திங்கள், 16 ஜூலை, 2018

என் அன்பு தோழியின் அழகான நிதர்சனமான பதிவு ....
Shan Karuppusamy கொங்கு பகுதிகளில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விவாதித்து இருந்தார்.
அது கொங்கு இல்லை .ஐயர் சமுதாயம் முதல் பல படித்து முன்னேறிய பல இடங்களில் நடப்பதுதான்.
பெண்கள் காதல் திருமணம் என்று வரும் பொழுது சமுதாயம் யோசிப்பதில்லை. ஆண்கள் இன்னும் பின் தங்கியே இருப்பதாய் தோன்றுகிறது. நிதர்சனம் அறிவதில்லை.
இன்னொன்று பெண்களுக்கு நடக்கும் கொடுமையால் பல பெண் குழந்தைகளுக்கு திருமணம் மேலேயே ஆர்வம் போய்விட்டது. இப்பொழுது இருக்கும் திருமண கட்டமைப்பில் இருந்தும் பலர் வெளியேற விரும்புகின்றனர் ..
நிஜம்தானே . அடிமையாய் நடத்தி நடத்தி ஒரு கட்டத்தில் பெண்களுக்கு இதன் மேல் கசப்பு வராமல் என்ன செய்யும்?
நேற்று சிங்கிளாய் இருக்கும் தோழியிடம் மறு மணம் பற்றி கேட்டேன் .."எனக்குன்னு வீடு இருக்கு, இங்க உங்க எல்லாருக்கும் பின்னாடி ஒரு சுமை..எப்போ வீட்டுக்கு வருவன்னு போன் ..எப்பவும் வீடு பின்னாடியே இருக்கீஙக..நான் நிம்மதியா எந்த கேள்விக்கும் ஆளாகமல் இருக்கேன்..காலையில் எப்ப வேணா எழுந்துப்பேன்..வீடை எப்படி வேணா போட்டு வைப்பேன். காபி ஏன் லேட்டு, ஏன் வீடு இப்படி இருக்குன்னு கேள்வி கேக்க என்னை எப்பொழுதும் வேலை ஏவ யாருமில்லை..இன்னொருத்தருக்கு அடிமையாகதான் நமக்கு எதுக்கு திருமணம் .அது இனிமே எனக்கு தேவையே இல்லை" என்றார்..
இன்னொரு தோழி "காசுக்கு திருமணம் என்றால் அதுக்கு வேறு தொழில் செய்யலாம் .அன்புக்குதான் குடும்பம் .அது நமக்கு கிடைக்குதா?" என்றார்.
பெண்களிடம் அன்பாக நடக்கும் தலைமுறையாக மாறுவதும், மாற்றுவதிலும்தான் பதில் உள்ளது..
அதே சமயத்தில் கணவன் காசு கொடுக்கும் இயந்திரமில்லை. நமக்கும் எல்லா கடினத்திலும் சம பங்கு இருப்பதை பெண்களும் உணர வேண்டும் அப்பொழுது நல்ல மாற்றங்கள் சமுதாயத்தில் உருவாகும்
மாற்றத்தை நோக்கி செல்லும் காலம் பிறந்துவிட்டதை உணர முடிகிறது..
இயற்கை சமம் செய்யும் காலம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக