புதன், 18 டிசம்பர், 2019

திருமண வயதில் இருப்பவர்களுக்கு கூறும் மிக சிறந்த அறிவுரைகள் என்ன?

மூவெட்டில் மணம் காணத் தயாராவது நல்லது, என நாலெட்டில் திருமணமானவன் சொல்கிறேன்.

இருமனம் இணைய நிறைய விட்டு கொடுக்க வேண்டும் …

உனக்கு மட்டும் தான் நிறையத் தெரியுமென அகம்பவமாய் இருக்கக் கூடாது.

உன் பலமும் துணையின் பலவீனமும் சேர்ந்துதான் உங்கள் குடும்ப பலம். அதே போலத்தான் உன் பலவீனத்தை உன் துணையின் பலம் கொண்டு நிரப்ப முடியும் என ஆணித்தரமாய் நம்புக..

சண்டையிடத் தெரியுமுன் சமாதனமாய் போகப் பழக தெரியனும்…

மற்றவர் முன் துணையை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது, கேலி செய்வது கூடாது…

அவரவர் பலத்தையும், பலவீனத்தையும் சுட்டிக் காட்டாமல், அப்பிடியே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

குறிப்பாக ego வை மியூட் பண்ண பழகுங்கள்; அதிலிருந்து சுத்தமா வெளியே வந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாகும்.

அவரவர் space ஐ மதிக்க பழகுங்கள்; துணைவர்களின் உறவினர், நட்பு வட்டாரங்களில் இணைந்திருக்க. பழகுங்கள்.

துணைவர்களின் carrierல் முன்னேற்றம், இலட்சியங்களை அடைய ஊக்கப் படுத்த வேண்டும்; உறுதுணையாக இருக்க வேண்டும்.

தோல்விகளால் துவளாது இருக்க உடனிருந்து ஆறுதல் படுத்த வேண்டும்.

நிறைய செவி மடுக்க வேண்டும்.

நல்ல விஷயங்களைப் பாரட்டத் தெரிய வேண்டும்.

அடிக்கடி குடும்பத்துடன் கூடி மகிழ வேண்டும்…

இதெற்கெல்லாம் தயாராயிருந்தால் போதும்…வாழ்ந்து பாருங்கள்…வாழ்த்துக்கள் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக