புதன், 11 டிசம்பர், 2019

கார்ப்பரேட் உலகத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட மிகப் பெரிய பாடங்கள் எவை?

என் வாழ்க்கை அதிகமாக கார்ப்பரேட் உலகில் சஞ்சரித்து , பின்பு மறு வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நான் கற்ற பாடங்கள் பற்பல. இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து , சுயமாக சிந்தித்து , தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். இதை பள்ளிக்கூடத்தில் நீங்கள் படிக்க முடியாது.


நீங்கள் நன்றாக உழைத்தாலும், உயர்வு என்பது ஏணி மாதிரி. எற நினைப்பார்கள். பாதி தூரம் சென்றவுடன், கீழிருந்து யாராவது இழத்து விடுவார்கள்.இது தான் நண்டு வித்தை (Crab Technique). இதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்: நீங்கள் ஒரு பாத்திரத்தில் எத்தனை நண்டுகளை போட்டு, மூடாமல் தைரியமாக வைக்கலாம் . எந்த நண்டும் வெளியே போகாது. எந்த நண்டு மேலே ஏறினாலும், கீழே உள்ள நண்டு அதை பிடித்து இழுக்கும். இதை தான் நாம் கார்பரேட் உலகில் காண்பது.
நம் சுயமரியாதையை விற்று, மேலே உயரலாம். நீங்கள் சுயமரியாதை உள்ளவர்கள் என்றால் மிகவும் கடினம் தான்.

நேரம் காலம் பார்த்தால், நமக்கு, பாஸ் பார்வையில் கருணை கிடைக்காது. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும்.

நிறைய காலங்கள் ஒரே கம்பெனியில் கழிக்கக் கூடாது. அப்படி உழைக்க , வேலை பார்க்க வேண்டும் என்றால் , மேலே சொன்ன பாய்ன்ட் எண் 2ஐ பார்க்கவும்.

நாம் நன்றாக உழைக்கும் போது, நிறைய சிங்கம், புலி, ஓநாய்களை சந்திக்க வேண்டும். இதில் மேலே சொன்ன பாய்ன்ட் எண் 1ஐ பார்க்கவும்.

நல்ல பாஸ் கிடைத்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நான் அப்படி ஒருவரை தேடிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் வேலைபார்க்கும் கம்பெனியில் நல்ல பாஸ் கிடைக்கா விட்டால், வேறொரு கம்பெனியை தேடுங்கள்.

உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இது தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம்.

உங்கள் திறன்களை நன்றாக வளர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்வின் எல்லை வரை மிகவும் உதவும்.

அலுவலகத்தில் (gossip) என்கின்ற கிசுகிசுவை விட்டும் நீங்கள் விலகி இருங்கள். உங்களுடைய பாஸ் (boss) நிறைய ஒற்றர்களை நியமித்து இருப்பார். சில பேர் உங்களிடம் வந்து, பேச்சு கொடுத்து உங்களை உள் வாங்குவார். நீங்கள் யாரிடமும் உங்கள் சொந்த மற்றும் அலுவலக விஷயங்களில் நீங்கள் அனுபவிக்கின்ற எதிர்மறை (negative) மற்றும் பச்சாதாபங்களை என்றுமே பகிர்ந்து கொள்ளாதீர்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று நமக்கு தெரியாது. கவனம் தேவை.



இது உங்களுக்கு நன்றாக உதவும் என்று நம்புகிறேன். 👍😍🌱✒📚📚📚

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக