திங்கள், 30 செப்டம்பர், 2019

நீங்கள் எப்படி மிகவும் தைரியமாக ஆனீர்கள்?


என் மனைவியை பார்த்துதான். நான் சிறு விஷயத்திற்கு கூட பயம், பதட்டம், அடையும் ஆசாமி. என் மனைவி எதற்கும் கவலை கொள்ளாதவள். ஒருமுறை அவள் பெற்றோர் ஒரு இடத்தை விற்றனர். அவளுக்கு தெரிவிக்க வில்லை. கேள்வி பட்ட போது நான் கூட பதட்டப்பட்டேன் அவள் எந்த ரியக்க்ஷனும் காட்ட வில்லை. நான் அவளிடம் உனக்கு கோவமா வருத்தமோ இல்லையா என்றேன். எதற்கு? என்னிடம் சொல்ல வேண்டும் என்றால் சொல்லி இருப்பார்கள் சொல்ல அவர்களுக்கு தோன்றவில்லை அவ்வளவுதானே என்றாள். " சரி நான் திட்டுவேன் என்று பயம் இல்லையா ?" "அவர்களுக்கே மகள் பாதிக்க படுவளோ எனும் பயம் இல்லை எனக்கு ஏன் இருக்க வேண்டும்" என்றாள். "நான் இதை காரணம் காட்டி உன்னை விரட்டினால்…" , "என் படிப்பிற்கு வேலை தேடிக்கொண்டு போய் விடுவேன்", "என்னை விரட்டாதீர்கள் என்று அழ மாட்டாயா?", " நான் ஏன் அழ வேண்டும். இவ்வளவு நாள் நான் காட்டிய அன்பை விட அந்த சொத்து உங்களுக்கு பெரிதாக தெரிந்ததற்கு ஒரு நாள் நீங்கள் தான் அழ வேண்டும்", " உங்கள் வீட்டிலும் உன்னை சேர்க்க வில்லை என்றால் ", "ஹாஸ்டல் போறேன், இங்கு யாரும் யாரையும் நம்பி பிறக்கவில்லை.. எதையும் பார்த்து பயமோ பதட்டமோ அடைய வேண்டிய தேவையும் இல்லை , நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்ததே தீரும் எதையும் தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை." என்றாள். அன்று முதல் இன்று வரை நானும் பெரிதாக எதற்கும் பயமோ பதட்டமோ அடைவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக