இன்று உடுமலையில் .....
உடுமலை சுற்றுசூழல் இயக்கம் ,ரோட்டரி கிளப் தேஜாஸ் ..கலிலியோ அறிவியல் கழகம் ...இணைந்து விக்ரம் சாராபாய் 100 -வது பிறந்தநாளை கொண்டாடியது ...
இன்று நடைபெற்ற விழாவில் அறிவியல் விஞ்ஞானி B .A .சுப்பிரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது உடுமலையின் இளம் தளிர் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவத்துக்காக நிகழ்வு அமைந்தது ...
விக்ரம் சாராபாய் 100 -வது பிறந்த நாள் ....
உடுமலை சுற்றுசூழல் இயக்கம் ,ரோட்டரி கிளப் தேஜாஸ் ..கலிலியோ அறிவியல் கழகம் ...இணைந்து விக்ரம் சாராபாய் 100 -வது பிறந்தநாளை கொண்டாடியது ...
இன்று நடைபெற்ற விழாவில் அறிவியல் விஞ்ஞானி B .A .சுப்பிரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது உடுமலையின் இளம் தளிர் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவத்துக்காக நிகழ்வு அமைந்தது ...
விக்ரம் சாராபாய் 100 -வது பிறந்த நாள் ....
இன்றைய இந்தியா விண்வெளியில் எவ்வளவோ சாதிக்கின்றது, வல்லரசு நாடுகளுக்கு இணையாக அதனால் வான்வெளியில் பாயமுடிகின்றது, செயற்கைகோளை நிறுத்துதல் ஏவுகனை மூலம் அதை தகர்த்தல் இன்னும் கிரகம் விட்டு கிரகம் பாய்தல் என எந்த நாட்டுக்கும் இந்நாடு போட்டியாய் நிற்கின்றது
இதற்கெல்லாம் அடித்தளமிட்டவன் அந்த இயற்பியல் மனிதன், அந்ந மாபெரும் விஞ்ஞானியின் 100ம் பிறந்த நாள் இன்று
டாக்டர் விக்ரம் சாராபாய், இந்திய அறிவியலின் தந்தை
அகமதாபாத்தின் பிறப்பு அவர், அவர் குடும்பம் செல்வந்தமாயும் அதே நேரம் நாட்டுபற்று உள்ளதாகவும் திகழ்ந்தது. காந்தி முதல் பல தலைவர்கள் அடிக்கடி வந்து சென்ற வீடு அது
அந்த பணக்கார குடும்பத்தில் பிறந்தார் விக்ரம், தன் ஆலைகளை நிர்வகிக்க லண்டன் சென்று படித்தும் வந்தார், ஆனால் மனம் அறிவியல் பால் திரும்பிற்று
அந்நேரம் சர்சிவி ராமன் புகழ்பெற்ற விஞ்ஞானியாயிருந்தார் காஸ்மிக் கதிர்களை ஆய்வு செய்ய அவருடன் பணியாற்றினார். இமயமலை முதல் பல இடங்களில் ஆய்வுகளை அன்றே செய்தார்
இயற்பியலுக்காக மறுபடியும் லண்டன் சென்று பட்டம் பெற்றார் மறுபடியும் அதே ஆய்வு, அகமதாபத்தில் அவரால் திறக்கபட்டது "இயற்பியல் மையம்"
அந்த மையம் பின்னர் சுதந்திரம் அடைந்தபின் காஷ்மீர், கொடைக்கானல், திருவனந்தபுரம் என பல இடங்களில் திறக்கபட்டது
பின்னாளில் அது ராக்கெட் மையங்களாக மாறின, தும்பா முதலானவை அப்படித்தான்
முதலில் சாராபாய் தன் இயற்பியலை நூற்பாலை வகைக்கும் காஸ்மிக் கதி போன்ற வகைக்கும் இன்னும் சிலவற்றுக்கும் செய்து கொண்டிருந்தார், முதலில் வான்வெளி பக்கம் வரவில்லை
விண்வெளி புரட்சி 1957ல் நடந்தது ரஷ்யாவின் ஸ்புட்னிக் உலகின் முதல் விண்வெளி ராக்கெட்டாக பறந்தது, அதன் தாக்கம் உலகெல்லாம் எதிரொலித்தது
இந்தியா விண்வெளி யுகத்துக்கு வந்தது, அமைதிபுறாவானே நேரு 1962 யுத்தத்துக்கு பின்பு ராணுவபக்கம் திரும்பினார், அவருக்கு பின்பு இந்திரா யுகம் வந்தது
இந்திரா விண்வெளி திட்டங்களை முதலில் ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். பாபா அடிப்படையில் ஒரு அணுவிஞ்ஞானி ஆனால் ISRO என்ற அமைப்பின் தலைவராக அவர்தான் இருந்தார்
பாபா திடீரென இறந்தார், அந்த மர்மம் இன்றுவரை தீரவில்லை. இந்தியாவின் அணுசக்தி தந்தையும் மிக பெரும் விஞ்ஞானியானுமான அவரின் திடீர் இறப்பு அறிவியல் ரீதியாக பெரும் பின்னடைவு
அந்த இடத்தை நிரப்ப பணிக்கபட்டார் சாராபாய், பாபாவின் இடத்தை மிக நுட்பமாக நிரப்பினார் அவர்
ஆரியபட்டா எனும் இந்தியாவின் முதல் செயற்கைகோள் அவராலே வெற்றிகரமாக ஏவபட்டது, அந்நாளில் அது பெரும் சாதனை
வெறும் சாமியார் தேசம், பாம்பாட்டி நாடு என கருதபட்ட தேசம் தன் செயற்கை கோளை அனுப்பியபொழுது உலகம் திரும்பி பார்க்கத்தான் செய்தது
மாபெரும் அத்தியாயத்தை தொடக்கி வைத்தார் சாரபாய், நடக்கவே நடக்காது என்ற விஷயங்கள் அவராலே சாத்தியமாயின
இவரின் சீட கோடிகள்தான் சதீஷ் தவானும், அப்துல் கலாமும்
நல்ல விஞ்ஞானி அற்புதமான தேசபக்தியும் அறிவும் தரமும் நிறைந்த் விஞ்ஞானிகளை உருவாக்கமுடியும் என்பதற்கு அவர்தான்
எடுத்துகாட்டு
இன்று அந்த மாமனிதனின் 100ம் பிறந்த நாள்
இந்தியாவில் ஏகபட்ட பல்கலைகழகமும் கல்வி நிலையங்களும் அவரால் உருவாயின, இந்திய மேலாண்மை கழகம் அவரால் உருவாக்கபட்டது
ஏகபட்ட கிராமங்களில் பெரும் கல்விபுரட்சி அவரால் உருவானது
அவர்வழி வந்த கலாமும் அவர்வழியிலே கல்வி போதித்தார், போதித்துகொண்டே இறந்தார்
இந்தியாவினை அறிவியலில் உயர செய்து, அந்த தேசத்தை விண்வெளிக்கும் அழைத்து சென்ற அந்த மாமனிதனின் 100ம் பிறந்தநாளில் தேசம் அவருக்கு ஒன்றுபட்ட மனதுடன் அஞ்சலி செலுத்துகின்றது
அம்மனிதன் தொடங்கிவைத்த யுகமே இன்று வான்வெளி முழுக்க இந்திய கோள்களும், ராணுவம் முழுக்க பலமான ஏவுகனைகளுமாய் நிற்கின்றது
சந்திராயனும் நிலாவினை நெருங்கி கொண்டிருக்கின்றது, சந்திரனின் ஒரு பகுதிக்கு ஏற்கனவே உலக நாடுகளால் விக்ரம் சாராபாயின் பெயர் சூட்டபட்டிருக்கின்றது
அந்த பகுதியினை நோக்கி செல்கின்றது சந்திராயன் 2
விக்ரம் சாராபாய்க்கு அஞ்சலி செலுத்தியபடியே அடுத்த தலைமுறைக்கான வான்வெளி ஆய்வில் களமிறங்கி இருகின்றது இந்தியா
சாராபாய், சதீஷ் தவான், கலாம் வரிசையில் பலர் வந்தார்கள் இன்னும் வருவார்கள் தேசம் அவர்களால் நலமும் வளமும் பெறும்.
இன்றைய மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேணடிய பெரும் விஞ்ஞானி சாராபாய், இம்மாதிரி பெரும் விஞ்ஞானிகளும் தேசாபிமானிகளும் மாணவர்களுக்கு வழிகாட்டியாய் இருத்தல் வேண்டும், அவர்களை மாணவ சமூகம் படித்தல் வேண்டும்
வெற்று அரசியல் கும்பலும், வெறுப்பு அரசியலும், சினிமாவும் இதர டிவி குப்பைகளும் மாணவ சமூகத்துக்கு ஒருநாளும் நல்ல விளைவுகளை கொடுக்காது, அதனால் தேசத்துக்கும் நல்ல முத்துக்கள் கிடைக்காது
விருதுகளும் கௌரவங்களும்
இவர் மரணமடைந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் 1972ம் ஆண்டு, இந்திய தபால் துறை இவருடைய புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது. அந்த அஞ்சல் தலையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ரோகினி ஏவுகணையின் புகைப்படத்துடன் கூடிய சாராபாயின் படம் இடம் பெற்றிருந்தது.
இவர் மரணமடைந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் 1972ம் ஆண்டு, இந்திய தபால் துறை இவருடைய புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது. அந்த அஞ்சல் தலையில் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ரோகினி ஏவுகணையின் புகைப்படத்துடன் கூடிய சாராபாயின் படம் இடம் பெற்றிருந்தது.
விக்ரம் சாரபாயின் 100ம் பிறந்த நாளை ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் பல நாட்கள் கொண்டாடி , அப்பெருமகனை மாணவர் மனதில் பதிய செய்தல் வேண்டும்
கல்வி கூடங்களும் பொறுப்பான ஆசிரியர்களும் அந்த பெருமகனை தேசபற்றோடு மாணவர்கள் மத்தியில் பதியசெய்தலே அவருக்கான உண்மையான அஞ்சலி....
இன்று நடந்த நிகழ்வுகள் ..
காலையில் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் ...கடந்தகால வரலாறை நோக்கி ...
மாலையில் ...உடுமலை
கலிலியோ அறிவியல் கழகம் ...அறிவியல் நோக்கி ...
தேடல்கள் வாழ்க்கையில் அவசியம் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக