உங்கள் அன்னையிடம் உங்களுக்குப் பிடித்த குணம் என்ன?
நானும் என் அம்மாவும்☝️☝️….
என் அன்னையிடம் எனக்கு மிகவும் பிடித்தது,
1.கடன் இல்லா வாழ்க்கை:என் அம்மாவிற்கு யாரிடமும் கடன் வாங்குவது சுத்தமாக பிடிக்காது, வேறு வழியின்றி வாங்கி இருந்தால் அதனை திருப்பி கொடுக்கும் வரை அவர்கள் மனம் அமைதி பெறாது.
அவர்களின் எல்லையற்ற அன்பு: நான் கொஞ்சம் சுயநலம் பிடித்தவன்(தற்பொழுது பொதுநலம் மட்டுமே ), குழம்பு பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் வைத்து விடுவேன், இட்லி,தோசையை கண்டால் கோபம் வந்து தொட மாட்டேன், டேய் ஒரு நாள் பொறுத்துகொடா என்பார்கள், நானோ முடியவே முடியாது என்பேன், கல் நெஞ்சகாரன் இறங்கிவரானானு பாரு என்று சொல்லிக்கொண்டு பெற்ற மகன் சாப்பிடாமல் படுத்தால் அவர்கள் சும்மா விடுவார்களா, எனக்குன்னு பிடித்ததை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்.
அவர்கள் வளர்ப்பினில் நான் இது வரையிலும் அவர்களை போல நானும் மூன்று வருடங்கள் கடன் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் மேல் நம்பிக்கை அதிகம் வைத்ததால் என்னவோ தெரியவில்லை எனக்கு புகை பிடிக்கும் பழக்கம்,பாக்கு போன்றவற்றை பழகாமல் இருந்து விட்டேன் அதற்கு காரணம் நான் இல்லை என் அம்மா இப்போது வரை என் மேல் வைத்த நம்பிக்கை மட்டுமே. எனக்கு அதனை உட்கொள்ளும் வாய்ப்பு நிறைய கிடைத்து இருந்தாலும் நான் அதில் சிக்கவில்லை.
என் அம்மா கொஞ்சம் இல்லை ரொம்ப சென்சிட்டிவ் டைப்…சின்ன விஷயத்துக்கு கூட உள்ளுக்குள் புலம்பி கொண்டும் இருப்பார்கள், இப்போது நான் என் அம்மாவை விட்டு தனியாக கோவையில்,சென்னையில் இருந்தபொழுது . என்னை கேட்க ஆளு இல்லை,என்னை கண்காணிக்கவும் ஆளு இல்லை ,தீய பழக்கம், தீய வழியில் செல்லும் வாய்ப்பு நிறைய உண்டு எனக்கு ஆனாலும் அவ்வாறு எண்ணம் வரும் போது எல்லாம் ஏன் அம்மாவின் முகம் வந்து போகும்.அவ்ளோதான் அப்படியே அந்த காரியத்தை நினைக்கும் எண்ணம் கூட வராத அளவுக்கு அவர்கள் நம்பிக்கை மற்றும் பாசம் என்னை கட்டி போட்டு காத்து கொண்டு இருக்கிறது. அவர்களை கஷ்டபட வைக்க கூடாது என்பதற்காக நானும் விட்டுக்கொடுத்து விடுவேன்.
சுயநலமிக்க இந்த உலகில், சுயநலம் பார்க்காமல் ,தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாமல் தன் பிள்ளை,கணவன் என்று பிறருக்காக வாழும் தெய்வம் #அம்மா# மட்டுமே♥️♥️♥️.
என் பதில் வாசிக்கையில் என்னை பற்றி தற்பெருமை கூறுவது போல் இருக்கும், ஆனால் உண்மையில் நான் இப்படி இருக்க காரணம் என் அம்மா என் மீது வைத்த நம்பிக்கை என்று சொல்ல தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக