வியாழன், 31 ஆகஸ்ட், 2017

திரு .செந்தில் அப்பையன் ...(பொறியாளர்)

De Nora ...இத்தாலியின் புகழ்பெற்ற நிறுவனம் ..நீர்மேலாணமையில் திறம்பட பணியாற்ற கூடிய நிறுவனம் ..அதன் கிளைகள் உலக அளவில் பணிகளையை மேற்கொள்ளும்  நிறுவனம் .தேசிய அளவில் விற்பனை மேலாளர் ..(NSM )என்பது எவ்வளவு கடினமான பணி என்பது நன்றாக அறிவேன் ....எப்படி நேர மேலாண்மையை கடைபிடிக்கறீர்கள் ..? பார்த்து வியந்துஇருக்கிறேன் ..

VA tech வெப் ...துணை மேலாளராகவும் ....
BASF INDIA LTD --மண்டல மேலாளர் ராகவும்
NALCO CHEMICAL COMPANY -பயன்பாட்டு பொறியாளராக

படிப்படியாக அறிவுக்கூர்மையை பயன்படுத்தி இந்த உயர்நத பதவிக்கு  வந்த உள்ளது ..அதுவும் நம் கம்பள சமுதாயத்தில் கல்வியில் முன்னேற்றம் இல்லாத காலகட்டத்தில் வளர்ந்து வந்துள்ளது ..எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி...அவர்களின் தாய்தந்தை தன்னை சுற்றியிருக்கும் நம் சொந்தங்களை..மனமார வாழ்த்துகிறேன் ..

என்னதான் கல்வியில் வெற்றிபெற்றாலும் ,வெற்றிபெற்று வேலையில் சேர்ந்தபிறகு ...அடுத்தகட்டம் திருமணவாழ்வில்  செந்தில் அப்பையன் திருமதி .அனுராதா அவர்களின் மனஉறுதியோடு ...பணியில் ஊக்கமும் ஆக்கமும் தந்து ,அழகான பெண்செல்வ குழந்தைசெல்வங்களை அளித்து ..படிப்படியாக வளர்ந்து ..தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களையும் ,நம் சமுதாய சொந்தங்களுக்கு கல்வியில் ,வேலைவாய்ப்பில் ..நம் மற்ற சொந்தங்களுடன் சேர்ந்து ..பல உதவிகளை செய்து கொண்டுள்ளார் என்று அறியும் போது ..கம்பள சமுதாயத்தை கண்டிப்பாக முன்னேற்ற வளர்ச்சிக்கு கொண்டுவந்துவிடலாம் ..அதற்கு .கோவை ,திருப்பூர், சேலம் கரூர் ,திண்டுக்கல் ,தூத்துக்குடி ,தேனீ , சொந்தங்களுடன் நம் கம்பள விருட்சம் அறக்கட்டளை யில் உள்ள ..நம் இளைய நன்கு கல்வியில் முன்னேறி பணிபுரிந்து கொண்டு இருக்கும் சொந்தங்களுடன் முன்னேறுவோம் ..முன்னேற்றுவோம் ...நன்றி ..வாழ்த்துக்கள் ..எப்பொழுதும் ரமணமஹ்ரிஷி அவர்களின் ஆசியுடன் ..உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ..

குறிப்பு ......நம் குழுவில் மற்ற சொந்தங்களையும் உங்களுக்கு நேரம் இருக்கும்போது ...புதிதாக இருக்கும் சொந்தங்களை தெரிந்து கொள்வோம் ..

உங்கள் பகுதியில் ...நம் சொந்தங்களின் விழாக்கள் ,திருமண நிகழ்வுகள் etc எது நடந்தாலும் நம் குழுவில் தெரிவிக்கவும் ...

புதன், 30 ஆகஸ்ட், 2017

செந்தில் அப்பையன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .....என் பெற்றோர்கள் ,என் குடும்பம் ,அலுவலக பணிகள்,நம் சமுதாய பணிகள் குறித்து அழகாக நம் சொந்தங்களுக்கு எடுத்துரைத்தீர்கள் ,மிக்க நன்றி ..நம் முந்தைய தலைமுறை படிக்கவில்லை ..நெற்றிவியர்வை சிந்தி நம்மை படிக்கவைத்துஇருக்கிறார்கள் ...ஓரளவு கல்வியில் ,வேலைவாய்ப்பில் திக்கி ,திணறி முன்னேறிக்கொண்டு இருக்கிறோம் ..நம் வருங்கால தலைமுறையைக்கு சொத்துக்களைவிட ,நல்ல கல்வி ,நம் பாரம்பரிய வாழ்க்கைமுறை ,நம் கண்முன்னே புயல்போல இருக்கும் சவால்களை எதிர்கொண்டு வருங்கால நம் குழந்தைச்செல்வங்களுக்கு கல்வி ஒன்று தான் முன்னேற்றத்துக்கு வழிகாட்டி என்று சொல்லவேண்டியது நம் சமுதாய கடமை ...இன்னும் எனக்கு அறிமுகம் இல்லாத சொந்தங்களை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு மிக்க நன்றி .நம் சமுதாய மக்களுக்கு என் சேவையை செய்ய ஆவலோடு உள்ளேன் ..என் துறையை சார்ந்த பணிகளால் நம் சொந்தகளுக்கு உதவி செய்ய காத்துகொண்டுஇருக்கிறேன் .

குறிப்பு :இந்த 20 வருட பணியில் இருக்கும்போது ...எல்லா சமுதாய மக்கள் எப்படி முன்னேறி ,முன்னேற்றி இருக்கிறார்கள் ...இது எப்படி சாத்தியம் ஆனது ..என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் ...கடந்த 5 வருடங்களாகத்தான் நம் சமுதாய முனேற்றதற்கான விதைகைளை விதைத்து இருக்கிறேன் ..இனி விருட்சங்களாக வளரும் ..

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

எனக்கு நானே... கேட்டுக்கொண்ட  கேள்வி பதில்கள்......!!!!!!

மனைவியைத் தவிர வேறு யாரிடமாவது "ஐ லவ் யூ" என சொல்லி இருக்கிறீர்களா?
 
சொல்ல ஆசைப்பட்டிருக்கிறேன். ‘திருமணத்திற்கு முன்’ என்று முன்னொட்டாகச் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும்....மனைவி என்ற சொல் என்னை பொருத்தவரையில் காற்றில் கலந்த உயிர் மூச்சு ....

Any proposal after marriage?
 
ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள்.துணை யார் என்று இதுநாள் முடிய பார்க்கவில்லை...
நண்பர்களுக்கு பணம் தந்து திரும்பக்கிடைக்காமல் போனதுண்டா? அந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்/செய்தீர்கள்?
அதை ஏன் கேட்கிறீர்கள்? நிறைய முறை. பிரச்சினை என்னவென்றால் நண்பர்களிடம்  வாங்கித் தருவேன். திரும்பி வரவில்லையென்றால் வரவேற்பறையில் அமர்ந்து ‘அப்போ அவ்வளவு வாங்கிக் கொடுத்தான். இப்போ இவ்வளவு வாங்கிக் கொடுத்தான்’ என்று சொல்லிக் காட்டுவார்கள் . யாரிடமும் திருப்பித் தரச் சொல்லிக் கேட்டதில்லை. இப்பொழுதெல்லாம் யாராவது கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லிவிடுகிறேன். இதனால் என்னிடம் தொடர்பையே கத்தரித்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். 
It might be the question u have faced/answered n number of times. But I think there is no harm in asking it again, What is the 'trigger point ' for infinite number social activities that u r doing today?
 
அரசு மருத்துவமனைகளின் உள்நோயாளிகள் பிரிவுகளிலும், பெருமருத்துவமனைகளில் ஐசியூக்களுக்கு முன்பாகவும் நிற்கும் போது நம்மையும் மீறிய ஒரு பயம் வந்து ஒட்டிக் கொள்ளும். எவ்வளவு தைரியமான மனிதராக இருந்தாலும் மருத்துவமனைக்குள் செல்லும் போது வருகிற பதற்றமும் நடுக்கமும் கொடூரமானது. மருத்துவமனைகளில் இருக்கும் போதெல்லாம் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தாண்டி என்னவோ இருக்கிறது என்று தோன்றியிருக்கிறது. அதுதான் காரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். துல்லியமாக ‘இதுதான்’ என்று சொல்லத் தெரியவில்லை.
ஓரே பாடலை திரும்பத்திரும்ப கேட்பது, ஒரு புத்தகத்தை நெக்குருகி பலமுறை வாசிப்பது, சுயம் மறந்து பல மணி நேரங்கள் சதுரங்கம் ஆடுவது. இப்படி ஏதேனும் பித்த நிலை அனுபவம்,  ஆசை உண்டா?
வாழ்க்கையில் இயல்பாக இருந்தாலே அனுபவிக்க எவ்வளவோ இருக்கின்றன. எதற்கு பித்த நிலை? அளவுதான் அழகு.விடுமுறை தினம் என்றால் பயணங்களை மேற்கொள்கிறேன் ..பல தரப்பட்ட மனிதர்களை பார்க்கிறேன் ....அடடா..டா ..இந்தமனிதர்களையெல்லாம் பார்க்கமுடியாமல் இருந்துஇருக்குறேமோ...ஆச்சரியப்பட்டுஇருக்கிறேன் ...பயணங்கள் தொடரும் ...
கஷ்டமான சூழ்நிலைகளில்தனிமையை எப்படி உணர்வீர்கள் ?

2013 பிறகு எதிர்கொண்ட சூழ்நிலைகளில் எனக்கு பிடித்த ஷ்யாமின் பிறந்த குழந்தையாக(19-09-2008 )இருந்தது முதல் நான் எடுத்துவைத்த புகைப்படங்கள் தான் ..மனநிறைவு. என் மனநிறைவுடன் ,அதிக மனவலிமையுடன் எதிர்கொண்டேன் ...போக ..போக ..எந்த சூழ்நிலை வந்தாலும் எதிர்கொள்ளப்பக்குவப்பட்டுவிட்டேன்...வாழ்க்கையை அழகாக புன்சிரிப்புடன் வாழ்க்கைப்பயணத்தை தொடர்கிறேன் ..
கோவையில் இருந்து உடுமலை பேருந்தில் பயணத்தின் போது சகபயணி பேசுவீர்களா ?
.
இந்தவாரம் கோவையில்  இருந்து வரும் போது அருகில் ஒரு ஆந்திரா   பையன் அமர்ந்திருந்தான். தனது அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ‘நீ எந்த மாநிலம்’ என்றேன். ஆந்திரா ’ என்றான். புதிய மனிதர்களிடம் பேசும் போது நம் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்லிவிட்டு சில கணங்கள் எதையும் செய்யாமல் ஓர் இடைவெளியைக் கொடுத்தால் நம்முடைய அடுத்த கேள்விக்குத் தயாராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். உடனடியாக தாம் முன்பு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தால் நம்மிடம் பேச்சைத் தொடர விருப்பமில்லை என்று ஒரு கணக்கு. யாராக இருந்தாலும் தயங்காமல் முதல் கேள்வியைக் கேட்டுவிடுவேன். அவன் இடைவெளி கொடுத்தான். ஐசிஐசிஐ வங்கியில் வேலை செய்வதிலிருந்து தனது காதலியைப் பார்க்க அவன் சென்னை சென்றுவிட்டுத் திரும்புவது வரை நிறையப் பேசினோம்.
உங்கள் பழைய கட்டுரைகளில் பிறரை பற்றி குறை கூறுவதாக நிறைய இருக்கும், கிட்டத்தட்ட டைரியில் குமுறுவது போல, இப்பொழுது அந்த மாதிரி கட்டுரைகள் வருவதில்லை. அதை நீங்கள் உணர்கிறீர்களா.
 
திருந்திவிட்டேனா?
கடைசியாக மகனுடன் பார்த்த திரைப்படம் ..?

எனக்கும்  என் ஷ்யாமுக்கும் பிடித்த திரையரங்கம் ...Brookfield ....தான் ...

காக்க முட்டை ...எந்த தொந்தரவும் இல்லாமல் என்னுடன் அமர்ந்து கேள்விகேட்டு கொண்டு ..நான் பதில் அளித்துக்கொண்டு பார்த்த படம் ..மனநிறைவான திரைப்படம் ..ஷ்யாமை முதன் முதலாக தனியாக அழைத்துச்சென்று பார்த்த படம் விஜயின் ..துப்பாக்கி படம் .. ..படத்தை பார்த்ததைவிட ஷியாமைதான் அதிகம் பார்த்து கொண்டு இருந்தேன் .ஒரு ஆக்ஷன் திரைப்படம் பார்த்ததுபோன்று திருப்தி ..ஆனால் முன்னால் உட்கார்ந்து பார்த்தவரின் பின்சீட்டில் உதைத்த உதை அவரின் முதுகு வழித்து இருக்கும் ...திரும்பி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை ..புன்சிரிப்புடன் படம் பார்த்துவிட்டு எழுந்துஇருக்கும் போது ...நீங்கள் கொடுத்துவைத்தவர் ..ஷ்யாமின் தலையை கோதிவிட்டு,அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்தங்கம் புன்சிரிப்புடன் சென்றார் ..
எழுத்தாளர் சிவா வா ? அறக்கட்டளை சிவா வா ?.உங்களின் இதயம் ,மூச்சு காற்று ..எது ?
 
  அறக்கட்டளை தான் Trust ...தான் ....ஆனால் எழுத்துதானே எல்லாவற்றுக்கும் அடிப்படை.
தலைமுடி வளரனும்னு ஏதாவது ட்ரை பண்ணிருக்கீங்களா?
 
கரடி ரத்தத்தைத் தேய்த்தால் முடி வளரும் என்றார்கள். கொசு ரத்தம் என்றாலாவது முயற்சித்துப் பார்த்திருப்பேன்.
 
இந்த மாதிரி கேள்விகள் கேட்டு...நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொண்டால் ..நாளை எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் பக்குவப்பட்டு பதில் அளிப்பதற்கு வாழ்க்கையில் ஏதுவாக இருக்கும்....

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

சுதந்திர போராட்ட வீரருக்கு அங்கீகாரம்: மணிமண்டபம் அமைக்க உறுதி

உடுமலை : 'சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய, தளி பாளையக்காரர்கள் வரலாற்றை வெளிப்படுத்த, மணி மண்டபம் கட்டுதல் உட்பட பணிகள் மேற்கொள்ளப்படும்,' என உறுதியளிக்கப்பட்டுள்ளதால், வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்டு, எத்தலப்பர் எனப்படும் பாளையக்காரர்கள் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில், முக்கிய பங்காற்றிய, பாளையக்காரர் வரலாறு, பல ஆண்டுகளாக வெளிப்படாமல், இருந்தது. பின்னர், பலரது முயற்சியால், எத்தலப்பரால், துாக்கிலிடப்பட்ட, ஆங்கிலேய வீரனின் கல்லறை, ஜல்லிபட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.

திருமூர்த்தி அணை கட்டுமான பணிகளின் போது, அங்கு, தளி பாளையக்காரர்கள் சிலை கண்டறியப்பட்டு, அவை, காண்டூர் கால்வாய் கரையில், வைத்து பராமரிக்கப்படுகிறது. தளிஞ்சி உட்பட மலைகிராமங்களிலும், பாளையக்காரர்கள் குறித்த சில ஆதாரங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, உடுமலை பகுதியின் வரலாற்றில், முக்கிய பங்கு வகிக்கும் எத்தலப்பருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமூர்த்தி

மலையில், கால்நடைத்துறை அமைச்சர் ராதா

கிருஷ்ணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது, எத்தலப்பருக்கு, மணி மண்டபம் கட்டுவது குறித்த, கோரிக்கை மனு, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம், கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, காண்டூர் கால்வாய் கரையில், பராமரிக்கப்படும் எத்தலப்பர் வம்சாவாளியினர் சிலைகளை, அமைச்சர், திருப்பூர் கலெக்டர் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, வரலாற்று ஆய்வாளர்கள், தளி பாளையப்பட்டு குறித்த வரலாற்றை குழுவினருக்கு விளக்கமளித்தனர். இதையடுத்து, எத்தலப்பருக்கு மணி மண்டபம், நினைவு துாண் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.

நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் வகையில், அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதால், வரலாற்று ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி : தினமலர் ....






ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017


எவ்வளவுநாள் பிரிஞ்சு இருக்கோம்றது முக்கியமில்ல,
யார பிரிஞ்சு இருக்கோம்றதுதான் முக்கியம்.
உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் பதினேழாம் கட்ட நேர்காணல் இன்று மதியம் ( 27.08.2017 ஞாயிறன்று)

தளி எதுலப்ப மன்னரின் வரலாற்று நிகழ்வுகளை அறியும் பொருட்டு தளி ஜல்லிபட்டி லிங்கமாவூர் வசித்துவரும் திரு .திருவேங்கடம் (70 வயது )அவர்களை சந்தித்து எத்தலப்ப மன்னரின் தகவல்களை கேட்டு அறிந்தோம் .
எத்தலப்ப மன்னர் ஆட்சி முறையில் ..நீர் பாசனம் துறையில் சிறந்த விளங்கிய போடிதாத்தா குளங்கள் அமைத்து தன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமும் ,அனைத்து சமுதாய மக்களுக்கு நீர்மேலாண்மை மூலம் சிறப்பாக ஆட்சி செய்தமுறையை  எங்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

ஏர்மமா நாயக்கர் கால்நடை பராமரிப்பு துறையில் சிறந்த விளங்கியதற்கான கூடுதல் தகவல்களையும் தெரிவித்தார் ..மேய்த்தல் தொழில் ஈடுபட்ட ஏர்மா நாயக்கர் ,மாடுகளும் ,ஆடுகளும் ,மேயும் பொழுது ஆபத்தான விலங்குகள் கூட தொந்தரவு இல்லாமல் நகர்ந்து செல்லுமாம் ..எப்படி சாத்தியப்பட்டது என்று தெரியவில்லை மலைமேல் உள்ள இடங்களில் பட்டிகள் அமைத்து பராமரித்து வந்திருக்கிறாரக்ள் ..இதற்கு மலைமேல் உள்ள முதுவர்கள் எர்ரமா நாயக்கருக்கு பெரும் உதவி செய்து இருக்கிறார்கள் .

 உடுமலை வரலாற்று ஆய்வுக் குழுவின் சிவகுமார் மூலம்  திருவேங்கடம் அவர்களிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.நேர்காணலை பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் சிவகுமார்ஆகியோர் செய்திருந்தனர்.

பதிவுகள் - . ஆதி . அருட்செல்வன்🌿🌿🌿💐💐💐



சனி, 26 ஆகஸ்ட், 2017

உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் நான்காம் கட்ட நேர்காணல் கடந்த 23.08.2015 ஞாயிறன்று தேனியில் நீதியரசர் தங்கராசு அவர்களிடம் நடத்தப்பட்டது.
இவர் தளி எத்தலப்பனைப் பற்றி முனைவர் முத்தையா அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் செய்வதாக அறிந்தோம்.
அதன்படி உடுமலை வரலாற்று ஆய்வுக்குழுவின் சிவகுமார் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.
நேர்காணலை பேராசிரியர் கண்டிமுத்து மற்றும் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
நீதியரசர் எத்தலப்ப மன்னர் குறித்தும் அவரின் வீர வரலாறு குறித்தான பதிவுகளை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி எத்தலப்பன் வரலாற்றினை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது உரையில் இவ்வாறுதான் அவர் இருந்திருக்க வேண்டும் என்றும் ஒரு ஆங்கிலேயனைத் தூக்கிலிட்ட காரணத்தினாலேயே அவரது வரலாறு முற்றும் முழுதுமாகதிட்டமிட்டு மறைக்கப்பட்டதைத் தெளிவுபடுத்தினார். எத்தலபபன் பற்றிய விரிவான தகவல்களை தாம் வெளிக்கொணருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் 20.09.2015 உடுமலை வரலாற்றுத் திருவிழா நிகழ்வில் கலந்து கொள்ளவும் உறுதி அளித்தார்.
பதிவுகள் - . ஆதி . அருட்செல்வன்

✍✍✍ராஜகம்பள சமுதாய இளைஞர்களின்   எழுச்சி 💪💪💪
மாற்று சமுதாயத்தவர்கள் தங்களது சமுதாயத்தின் அடையாளத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தார்கள் ஆதலால் தான் 8 மாவட்டத்தில் வாழும் ஒரு சமுதாயத்தவரை எல்லா மாவட்டங்களுக்கும் ,4 மாவட்டங்களில் உள்ள ஒரு சமுதாயத்தை 32 மாவட்டங்களுக்கும் தெரிகிறது என்று சொன்னால் அவர்கள் அவர்களின் சமுதாயமக்கள் ஒற்றுமை பலத்தை  இருப்பை தெரியப்படுத்திக் கொண்டார்கள் அதோடுமட்டுமல்லாமல் தங்களை விளம்பரபடுத்தாமல் தன் சமுதாயத்தை  விளம்பரப்படுத்திக்கொண்டார்கள் வெற்றியும் பெற்றார்கள் ஆகையால் நம்மவர்கள் அதை செய்யவேண்டும் என்பது எனது விருப்பம்.மீண்டும் ஒருமுறை இங்கு அழுத்தம் திருத்தமாக பதிகிறேன் பெயர் பெறவேண்டும் ,புகழ் பெற வேண்டும் என்ற ஆசை படமால் சமுதாயபணி செய்யவும்
.நம் மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும்.போது நாமும் வன்முறையில் இறங்க முடியாது இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது ??? . இது ஒன்றும் மன்னராட்சி காலம் கிடையாது வெட்டுவோம் குத்துவோம் என்று வீர வசனம் பேசிவிட்டு செய்ய . எதற்கு தீனி போடுகிறோமோ அதுதான் வளரும் வன்முறைக்கு தீனி போட்டால் அது பெரிய வன்முறையாக வளரும் ,அமைதிக்கு தீனி போட்டால் அமைதி பெரும் விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும்.ஆகையால் நம் சமுதாயத்திற்கு எது உகந்தது என்று நாம் தீர்மானிக்கவேண்டும் ஆனால் சூழ்நிலை அடுத்தவர்கள் தீர்மானிக்கின்ற நிலை இப்போது நிலவுகிறது. காலத்தின் நகர்வுகளுக்கு ஏற்ப நமது சமுதாயத்தவர்களை அறிவுள்ளவர்களாக மாற்ற முடியும் 

உரிமையாக  வேண்டுகிறேன் நான் பதியும் பதிவில் இந்த சமுதாயம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் அதற்க்கு தகுதியான தகவல் அடங்கிய பதிவுதான் என்று நீங்கள் உணர்ந்தால் அதை பிரதியெடுத்து உங்கள் பெயரில் அதை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் காரணம் உங்களில் எல்லோரும் அதிகமான சொந்தங்களை நட்பில் வைத்து இருக்கின்றீர்கள் ஆகையால் நம் சொந்தங்களை   போட்டியாக கருதாமல்   சமுதாயம் சிறக்க தகவல்களை கொண்டு சேருங்கள். அன்புடன்...கம்பள விருட்சம் அறக்கட்டளை ...

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

இன்று அருமையான நாள் ....நம் கம்பள சமுதாயத்திற்கு ...ஒரு பக்கம் ..மாப்பிள திருப்பதி தேவராஜன் ..ஆனந்த் தம்பி ,அதிக சொந்தங்களை அறக்கட்டளையில் சேர்த்துஉள்ளார்கள் ...மற்றொரு பக்கம் நம் வீரத்தை பறைசாற்றும் எதுலப்பா மன்னருக்கு நினைவு தூண் மற்றும் மணிமண்டபம் அமைப்பதற்கு அமைச்சரை பார்த்து பார்வையிட செய்தது ...அடுத்தப்பக்கம் ..வழக்கறிஞர் முருகராஜ் கோரிக்கை மனு மாவட்ட கலெக்டர் ,முதலமைச்சர் பிரிவுக்கு ...அளித்து கொண்டு உள்ளார் ...சென்னை RKK E lite குழுவில் நம் சொந்தங்களுக்கு மைசூர் சரவணகுமார் அவர்கள் ஆங்கில வகுப்பு வெற்றி கரமாக நடந்துகொண்டு உள்ளது ...அக்குழுவில் அரசு துறை ,தனியார் துறையில் ராமராஜ் அவர்கள் நம் சொந்தங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து முன்னேற்ற பாதையில் செந்தில் அப்பையன் ,பாலகிருஷ்ணன் ,வழிநடத்துக்கொண்டு இருக்கிறார்கள் ...எப்படி இந்த எழிச்சி வந்தது என்றுபார்த்தால் ...ஒற்றுமை உணர்வே ...வேண்டாத விவாதங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ...நம் கம்பள சமுதாயம் முன்னேற்ற பாதையில் பீடு நடை போட்டுகொண்டு இருக்கிறோம் ...வாழ்க ...வளர்க நம் சமுதாய ஒற்றுமை ...நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்காக ...
 தளி எதுலப்ப மன்னருக்கு நினைவு தூண் மற்றும் மணிமண்டபம் (25-08-2017)

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தளி எதுலப்ப மன்னர் குறித்தான ஆய்வுப் பணிகள் முனைவர் க .இந்திரசித்து அவர்கள் ஒத்துழைப்பில் நடைபெற்று வருகிறது .தளி பாளையக்காரர்களில் கடைசி மாமன்னர் தளி எதுலப்பரின் வீரத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் கடந்த 2014 தளி எத்தலப்ப மன்னர் அறிமுகம் எனும் தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது .கடந்த 20.09.2014 இல் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் உடுமலை நாராயண கவி மற்றும் தளி எதுலப்ப மன்னரின் எனும் இரு பெரும் வரலாற்றுத் திருவிழா நடைபெற்றது .அதில் எதுலப்ப மன்னரின் வீரத்தைப் போற்றும் வகையில் இனிவரும் சந்ததினியர்க்கு வரலாற்றை அறியும் வகையில் திருமூர்த்தி மலை அணைப்பகுதி அருகே பயணியர் விடுதி எதிரில் நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது .






இதன் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டதன் விளைவாக இன்று 24-08-2017 திருமூர்த்தி மலையில் தமிழக கால்நடை துறை அமைச்சர் மாண்புமிகு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் திருமூர்த்தி மலை சுற்றுலாத்த  தலமாக அமைக்கும் பொருட்டு அணைப்பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டார் .அப்போது இந்த பாளையக்காரர்களின் சிலைகள் பற்றியும் எதுலப்ப மன்னரின் வீரத்தையும் பற்றி 1801 ஏப்ரல் 23 ஆண்ட்ரே கேதீஸ் எனும் ஆங்கிலேயர் தூக்கிலிடப்பட்ட செய்தியும் கேட்டறிந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் தளி எதுலப்ப மன்னருக்கு நினைவு தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்கதமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்து பேசி நினைவு தூண் மற்றும் மணிமண்டபம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும் இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகத்துறை நண்பர்களான தந்தி தொலைக்காட்சி ரகுமான் மற்றும் நியூஸ் 18 பரணி மற்றும் உள்ள ஏனைய ஊடகவியாளர்களுக்கும் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் .தன் நெஞ்சார்ந்த நன்றியினைப் பதிவு செய்கிறது ....


 

வியாழன், 24 ஆகஸ்ட், 2017


மாப்பிள...குஜ்ஜ பொம்முனா ...பொறுமை ,சகிப்பு தன்மை ,வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் ...தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களை ,நண்பர்களை ,வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு சிறு சேதாரம் இல்லாமல் ...ஏணிப்படியாக இருப்பார்கள்...அதைவிட நம் குஜ்ஜ பொம்மு பெண்செல்வங்கள் நீங்கள் திருமணம் செய்வதுக்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் ..
என்னங்க இது? காலங்காத்தால அருவாளோட எங்க கெளம்பிட்டீங்க?
சிவகுமாரின்னு ஒருத்தன் இருக்கானே ஃபேஸ்புக்ல. வாட்ஸாப்ப்லே ..அவனத்தான்யா தேடிப் போயிட்டிருக்கேன்.

எதுக்கு அவர் மேல உங்களுக்கு இவ்வளவு கோபம்?

பின்னே என்னய்யா? எப்ப பார்த்தாலும் ,நம் சமுதாய சொந்தங்களுக்கு ..வளர்ச்சிக்கு கொண்டுபோறேன் ..சொல்லிட்டு ..வேலைவாய்ப்பு ,தொழில் தொடங்குவதற்கு ,வரலாறு தகவல்கள் ,நம்ம சமுதாயத்தை மேல கொண்டு வரப்பார்க்கிறான் ,கம்பள விருட்சம் அறக்கட்டளையை ஆரம்பித்து இளம் படித்த சொந்தங்களோடு சேர்ந்து மேல கொண்டுவரப்பார்க்கிறான் ..நம் மேற்கு ,கிழக்கு இருக்கிற சொந்தங்களையெல்லாம் சேர்க்க பார்க்கிறான் ...அப்படி விடக்கூடாது இல்ல ...அப்பறம் ஆன்மீகம், காலை வணக்கம், பிறந்த நாள் பதிவு எல்லாம் போடறான். ஆனா, ஜோக்கெல்லாம் நிறையப் போட்டு வெறுப்பேத்தறானே! அதான்யா அவன் மேல எனக்குக் கோவம். இண்ணிக்கு அவன நான் வெட்டாம விடமாட்டேன்.

அவன வெட்டிட்டா எல்லாம் சரியாயிடுமா?

அவன மட்டும் இல்லேய்யா. அவன இந்த மாதிரி ஆக்கின 'மார்க்'னு ஒருத்தன் இருக்கானே! அவன மொதல்ல வெட்டணும்யா......


இப்படி தான் மாப்பிள ....நம்மளேயே சொல்லிக்கிட்டு ...மனசை தேத்திக்கணும் ..வேற வழி (வலி )

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா (20-08-2017)



வணக்கம் ...

கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா (20-08-2017)

இனிதாக எதுலப்ப மன்னனின் ஆசியுடன் தூரல் மழையுடன் ஆரம்பித்து கன மழையுடன் ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை சொந்தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ...

தலமையேற்று நடத்திக்கொடுத்த.    மதிப்புமிகு கௌரவ
தலைவர் வழக்கறிஞர் ச .முருகராஜ் அவர்களுக்கும்

ஓராண்டு வளர்ச்சிப்பணிகள் குறித்து விளக்கவுரை வழங்கிய திரு .கார்த்திகேயன் (திருப்பூர் பின்னலாடை )செயலாளருக்கும்

நிதி நிலையை மேம்படுத்த நீதி கொடுத்த திரு .தமிழரசன் ,பொருளாளருக்கும்

சிறப்புடன் பங்குகொண்டு சிந்தனைதூண்டிய நம் சிறப்பு அழைப்பாளர் .சுக்காம்பட்டி ஜமீன் .திரு .ராஜபாண்டியன் -நிலக்கோட்டை
 கிழக்கும் ,மேற்கும் இருக்கும் சொந்தங்கள் நம் இந்த அறக்கட்டளையின் மூலம் இணையவேண்டிய அவசியத்தை அழகாக எடுத்துரைத்த திரு .சேகர் பொம்மையா -கணினி பொறியாளர்
 சொந்தங்களுக்கும்

அடைமழை பாரது ஆதரவுக்கரம் நீட்டி அனைத்துதவியும் செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்

பண்பாடு காத்தநமது இந்திய பீரங்கி படை வீரர் சக்திவேல் பயிற்சியின் போது வீர மரணம் அடைந்த படைவீரருக்கும் ,
நம் எதுலப்ப மன்னனின் வீர வரலாற்றை எடுத்துரைத்த பாவலர்பழனிசாமி அவர்களும்
மவுனாஞ்சலி செலுத்திய
அனைத்து நல் உள்ளங்களுக்கும்

வளர்ச்சிக்கு வித்திடும் வார்த்தைகள் வழங்கிட்ட நமது வழக்கறிஞர் திரு .ச .முருகராஜ்
வழக்கறிஞருக்கும் ,
இன்றைய தலைமுறையினருக்கு நல்ல முன்னேற்ற கருத்துக்களையும் வழங்கிய தளி ஆசிரியர் .திரு .மாரிமுத்து அவர்களுக்கும்
நம் சொந்தம் இந்திய பணித்துறைக்கு முதன்முறையாக தேர்வாகி உள்ள திரு .நந்தகோபால் அவர்களுக்கும் .அவர் கூறிய முன்னேற்ற கருத்துக்கள் ,என்னால் முடிந்த உதவிகளை நம் வரும் தலைமுறைக்கு ஆலோசனைகள் அளிப்பேன் என்று கூறியது மிக்க மகிழ்ச்சி .

எந்த கூட்டத்துக்கும் வராத நம் சமுதாய பெண்செல்வங்களும்  கலந்துகொண்டது பெருமையக்குரிய து ..முன்னேற்றத்துக்கான அறிகுறிமுதன் முறையாக ..தனது கன்னிப்பேச்சால் சூளுரைத்து திரு .திருப்பதி தேவராஜன் ,பெரியகோட்டை .திரு .யோகராஜ் ,கோவை சகதிவேல் ,

அவர்களுக்கும் ...

விழாவினை அழகாக சுவாரிஸ்யமாக தனது சிரித்த முகத்துடன் நடத்திய திரு .டிஜிட்டல் போட்டோ கலைஞர் .திரு .ராஜேந்திரன் அவர்களுக்கும் (எப்படி இத்தனை ஆற்றல் மனிதர் தனுக்குள்ளே ஒளித்துவைத்துள்ளார் )
















விழாவிற்கு ..உணவினையும் ,இடத்தையும் சரியாக தேர்வு செய்த திரு .செந்தில்குமார் -கொடிங்கியம் ,
எப்பொழுதும் ,எழுத்திலும் சரி ,பேச்சாற்றலும் ,தன் சரிவெடியாக வெளுத்து வாங்கும் திரு .கார்த்தி .SR அவர்களுக்கும்
என் நன்றிகள் .

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ...சிறிய ஊக்கதொகையை ..முகம் அறிய பெண்செல்வத்துக்கும் .ஒரு மாணவச்செல்வத்துக்கும் அளித்தது ..மிகுந்த மனநிறைவை அளித்தது .இது ஒரு நம் கம்பள இளைய சமுதாயத்தால் மட்டுமே முடிந்தது ..இது ஒரு தனிப்பட்ட ஒருவருடைய முயற்சி கிடையாது ..இந்த பணி இளைஞர்களால் மட்டுமே முடிந்தது ..  
விருட்சத்தின் தலைவன் என்ற முறையில்
விளங்க முடியா காவியத்தின் கதநாயகன் வேடமிட்ட
கலச்சார காவலனின்
மட்டில்லா மகிழ்ச்சிகளையும்
மாசற்றபாராட்டு களையும் 
மனமார வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் ..சிவக்குமார் ...தலைவர்... கம்பள விருட்சம் அறக்கட்டளை ..

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017








புலவர் பழனிச்சாமி அவர்களுக்கு ...கண்ணீர் அஞ்சலி ....

தேவராட்டம் (பாரம்பரிய கிராமிய கலைகள்)
தேவராட்ட கலைஞர் பழனிசாமி


மண்ணில் புதைந்த பல்வேறு வரலாறுகள், பேச்சளவில் மட்டுமாவது உயிரோடு இருக்க, கிராமப்புற பாடல்கள் முக்கிய பங்களிப்பு அளித்து வருகின்றன; அவ்வாறு, சுதந்திரத்துக்கு எதிராக போராடி, இறந்த பாளையக்காரர்களின் மறக்கப்பட்ட வரலாறுகளை தனது பாட்டுகளால், உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஜல்லிபட்டியை சேர்ந்த புலவர் பழனிச்சாமி. நாட்டின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த பல ஆட்சியாளர்களின் வரலாறு, இளைய தலைமுறைகளுக்கு தெரியாமல் மறைந்து வருகிறது. இத்தகைய போராட்டங்கள் குறித்த நாட்டுப்புற பாடல்கள், ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, அந்தந்த பகுதியின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறப்பு பெற்றிருந்த கோவில்கள் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.
தங்கள் முன்னோர்கள் மற்றும் வழிகாட்டிகள் மூலம் இத்தகைய பாடல்களை மனப்பாடம் செய்து, கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் போது பாடுவது நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாகும். அவ்வாறு, உடுமலை அருகே, தளியை தலைமையிடமாகக்கொண்டு சுற்றுப்பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் எத்தலப்பன், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டுள்ளார்; போர் குறித்து சமரசம் பேச வந்த ஆங்கிலேய வீரனை, துாக்கிலிட்டு, தனது எதிர்ப்பை பதிவு செய்து இந்த ஆட்சியாளரின் வரலாறு, மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டு வந்தது.
வரலாற்று ஆய்வாளர்களின் முயற்சியால், எத்தலப்பன் குறித்த, கல்வெட்டுகள், திருமூர்த்தி அணையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட, அவரது வம்சாவளியினர் சிலைகள் என படிப்படியாக பாளையக்காரர்கள் வரலாறு வெளிவரத்துவங்கியது.
இந்நிலையில், எத்தலப்பன் குறித்து, பல்வேறு நாட்டுப்புற பாடல்களை கேட்டுத்தெரிந்து கொண்டு, இன்றளவும், பாளையக்காரர்கள் வழிபட்ட, ஜல்லிபட்டி கரட்டுப்பெருமாள் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், தளி கோட்டை மாரியம்மன் கோவில், அப்பம்மா கோவில் உட்பட கோவில்களில், விசேஷ நாட்களில், பாடி வரலாற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார் ஜல்லிபட்டியை சேர்ந்த புலவர் பழனிச்சாமி.
 மைவாடி ஜமீன் வகையறாவை சார்ந்த எங்கள் முன்னோர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு பிறகு, பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அப்போது, தளி பாளையக்காரர் எத்தலப்பன் குறித்த பாடல்களை, எனது பாட்டி உட்பட பெரியவர்கள் எங்களுக்கு சொல்லித்தந்தனர்.
இன்று வரை அத்தகைய பாடல்களை மறக்காமல் பாடி வருகிறேன். இத்தகைய பாடல்கள் ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதால், பெரும்பாலான பாடல்கள் இளைய தலைமுறைக்கு தெரியாமல் அழிந்து விட்டன. செவிவழி கேட்ட பாடல்களை மட்டும் இன்றும் நினைவில் வைத்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இவரது பாடலில், பாளையக்காரர்கள் விவசாயத்தை பெருக்க ஏற்படுத்திய, ஏழு குள பாசன குளங்கள், பஞ்சலிங்கம் அருவி, திருமூர்த்திமலையின் சிறப்புகள், இப்பகுதியில் ஓடிய பாலாறு உட்பட 62 சிற்றாறுகள், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைவாழ் கிராம மக்களுடன் ஆட்சியாளர்கள் வைத்திருந்த நல்லுறவு என பல்வேறு தகவல்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய பாடல்களை ஆவணப்படுத்தி, இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே நாட்டுப்புற பாடல் கலைஞர்களுக்கு நாம் செய்யும் நன்றியாக அமையும்.

ஆவணப்படுத்தினால் அழிவு இல்லை

நாட்டுப்புற பாடல் வரிகள்...
காடுகள் வெட்டியே... மேடு சமம் செய்து... காளை மாடு கட்டி உழவு செய்து... கம்பு.. சோளம்... தினை பயிர் செய்து பண்புடன் வாழ்ந்தவர் எத்தலப்பன் உச்சிமலை நல்ல குருமலையாம்...
அந்த குழிப்பட்டி... மாவடப்பு எல்லாம் மலை...ஏழு குளம் வெட்டி... நீர் நிரப்பி எத்தலப்பன் வாழ்ந்த நன்நாளில்... பூலோகமே மெச்சி... மேலோங்கிய திருமூர்த்திமலை 62 தீர்த்தங்கள் அங்கு; அன்புடன் வாழ்ந்தனராம் அந்நாளிலே...

எக்திக்கும் கொட்டட்டும் எத்திலப்பன் வெற்றிமுரசு என்று பாட்டெடுத்து கவிபாடி
எண்திசையும் புகழ்பரப்பி
வரலாற்றை  எடுத்துரைத்து எத்திலப்ப மன்னரின் வரலாற்றூ ஆய்வுக்கு புத்துயிர்கொடுத்த
கம்பளத்து பண்பாட்டின்
நாட்டுப்புற இசைக்குயில்
இன்றுடன் இசைப்பதையும்
இறுதிமூச்சையும் நிறுத்திக்கொண்டது


புலவர் பழனிசாமி ....கைபேசி :9578046363...நன்றி:தினமலர்


புதன், 16 ஆகஸ்ட், 2017

நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை ஒரு வருட நிறைவு விழாவிற்கு .....
சிறப்பு அழைப்பார்கள் ...

நம் இனத்தின் பெருமைகளை பறைசாற்றும் மாற்று இனத்தவரான
பொதிகை அருட்செல்வம்
தொல்லியல் சதாசிவம்
மற்றும் நம் இனத்தவர்களான சாமிகுனம் ( வருமான வரித்துறை)
பெருமாள்சாமி ( மின் பகிர்மான கழகம்)
முகநூல் சொந்தங்கள்
ராஜபாண்டியன்
ரவிச்சந்திரன்
தனபால் ஆகியோரை அழைப்போம்

இடம் :திருமூர்த்தி மலை அணை -கீர்த்தி வீரர் எதுலப்பர் சிலைகள் .
நேரம் : காலை 10 மணி ...
நாள் :20-08-2017

நம் மீது அசைக்கமுடிய நம்பிக்கை மற்றும் அடித்தளத்தை அமைப்போம்
நம் மீதான பார்வையின் மதிப்பை உயர்த்துவோம்


திங்கள், 14 ஆகஸ்ட், 2017



சுதந்திரப் போராட்டங்களில் ஈடு பட்ட இந்தியர்களை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் கொன்றிருக் கிறார்கள். ஆனால், ஆங்கிலேயர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் ஒருவர், திருப்பூர் மாவட்டம் உடு மலை அருகே வாழ்ந்திருக்கிறார்.
அத்தகைய வீரத்துக்கும், பெருமைக்கும் உரிய தியாகியின் கல்வெட்டுகள் வீதியில் கிடப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை-திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தளி பேரூராட்சி.
இங்கு, கி.பி.1800-ல் தென் கொங்கு நாடு என்று அழைக்கப் பட்ட பழநி, விருப்பாச்சி, ஆயக்குடி, இடையகோட்டை, ஊத்துக்குழி, தளி ஆகிய 6 பகுதிகளில், பாளை யக்காரர்கள் ஆட்சி செய்து வந்துள்ளதாக, எத்தலப்பன் வரலாற்று நூல் கூறுகிறது.
தளி பாளையத்தை, அவர் களது வம்சாவழியில் 16 பேர் ஆண்டுள்ளனர். இதற்கான கல்வெட்டுகள், திருமூர்த்தி அணை பின்புறமுள்ள ஆலமரத்தடியில் கிடக்கிறது. இறுதியாக மலை யாண்டி எத்தலப்பர், அவரது தம்பி வெங்கிடுபதி எத்தலப்பர் ஆண்டுள்ளனர்.
கி.பி.1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலே யர்கள் தூக்கிலிட்ட செய்தி, எத்தலப்ப நாயக்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயநகரப் பேரரசு காலத்தில், மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தானையும், வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக் கத்தில் அனைத்துப் பகுதிகளை யும் கொண்டுவரும் நோக்கில், பாளையங்களுக்கு தூதர்களை அனுப்பியுள்ளனர். அந்த வகை யில், தஞ்சாவூரில் இருந்து தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் அந்திரை கேதிஷ்.
ஆங்கிலேயருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவும், கட்ட பொம்மனை தூக்கிலிட்ட வெள்ளை யருக்கு பாடம் புகட்டவும், அவனை மட்டும் தனியே அழைத்து கைது செய்து துக்கிலிட்டுள்ளனர்.
திணைக்குளம் கிராமத்தில் வெள்ளையனை தூக்கிலிடப்பட்ட அந்த இடம், தூக்கு மரத் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு பாளையக்காரர்களின் சுதந்திர கிளர்ச்சிக்கும், எழுச்சிக் கும் இந்த கல்வெட்டே ஆதார மாக உள்ளது. தற்போது அந்த இடம், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பாக உள்ளது. அங்கு புதைக்கப்பட்ட வெள்ளைய ருக்கு சமாதி எழுப்பப்பட்டு, அதன்மேல் கல் சிலுவையும் வைக்கப்பட்டுள்ளது.
சமாதியை மூடியுள்ள கல்வெட் டில், கி.பி.1801 துன்மிகி வருடம் சித்திரை மாதம் 13-ம் தேதி, பறங்கியர் அந்திரை கேதிஷ், தெய்வமாகி அடங்கின சமாதி என தமிழில் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய் வாளர் பூங்குன்றன் கூறுகையில், ஆங்கிலேயனை தூக்கிலிட்ட முதல் சுதேச வீரர்கள் வரிசையில், தளி பாளையக்காரர் எத்தலப்பர் இருந்துள்ளார் என்பதற்கு ஆதார மாக, இந்தக் கல்வெட்டு உள்ளது. இதனை, அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.
நான்குபுறமும் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு வேலி, அந்த சமாதியை நூற்றாண்டுகளாக காத்து நிற்கிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்து, பலரும் பார்வையிட்டு செல்கின்றனர்.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஒரே நாள் இரவில் தளி கோட்டை தரைமட்ட மாக்கப்பட்டது. போரில் எத்தலப்பர் கொல்லப்பட்டார்.

சொந்த மண்ணில் அந்நிய ருக்கு எதிரான போரில் எத்தலப் பர் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த அரண்மனையும் சூறையாடப் பட்டுவிட்டது. இத்தகைய வீரமும், தேச உணர்வும் கொண்ட ஒருவ ரின் வரலாறு, இன்றைய தலை முறையினர் பலருக்கும் தெரியாது.
நாடு சுதந்திரம் பெற தன்னுயிரை கொடுத்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை போற்றி, சுதந்திரம் பெற்ற இந்த நல்ல நாளை நாம் கொண்டாடி மகிழ்வோம்.

 விடுதலைக்கு வித்திட்ட வீரமரபினரே ... சுதந்திர தினத்தை போற்றிடுவோம்!

சனி, 12 ஆகஸ்ட், 2017

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள இரண்டாம் நிலை நூலகம் சார்பில் நூலகர் தினத்தை முன்னிட்டும் , நூலக தந்தை எஸ் .ஆர்.ரங்கநாதன் அவர்களின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் நிலை நூலகத்தில்  பள்ளி மாணவ மாணவி களுக்கு ஓவிய போட்டிகள் நடத்தபட்டது.ஓவியர் திரு .கு .நடராஜன் (84)அவர்களின் தலைமையில் குழந்தைகளின் புதிய பொருளை ,கூர்நோக்கு ஆற்றலை வெளிகொண்டுவருவதற்கு இந்த ஓவியப்போட்டிகுழந்தைகளின் அறிவாற்றலை சோதிப்பதற்கும் வளர்பதுக்கும் இது ஒரு நல்ல களமாக அமைந்தது . இதில் ஜம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஓவிய போட்டியில் கலந்து ஆர்வமாக ஓவியங்களை வரைந்தனர் .மேலும் இவ் நிகழ்வில் உடுமலை மற்றும் தளி காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.மேலும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஓய்வு பெற்ற நூலகர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்