வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் அனுபவங்களை அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்களா? அது உங்களுக்கு உணர்த்தியது என்ன ?
நண்பர் ... குடும்பத்திலேயே நடந்திருக்கிறது.
நல்ல வருமானம் ஈட்டுபவர்; திருமணமாகி ஒரு ஆண்டு தான்; அவர் நிறைய சம்பாதிப்பதால், தந்தை வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்; கல்லூரியில் படிக்கும் தம்பி; குடும்பமே அவர் வருமானத்தை நம்பி இருக்கிறது.
திடீரென்று ஒரு நாள், வேலை செய்யும் தொழிற்சாலையில் அவர் விபத்தினால் காலமாகிறார்.
குடும்பமே "நொடித்துப் போய்விட்டது".
சுதாரித்துப் பழைய நிலைமைக்கு வர, 5 வருடங்கள் பிடித்தன.
இந்த அனுபவம் உணர்த்தியவை:
சேமிப்பு முக்கியம்.
ஒரே ஒருவர் வருமானத்தை நம்பி வாழக் கூடாது.
. என்ன ஆனாலும் மனந் தளராகக் கூடாது. வெட்டுப்பட வெட்டுப்பட, துளிர் விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
நம் அனுபவங்களை, மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
. "சவாலே சமாளி!". வாழ்க்கை ஒரு சுவாரசியமான விளையாட்டு. திடீரென்று, கடைசி பந்துகளில் ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலைமை! எதிர்நீச்சல் போடுவது தான் ஆத்ம திருப்தி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக