ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

இன்றைய ஞாயிறு ...

நேற்றும் ..இன்றும் ...நாள் போனதே தெரியவில்லை ..வெள்ளி இரவு  கோவையில் இருந்து சாய் நந்தா கிஷோர் (வயது -4 )அவர்கள் வந்தார்கள் ..வந்ததும் ..பெரியப்பா ..பெரியப்பா ..என்று போனில் பேசியே கேட்டுக்கொண்டு இருந்தாலும் ..நேரில் வந்தவுடன் ..பள்ளியில் நடந்த நிகழ்வுகள் ..பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் அவரின் நடனம்...நாடகங்கள் ...அவரின் நண்பர்கள் ..வகுப்பு தோழிகள் ,வகுப்பு ஆசிரியர்கள் ..ஒன்று விடாமல் கலந்துரையாடியது  .இரவு நேரம் போனதே தெரியவில்லை .....தமிழ் புத்தாண்டு காலை நேரத்தில் கிளம்பி பழனி எம்பெருமான் தமிழ்  முருக கடவுளை பார்க்க சென்றுவிட்டார் ...பழனியில் நடந்த நிகழ்வுகள் ...குதிரை வண்டியில் சென்றது ..ரோப் காரில் சென்றது ...மலையில் இருந்த கோவில் சிற்பங்களில் இருக்கும் ..சிங்கம் ..மயில் ,குரங்கு ..மாடுகள் ,,அவர் பார்த்த சிலைகளை அவர்கள் மொழியில் இனிக்க ..இனிக்க சொன்னது ..அதை ஆர்வத்துடன் நான் கேட்டது ...அவருக்கு மற்றட்ட மகிழ்ச்சி ..தன் தாத்தாவுடன் ,பாட்டியுடன் ,,மழலை மொழியில் கலந்துரையாடியது இரண்டு நாள் போனது தெரியவில்லை ...வீட்டில் இருந்த நேரத்தில் ..அலமாரியில் இருக்கும் ..புத்தகங்களை ஒன்று விடாமல் எடுத்து பார்த்து ..அவரின் தகந்த மழலை மொழி கிடைத்ததா என்று பார்த்தார் ...அதில் அறிவியல் அறிஞரின் படம் போட்ட புத்தகத்தை திரும்ப ..திரும்ப பார்த்துக்கொண்டிருந்தார் ...என்ன புரிந்தது என்று நான் கேட்கவில்லை ...பழனியில் வாங்கி வந்த ..லாரி ,ஜேசிபி ..வாகனங்களை அக்கு வேறாக ..பிரித்து மறுபடியும் இணைத்துக்கொண்டிருந்தார் ...அதற்குள் அவர்கள் அம்மா வேறு ..ஏன்டா வாகனங்களை பிரிச்சு மேஞ்சுட்டு இருக்க என்று கேட்டார்கள் ..எப்படி ஒரு வாகனத்தை எப்படி தயார் செய்வது என்று எப்படி என்று கற்றுக்கொள்கிறேன் என்றார் ...அம்மா மறுபேச்சு பேசவில்லை ...அவரிடம் ..
..அவர் வாங்கிவந்த பிள்ளங்ககுழல் மூலம் அவருக்கு தெரிந்த பாடலை வாசித்து கொண்டும் தன நண்பர்கள் வட்டத்தில் திறமையை காண்பித்து கொண்டிருந்தார் ..ஒரு வேலை இசை ஞானி போல் வருவாரோ ..சாய் நந்த கிஷோர் தேனீ காரா மண்ணில் பிறந்தவர் ..இயற்கையிலே  இசை ஆர்வம் இருக்கும்போல ..இன்று மாலை கோவை செல்வதற்கு கிளம்பும்போது செல்வதற்கு மனது இல்லை ..இருந்தாலும் அவரின் குரல் ஓசை கொஞ்சம் தடுமாறத்தான் செய்தது ..எனக்கும் கூட ....மழலைகளின் கூட இருப்பது வாழ்வின் வரம் ..
.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...பகிரளி எண் 9944066681...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக