செவ்வாய், 31 ஜூலை, 2018

என் அருமை விளாத்திகுளம்  ..ராஜ்குமார் அப்பணாசாமி  மாப்பிள்ளைக்கு ..என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...மாப்பிள்ளையின் அறிமுகத்தால் ..முகநூலிலும் ,வாட்ஸஅப்ப் குழுவிலும் ..எனக்கு அதிக சூரியன் உதிக்கும் கிழக்கு திசை சொந்தங்களை அறிமுக படுத்திவைத்த பெருமை ..என் ராஜ்குமார் மாப்பிள்ளையையே சாரும் ..என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாகவும் ..பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
கலந்தாய்வு ...மாலைநேரம் ..
இன்று தங்களின்  பணிகளை முடித்துக்கொண்டு ..சிவக்குமார் -நிதித்துறை ,
மாரிமுத்து -கல்வித்துறை ,மனோகர் -தொழில்துறை ,செந்தில் -ஊடகத்துறை ,தமிழரசன் -மின்துறை ,கார்த்தி -விவசாயத்துறை ...அனைவரும் இன்று உடுமலை மாலை நேரம் ..வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ..உடுமலையில் நடைபெற இருப்பதால் ..அதற்கான பணிகளை தொடங்கி செயல் திட்டங்கள் ,நடைமுறை படுத்தும் திட்டங்கள் ..பற்றி ஆலோசனைகளை பகிர்ந்துகொண்டோம் ...மகிழ்ச்சி ..

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் ..

நீங்க ...பத்தா வைச்ச ..பக்குனு பத்திற்கும் ...பஞ்சு துறை மாப்பிள ...

திங்கள், 30 ஜூலை, 2018

இன்றைய தலைப்பு ..வழிகாட்டுதல் 
மௌனம் ஒரு மகாசக்தி...
இந்த மௌனத்தை ..நம்ம மாப்பிள்ளை செந்தில்ராம் ..எனக்கு உணர்த்தியுள்ளார் ...வாரத்தில் எப்படியாவது மாப்பிள்ளையுடன் ..ஒரு தொழிலதிபர் ,துறை சார்ந்த அரசு அதிகாரி..விவசாய தொழில் புதிய தொழில் நுணுக்கங்கள் பற்றி அறிய சந்திக்கும் விவசாயி ...சந்திக்கும் செல்லும்போது அழைத்து செல்வார் ..எனக்கும் வியாபார தொடர்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..நம்ம மாப்பிளை நேர்முக உரையாடலில் அதிகம் பேசாமல் ..அவரை பேசவைப்பதற்கு சில கேள்விகள் மட்டும் அழகாக ..தனக்கு வேண்டிய செய்தியை உள்வாங்கிறார் ...நான் உன்னிப்பாக கவனிப்பேன் ..நேரம் போவது தெரியாது ..தகவல்கள் வந்துகொண்டே இருக்கும் ..மிக சுவாரிஸ்யமாக ..அதை அவரின் எழுத்தில் கொண்டுவந்து படிக்கும்போது ஆர்வம் அலாதியானது ..

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமரிசித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.
அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.
நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக.
ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.
நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.
எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.
பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.
ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.
மௌனத்தை விட சிறப்பானதாக இருந்தால்
வார்த்தைகளை
பயன்படுத்துங்கள்....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
சர்வேதேச புலிகள் தினம் ..ஷியாம் சுதிர் ..

புலிகள் அரிதான விலங்குகளின் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட நிலையில் நம் நாட்டின் தேசிய விலங்கான புலியை பாதுகாப்போம் என்ற சூளுரையுடன் சர்வதேச புலிகள் தினத்தை நினைவூட்டும்..

ஜிம் கார்பெட்டின் ''ருத்ரப்பிரயாகையில் ஆட்கொல்லி சிறுத்தை'' (காலச்சுவடு பதிப்பகம்) புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சிறந்த அட்வென்சர் படம் பார்ப்பது போல உள்ளது. இதற்கு இணையாக நான் பார்த்த ஹாலிவுட் திரைப்படம் ''The Ghost and the Darkness''. சிங்க வேட்டை குறித்த படம். இந்த புத்தகத்தை நண்பர்கள் தவறவிடாதீர்கள் !
ஜிம் கார்பெட்டின் ‘ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை’ நூல் வாசித்தேன். இது இரண்டாம் முறை.
ஜிம் கார்பெட் ஒரு பிரிட்டிஷ் வேட்டைக்காரர். இந்தியாவில் பிறந்தவர். கேதார்நாத் எனும் இந்தியப் பிரதேசத்தை பல வருடங்களாக கதிகலங்க வைத்திருந்த, முடக்கிப்போட்டிருந்த ஓர் ஆட்கொல்லிச் சிறுத்தையை அவர் வேட்டையாடப் போன அனுபவங்களின் தொகுப்பு இந்த நூல்.
வேட்டைக்காரர்களுக்கே இருக்க வேண்டிய அசாதாரணமான பொறுமையோடுதான் இந்த நூலை வாசிக்க வேண்டியிருக்கிறது. ஆம். சிறுத்தை ஒவ்வொரு முறையும் சாமர்த்தியமாகவும் தற்செயல்களாலும் தப்பிச் செல்வதை வாசிக்கும் போது நமக்கு எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாகிறது. இதுவே ஒரு சினிமாவாக இருந்தால் அது ஐந்து நிமிடங்களில் பரபரப்பாக காட்சிப்படுத்துல்களுடன் நாயகனின் சாகசங்களின் மூலமாகவும் அது கொல்லப்பட்டிருக்கும். ஆனால் யதார்த்தம் என்பது வேறல்லவா? காட்சி ஊடகங்களின் பரபரப்பு நம் ஆதாரமான மனஅமைப்பை மெல்ல மாற்றிக் கொண்டு வருகின்றன என்று தோன்றுகிறது.
படைப்புகளில் மனிதன்தான் உயர்ந்தவன், சிந்திக்கத்தெரிந்தவன் என்கிற தற்பெருமை நம்மிடம் உண்டு. ஏனெனில் அது நம்மால்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒரு சிறுத்தை மனிதனை விட மேலாக எத்தனை மதியூகமாக சிந்தித்து செயல்படுகிறது என்பதை இந்த நூலில் விவரிக்கப்படும் பல சம்பவங்களின் வழியாக அறியும் போது பிரமிப்பாகவே இருக்கிறது. இதர உயிரினங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது ஒருதுளி கூட இல்லை என்பதை நிரூபிக்கிறது.
ஒருவகையில் இயற்கை ஆதாரங்களின் அழிவிற்கும் மனிதப் பேராசைக்கும் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நெடுங்காலப் போரின் ஒரு வரலாற்றுத் துளி என இந்த நூலைச் சொல்லலாம். எத்தனையோ காரணங்களுக்காக இயற்கையின் வளங்கள், உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. மனிதனின் இருப்பிற்காகவும். பாதுகாப்பிற்காகவும்.
இத்தனை சக்தி வாய்ந்த மனிதனை, ஒரேயொரு சிறுத்தை பல காலமாக பயமுறுத்திக் கொண்டிருந்தது. . ‘பில்டிங் ஸ்டிராங்கு, ஃபேஸ்மெண்ட் வீக்கு’ என்பது போல மனிதகுல அகங்காரத்தின் முன் ஒரு சவாலாக.
இயற்கையை விட மனிதன் நிச்சயம் பெரியவன் அல்ல. அதனுடைய ஒரு துளி அங்கம்தான் அவன்.
தஞ்சாவூர் கவிராயரின் சரளமான மொழிபெயர்ப்பு இந்த நூலின் வாசிப்பனுவத்தை இனிமையாக்குகிறது. (காலச்சுவடு பதிப்பகம்)

நேரம் கிடைக்கும்போது நீங்களும் வசித்துப்பாருங்கள் ..வாசிப்பை நேசிப்போம் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...


சனி, 28 ஜூலை, 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை ...(Google...)

நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை என்று ..சும்மா ..கூகுளை தட்டினேன் ..நமது செய்லபாடுகளை ..அழகா விவரிக்கிறது ...செயல்பாடுகள் ஒன்றே நமது விருட்சத்தின் விதைகள் . ...விழுதுகள் ...ஆலமரமாக தன் கிளைகளை பரப்புகிறது ...
நம்ம தேவராட்டம் ..
கரப்பாடி ...கார்த்தி ,சிவா மாப்பிள ..எப்படி இருக்கிறது என்று ..ஏதோ நமக்கு தெரிந்த தேவராட்டம் ..வாழ்க்கையில் ஆடியதே இல்லை ..சும்மா ஆடி பார்க்கலாமே .தத்தக்க பித்தக்கா ..என்று ஆடியது ...என்று ஆடினேன் ...நல்ல இருக்க மாப்பிள ..அடுத்த வருஷம் ..சும்மா பட்டய கிளப்பலாமா ..பயிற்சி எடுத்துக்கொண்டு ....

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

தளி எத்தலப்ப மன்னர்....

இந்த பாடல் எடுக்கும் பொழுது ...அருமையான சூழ்நிலை ..எனது பெரியம்மா ..திருமலையம்மாள் (தளி ஜல்லிபட்டி )..அருமையான பாடல்வரிகளுடன் பாடிய நாட்டுப்புறக்கலைபாடல்கள் அருமையான பாடல் வரிகளுடன் இன்றும் மனதில் பதிந்து விடுகிறது ...பள்ளிப்படிப்பு என்பது இவர்கள் மொழியில் அறவே இல்லாமல் ..எப்படி பாடமுடிந்தது ..தினம் தோறும் எண்ணிப்பார்க்கிறேன் ...வியப்பே மேலிடுகிறது ...அவர் மறைந்தாலும் அவர்களை என் கேமரா கண்களில் படம் பிடித்து ...தேவையான பொழுது கேட்டு மகிழ்கிறேன் ...உங்களுக்கும் பகிர்வதில் எனக்கு பெருமை ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681.... 

வியாழன், 26 ஜூலை, 2018

இன்று அருமையான தென்கொங்கு நாட்டின் வரலாற்று நூலை பரிசாக அளித்ததது ..மிக்க மகிழ்ச்சி

உடுமலை அரசு கலைக்கல்லூரி  முதல்வர் பாலசுப்ரமணி  அவர்களுக்கு உடுமலை வரலாற்று  ஆய்வு நடுவத்தின்             வெளியீடான           தென் கொங்கு  நாட்டின்  முதல் "விடுதலைப்  போர்  நூலினை       முனைவர்  மதியழகனுடன்  பேராசிரியர்  கண்டிமுத்து         ஆய்வாளர்  சிவக்குமார்     அமராவதி தங்கராஜ்


தென்கொங்கு  நாட்டின்  முதல்  விடுதலைப்போர்   நூலை  தென்கொங்கின்  ஆய்வாளர்   தென்கொங்கு  சதாசிவம்      அவர்களுக்கு   நூலினை   வழங்கிய போது  உடன்  பேராசியர்  கண்டிமுத்து  சிவக்குமார் ,  ஈழவேந்தன்....

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பயின்ற முன்னாள் தமிழ் துறை மாணவர்கள் ..பேராசியர்  கண்டிமுத்து,ஆய்வாளர் பொதிகை அச்சகம் அருட்செல்வம் என்பது பெருமை ..


செவ்வாய், 24 ஜூலை, 2018

உடுமலைப்பேட்டை .மலையாண்டிபட்டிணம் .ஊர்புற கிளை நூலகம் திருப்புவிழாவில் ...நாட்டுப்புற கலைஞர் திரு .வேலுமணி அவர்கள் பாடிய ..தளி எத்தலப்ப மன்னரின் வீரம் நிறைந்த பாடல் ...


நாட்டுப்புறக்கலைகள் -தமிழ்நாடு ..

கோடாங்கிபட்டி தேவராட்டம்....

கம்பளத்து மக்களின் தேவராட்டம் ...



மீள்பதிவு ....ஷ்யாமுடன் வெங்கடேஷ் மாப்பிள ..(.Cognizant -சென்னை )
4 years ago
வரும் நம் தலைமுறைக்கு என்ன கற்று கொடுக்க போகிறோம்  ....? அன்புமட்டும்தான் ....

வேட்டை ...
நம் கம்பள மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்கவேண்டியகாலம் தற்பொழுது ....தடைசெய்யப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் உள்ளது ...காலத்திற்கு ஏற்ப நம் சமுதாயம் மாறவேண்டும் ...

இந்து
சமய புராணங்கள் அரசர்கள்
வேட்டையாடுதலை
பொழுதுபோக்காகக்
கொண்டிருந்தனர் எனக்
கூறுகின்றன.
வேட்டையாடுதலுக்கு ஒரு
நீண்ட வரலாறு உண்டு. நம்
முன்னோர்களுக்கும்
முந்தைய ஆதி மனிதர்கள்
விலங்குகளை வேட்டையாடி
இறைச்சி உண்கின்ற போது
ஆரம்பித்ததன் பழக்கம் இன்று
வரை இருக்கலாம். பெரிய
விலங்குகளிடம் இருந்து
தம்மைத் தற்காத்துக் கொள்ள
ஆரம்பித்த இப்பழக்கம் பின்னர்
உணவுப் பழக்கமாகவும் மாறி
இருக்கலாம். நாகரிகம்
அடைந்து சமவெளிகளில்
குடியேறுவதற்கு முன்னரும்,
விவசாய நிலங்களை
உருவாக்கிப் பயிரிடுதலைக்
கற்றுகொள்வதற்கும் முன்னர்
வேட்டையாடுதல்
உணவளிக்கும் ஒரு செயலாய்
இருந்து வந்தது. ஆடி மாசம் ஆடுடா வேட்டை ஆடுடா...பார்ப்போம் நெருப்புடா...நெருங்கடா பார்ப்போம் ....நெருங்கினா...பொசுக்கிறா...கூட்டமடா... ஆடுடா வேட்டை ஆடுடா...ஆடிமாசம் வேட்டையாடுடா அரசாண்டா கம்பளத்தான்டா....

ஞாயிறு, 22 ஜூலை, 2018

தளி எத்தலப்ப மன்னர்க்கு ...ஆங்கிலேய காலத்தில் இந்திய விடுதலை போராட்டக்களங்களில் எப்படி சுக துக்கங்களில் ஹசன் முகமது எப்படி உதவி புரிந்தாரோ ..அதுபோல் .என் சுக துக்கங்களில் கூடவே இருக்கும் என் இனிய நண்பன் ..அப்சல் நூர் -க்கு .. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... — feeling happy with Afzal Noor.

Afzal Noor ...MD 



"insta-redeem" & "Hurry4Curry" together @ #BNI Oscar meet.....
Hurry4Curry - "Munch our Mutton, Cherish your apetite with our fresh chicken, Nothing fishy except fish & become our loyal kings by "insta-redeem"....
Soon, We "Hurry4Curry" will going to deliver fresh meats at your door-step within 45mins all around Coimbatore....Get diamond points and discounts by downloading our "insta-redeem"....
Intro
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்...9944066681... 

செவ்வாய், 17 ஜூலை, 2018


நான் வாசித்த புத்தகம் ...

நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் -துணை செயலாளர் -வழக்கறிஞர் சிவரஞ்சனி -கோவை ,கம்பளவிருட்சம் தங்கமான உறுப்பினர்கள் -லலிதா -காவல்துறை--கோவை ,செல்வகுமார் -காவல்துறை -பழனி , தம்பி நந்தகோபால் -வனத்துறை -கோவை ,வழக்கறிஞர் .ரமேஷ் -பெரியகோட்டை ,வழக்கறிஞர் -கார்த்தி -கோவை ,வழக்கறிஞர் படிப்பை படிக்க தொடங்கியிருக்கும் ..தங்கமான சுபாஷினி -சென்னை , இவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது இந்த புத்தகம் வாங்கி படியுங்கள் ..உங்களுக்கும் ,நம் வளரும் சமுதாயத்திற்கும் நன்மையாக இருக்கும் ...வாழ்த்துக்கள் ..

சவுக்குச் சங்கர் குறித்து எனக்குத் தீரா ஆச்சரியமுண்டு. அவர் தளத்தைத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் அனைத்து கட்டுரைகளையும் வாசித்துள்ளேன். சாதாரண நிறுவனங்களில் இருக்கும் உள் அரசியல் குளறுபடிகளைக் கண்டு மனம் சோர்ந்து போகும் சமயங்களில் இவரையும் பலமுறை நினைத்துக் கொள்வதுண்டு.

திரைப்படங்களில் மட்டுமே சாத்தியப்படும் பல விசயங்களை இவர் செய்து காட்டியிருப்பதற்குப் பின்னால் இவர் எதையெல்லாம் இழந்திருக்க வேண்டும்? என்பதனை பல முறை யோசித்ததுண்டு. இவரின் சொந்த விசயங்களைப் பற்றி இணையத்தில் பகிர்ந்ததும் இல்லை. ஆனால் இவரின் வாழ்க்கை அனுபவத் தொகுப்பின் வாயிலாகக் காவல்துறை, நீதிமன்றம் என்ற இரண்டு துறைகளைப் பற்றி அதன் இருட்டுப் பக்கங்களைப் பற்றிப் புத்தகமாக எழுதியுள்ளதை வாசித்து முடித்த போது மனதில் உருவான தாக்கம் மறைய அடுத்த இரண்டு நாள் ஆனது.

அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி தேவைப்படாது. அரசு எந்திரத்திற்கு ஆன்மா என்பது தேவையில்லை. அதிகாரிகளுக்குக் கட்டளையை நிறைவேற்றுதல். தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுதல். உருவாகும், உருவாக்கும் வாய்ப்புகள் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளுதல் என்பது தான் இங்கே காலம் காலமாக நடந்து கொண்டு வரும் நிகழ்வு. இதற்கு நாம் அழைக்கும் பெயர் ஜனநாயகம். இதனைத்தான் இங்கே மக்களாட்சி என்கிறோம்.

இந்தக் கட்டமைப்புக்குள் சாதாரணக் கீழ்மட்ட அரசு ஊழியராகப் பணிபுரியும் ஒருவர் நாம் இவற்றைச் சகித்துக் கொள்ளக்கூடாது, நடந்து கொண்டிருக்கும் தவறுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தன்னால் ஆன முயற்சிகளை மறைமுகமாகச் செய்யும் போது உருவான தலைகீழ் மாற்றங்கள் தான் இன்று இவரை எழுத்தாளர் ஆக மாற்றியுள்ளது. இணையத்தில் நண்பர்கள் அளவுக்கு எதிரிகளையும் உருவாக்கியுள்ளது. பெயரைச் சொன்னாலே பலருக்கும் அலறும் அளவுக்கு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் காவல் நிலையம் வரைக்கும் செல்ல வேண்டியிருந்தாலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தவிர்க்கவே பார்ப்பார்கள். காரணம் அதன் அமைப்பு அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்தில் உள்ளே நுழைந்து அங்கு அவர் எதிர்கொள்ளும் கேள்விகளும், கேலிகளும் தாண்டி முதல் தகவல் அறிக்கை பெற்று விட்டால் கூட அதுவே மிகப் பெரிய சாதனை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அலையும் அலைச்சலில் கிடைக்கும் அனுபவங்கள் அடுத்தவர்கள் அங்கே போகாமல் இருக்க வைக்கின்றது.

ஆனால் நீதிமன்றம் இதனை விட வித்தியாசமானது. உள்ளே என்ன நடக்கின்றது? என்பதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அதன் அமைப்பு வேறொரு தளத்தில் இயங்குகின்றது. இன்று வரையிலும் இது தான் சரி என்று பிரிட்டிஷார் உருவாக்கிய இத்துப் போன நடைமுறைகளைக் கட்டி காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. காரணம் வெளிப்படையாக, எளிதில் அணுகக்கூடியதாக, புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்பட்சத்தில் அரசாங்கத்தின் கோர முகம் மக்களுக்கு எளிதில் தெரிந்து விடும் அல்லவா? மக்கள் பேசும் மொழியும் அலுவல் மொழியும் வெவ்வேறாக இருக்கும்பட்சத்தில் எவரும் எதையும் தெரிந்து கொள்ளவும் முடியாது. அதற்காக முயற்சிக்கவும் மாட்டார்கள். அப்படியே முயற்சித்தாலும் காலம் கடந்து போயிருக்கும்.

இப்படித்தான் இங்கே சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகின்றது. காலம் முழுக்க கையேந்தி வைத்துக் கொண்டிருப்பதே அரசாங்கத்தின் வெற்றியாகவும், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் வாழ்வதே மக்களின் வெற்றியாகவும் இங்கே உள்ளது.

அதனைத் தான் இந்தப் புத்தகம் உயிருடன் இன்னமும் வாழும் பல அதிகாரிகளின் உண்மை முகம் வழியாக நமக்குப் புரியவைக்கின்றது.

இரண்டு துறைகளிலும் நல்லவர்கள் விரல்விட்டு எண்ணிச் சொல்லும் அளவிற்கு இருப்பதால் மட்டுமே சங்கர் இந்தப் புத்தகம் எழுதும் அளவிற்கு உயிரோடு இருக்க முடிந்துள்ளது என்பதனை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.

எழுத்தாளர் என்பவர்கள் எழுதி எழுதிப் பழகியவர்களுக்கு மட்டுமே அதன் சுவராசிய சூட்சமம் கைகூடும் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் இந்தப் புத்தகத்தை நள்ளிரவு தாண்டியும் வாசித்துக் கொண்டே இருக்கும் அளவிற்கு மனதில் பதட்டத்தை உருவாக்கியதோடு தொடர்ந்து படபடப்பையும் வாசிப்பவனுக்கு உருவாக்கியதில் முழுமையாகச் சங்கர் வெற்றியடைந்துள்ளார்.

இதில் வாசித்துக் கொண்டே வந்த போது மிகவும் ரசித்த விசயம் ஒன்று இதில் உள்ளது.

இப்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள டிடிவி தினகரன் மனைவி அனுராதா வீட்டுக்குச் சோதனை போடச் சென்ற போது அவர் கண்ணாடியில் பொட்டு வைத்துக் கொண்டு இயல்பான நின்றதும் இவர்களைக் கண்டதும் சோகமாகத் தன்னை மாற்றிக் கொண்டு அப்பாவியாக நிற்பதும் போன்ற காட்சிகள் வாசிக்கும் போதே அந்த நிகழ்வை யோசித்துப் பார்த்துச் சிரிக்கத் தோன்றுகின்றது.

அதே போல மன்னார்குடி குடும்பம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சங்கரின் தஞ்சாவூர் வீடு எங்கே உள்ளது என்பதனை அறிய அலைந்த சம்பவங்களையெல்லாம் வாசிக்கும் எந்தக் காலமாக இருந்தாலும் காத்திருந்து சங்கறுக்கும் கலையைக் கற்ற அந்தச் சமூகத்தின் செயல்பாடுகள் பெரிதாக ஆச்சரியமளிக்கவில்லை.

இவர்களையும் ஏ1 குற்றவாளி கட்டி மேய்த்துள்ளார் என்பதனைத்தான் ஆச்சரியமாகச் சொல்லத் தோன்றுகின்றது.

சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் அதிர்ச்சியை அளிக்கலாம். பலருக்கும் இதையெல்லாம் தாண்டி வந்து எப்படி இன்னமும் இவர் உயிருடன் இருக்கிறார்? என்றே விபரம் தெரிந்தவர்களுக்கு உடனடியாக மனதில் தோன்றும் அளவிற்கு நடந்த ஒவ்வொரு சம்பவமும் மனதில் கிலியடிக்க வைக்கின்றது.


மிக அழகாக, நேர்த்தியாக, தரமாக, பொருந்தக்கூடிய விலையில் தந்துள்ள கிழக்குப் பதிப்பகம் Badri Seshadri அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்தப் புத்தகத்தை நிச்சயம் சட்டக்கல்லூரி மாணவர்களும், காவல் துறையில் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

காரணம் உள்ளேயிருக்கும் ஆன்மா அழுகிப் போய்விடக்கூடாது என்ற சங்கல்பத்தை இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அவர்களுக்கு ஏதொவொரு வகையில் உணர்த்தியே தீரும். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே இந்த இரண்டு துறைகளின் மேல் பொது மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கின்றது. அதனையும் சங்கர் அங்கங்கே குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் நான் முக்கியமாக அறிந்து கொண்ட ஒன்று கலைஞர் குறித்த அவர் ஆளுமை பற்றிய புரிதல்.

ஆட்சியில் இல்லாத போது போராடிக் கொண்டிருந்ததைப் போல ஆட்சியில் இருந்தாலும் தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே தான் இருந்துள்ளார். அதன் மூலம் உருவான பல அனர்த்தங்களைச் சங்கர் சில இடங்களில் மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவரின் வலைதள வீச்சின் காரம் இதில் குறைவு. ஆனால் வாசிப்பவனை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர விடாமல் கெட்டியாகப் பிடித்து அடுத்தடுத்து நகர வைக்கும் சூட்ச எழுத்தாள திறமையை அனாயாசமாகக் கைப்பற்றி வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார்.

இந்தப் புத்தகத்தில் குறை என்று பார்த்தால் குறிப்பிட்ட இடங்களில் ஜம்ப் ஆகி அதனைப் பற்றி முழுமையாக விவரிக்காமல் சென்று விடுவது இயல்பாகப் பல இடங்களில் உள்ளது. ஒரு வேளை சங்கர் Shankar Aஇதன் தொடர்ச்சியாக அடுத்தப் புத்தகம் எழுதினால் இன்னமு😋ம் தைரியமாகப் பல விசயங்களைச் சுட்டிக் காட்டுவார் என்று நம்புகிறேன். 😁

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681


திங்கள், 16 ஜூலை, 2018

என் அன்பு தோழியின் அழகான நிதர்சனமான பதிவு ....
Shan Karuppusamy கொங்கு பகுதிகளில் ஆண்களுக்கு திருமணம் ஆவதில் உள்ள பிரச்சனைகள் பற்றி விவாதித்து இருந்தார்.
அது கொங்கு இல்லை .ஐயர் சமுதாயம் முதல் பல படித்து முன்னேறிய பல இடங்களில் நடப்பதுதான்.
பெண்கள் காதல் திருமணம் என்று வரும் பொழுது சமுதாயம் யோசிப்பதில்லை. ஆண்கள் இன்னும் பின் தங்கியே இருப்பதாய் தோன்றுகிறது. நிதர்சனம் அறிவதில்லை.
இன்னொன்று பெண்களுக்கு நடக்கும் கொடுமையால் பல பெண் குழந்தைகளுக்கு திருமணம் மேலேயே ஆர்வம் போய்விட்டது. இப்பொழுது இருக்கும் திருமண கட்டமைப்பில் இருந்தும் பலர் வெளியேற விரும்புகின்றனர் ..
நிஜம்தானே . அடிமையாய் நடத்தி நடத்தி ஒரு கட்டத்தில் பெண்களுக்கு இதன் மேல் கசப்பு வராமல் என்ன செய்யும்?
நேற்று சிங்கிளாய் இருக்கும் தோழியிடம் மறு மணம் பற்றி கேட்டேன் .."எனக்குன்னு வீடு இருக்கு, இங்க உங்க எல்லாருக்கும் பின்னாடி ஒரு சுமை..எப்போ வீட்டுக்கு வருவன்னு போன் ..எப்பவும் வீடு பின்னாடியே இருக்கீஙக..நான் நிம்மதியா எந்த கேள்விக்கும் ஆளாகமல் இருக்கேன்..காலையில் எப்ப வேணா எழுந்துப்பேன்..வீடை எப்படி வேணா போட்டு வைப்பேன். காபி ஏன் லேட்டு, ஏன் வீடு இப்படி இருக்குன்னு கேள்வி கேக்க என்னை எப்பொழுதும் வேலை ஏவ யாருமில்லை..இன்னொருத்தருக்கு அடிமையாகதான் நமக்கு எதுக்கு திருமணம் .அது இனிமே எனக்கு தேவையே இல்லை" என்றார்..
இன்னொரு தோழி "காசுக்கு திருமணம் என்றால் அதுக்கு வேறு தொழில் செய்யலாம் .அன்புக்குதான் குடும்பம் .அது நமக்கு கிடைக்குதா?" என்றார்.
பெண்களிடம் அன்பாக நடக்கும் தலைமுறையாக மாறுவதும், மாற்றுவதிலும்தான் பதில் உள்ளது..
அதே சமயத்தில் கணவன் காசு கொடுக்கும் இயந்திரமில்லை. நமக்கும் எல்லா கடினத்திலும் சம பங்கு இருப்பதை பெண்களும் உணர வேண்டும் அப்பொழுது நல்ல மாற்றங்கள் சமுதாயத்தில் உருவாகும்
மாற்றத்தை நோக்கி செல்லும் காலம் பிறந்துவிட்டதை உணர முடிகிறது..
இயற்கை சமம் செய்யும் காலம் இது.
இந்த மாத பண்பாட்டு கழக மாத இதழ் ...எப்படி சொல்வது என்று தெரியவில்லை ..படித்ததில் இருந்து ஒரே சிந்தனை ...பீலிங் sad ...

ஆமாங்க சார் ...இன்னும் நமது அறக்கட்டளைகளின் செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் ...
திருப்பூரில் எதுலப்பர் மகாஜனசங்கம் ஆரம்பித்து ...இரண்டு வருடங்கள் ஆரம்பித்துவிட்டு ...பண்பாட்டுக்கழகத்திடம் பேசி அவர்கள் பதவி வாங்கிவிட்டு ...மகாஜன சங்கத்தை களைத்து விட்டார்கள் ..ஆனால் நாம் மாறாமல் ...நம் டிரஸ்ட் முறைப்படி பதிவு செய்து ..இப்போது தான் கொஞ்சம் ஒரு அடி வைத்தோம் ..விட்டால் ஆலமரமாக வளர்ந்து விடுவார்கள் என்று இங்கே கம்பள விருட்சம் ..அங்கே ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை வளர்ந்துவிடும் ..யாரோ சொல்பேச்சை கேட்டு நம்ம நசுக்க பார்க்கிறார்கள் ..இதற்கும் நாம் அவர்களுடன் இணக்கமாக தான் சென்றேன் ..உங்களுக்கு தேவையான படித்த பண்புள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்களை நானே பண்பாட்டு கழகத்திற்கு ...அளிக்கிறேன் என்று கூட சொல்லிப்பார்த்தேன் ..நீதிபதியிடம் ,ராமகிருஷ்ணன் ,சங்காரவேல் ,முருகவேல் ..அன்பாக பேசி ..சுமுகமாக தான் கொண்டுசென்றேன் ..களப்பணி செய்து இரண்டு வரலாற்று நூல்களையும் ..அவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்திவிட்டேன் இதைவிட எதை எதிர்பார்க்கிறார்கள் ..எல்லாம் பண்பாட்டு கழகம் செய்யவேண்டும் ..என்று நினைக்கிறார்கள் ...பண்பாட்டு கழக பெயரை நம் மாப்பிளைகளிடம் ,தம்பிகளிடன் சொன்னால் ..கோபப்படுகிறார்கள் ...எப்படி கையாள்வது கொஞ்சம் சிரம படவேண்டியதாக இருக்கிறது ..பார்ப்போம் ..

இப்பொழுது எங்கு திருப்பினாலும் அறக்கட்டளைகள் பற்றி பேச்சு ..உறுப்பினர்கள் சேர்க்கிறார்கள் ..கல்வி ,வேலைவாய்ப்பு ,கோவில் நிலங்கள் ..,


ஞாயிறு, 15 ஜூலை, 2018

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் மிக மகிழ்ச்சியானவர்களாகி விடுகிறார்கள். காரணம், அவர்களுக்கு ஒரு சமையல்காரி கிடைத்து விடுகிறாள். ஒரு சலவைத் தொழிலாளி கிடைத்து விடுகிறாள். ஒரு செவிலி கிடைத்து விடுகிறாள். ஒரு துப்புரவுத் தொழிலாளி கிடைத்துவிடுகிறாள். குடும்ப நிறுவனத்திற்கான ஒரு ஊதியமற்ற மனேஜர், அக்கவுண்டன்ட் கிடைத்து விடுகிறாள். இவை அனைத்திற்கும் மேலாக "கண்ணியமான" ஒரு தாசி கிடைத்து விடுகிறாள்.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் மகா நடிகைகளாகி விடுகிறார்கள். அவர்கள் தாங்கள்தான் உலகிலேயே மகிழ்ச்சியானவர்கள் என்று எண்ணத் தொடங்கிவிடுவது மட்டுமல்ல, அப்படியே நம்பி நடித்தபடியே வாழ்ந்து முடிக்கிறார்கள்.
7 வது புத்தக திருவிழா  ..மாணவ,மாணவிகளுக்கான  போட்டிகள் 2018..

இன்று காலை ஞாயிறு ...வெளுத்து வாங்கும் வெள்ளந்தியான குழந்தை செல்வங்களுடன் அழகான மழையும் பொருட்படுத்தாமல் ,தங்களின் பெற்றோர்களுடன் 10 மணி என்று அறிவித்து இருந்தபோதும் ...காலை 9 மணிக்கே குவிய தொடங்கி விட்டனர் ..போட்டிக்கான ஏற்பாடுகளை புத்தக திருவிழா தோழர்களுடன் செய்துகொண்டிருந்தோம் ..வருடம் வருடம் புத்தக திருவிழாவிக்கான  போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது ..வருங்கால குழந்தை செல்வங்களின் புத்தக தேடல்களை போல் ...
அதுவும் இன்று தமிழ்நாட்டின் கல்விக்கண்  கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளன்று ..கட்டுரை ,ஓவிய ,பேச்சு போட்டிகள் நடை பெற்றது கூடுதல் சிறப்பு ...இப்போட்டிகள் .ராஜேந்திர ரோட்டில் அமைந்துள்ள அரசு மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது ....குழந்தை செல்வங்கள் கலந்துகொண்டது மிக சிறப்பு ...பள்ளி குழந்தைச்செல்வங்கள் தன் பிஞ்சு கரங்களால் பசுமை நிறைந்த வளங்களையம் ,இந்திய விடுதலைக்கு  வித்திட்ட தலை வர்களை வரைந்த ஓவியங்கள் அருமை ..அருமையான தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ ,மாணவி செல்வங்கள் பேச்சு போட்டிகள் ..பள்ளியே அதிரும் அளவிற்கு பேசியது அருமை ..இதில் கலந்துகொண்ட மாணவ ,மாணவி செல்வங்களுக்கும்  ,சான்றிதழ்களும் அனைவருக்கும் ..உண்டு ..வரும் ஆகஸ்டு 12 ..பரிசு வாங்கும் நாள் எப்பொழுது வரும் என்று எதிர்பார்ப்பது போல் நம் மனதும் காத்திருக்கிறது ....வாழ்த்துக்களுடன் ..என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

சனி, 14 ஜூலை, 2018

அருமையான பேச்சு ....

திரு.அண்ணாமலை.IPS
கர்நாடக மாநிலத்தில்
சிக்கமகளூர் மாவட்டத்தின் காவல்துறை உயர் அதிகாரி.
ஒரு பள்ளியில் நடைபெற்ற விழாவில்
வள்ளுவரையும் காமராஜர் ஐயாவையும்
கக்கன் அவர்களையும் மேற்கோள் காட்டி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.வாழ்க தமிழ்! வளர்க தமிழ்-கன்னட நட்புறவு.

Thiru. Annamalai IPS.......வேறு யாரும் இல்லை ..நமது உடுமலை சத்தியம் பிரிண்டர் நிறுவனரின்  மாப்பிள்ளை.உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி கண்டிப்புக்கு பெயர்பெற்ற மறைந்த தலைமை ஆசிரியர் கிருஷ்னசாமிக்கவுண்டரின் பேத்தியின் கணவர்.கரூர்...இந்தியா அளவில் முதல் 10 ஐ பி ஸ் வரிசையில் உள்ளார் என்பது நம் உடுமலை மக்களுக்கு பெருமை ...

எலுமிச்சம்பழம் 
கோவில் வரலாறு ...

அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவராய பெருமாள் ஸ்ரீ அனுமந்தராய பெருமாள் திருக்கோவில் கரட்டுமடம், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம்.
இத்திருக்கோவிலின் புனரமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. .இக்கோயிலின் குடமுழுக்கு விழா வரும் ஆனி மாதம் 27 ஆம் நாள் (11.7.2016), திங்கள்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 30 மணிக்குள் நடைபெற வுள்ளது அனைவரும் வருகை தந்து அருள் பெற வேண்டுகிறோம்..
ஒவ்வொரு பகுதியின் வரலாற்றையும், மக்களின் வாழ்வியலையும், பாதுகாத்து வந்த பழங்கால கோவில்கள், பராமரிப்பில்லாமல், பரிதாப நிலைக்கு செல்வதும், அதை புனரமைக்க, கிராம மக்கள், போராடுவதும் தொடர்கதையாகவே உள்ளது. பல போராட்டங்களை சந்தித்தாலும், பழங்கால கோவிலை புனரமைத்து, வரலாற்றை பாதுகாத்துள்ளனர் கரட்டுமடம் கிராம மக்கள்.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடருடன் இணையாமல், தனித்திருக்கும் சிறிய மலைக்குன்றுகள் அனைத்துக்கும் வரலாற்று சிறப்புகள் உள்ளன.
இதற்கு உதாரணமாக, கல்லாபுரம் துருவமலை போன்று, கரட்டுமடம் மலையும் தனிச்சிறப்பு பெறுகிறது. கரட்டுமடம், ராவணாபுரம், தேவனுார்புதுார், எரிசனம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் எங்கிருந்து பார்த்தாலும், காணக்கிடைப்பது மலைக்குன்றில் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள், அனுமந்தராய சுவாமி கோவில்களாகும்.
கிராம மக்களுக்கு, காலை கண்விழிக்கும் போதே, தென்படும் கோவிலின் நிலையை பார்த்து, வருந்தாத, நாட்களே இல்லை.
தனிச்சிறப்பு
சிறிய மலைக்குன்றின் அமைந்துள்ள இந்த கோவில், கற்றளியாக கட்டப்பட்டு, விஜயநகர பேரரசு காலத்தில், கோபுரம் கட்டப்பட்டு, சிறப்புடன் திகழ்ந்துள்ளது. பின்னர், தளி பாளையக்காரர் எத்தலப்பரால், பல்வேறு புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிய குன்றாக இருந்தாலும், கோவிலின் பின்புறம் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர். சிறிய சுனை போன்ற அமைப்பும் இருந்துள்ளது. மலைக்குன்றை சுற்றியும் அகழி வெட்டியது போல, பெரிய குழிகள் அமைந்துள்ளன.
பல்வேறு படையெடுப்புகள் மற்றும் இதர காரணங்களால், பராமரிப்பு குறைந்து, பரிதாப நிலைக்கு சென்றது சஞ்சீவிராய பெருமாள் மற்றும் அனுமந்தராய சுவாமி கோவில். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சினிமா படப்பிடிப்புகளும், கோவில் வளாகத்தில் நடத்தப்பட்டன. இருப்பினும், கோவிலை புனரமைத்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பது சுற்றுப்பகுதியை சேர்ந்த, 75க்கும் அதிகமான கிராம மக்களின் தவமாக இருந்தது.
இதற்கு, குறிப்பிட்ட நாட்களில், கிராமத்திலிருந்து மலைக்கு, சப்பர ஊர்வலம் நடத்திய இளைஞர்கள், அடித்தளமிட்டனர். பின்னர், கோவில் பெயரில் திருக்கோவில் அறப்பணி மன்றம் உருவாக்கப்பட்டு, கட்டுமான பணிகள்
நடந்தன.
கோவில் முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான கிராம மக்களின் கனவு,காலை, 6:00 மணிக்கு நடக்கும் கும்பாபிேஷகத்தால், நனவாகிறது.
நன்றி :தினமலர்
குடும்ப வாழ்க்கை ... ....
மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.
================================
பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.
"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர் சந்தோஷமாகவே இருந்தார்.
ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார்.
"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்."
"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்."
"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே. இது ஒரு நீண்ட பட்டியல்."
"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு. நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை. வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."
"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்."
"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல. நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால். நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு."
"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன். இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது. அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார்.
கைதட்டல் ஓயவே இல்லை.
உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள். சந்தோஷம் உள்ளே உள்ளது. வெளியில் இல்லவே இல்லை....

வெள்ளி, 13 ஜூலை, 2018


என் நண்பர்கள் வட்டம்...

என் நண்பர்கள் வட்டம் சிறியது  ...அவ்வப்பொழுது மனதிற்கு பிடித்த பணியையும் தாண்டி நண்பர்களுடன் பேசுவது மிகச்சொற்பம்..ஈரோட்டில் முகநூலில் கிடைத்த நண்பர் பொக்கிஷம்..மணிகண்டன் .7 வருட நட்பு ...கணிப்பொறியாளர் -பெங்களூர் .சமூக செயல்பாட்டாளர் ....அடிக்கடி ஷ்யாமின் நலனை அதிகம் விசாரிப்பார் ... மாதம் ஒருமுறை  தொலைபேசியில் பேசிக்கொள்வோம் ..வருடம் தவறாமல் .புத்தக கண்காட்சியில்.குழந்தைகளுக்கான நிகழ்வில் சந்தித்து கொள்வோம் ...பேசும்பொழுது கேட்கும் தகவல்களை ..கட்டுரை வடிவில் கொண்டு வந்துவிடுவார் ...எதிர்கால தொழிநுட்பங்கள் ,எதிர்கால பணிகள் எப்படி இருக்கப்போகிறது ...நம்மை எப்படி மாற்றி கொள்ளவேண்டும் ..வாழ்க்கைமுறையை ,எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் பேசி தெரிந்துகொள்வோம் ...இனிவரும் நாட்களில் உங்களுடன் அதை பகிர்ந்துகொள்வதை பெருமைகொள்கிறேன் ...

புதிய நுட்பங்கள் குறித்து நிறையப் பேர் பேசினார்கள். இது குறித்தான விரிவான உரையாடலுக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. படிக்கும் போதும், வேலை தேடும் போதும் நாம் நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்போம். அந்தந்த காலகட்டத்திற்கான புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு ஓரளவுக்காவது தெரியும். வேலை கிடைத்தவுடன் நம்முடைய தேடல் வெகுவாக குறைந்துவிடுகிறது அல்லது கவனம் சிதறுகிறது. கற்றல் சம்மந்தமாக ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? 

நேரம் இல்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாத காரணங்கள். ஒரு நாளைக்கு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் இருக்கிறோம்? யூட்யூப்? டிவிட்டர்? வாட்ஸாப்? அதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது? மேற்சொன்ன எதுவுமே தவறில்லை. எந்நேரமும் படிப்பும் வேலையாகவே சுற்ற முடியுமா? ஆனால் இந்த உலகம் நம்மிடம் புதிது புதிதாக எதையாவது எதிர்பார்த்துக் கொண்டேயிருக்கிறது. வருடம் இருபது லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து பதினைந்து வருட அனுபவமுள்ள ஆள் செய்யக் கூடிய வேலையை வெறும் ஐந்து வருட அனுபவம் கொண்ட ஒருவருக்கு வருடம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து முடித்து விட முடியும். பத்து வருடம் கூடுதல் அனுபவம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே நம்மை எதற்கு அவர்கள் வேலையில் வைத்திருக்க வேண்டும்? நம்முடைய பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது முக்கியம். செலவுக் குறைப்பு என்று வந்தால் ஏழு கழுதை வயதானவர்களைத்தான் முதலில் வெட்டுவார்கள். 

நவீன யுகத்தில் அனுபவத்தை விடவும் அறிவுதான் நம்மைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசும். அதை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. அதிகமில்லை- அடுத்த ஆறு மாதங்களுக்கு தினசரி வெறும் அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும். புதிய ஒன்றைக் கற்றுவிட முடியும். அதைத்தான் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  

முப்பது 'ஹாட் நுட்பங்கள்' என்று குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பட்டியலை தர முடியுமா? என்று கேட்டிருந்தார்கள். வாழைப்பழத்தை உரிக்க சிரமப்படுகிறார்கள். உண்மையில் ஒன்றைத் தேடும் போது குதிரைக்கு கடிவாளமிட்ட மாதிரி அதை மட்டுமே நோக்கி ஓட வேண்டியதில்லை. உதாரணமாக இரண்டாம் உலகப் போர் குறித்தான ஒரு படத்தை பார்க்கிறோம் என்றால், படத்தில் இடம் பெறும் வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள படம் குறித்து மேலும் தேடுகிறோம். வெறுமனே அந்தப் படம் குறித்து மட்டும் தேடினால் என்ன சுவாரசியம் இருக்கிறது. வால் பிடித்த மாதிரி ஒவ்வொன்றாக பிடித்து போய் ஒரு வரலாற்றுச் சித்திரத்தை மனதுக்குள் உருவாக்கிக் கொள்ளும் போதுதான் நம்முடைய தேடல் முடிவடையும். இந்த வால் பிடித்தல் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்லும் க்ரோஷியா உலக வரைபடத்தில் எங்கே இருக்கிறது எனத் துழாவி அதன் அழகான அதிபர் தொடங்கி அவரது கணவர் பொறியியல் படிப்பை முடித்தவர் என்பது வரைக்கும் தேடுவதில்தான் நம்முடைய தேடலுக்கான சுவாரஸ்யமே இருக்கிறது. 

படிப்பிலும் கூட அதுதான் நம்மை மேலும் மேலும் தேட வைக்கும். ஒன்றுமில்லை- தினசரி நாம் பயன்படுத்துகிற விஷயங்களையே எடுத்துக் கொள்வோம். ஜி.பி.எஸ் எப்படிச் செயல்படுகிறது? அவற்றுக்கான நுட்பம் என்ன? இப்படியே போனால் Geo - Spatial நுட்பம் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்வோம். அதில்தான் ஜி.ஐ.எஸ் வருகிறது. செயற்கைக் கோள் வருகிறது. அதெல்லாம் எனக்கு என்ன சம்பந்தம் என்றெல்லாம் எதையும் கேட்க வேண்டியதில்லை. ஷங்கர் படத்தில் செந்தில் சொல்வது போல இன்பர்மேஷன் இஸ் வெல்த்'. நமக்கு அவசியமே இல்லையென்றாலும் நம் பிள்ளைகளுக்கு சொல்லித்தரவாவது உதவும்.

'இந்த கார் இவ்ளோ பெருசு..ஆனா எடை ரொம்ப குறைவு' என்று சாதாரணமாக பேசுவார்கள். ஆனால் அட்வான்ஸ்ட் மெடீரியல் துறை எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பது பற்றி நமக்கு பெரிய அளவுக்குத் தெரியாது. காம்போசிட், நேனோ, பாலிமர், அல்லாய்ஸ் என்று அது கன வேகத்தில் பயணிக்கிறது. எந்திரவியல் சார்ந்து இருப்பவர்கள் இத்தகைய துறைகளைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி வைத்திருந்தால் எப்படியும் அத்தகைய ஆட்களுக்கான தேவை இருக்கும். 

மருத்துவம் சார்ந்த நுட்பங்களில் இருப்பவர்களுக்கு ஜெனோமிக்ஸ், பயோனிக்ஸ் என்றெல்லாம் இருக்கிறது. வரிசையாக அடுக்கலாம். 3 - டி பிரிண்டிங், ஆற்றல் (எனர்ஜி) துறையில் வந்திருக்கும் நவீன விஷயங்கள் என்று ஒவ்வொரு துறையும் அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

'நீ இதெல்லாம் படிச்சு வெச்சு இருக்கியா?' என்று கேட்டால் எல்லாவற்றையும் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் என்ன புதிய அம்சங்கள் வந்திருக்கின்றன என்று ஓரளவுக்கு கவனித்து வைத்திருக்கிறேன். எலெக்ட்ரானிக்ஸ் ஃபார் யூ மாதிரியான தளங்களை மாதம் இரண்டு முறையாவது மேய்ந்துவிடுவேன். இதே மென்பொருள் துறையில் நான் இருக்கப் போவதில்லை. ஆனால் நான்கு பேரிடம் பேசும் போது மேல்மட்ட அளவிலாவது எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்ளவாவது தெரிந்து கொள்கிறேன். 

கார்பொரேட் நிறுவங்களின் பணியில் இருப்பவர்கள் தம்மை கூர் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். கார்பொரேட் யுகத்தில் இருப்பவர்கள் மட்டுமில்லை- பேராசிரியர்கள், ஆசிரியர்களும் இதைப்பற்றியெல்லாம் புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒரு வருடம் இடைவெளி விட்டாலும் இந்த உலகம் பத்து வருடத்துக்கான வளர்ச்சியுடன் முன்னேறி போய்விடும். ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய அறிவு மட்டுமே நமக்காக அடுத்தவர்களிடம் பேசும். அதை ஆயுதமாக பயன்படுத்தும் வரைக்கும்தான் இந்த நவீன யுகத்தில் நம்மால் ஓட முடியும் இல்லையென்றால் உலகம் அதன் போக்கில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. 

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681..

வியாழன், 12 ஜூலை, 2018



மழை ...
கொஞ்சம் நிம்மதி ......
ஆனி மாதம் மழை பெய்திருக்கிறது.
மூன்று  உழவு மழை இருக்கும். எட்டு மாதங்களாக மழையே இல்லை. அணைகள் நிரம்பி இருக்கிறது ..குளங்கள் ஓரளவு நிரம்ப தொடங்கியிருக்கிறது ..இந்த மழையும் இல்லாமல் போயிருந்தால் குடிக்கக் கூட தண்ணீரில்லாமல் தவித்து இருக்க வேண்டும். ஊர் தப்பித்துவிட்டது. காரைக் குட்டை பாதி நிரம்பியிருக்கிறது...

புதன், 11 ஜூலை, 2018

அன்பு நண்பர்  மணிகண்டனின் பதிவு ......

எங்கள் அலுவலகத்தில் கடந்த வருடம் ஒருவரை மேலாளர் ஆக்கினார்கள். மேலிடத்தில் நல்ல செல்வாக்கு அவருக்கு. எப்படியும் பல வருடங்கள் இருப்பார் என்று அவரைப் பார்த்தாலே பம்முகிறவர்கள் அதிகம். கடந்த வாரம் எல்லோரையும் அழைத்து ராஜினாமா செய்துவிட்டதாகச் சொன்னார். பலருக்கும் அதிர்ச்சி. 'உன்னை இங்க நல்லாத்தானய்யா வெச்சு இருந்தாங்க' என்பதுதான் பலருக்குள்ளும் ஓடுகிற கேள்வியாக இருந்தது. 'எனக்கு இங்க எந்தக் குறையுமில்லை' என்று சொல்லிவிட்டு கடந்த சில வருடங்களாக 'டேட்டா அனலிடிக்ஸ், பிக் டேட்டா' ஆகியவற்றை படித்துக் கொண்டிருந்தாராம். புதிய நிறுவனமொன்றில் வாய்ப்பு வந்திருக்கிறது. எட்டிக் குதித்துவிட்டார். 'இப்போ நல்லா இருக்கிறேன் என்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன்' என்று கணக்குப் போட்டிருக்கிறார் மனுஷன். இனி பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு இந்த புதிய நுட்பத்தில் குப்பை கொட்டிவிடுவார். 

மென்பொருள் துறை என்றில்லை பொதுவாகவே இன்றைக்கு பணியில் இருப்பவர்கள் பலருக்கும் 'அடுத்தது என்ன?' என்றோ அல்லது 'எதில் அப்டேட் செய்து கொள்வது' என்றோ குழப்பம் இருக்கும். நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்சொன்ன விஷயம்தான் ஒரு அமர்வில் விவாதப் பொருள்.  படித்துவிட்டு உடனடியாக வேலை மாறுகிறேன் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் கவனிக்கப்படும் தொழில் நுட்பம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை குறித்தான ஆராய்ச்சியைத் தொடங்கி அதில் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள் என்று பேசினார்கள். புதிய நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் கால கட்டத்தில் தினசரி அரை மணி நேரம் ஒதுக்கி வார இறுதிகளில் சற்று அதிகப்படியான நேரத்தை ஒதுக்கினால் ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் தெளிவாகப் படித்துவிட முடியும். அதன் பிறகான ஓராண்டு காலம் நாம் கற்றுக் கொண்டவற்றில் நிபுணர் ஆவதற்கான வேலைகளைச் செய்யலாம். பிறகு அந்த நுட்பம் கோலோச்சும் காலம் வரைக்கும் நமக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கும். அதிகபட்சம் முப்பதாண்டுகள் இந்தத் துறையில் இருப்போமா? இப்படி இரண்டு அல்லது மூன்று முறை பாம்பு சட்டையை உரிப்பது போல உரிக்க வேண்டியிருக்கும். 

துறை மாற வேண்டும் என்று கூட அவசியமில்லை. குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது இந்த சட்டையுரித்தால் மிக அவசியம்.

படிப்பது சரி; எதைப் படிப்பது என்பதுதானே குழப்பமாக இருக்கிறது என்று கேட்கிறவர்களுக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கூகிளே கண்கண்ட தெய்வம்.

கிட்டத்தட்ட முப்பது துறைகள் செம ஹாட் அல்லது என் துக்கினியூண்டு மூளைக்கு அவைதான் தெரிகின்றன. துறைகள் என்றால் முதல் வரிசையில் இருப்பவை- ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், க்ளவுட் மாதிரியான பெருமொத்தமானவை. இப்படி வேறு என்ன துறைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவே ஒன்றிரண்டு மாதங்கள் பிடிக்கும். தெரிந்து கொள்வது என்றால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஐந்து நிமிடங்கள் பேசுகிற அளவுக்காவது நமக்கு தெரிய வேண்டும். அந்தப் புரிதல் உருவாகிவிட்டால் இவற்றில் நமக்கு எது பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்துவிடலாம். 

வெறும் துறை சார்ந்த அறிவு மட்டும் போதாது. உதாரணமாக வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகின்றன. கூகிள் அசிஸ்டென்ட் மாதிரி. இனி வரும் காலத்தில் பெரும்பாலான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை அவைதான் பார்த்துக் கொள்ளும். நாம் ஏர்டெல்லுக்கோ அல்லது வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கோ அழைத்து கேள்வி கேட்டால் அவைதான் பதில் சொல்லும். மேம்போக்காக பார்த்தால் எளிமையாகத் தெரியும். இதில் எவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒரு குரல் இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒரே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்கக் கூடும். இதை உள்வாங்கி, வகைப்படுத்தி, பதில் தேடி எடுத்து, அவர்களுக்கு பதில் கொடுக்க- Interfaces  chat bots, Natural Language Processing இப்படி நிறைய இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக வல்லுநர் ஆக முடியும். அவற்றுக்கான டூல்கள் இருக்கின்றன. 

இப்படித்தான் கிணறு தோண்ட வேண்டும். இதே போல இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மொபைல் நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. சி, சி++ மட்டும்தான் மென்பொருள் என்று நினைக்கிறவர்கள்தான் 'இனி ஐ.டி அவ்வளவுதான்' என்று நம்புகிறார்கள். உண்மையில் இனிமேல்தான் ஐ.டியின் அசுரத்தனமான வளர்ச்சி இருக்கப் போகிறது. 

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளருக்கு ஐ.டி ஆட்கள் மீது என்ன வெறுப்போ தெரியாது- எப்பொழுது பேசினாலும் 'இன்னொரு பத்து வருஷம்..ஐ.டி அவ்வளவுதான் இல்லையா' என்பார். இத்தகைய அரைவேக்காட்டு ஆட்களைப் பார்த்தால் செம எரிச்சலாக இருக்கும். இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். வங்கியில் தொடங்கி பள்ளிக்கூடம் வரைக்கும் பணியாளர்களே தேவையில்லாமல் அனைத்துமே தானியங்கி(ஆட்டோமேஷன்) ஆகும் காலம் வரலாம். ஆனால் இவற்றையெல்லாம் வடிவமைக்க, நிரல் எழுத என மென்பொருள் துறையில் ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். எழுதி வைத்துக் கொள்ளலாம்- மென்பொருள் துறை எந்தக் காலத்திலும் அழியாது. அது தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். இதில் வேலை வாங்க வேண்டுமென்றால், தொடர வேண்டுமென்றால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான்.