காலத்தால் கரையாத கீதம் ....மக்கள் மனதில் மாமன்னர் ..
நேற்று அய்யா ..கடவூர் மாமன்னர் K K G .முத்தையா அவர்களின் இறப்பு செய்த கேட்டபின் ...கால்கள் நிலையில் இல்ல ...மனதில் ஒரு பாரம் ..கண்களில் கொஞ்சம் நீர்கோர்த்துக்கொண்டது ...நானும் ,பண்பாட்டு கழக மாநில செயல் தலைவர் .அய்யா .முருகவேல் ..உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் .அருட்செல்வம் ..காலையில் கடவூரை நோக்கி பயணித்தோம் ....
கடவூர் மக்கள் மனதில் ,மாசற்ற பொன்னே ,
அள்ளிக்கொடுத்த வள்ளலே ,
எங்கு காண்போம் ...உந்தன் திருமுகத்தை
எப்படி ஆற்றுப்படுத்துவோம் ..
கண்ணீரால் நனைகின்றோம் ..
காமராஜரின் அருமை நண்பரே ..
காமராசரால் கடவூரின் முத்தே என்றைழைக்கப்பட்ட எங்கள் சொத்தே
கக்கனின் உற்ற தோழரே ..சமூகத்திற்காக உழைத்திட்ட பெரியாரால்
உச்சரிப்பில் மகனே என்றழைக்கப்பட்ட மாந்தரே
எத்தனையோ பணிகள்
எங்கள் நெஞ்சக் கண்ணில் சொல்லி அழுகிறது ..
கடவூர் சட்டமன்றத்தின் நாயகராகவும்
மருங்காபுரி மாசற்ற மனிதப் புனிதராகவும்
ஐந்து முறை இருந்தீர்கள் ..ஐயமாக இருக்கிறது ...
ஈடில்லாப் பணிகள் ...
இலங்கையிலும் உந்தன் கால்கள் பதித்துவிட்டாய்
ஆரம்பபள்ளிக்காக ஐந்து ஏக்கர் நிலம் கொடுத்தாய்
அது மட்டுமல்ல
உயர்நிலைப்பள்ளிக்காக ஏழு ஏக்கர் நிலம் கொடுத்தாய்
உங்களது உயரிய குணத்தால்
பொன்னணி நீர்தேக்கத்திற்காக
270 ஏக்கர் நிலம் அள்ளிக்கொடுத்தாய்
நாங்கள் தண்ணீரை குடிக்கிறோம் ..
அப்பொழுதும் உந்தன் மனம் அடங்கவில்லை
360 ஏக்கரை முழுசாக கொடுத்திட்ட
ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராகவும்
முத்தே ..எங்கள் கடவூரின் சொத்தோ
தண்ணீரை கொடுத்து கண்ணீரை வரவழைத்த
இருபத்தைந்தாண்டு நாயகரே ..
இன்னும் ஒரு முறை வாராதோ ...
எங்களது நெஞ்சில் ஈரம் ..இன்னும் மறையவில்லை ..
எத்தனையோ நேரங்கள் எத்தனையோ காலங்கள் ..
இறப்பே ..உனக்கு இறப்பு வராதோ ..மரணமே ..
எங்களது மண்ணின் மைந்தனை கொண்டு செல்ல மரணமே ..
எப்படி துணிவு வந்தது ..கே கே ஜி ..தனிமனிதரல்ல ..
எங்களது மனதில் குடிகொண்டுள்ள கடவுள் ..
எங்களது மக்களின் நெஞ்சத்தில் மறையா உருவம் ..மறைந்த விட்டது உருவம் ..மறையாது அவரின் நினைவு கீதம் ..கடவூர் நெஞ்சங்களின் சோகம் ..கடந்துவிட்டது கடவூர் ..
மக்களின் மனதில் கரைந்து விட்டது ......
ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் கே.கே.ஜி.முத்தையா காலமானார்..!
Saturday, 07 Apr, 8.39 am
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கடவூர் ஜமீன் கே.கே.ஜி.முத்தையா இயற்கை எய்தினார். ஏராளமானோர் அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
1957-ம் ஆண்டு பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் தேர்தலில் நிற்க வைக்கப்பட்டு முதன்முறையாக எம்.எல்.ஏ-வானார் முத்தையா. கடவூர் ஜமீனான அவர், அதன்பிறகு 1962-ம் பீரியடிலும் அதே பஞ்சப்பட்டி தொகுதியில் காமராஜரால் நிற்க வைக்கப்பட்டு வெற்றிவாகை சூடினார். அதன்பிறகு,1967-ம் சட்டமன்றத் தேர்தலில் கடவூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து அப்போது தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் தி.மு.க கட்சி ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும், கலைஞரின் நெருங்கிய நண்பருமான அன்பில் தர்மலிங்கம்.
அதன்பிறகு,1971-ம் ஆண்டில் அதே கடவூர் தொகுதியில் நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல்,1977-ம் ஆண்டில் கடவூரில் இவரைத் தோற்கடிக்க, அப்போதைய ஆளுங்கட்சியினரால் கடவூர் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருந்தாலும், அருகாமை தொகுதியான மருங்காபுரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களம் கண்டு ஐந்தாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார்.
அதன்பிறகு, பல்வேறு உள்ளாட்சி மன்ற பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். மூப்பனார் காங்கிரஸிலிருந்து பிரிந்து த.மா.கா கட்சியை ஆரம்பித்தபோது, கருப்பையா அந்தக் கட்சியில் ஐக்கியமானார்.
இவர் தந்தை பெரியார், காமராஜர், ராஜாஜி, பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர், கலைஞர், மூப்பனார், மா.பொ.சி, சிவாஜி கணேசன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரோடு நெருங்கிப் பழகியர். இவர் கரூர் மாவட்டத்தில் அசைக்க முடியாத தனி செல்வாக்கு உடையவராக இருந்து வந்தார். இவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டால், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அந்தத் தொகுதிவாசிகள் யாரும் இவரை எதிர்த்துப் போட்டியிட அஞ்சுவார்கள்.
அதனால், அவரை எதிர்த்து வேட்பாளர்களை வெளி மாவட்டங்களிலிருந்துதான் மாற்றுக்கட்சியினர் தேடிப் பிடித்து நிறுத்துவார்கள். அந்த அளவுக்குச் செல்வாக்கானவர். கடவூர் ஜமீன் என்றாலும், எல்லோரிடமும் இறங்கிப் பழகுவார். அதனாலேயே, அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்" என்கிறார்கள் கடவூர்வாசிகள். வயோதிகம் காரணமாக அவர் இயற்கை எய்தினார். இவருக்கு கார்த்திக், தொண்டைமான் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நன்றி ...தகவல் ..திருப்பதி தேவராஜன் ...மாவத்தூர் ..கடவூர் ...
மன்னரின் அரசியல் வாழ்க்கை பற்றி கேட்டவர்களுக்காக இதை பதிவு செய்கிறோம்.
#கடவூர் ஜமின்தார் ஐயாகே.கே.ஜி முத்தையா அவர்களின் அரசியிலில் அனுபவம் பல வற்றில் இன்று உங்களுக்காக ஒன்று
ஜமின் ஐயா.அவரகள் #நான்காம்முறையாக சட்சபை தேர்தலில் திரு #அன்பில்தர்மலிங்கம் (அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாட்டனார்)அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்..
யராலும் வெல்லமுடியாத காரணத்தினால் கிருஷ்ணராயபுரம் தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்படுகிறது சில காரணங்களைக் காட்டி...
நான் எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிப்பேன் என்பதைக் காட்ட மக்கள் மன்னர் மருங்காபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அப்போது #மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற அப்போதைய முதல்வர #எம்.ஜி.ஆர் அவர்கள் மருங்காபுரி தொகுதி எல்லைஆரம்பிக்குமிடத்திலிருந்து தொகுதியின் எல்லை முடியும் வரை தன் காரிலிருக்கும் கட்சி கொடியை கழட்டிவிட சொன்னாராம்.
மருங்காபுரியில் கடவூராருக்கு எதிராக நான் பிரச்சாரம் பண்ணியதாக இருக்ககூடாது
அதனால் கொடியை கழட்டிவிடுங்கள் என்று சொல்லி மருங்காபுரி தொகுதியைத்தாண்டி செனறுவிட்டாராம்.
அந்த தேர்தலில் ஐயா.முத்தையா அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டார்கள்.
மாற்றுக் கட்சிகாரர்கள் மதிக்கும்அளவிற்கு அரசியலில் இடம் பெற்றவர் தான் நம் மன்னர்..
நன்றி ...தகவல் ..செல்வம் திண்டுக்கல் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக