இளம் பெண்களின் பார்வை ஏன் காந்தத்தை போல ஈர்ப்பு சக்தியால் எல்லோரையும் மயக்குகின்றன?
என்ன பாத்து எப்டிண்னே இந்த கேள்விய கேட்டிங்க.. என்று கேட்க தோன்றினாலும்..
கேட்டமைக்கு மிக்க நன்றி பெண்ணின் பார்வை மட்டுமா.. ஒரு பெண்ணே, ஆணின் மொத்த ஈர்ப்பு விசை தானே.. மனித இனம் தழைத்திருக்க இந்த விசையே ஒரே காரணம்.. ஆகையால்..
ஈர்ப்பின் உளவியல் பற்றிய கவர்ச்சிகரமான உண்மைகளை இங்கு கூற விழைகிறேன்..
ஆண்கள், பெண்கள் பால் ஈர்க்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.. அது நம் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமான காரணிகளிலும் ஒன்று.. அவை.. முடி, முடியின் நிறம், கண் கண்ணின் நிறம், உயரம், வாசனை… ஆம் வாசனை கூட
இப்போது ஈர்ப்பில் சில வியக்கத்தக்க விடயங்களை இங்கு காண்போம்..
வயதான தந்தையர் கொண்ட பெண்கள் பெரும்பாலும் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள்
பெரும்பான்மையான பெண்கள் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது ஒரு பொதுவான ஸ்டீரியோடைப் கருத்து, ஏனெனில் அவர்கள் என்றுமே “அப்பாக்களின் இளவரசிகள்” . இதில் புதிய விடயம் என்னவென்றால்.. வயதான தந்தையருக்குப் பிறந்த பெண்கள் வயதான ஆண்களை கவர்ச்சியாகக் காண அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. குறிப்பாக, அவர்கள் அதிக முக மடிப்பு மற்றும் குறைவான முடி கொண்ட ஆண்களை கவர்ச்சிகரமானவர்களாகக் கருதுவார்கள். அப்போது 90ஸ் குழந்தைகளுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.. ஹ்ம்ம் பாப்போம்.. இதன் அடிப்படையிலேயே, இளைய தந்தையருக்குப் பிறந்த பெண்கள் இளைய ஆண்களிடம் அதிகம் ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.
வெவ்வேறு நறுமணங்கள் வெவ்வேறு அளவிலான ஈர்ப்பைத் தூண்டும்
ஈர்ப்பின் உளவியலில் வாசனை ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது என்பதை நாம் அறிவோம், ஆனால் எந்த வாசனை அதிக ஈர்ப்பாக கருதப்படுகிறது, எது இல்லை என்பதை காண்போம்.. ஒரு சமீப கால ஆய்வில், புதிய அறிமுகமில்லாத ஆண்களின் (காதலன், கணவன் ) வியர்வையில் காணப்படும் இயற்கையான ரசாயனமான ஆண்ட்ரோஸ்டெனோலில் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அதிக வியர்வை இருக்கும்போது உற்பத்தி செய்யப்படும் ஆண்ட்ரோஸ்டெனோனின் வாசனை இயற்கையான இனச்சேர்க்கைக்கான ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. இனி சென்ட் அடிப்பீங்க..
ஆண்கள், மறுபுறம், பெண்களின் ஒட்டுமொத்த வாசனைகளினால் ஈர்க்கப்படலாம்.. அதாவது.. வியர்வை, வாசனை திரவியம், பவுடர் ,சோப் மற்றும் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உள்ளதாகவே கண்டறியப்பட்டுள்ளது.. ச்சா.. அவசரப்பட்டு நம்ம நக்கீரரை சிவபெருமான் எரித்திரிக்க தேவையில்லை.. ஆனால் கண்ணீரின் வாசனையால் ஆண்களின் இனச்சேர்க்கை உணர்வு பெருமளவு குறைக்கப்பட்டு , இல்லாமலே போய் விடுவதாக கூறப்படுகிறது. தயவு செய்து அழாதீர்கள் பெண்களே..
எதிர் துருவ ஈர்ப்பு
எதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது ஒரு இயற்பியலின் இயல்பான தத்துவமே.. அதுவே உளவியலுக்கு வந்தால் இது தான் நிலைமை.. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே வேறுபட்ட மனித லுகோசைட் ஆன்டிஜென் (HLA complex) கொண்டவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, அடிப்படையில் தன் மரபணு வரைபடத்தை விட , வேறு மரபணு வரைபடம் கொண்ட ஒரு நபரை.. புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால்.. தங்கள் சொந்தத்தை விட, வேறு நபரை.. வேறு மதம், இனம், மொழி இப்படி.. ஒரு நபரின் எச்.எல்.ஏ வளாகம்(HLA complex) நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது என்பதால், இந்த இயல்பே நாம் ஆரோக்கியமான மரபணு விதைகளை உலகம் முழுவதும் விதைக்க வைத்த ஒரு அரும்பெரும் செயல்.. இன்றும் விலங்குகளிடம் இது காணப்படுகிறது.. சொந்ததுல கல்யாணம் பண்ணாதிங்கன்னா எவன் கேக்குரான்.. சரிப்பா.. இன்று நாம் மொழி இனம் மதம் என்று பிரிந்து அல்லது பிரித்து வாழ்கிறோம், முந்தைய காலத்தில் வாழ்ந்த கற்கால மக்கள் தம்முடைய தோழர்களை விட வேறுபட்ட மரபணு தோழர்கள் மரபணு வரைபடங்களைக் கொண்டுள்ளனர் என்பதை எவ்வாறு அறிந்தனர் என்று கேட்டால்.. ஆய்வின் படி, நம் உடம்பின் நறுமணத்தின் அடிப்படையில் மட்டுமே நம் மூளை செயல்பட்டது என்று சொல்லப்படுகிறது.
ஒரு பெண்ணின் ஈர்க்கும் குரல்
சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு பெண்ணின் குரல் , அவள் இணையுடன் இருக்கும்போது இயல்பாகவே வசீகரிக்கும் தன்மை பெறுகிறது என்று கூறப்படுகிறது.. ஒரு பெண்ணின் குரல் வெவ்வேறு நேரங்களில் மாறுபடும் என்பதும் இணையை கண்டு பேசும்போது இன்னும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, ஆய்வில் ஆண்கள் இந்த உயர்ந்த குரல்களை விரும்புவதோடு மட்டுமல்லாமல், மிக உயர்ந்த சுருதியை உடைய பெண்ணையே மிகவும் கவர்ச்சிகரமான பெண்ணாக மதிப்பிட்டனர். ( ஆண்ட்ரியா போன்ற bass குரல் பெண்களுக்கு சமர்ப்பணம்)
“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பது இடது காதில் கிசுகிசுக்கும்போது மூளைக்கு அதிக உணர்ச்சி விளைவிக்கும்
உங்களின் காதலை சொல்லி ஒரு நபரை நீங்கள் ஈர்க்க முயற்சிக்கிறீர்கள் என்றால், அவரது இடது காதில் பேச மறக்காதீர்கள். ஒரு ஆய்வில், உணர்ச்சி தூண்டுதல்கள் இடது காதில் நுழைந்தபோது, நினைவுகூருவதற்கான துல்லியம் அதே தூண்டுதல்கள் வலது காதில் நுழைந்ததை விட 6% அதிகமாகும் என்று கண்டறியப்பட்டது. நல்லா கேட்டுக்கங்க .. இடது காது..
சிவப்பு மிகவும் கவர்ச்சிகரமான நிறம்
சிவப்பு நிறத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சிவப்பு நிற உடை அணியும்போது மிகவும் கவர்ச்சிகரமாகவும், மேலும் பாலியல் ரீதியாகவும் உணரப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. முதல் date க்கு சிவப்பு நிற உடை.. ஓகே..
ஒரு நபரின் இதயத்திற்கு விரைவான வழி அவர்களின்… கண்கள் வழியாகும்
ஒரு ஆய்வில், நீண்டகால கண் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்கள், பாரம்பரியமான கைகுலுக்கலுடன் அறிமுகப்படுத்தப்படுபவர்களுக்கு மாறாக, அவர்களின் இணைக்கு உறுதியான வலுவான இணைப்புகளை உருவாக்குகிறார்கள், மேலும் பாசத்தை அதிகரிக்கிறார்கள்.. கண்ண மட்டும் தான் பாக்கணும்..
தாடி கவர்ச்சிகரமானவை, ஆனால் எல்லா தாடிகளும் இல்லை
பரிணாம உயிரியலின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பெண்கள் இயற்கையாகவே தாடி கொண்ட ஆண்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகை தாடியும் அல்ல. பெண்கள் நெருக்கமான, அல்லது சிறிய அளவிலான தாடியை கொண்ட ஆண்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகக் கருதுகிறார்கள் என்று ஆய்வு முடிவு செய்தது. பெண்கள் , இப்படிப்பட்ட ஆண்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல பெற்றோராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதுகின்றனர். குறைந்த கவர்ச்சியாகக் கருதப்படும் ஆண்கள் சுத்தமான வழிக்கப்பட்ட மற்றும் பெரிய, புதர் தாடியுடன் இருந்தவர்களே. புரியுதா.. வாரம் ஒரு வாட்டி ட்ரிம் பண்ணா போதும்..
போதுமா.. புது மாப்பிள ..இப்போ ...த்ருப்தியா..என்ஜாய் ...வாழ்த்துக்கள் ..