட நான் சில விஷயம் சொல்லணும்.
நான்: ஓ அப்படியா.. சரி சொல்லு..
மகன் : நீங்க நிறையா விஷயத்தில் உங்களை மாத்திக்கனும் …
நான்: ஓஹோ ! சொல்லுப்பா ! (இதெண்டா புதுப் பிரச்சினை!)
மகன்: அப்பா நீங்க இன்னும் டெய்ன்னு என்னை கூப்பிடரீங்க..அதை மொதல்ல நிறுத்துங்க !
பப்பு .. செல்லு…உங்கு குட்டி…மாம செல்லம்…இப்படி எல்லாம் என்ன என் பிரெண்ட்ஸ் முன்னாடி கூப்பிடாதிங்க!
முக்கியமா தயிர் சாதத்தை “ தாச்சி மம்மூ” அப்படினு சொல்வதை நிறுத்துங்கள் ! பருப்பு சாதத்தை “பப்பு மம்மு” சொல்வதை நிறுத்துங்கள்! Main - ஆ காலைல எழும்ப்பும் போது “உங்கு குடிக்கலாம் வாடா” அப்படினு கூப்பிடாதிங்க …”பால் குடி” - னு சொல்லுங்க !
Evening Office விட்டு வந்ததும், என்னை கொஞ்சுங்க, ஆன என்னை இடுப்புல தூக்கி வெக்காதிங்க அது எனக்கு பிடிக்கல !
இப்படியே என் மகன் என் மீது புகார்களை அடுக்கிக் கொண்டே போனானே பாருங்கள்…யம்மாடி !
இந்த அனுபவத்தில் நான் கொஞ்சம் கூட சொந்தமாக எதையும் சேர்க்கவில்லை , அவன் இப்படி பேசியதை என்னால் மறக்கவே முடியாது…
நான் அவனுக்கு advise சொல்லப் போகிறேன் பேர்வழி என்றால் அது எதிர்மறையாக முடிந்தது !
இதுவே எனது முதல் டேட்டிங் அனுபவம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக