திங்கள், 30 செப்டம்பர், 2019

EGO and ARROGANCE
Ego occurs when you have no foundation of belief or clarity of purpose in your world. Ego is cleverness to hide ignorance and obscures clarity. Ego is indeed the hallmark of an individual who revels at bringing down others and humiliating them publicly. But in today’s world it is important to have a healthy ego, otherwise people can trample over us. A healthy ego is one who knows their self worth in this world. It is valuing ourselves as human beings. Many people attribute having an ego as a bad thing but in reality a healthy ego is important to achieving your desires. It is part of our confidence in what we believe in. It is when the healthy ego turns into arrogance that it becomes a problem.
Arrogance occurs when we hold on to worthless and dysfunctional ways of living life, and we’re unsure of its stability. Arrogance is also the stubborn conviction that, against all odds, we will push forward down a path that is obviously wrong for us and everyone around us. It is a situation that develops when we begin to lose faith in our own beliefs and direction, yet we still believe, against our own best judgment, that we can succeed along the same path.

Ultimately in the journey of life, we need the guidance of that unseen power whom we call Lord. A beautiful Spanish song speaks about the humility of the sadhak.And it talks of the vital importance of karma and acts of goodness in this life. These words give me lot of sustenance, and I want to share it with you.

EGO மற்றும் ARROGANCE

உங்கள் உலகில் நம்பிக்கையின் அடித்தளமோ அல்லது நோக்கத்தின் தெளிவோ இல்லாதபோது ஈகோ ஏற்படுகிறது. ஈகோ என்பது அறியாமையை மறைக்க புத்திசாலித்தனம் மற்றும் தெளிவை மறைக்கிறது. ஈகோ உண்மையில் ஒரு நபரின் தனிச்சிறப்பாகும், அவர் மற்றவர்களை வீழ்த்துவதிலும் பகிரங்கமாக அவமானப்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியமான ஈகோ இருப்பது முக்கியம், இல்லையெனில் மக்கள் நம்மை மிதித்து விடலாம். ஆரோக்கியமான ஈகோ என்பது இந்த உலகில் அவர்களின் சுய மதிப்பை அறிந்தவர். அது நம்மை மனிதர்களாக மதிப்பிடுகிறது. ஒரு ஈகோ இருப்பதை ஒரு கெட்ட காரியம் என்று பலர் காரணம் கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் உங்கள் ஆசைகளை அடைய ஆரோக்கியமான ஈகோ முக்கியம். இது நாம் நம்புவதில் நம்முடைய நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். ஆரோக்கியமான ஈகோ ஆணவமாக மாறும் போது தான் அது ஒரு பிரச்சினையாக மாறும்.
பயனற்ற மற்றும் செயலற்ற வாழ்க்கை முறைகளை நாம் பிடித்துக் கொள்ளும்போது ஆணவம் ஏற்படுகிறது, மேலும் அதன் ஸ்திரத்தன்மை குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. ஆணவம் என்பது எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் வெளிப்படையாகத் தவறாக இருக்கும் ஒரு பாதையை முன்னோக்கி தள்ளுவோம் என்ற பிடிவாதமான நம்பிக்கையாகும். இது நம்முடைய சொந்த நம்பிக்கைகள் மற்றும் திசையில் நாம் நம்பிக்கையை இழக்கத் தொடங்கும் போது உருவாகும் ஒரு சூழ்நிலைதான், ஆனாலும் அதே பாதையில் நாம் வெற்றிபெற முடியும் என்று நம்முடைய சிறந்த தீர்ப்புக்கு எதிராக நாங்கள் இன்னும் நம்புகிறோம்.

இறுதியில் வாழ்க்கைப் பயணத்தில், நாம் இறைவன் என்று அழைக்கும் அந்த கண்ணுக்கு தெரியாத சக்தியின் வழிகாட்டுதல் நமக்குத் தேவை. ஒரு அழகான ஸ்பானிஷ் பாடல் சாதக்கின் மனத்தாழ்மையைப் பற்றி பேசுகிறது.மேலும் இந்த வாழ்க்கையில் கர்மாவின் முக்கியத்துவத்தையும் நன்மை செயல்களையும் பற்றி பேசுகிறது. இந்த வார்த்தைகள் எனக்கு நிறைய வாழ்வாதாரத்தை அளிக்கின்றன, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


நீங்கள் எப்படி மிகவும் தைரியமாக ஆனீர்கள்?


என் மனைவியை பார்த்துதான். நான் சிறு விஷயத்திற்கு கூட பயம், பதட்டம், அடையும் ஆசாமி. என் மனைவி எதற்கும் கவலை கொள்ளாதவள். ஒருமுறை அவள் பெற்றோர் ஒரு இடத்தை விற்றனர். அவளுக்கு தெரிவிக்க வில்லை. கேள்வி பட்ட போது நான் கூட பதட்டப்பட்டேன் அவள் எந்த ரியக்க்ஷனும் காட்ட வில்லை. நான் அவளிடம் உனக்கு கோவமா வருத்தமோ இல்லையா என்றேன். எதற்கு? என்னிடம் சொல்ல வேண்டும் என்றால் சொல்லி இருப்பார்கள் சொல்ல அவர்களுக்கு தோன்றவில்லை அவ்வளவுதானே என்றாள். " சரி நான் திட்டுவேன் என்று பயம் இல்லையா ?" "அவர்களுக்கே மகள் பாதிக்க படுவளோ எனும் பயம் இல்லை எனக்கு ஏன் இருக்க வேண்டும்" என்றாள். "நான் இதை காரணம் காட்டி உன்னை விரட்டினால்…" , "என் படிப்பிற்கு வேலை தேடிக்கொண்டு போய் விடுவேன்", "என்னை விரட்டாதீர்கள் என்று அழ மாட்டாயா?", " நான் ஏன் அழ வேண்டும். இவ்வளவு நாள் நான் காட்டிய அன்பை விட அந்த சொத்து உங்களுக்கு பெரிதாக தெரிந்ததற்கு ஒரு நாள் நீங்கள் தான் அழ வேண்டும்", " உங்கள் வீட்டிலும் உன்னை சேர்க்க வில்லை என்றால் ", "ஹாஸ்டல் போறேன், இங்கு யாரும் யாரையும் நம்பி பிறக்கவில்லை.. எதையும் பார்த்து பயமோ பதட்டமோ அடைய வேண்டிய தேவையும் இல்லை , நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்ததே தீரும் எதையும் தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை." என்றாள். அன்று முதல் இன்று வரை நானும் பெரிதாக எதற்கும் பயமோ பதட்டமோ அடைவது இல்லை.


ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

என்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுசா படிங்க…!!
இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும்.
ஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார்.
புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்.
எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, ​​காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால்
அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர்.

பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்..





செவ்வாய், 24 செப்டம்பர், 2019


உடுமலையின் மண்ணின் மைந்தர் ......வி.ஜி.மோகன் பிரசாத் 

கோவை விஜிஎம் மருத்துவமனை 10ம் ஆண்டு விழா
:தரமான மருத்துவ சேவையே குறிக்கோள்
 கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள விஜிஎம் மருத்துவமனையின் 10 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கே.ஜி. மருத்துவமனை தலைவர் ஜி.பக்தவச்சலம் உள்ளிட்ட 23 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களான விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக, முன்னாள் தமிழக காவல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன், நடிகர் பத்மஸ்ரீ விவேக், கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாற்றத்தினை உருவாக்கும் வகையில் சேவையாற்றி வரும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் முஹம்மது ரீலா மற்றும் பத்மஸ்ரீ நடிகர் விவேக் ஆகியோருக்கு சேஞ்ச் மேக்கர் விருதும், கடந்த 60 வருடங்களாக மருத்துவ சேவை செய்துவரும் மருத்துவர்கள் டி.ஏ.ஆர் அக்பர் அலி, கோபால்சாமி, கனகராஜ், சங்கரராமன் ஆகியோருக்கு மனிதநேய விருதும், மருத்துவ கல்வி மூலம் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் மருத்துவர்கள் ஜி.பக்தவச்சலம், முருகானந்தன், எம்.பி.பரனேஷ் ஆகியோருக்கு சிறந்த மருத்துவ கல்வியாளர் விருதும், மருத்துவ பணியில் சிறந்து விளங்கி வரும் மருத்துவர்கள் அப்பாஸ், பாலசுப்பிரமணியன், பாஸ்கர், ஜெகதீஷ் குமார், எஸ்.குமரேசன், ஆர்.குமரேசன் கருப்புசாமி, நடராஜன், பழனிசாமி, பழனி வேலாயுதம், ரமணி, ரவிசங்கர், சாஜகான், பழனியப்பன் ஆகியோருக்கு சிறந்த மருத்துவர் விருதும் வழங்கப்பட்டது.
விழாவில், 2 நாட்களுக்கு தொடர்ந்து செரிமானம், எண்டோஸ்கோபி உள்ளிட்ட பல துறையின் கீழ் இயங்கும் மருத்துவம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள சிறந்த நிபுணர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும் 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவில்வி.ஜி.எம். மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் பேசுகையில், கோவையில் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி சாலையில் வி.ஜி.எம் மருத்துவமனை மூலம் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் அதிக தரத்தில் வழங்கி வருகிறோம். மேலும் மக்களுக்காகவே பல நவீன மருத்துவ சிகிச்சைகளை கோவையில் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எங்கள் மருத்துவமனையின் மூலம் விஜிஎம் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளை நிறுவி 2 வருடங்களாக பல மருத்துவத் திட்டங்களை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவது பெருமைக்குரியதாகும். அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் கடந்த 3 வருடங்களாக தொடர் மருத்துவப் பரிசோதனை மூலம் கல்லீரலை பாதிக்கும் ‘சி வைரஸ்’ இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

இதனை உடனடியாக அரசுக்கு தெரிவித்து முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக தற்போது மருத்துவ சிகிச்சைகளை அந்த நோய் பாதித்த 21 கிராமங்களில் உள்ள 55 ஆயிரம் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறோம். இத்திட்டம் வருகிற 2021 ஜூலை மாதம் முடிவடைய திட்டமிட்டுள்ளோம். இதன் மொத்த மருத்துவ சிகிச்சையின் செலவு ரூ.5 கோடி ஆகும். இதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசுக்கும் எங்களது மருத்துவ குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த அறக்கட்டளையின் மூலம் அடர்வனம் திட்டம் எனும் மரம் நடும் திட்டத்தை துவக்கி இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை கோவையில் நட்டுள்ளோம். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் கோவையின் அனைத்து பகுதியிலும் மரங்களை நட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

விழாவில் மருத்துவர்கள் மதுரா பிரசாத், சுமன், கோகுல், பிரபாகரன், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி நண்பர் .:பி கோவை நிருபர் ராஜ்குமார்

திங்கள், 23 செப்டம்பர், 2019

என் வீடு என் அனுபவம்: வீழ்ந்தது நான், வென்றது சொந்த வீடு
 
(நன்றி -தமிழ் இந்து -முகமது ஹுசைன்)

பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்தபோதே, நான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை, என் பெற்றோர் வெளிப்படுத்தத் தொடங்கினர்.


பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்தபோதே, நான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை, என் பெற்றோர் வெளிப்படுத்தத் தொடங்கினர். அப்போது, அவர்களும் சொந்த வீடு வாங்கிச் சிரமத்துடன் கடனைத் திரும்பச் செலுத்தி வந்தார்கள். அதனால் எனது சின்ன சின்ன ஆசைகள்கூட அதன் காரணமாக நிராசையாக ஆக்கப்பட்டன.

சைக்கிள் வாங்கப் பணமில்லை, டிவி வாங்கப் பணமில்லை, ரேடியோ வாங்கப் பணமில்லை, ஏன், பள்ளிச் சுற்றுலா செல்லக்கூடப் பணமில்லை என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனது சிறு சந்தோஷம்கூட நிறைவேறாமல் போனது. அந்த வீட்டின் மீது அப்பாவுக்கு எந்த அளவுக்கு விருப்பம் இருந்ததோ அதே அளவுக்கு அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

இந்தக் காரணத்தால் சொந்தமாக வீடு வாங்கவே கூடாது என, அப்போதே முடிவுசெய்துவிட்டேன். என்னை வீடு வாங்கச் சொல்லி, பெற்றோர் அறிவுறுத்தத் தொடங்கிய பின், எனது முடிவு இன்னும் ஆழமாக மனத்துள் வேரூன்றியது. நண்பர்கள் வீடு வாங்க முயலும்போதும், அவர்களிடம் ‘வேண்டாம்’ என்ற எனது முடிவைத் திணிக்கத் தொடங்கினேன். சொந்த வீட்டைவிட வாடகை வீடே சிறந்தது என நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். அதனால் வீடு வாங்கி முடிக்கும்வரை, பல நண்பர்கள் நானிருக்கும் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டார்கள்.


குடும்பத்தினரின் அறிவுறுத்தல்

வேலைக்குச் செல்லத் தொடங்கிய பின், வீடு வாங்கச் சொல்லும் பெற்றோரின் அறிவுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கியது. திருமணம் முடிந்த பின்னர், இல்லாளும் அவர்களுடன் இணைந்தார். குழந்தை பிறந்தது. அவள் வளரவளர, அறிவுறுத்தல் தொடர்ந்தது. அவ்வப்போது நண்பர்களும் அறிவுரை என்ற பெயரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர். இது போதாது என்று, “வீடு வாங்கக் கடன் தருகிறோம்” என அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனாலும் மிகுந்த உறுதியுடன் இருந்தேன். இறுதியில் தோற்றுவிட்டேன். ‘சொந்த வீடு’ என்னை வென்றுவிட்டது. பெற்றோரின் முதுமை, மனைவியின் பாதுகாப்பு, மகளின் எதிர்காலம் என உணர்வு ரீதியான கோரிக்கைகளில் வீழ்ந்துவிட்டேன்.

வீடு வாங்க வேண்டும் என்ற முடிவும், அதற்குரிய பணமும் இருந்தால் எளிதாக வீடு வாங்கக்கூடிய சூழல் இப்போது உள்ளது. அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. நாங்கள் இணையம் மூலம் வீடு வாங்கத் தீர்மானித்தோம். 99 ஏக்கர்ஸ், மேஜிக் பிரிக்ஸ், ரூஃப் அண்ட் ஃப்ளோர் போன்ற இணையதளங்களில் சென்னையின் பிரபலமான கட்டுமான நிறுவனங்களின் வீட்டுத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை வீட்டிலிருந்தே நமது குடும்பத்தினருடன் பார்த்துத் தேர்ந்தெடுக்க முடியும். அப்படித்தான் நாங்களும் விருப்பமான வீடுகளைத் தேர்வுசெய்தோம். அந்தக் கட்டுமான நிறுவனங்களே, வீட்டுக்கு காரில் வந்து அழைத்துச் சென்று, வீட்டை நமக்குச் சுற்றிக் காண்பிப்பார்கள்.

நான் அலுவலகத்துச் செல்லும் முன், ஏதாவது ஒரு வீட்டைத் தேர்வு செய்துவிட்டுச் சென்றுவிடுவேன். அவர்களும் வீட்டுக்கு வந்து, எனது பெற்றோரை அழைத்துச் சென்று, வீட்டைச் சுற்றிக் காட்டி, மீண்டும் வந்து எனது வீட்டில் விட்டு விடுவார்கள். இவ்வாறாகச் சொந்த வீடு தேடும் படலம் ஒரு மாதம் நீடித்தது. தென்சென்னை, மேற்குச் சென்னை ஆகிய பகுதிகளில்தாம் நாங்கள் அதிகமும் வீடு தேடினோம். தனி வீடு, அடுக்குமாடி வீடு என இரு வகையான வீடுகளையும் பார்த்தோம்.

வீடு தேடிப் பயணம்

ஒரு ஞாயிறு அன்று, பூந்தமல்லி அருகே வீடு, 1,330 சதுர அடி, டியூப்ளெக்ஸ் வீட்டை என் பெற்றோரே இணையத்தில் பார்த்துத் தேர்வுசெய்து வைத்திருந்தனர். “விலையும் சௌகரியம்தான்” என்றார்கள். வீடு பார்க்கச் செல்லும்போதே, அந்த வீட்டின் உரிமையாளர் என்னிடம் போனில் பேசினார். தான் ஐ,டி கம்பெனியில் வேலை பார்த்ததாகவும், இப்போது வேலை போய்விட்டதால் கடனைக் கட்ட முடியாமல் திண்டாடுவதாகவும் வருத்தத்துடன் கூறினார். கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, கனடாவுக்குச் செல்லும் திட்டத்தில் இருப்பதால், விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், ரூ.10 லட்சம் வரை குறைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

ஆனால், அவர் சொன்னது போல, அந்த வீடு பூந்தமல்லிக்கு அருகில் இருக்கவில்லை. அது பெரும்புதூருக்கு அருகிலிருந்தது. எனக்கு ‘சென்னைக்கு மிக அருகில்’ எனத் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வரும் விளம்பரம் நினைவுக்கு வந்தது. அதுவும் மெயின் ரோட்டிலிருந்து ஐந்து கி.மீ. தள்ளி இருந்தது. ஒரு காட்டுக்குள் இருக்கும் உணர்வை ஏற்படுத்திய அந்த வீடு, மிகுந்த கலை ரசனையுடன் இழைத்து, இழைத்துக் கட்டப்பட்டிருந்தது. நான் மட்டுமே அந்த வீட்டை ரசித்துப் பார்த்தேன். பெற்றோரின் முகத்தில் ஈயாடவில்லை. மனைவியோ அச்சத்தின் உச்சத்திலிருந்தார். அதாவது அங்கே வீடு பார்ப்பதற்கு நிற்பதைக்கூட அவர்கள், ஆபத்தாகக் கருதினார்கள்.

சென்னைக்குள் ஒரு கிராமம்

எனது வீட்டுக்குத் திரும்பும் வழியில், கார் டிரைவர் எங்களிடம், திருவேற்காட்டிலிருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைப் பற்றிக் கூறினார். ‘சரி போகும் வழிதானே பார்க்கலாம்’ என்ற அளவில்தான் நாங்கள் அங்கே சென்றோம். சென்னையிலிருக்கும் அந்த இடம், எனது சொந்தவூரின் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தை நினைவூட்டியது. நகரத்தின் பரபரப்பு அந்த இடத்தில் துளியும் இல்லை. மக்களும் அங்கே வெள்ளந்தியாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சாலைகளில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

சென்னையின் புகழ்பெற்ற பள்ளி ஒன்று அந்த வீட்டின் அருகில் இருப்பதையும் விளம்பரம் மூலம் அறிந்தேன். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அமைப்பும் மனத்துக்கு நெருக்கமாக இருந்தது. விற்பனை அதிகாரி எங்களை வரவேற்று, எங்களை ஒரு வீட்டினுள் அழைத்துச் சென்றார். நான் ஏற்கெனவே முடிவுசெய்து விட்டதாலோ என்னவோ, அவர் காட்டிய வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கட்டுமான உறுதியை அப்பா சோதிக்க முயன்றார். கதவைத் தட்டிப் பார்த்தார். தண்ணீரின் சுவையை மனைவி பரிசோதித்தார். பக்கத்து வீட்டாரிடம் பேசி, அந்தக் குடியிருப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றார். எல்லோருக்கும் திருப்தியாக இருந்ததால், ஒரே வாரத்தில் அந்த வீடு எங்களுக்குச் சொந்தமானது. மகளுக்கும் பக்கத்துப் பள்ளியில் இடம் கிடைத்தது.

கடந்த ஜூன் மாத இறுதியில், அலுவலகத்தில் வருமானவரி கட்டுவது பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டு லோன் வாங்கினால், வருமான வரிக் கட்டும் சூழ்நிலை ஏற்படாது என்று அப்பா சொன்னார். இப்போதுகூட ஒன்றும் கெட்டுப் போகவில்லை, வங்கியில் லோன் வாங்கி, இங்கேயே இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளேன் என்று அம்மா சொன்னார். மனைவியும் உள்ளிருந்து ஓடிவந்து, ஆமாம் அதுவும் சரிதான், வாங்கிக் கொள்ளுங்களேன். மகளுக்கு என்று தனியாக ஒரு வீடு தேவைதானே என்றார். ‘எனக்கு வீடா? ’ என்று மகள் ஆச்சரியத்துடன் கண் விரித்தாள்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

சுஜி ....

உடுமலையின் பெண் பத்திரிக்கையாளர் ..

.மனநிறைவான செய்திகள் ,கல்வி செய்திகள் ..ஆன்மீக செய்திகள் ..பன்முக தன்மைகொண்ட செய்திகள் ..என்றும் சத்தம் இல்லாமல் ..உடுமலை சுற்றி அழகான செய்திகளை அள்ளித்தருபவர் ..தன் தந்தையின் ஆசை ...இதழியல் ( Journalism) படிப்பது ..தன் தந்தையின் ஆசை நிறைவேற்றியவர் ...பத்திரிகை துறையில் தனித்துவம் பெற்று திகழும் சுஜிதா ராகவ்  சகோதரிக்கு .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உடுமலை சிவக்குமார் ..

9944066681..






.

சனி, 21 செப்டம்பர், 2019


கல்வி தன்னார்வலர்கள் .......

னக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகனுக்கு வேலை வாய்ப்புத் தொடர்பாக ..எனது HR நண்பரிடம் கேட்டு  குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களை, வாய்ப்புகளை அனுப்பி வை என்று சொல்லியிருந்தேன். தினமும் அள்ளி தந்து கொண்டேயிருக்கிறார் ...

பெரும்பாலும் மத்திய அரசு நிறுவனங்களில், இந்திய முழுக்க உள்ள நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள், பயிற்சி சார்ந்த தகவல்கள்.

ஆனால் சமூக வலைதளங்களில் எவரும் இது போன்ற தகவல்களைப் பகிர்வதை நான் இதுவரையிலும் பார்த்ததே இல்லை. நான் சந்திக்கும் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள், படித்து முடித்து வெளியே சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் மாணவர்கள் பயன்படுத்தும் அலைபேசிகளில் உள்ள செயலிகள் அனைத்தும் அவர்களின் கொண்டாட்டத்திற்கு உதவக் கூடியதாகத்தான் இருக்கின்றது.

மேலாதிக்க தகவல்கள்.

தற்போது ரவுடி பேபி பாடல் யூ டியுப் ல் 40 கோடி பார்வையாளர்களைக் கடந்து அடுத்த நகர்வுக்குச் சென்று கொண்டிருக்கின்றது.

கனா படத்தில் வரும் வாயாடி பெத்த புள்ள பாடல் இருபது கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த யூபிஎஸ்சி தேர்வில் வென்றவர்கள், அவர்களின் பேட்டிகள், அந்தத் தேர்வுக்கு எப்படித் தயார் ஆவது, அது சார்ந்த ஆலோசகர்களின் பேச்சு உரைகள் போன்றவைகள் பத்தாயிரம் பார்வையாளர்களைக் கடந்து செல்ல தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் என்னன்ன தேர்வுகள் உள்ளது? என்ன வாய்ப்புகள் உள்ளது? எப்படி அதனை அணுகுவது போன்ற தகவல்கள் அடங்கிய காணொளித் தொகுப்பு ஐந்தாயிரம் பார்வையாளர்கள் அளவுக்குக்கூடத் தாண்டுவதில்லை.

சென்ற வருடம் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு மத்திய அரசாங்கம் நடத்தியது. மாநில அளவில் தேர்ச்சி பெற்றால் மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். அடுத்த கட்டமாகத் தேசிய அளவில் வென்றால் தொகை அதிகமாகும். இந்தத் தொகை இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் வாங்கும் வரைக்கும் மத்திய அரசாங்கம் வழங்குகின்றது. தனியார் பள்ளிக்கூடங்கள் பொருட்படுத்தவில்லை. எப்போதும் போல நீட் கோச்சிங் சொல்லிக் கொடுக்க ஆட்களைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் சத்திய மங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள மாணவர்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

வருடந்தோறும் பத்தாம் வகுப்பு முடித்து வெளியே வருபவர்கள் 9 முதல் பத்து லட்சம் பேர்கள். இளங்கலை கல்லூரியில் படிப்பவர்கள் 10 முதல்15 லட்சம் பேர்கள். (எல்லாவிதமான படிப்புகளையும் சேர்த்து)


தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள். தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மூன்று கோடி பேர்கள். இந்த எண்ணிக்கையில் இன்றைய சூழலில் நிச்சயம் முப்பது சதவிகித பேர்களின் கையில் நவீன ரக அலைபேசிகள் உள்ளது.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..
9944066681



வெள்ளி, 20 செப்டம்பர், 2019


நாட்டுப்புற வழிபாட்டு வீர வரலாறு
முன்னோர் வழிபாடு மூத்தோர் வழிபாடு
உடுமலைப்பேட்டைக்கு பெயர் பெற்ற சுற்றுலாத்தலமான திருமூர்த்தி மலையில் காண்டூர் கால்வாய்க்கு அருகில் சிலைகளாக வீற்றிருககும் விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு அவர்களது வம்சாவளியினர் இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை தம் பண்பாட்டு விழாவாக நடத்தினர்.
இந்த நிகழ்வை பாரம்பரிய முறைப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தேவராட்டம் ஆடி தங்களது முன்னோருக்கு தங்களது வீர வணக்கத்தினை பதிவு செய்தனர்.
தேவராட்டத்தில் இருக்கும் அத்தனை அசைவுகளையும் அபிநயத்துடனும், வீராவேசத்துடனும்,பண்புடனும், பாங்குடனும் நடனமாடி தம்முடைய முன்னோர்களை வீரத்தின் விளைநிலைமாக விளங்கிய தளி எத்தலப்ப மன்னரை நினைவு கூர்ந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தேவராட்டம் மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் அதிகளவில் பொது மக்களை நின்று காணவும் செய்தது என்று சொன்னால் மிகையில்லை.
வுந்திருந்த அனைத்து பொதுமக்களுக்கும் மதிய உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம் வழிபாட்டு வரலாறு 20.09.2019

புதன், 18 செப்டம்பர், 2019

வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்
ஷ்யாம் சுதிர் சிவகுமார் (shyam sudhir sivakumar) ......
என் மிகப்பெரிய சந்தோஷம். வாழ்வை அர்த்தமாக்கியவன். எனக்கு தந்தை என்ற முகவரியை தந்தவன் ....உங்களின் அனைத்து பிராத்தனைகளும் வீண்போகவில்லை ....
ஷ்யாம் சுதிர் சிவகுமார் ......என் மிகப்பெரிய சந்தோஷம். வாழ்வை அர்த்தமாக்கியவன். எனக்கு தந்தை என்ற முகவரியை தந்தவன் .... என்னை ஒவ்வொரு நாளும் உயிருப்புடன் இருக்க செய்பவன் ....இவன் பிறந்த மூன்றாவது நாளில் இருந்து என்னை அடையாளும் கண்டுகொண்டவன் ..என் வயிற்றில் சுமக்கவில்லை அவளுவுவதான்... septemper 19 -2008....காலை 9.35 பிறந்த செய்தி கேட்டு...கோவையில் இருந்து உடுமலை நோக்கி ஆனந்த கண்ணீருடன் பஸ் பயணம் ... ஒரு நிமிடம் கூட இவன் கண் அசைவுலிருந்து தப்பிக முடியாது ...அலுவுலகம்  ஆனாலும் எங்கு சென்றாலும் ...சமர்த்தகா பேசி இவன் -டம் இருந்து தப்பிக்க வேண்டும் ....எதை சொன்னாலும் ஷார்ப்- ஆக புரிந்துகொள்பவன்....3 வயது முடிய தொட்டில் ஆட்டி .நடு இரவில் நான் தூங்கி விழுந்தவன் ....ஒரு தகப்பனுக்கு கிடைக்கும்  சுகமான சுமைகள் ...இவன் ஆறு வயது முடிவதகுள் 60 வருடம் வாழந்த நினைவுகள் ....காரில் இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் பயணம் ஆனாலும் என் இரண்டு கைகளில் கார் ஸ்டேரிங் நடுவில் உட்காந்து பிரியாமல் பயணம் செய்தவன் ....பள்ளியுளும் ஷ்யாமோட அப்பா இவர்தான்..எல்லா ஆசிரியர்ருக்கும் என்னை அறிமுகம் செய்தவன் ...வெளியே எங்கு சென்றாலும் துரு துரு சேட்டையால் எல்லோருயும் ஈர்த்துகொள்பவன்...
ஷியாம் சுதிர் ...🎂🎂🎂👍👍👍
என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்
என்னையும் ஒரு அன்புக்கு அடிமையாக்கியவர்
என் கவலைகளையெல்லாம் அவர் முகம் பார்த்தவுடன் பஞ்சாக காற்றினில் பறக்க செய்தவர் ..
எப்பொழுதும் என் கழுத்தை பற்றி தொங்கிக்கொண்டிருப்பவர்
அழகான ,அற்புதமான ,புன்சிரிப்பும்
சின்ன ,சின்ன ,குறும்புகள் செய்தாலும் ,அதில் ஒரு ஆனந்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர் ...

இன்று தன் 12 பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் வீட்டுக்
ஷியாம் -வுக்காக எழுதியது.👍🌿🌿🌿🌷🌷💐💐💐
.என் உயிர் மூச்சு ,காற்றுடன் இரண்டற கலந்தவனுக்கு .
முகநூல் ..
.வாட்ஸஅப்ப் .
.பின்டரஸ்ட் ...
ட்விட்டர் ...
இன்ஸ்டாகிராம்...தொலைதூர தொழில்நுட்பம் மூலம்
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681

மூன்றசையோடு முத்தள எத்தலப்பரின் மண்ணில்
பிறந்தவர்களுக்குப் பிறந்திட்ட முத்தே சுpயாம் சுதிர் சிவாவே
 உந்தன் பதினோறாம் ஆண்டு பிறந்த நாள் இன்று நேற்றுதான்
உன்னுடன் உன் பிஞ்சுக் கைகளைப் பிடித்து விளையாடினேன்.
அதற்குள் நீ ஆளாகும் அளவிற்கு வளர்ந்துவிட்டாய்
இந்தப் பதினோறு ஆண்டுகள் ஏப்படிக் கழிந்தது,
எப்படிப் போனது . தினந்தோறும் சூரியன் காலையில்
உதித்து மாலையில் மறைகிறது.
ஆனால்,  உந்தன் முகமோ எப்போதும் என் உள்ளத்தில் உதித்துக்கொண்டே இருக்கிறது எப்படி. . மறக்க முடியாத தாத்தாக்களையும் பாட்டிகளையும்
உன் நினைவிற்கு நான் கொண்டு வரும்
முன்பே என்னுள் இருக்கும் நீ என்
அப்பாவாகவும், அம்மாவாகவும்
உருவெடுத்து திருவாகிப் பேசுகிறாயே . . . ஓ. .
என்னுள் இருக்கும் என் தகப்பனே நீதான்
என்னை குழந்தை முதல் பெரியவனாக்கி
தந்தைக்கிருக்கும் துணிவும், அன்பும் பாசமும்
அத்தனையும் அழகாகவும் அன்பாகவும்
மனதிற்குள்ளேயே அசைபோடும் அன்புள்ளமடா . . நீ.
ஏத்தனை பெரிய வீரனடா உந்தன் செயல்கள்
சிலம்பு சுற்றும்போதும், குதிரையின் லகானைப் பிடித்து
குதிரையேற்றம் செய்யும் போதும்
உந்தன் வீரம் நான் அறியவில்லை.
ந Pபள்ளியில் போட்டிகளில் பரிசுகள் பெறும் போதுகூட
 நான் உன்னை வாழ்த்தியதில்லை. உன் மனதில்
மிகப்பெரிய ஆளாக உன்னையே நீ
உருவாக்கி என்னை வழி நடத்தும்
என் மனசாட்சியே நீதானடா. ..
சொல்ல முடியாத வார்த்தைகளை
என் கண்ணீர் வடிக்கும்போது உன் செயல்கள்
என் மனதிற்கு மாமருந்தாகத் தந்திடும்
மகனே நீதான். இவன் தந்தை
எந்நோற்றான் கொல் எனும்
அய்யனின் திருக்குறளும்
உனக்கும் எனக்குமாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.
உன்னை மகனாகப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
உன்னுடன் ஆண்டுகள் பலவாயினும் எனக்கு நீ
இன்னமும் குழந்தையே . . .
வாடா மகனே வா.
என் நெஞ்சில் ஏறி விளையாடு . .
என் முதுகைத் தட்டி உறவாடு . .
என் கால்களுக்குள் புகுந்து வெளியேறு . .
உனக்காக என் முதுகுத் தண்டுவடங்கள்
யானை சவாரி செய்ய இன்னமும் காத்திருக்கிறது.
வாடா .. . மகனே. . .
மீண்டும் சிறு குழந்தையாய்
விளையாடுவோம்.
வயதுகள் மட்டும் ஏறிப்போகாமல் இருந்தால்
நானும் குழந்iதான் என்ன செய்யா . . .
உன் குழந்தைத் தனம்
என்னை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.
ஆண்டுகள் கடந்திடட்டும் - உன் செயல்பாடுகள்
ஆளாகட்டும் ஆளாவாய் . . . என்னை மட்டும் அல்ல . .
அனைவரையும் ஆள (ழ) வைக்கும்
ஆளாவாய்.
வா . . . பிறந்த நாள் தினம் கொண்டாடுவோம்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ஷியாம் சுதிர் சிவக்குமார் ....
என்னையும் ஒரு உயர்நத சிம்மாசனத்துக்கு அழைத்து சென்றவர்
என்னையும் ஒரு அன்புக்கு அடிமையாக்கியவர்
என் கவலைகளையெல்லாம் அவர் முகம் பார்த்தவுடன் பஞ்சாக காற்றினில் பறக்க செய்தவர் ..
எப்பொழுதும் என் கழுத்தை பற்றி தொங்கிக்கொண்டிருப்பவர்
அழகான ,அற்புதமான ,புன்சிரிப்பும்
சின்ன ,சின்ன ,குறும்புகள் செய்தாலும் ,அதில் ஒரு ஆனந்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்பவர் ...
அன்பில் விளைந்த
செல்ல மகனுக்கு
ஆயிரம் ஆயிரம்...
அன்பு முத்தங்கள்...
எத்தனை நிமிடங்கள்
உன்னுடன் இன்பமாய்
கழித்து இருக்கிறேன்..
என்னுடனே எப்போதும்
இருந்து கொண்டு..
எத்தனை சேட்டைகள்
அத்தனையும் எனக்கு
உன் அன்பின் அர்த்தங்கள்!
முத்தங்கள் ஆயிரம் கொடுக்க
உன் செல்ல கடிகளே..
ஆயிர ஆயிர ஆண்டுக்கு
அன்பை சொல்லும்...!
மலர்கள் பூத்து குலுங்கும்
உன் புன்னகையை பார்த்தது !
உன் குறும்பை பார்க்க
நேரத்திற்கே நேரம்
போதவில்லையாம்!!!!
கத்திக் கொண்டே
ஓடி வந்து என் கழுத்தைக்
கட்டிப்பிடித்து ஊஞ்சாலடும்
என் உற்சாக ஊற்றே...
என் சுவாசத்தின் காற்றே!
முன்னிரண்டு பற்களையும்
காட்டி நீ சிரிக்கையில்
எழுதிய என் எல்லா கவிதைகளும்
காகிதங்களை விட்டு
உன்னிடம் ஓடோடி வரும்
விளையாடிக் களிக்க...!
என் பத்து வயது குறும்பே
ஆயுள் முழுதும் எனக்கு
இனிக்கப் போகும் கரும்பே...
அப்பா என்று நீ
சொல்லும் போதெல்லாம்
நான் மீண்டும் மீண்டும்
பிறக்கிறேனடா.
வண்ணத்துப் பூச்சியின்
சிறகடிப்பினை யாரேனும்
வாழ்த்த முடியுமா என்ன?
உன் துறு துறு அன்பில்
திளைத்துக் கிடக்கிறேன்...
வாழ்த்துக்களை எப்போதும்
என்னுள் இறைத்தபடி...!
பிடிவாதக் குழந்தைகளை
எங்கேணும் காணநேரிட்டால்
பெருமிதம் கொள்கிறேன், தம்பீ,
உன் பொறுமையை எண்ணி!
அளவுகடந்த அன்பினாலே
அவ்வப்போது என்னருகில் நின்று
கன்னம் உரசிப் பெற்றுச்செல்லும்
அளவிலா முத்தங்களை
அநியாய வட்டியுடன்
அதிவிரைவில் திருப்பித்தருவாய்!
துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நிறைந்திருக்க,
பாசமும் பண்பும் இணைந்திருக்க
பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க
வாழ்த்துகிறேன், என் கண்ணே,
பல்லாண்டு நீ வாழி என்று!
இன்று தன் 12 பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் வீட்டுக்
ஷியாம் -வுக்காக எழுதியது.
ஷ்யாமின் முகம் மலர்ந்த சத்தம்..,!!! ....
19.09.2008..(உடுமலைப்பேட்டை-லட்சுமி மருத்துவமனை  )
இன்றைய நாள் ..எனக்கு தூங்கா மலரும் இரவு.,
ஆம்., என் ஷ்யாமின் .,
முகம் மலர்ந்த சத்தம்..,!!!
ஷ்யாமின் பிறந்த தினம் முதலே உற்சாகம் தொற்றி கொண்டது ...பிறந்த உடன் பிஞ்சு கரங்களை பிடித்து பார்க்கும் பொழுது பட்டாம்பூச்சியின் மெல்லிய இதழ்கள் போன்று மிருதுவாக இருக்கும் ..இரண்டு கைகளில் மெல்லிய வெல்வெட்டு துண்டுடன் மார்போடு அனைத்துக்கொண்டு ஒரு கையினால் ஷ்யாமின் தலையை கீழே சாயாமல் சிமிட்டும் கண்கோளடு பார்ப்பது ஒருமுறை தான் ..வாழக்கையில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்துவிடும் ..
குழந்தைகளிடம் அளவுக்கதிகமான அன்புகொண்ட தகப்பனின் சற்று நீண்ட வெளியூர் பணிசெய்வது மிகவும் கொடுமையானதே.....அன்பு மகனின் பாசம் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவயது விளையாட்டுகளை நினைக்கும்போது கண்கள் குளமாக்கி கொண்டே இருக்கும் ...
நான் வீட்டில் இருந்தால் நான் தான் அவன் உலகம் ...மாலைநேரம் வந்தால் எப்படியும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டுருப்பான் ..இரண்டு சக்கர வாகனத்தில் கொஞ்ச தூரம் பட்டாம்பூச்சி சிறகுகள் விரித்து பயணம் செய்துவருவோம் ..வடவள்ளி ..சுற்றி இருக்கும் பைமெட்டல் பேரிங் வழியாக வடவள்ளி பேரூந்துநிலையம் வழியாக கஸ்தூரிநாயக்கன் பாளையம் சென்று வான ப்ரஸதா மற்றும் தியான ப்ரஸதா வழியாக இயற்கை கொஞ்சும் மரங்கள் ..அதை ஒட்டிய விவசாய தோட்டங்கள் வழியாக வீடுவந்து சேர்வோம் ..அப்பொழுதும் வீட்டிற்க்குள் போக மனம் வராது..உன்னுரு ரௌண்ட பா ..ப்ளீஸ் ..ப்ளீஸ் கொஞ்சும் கெஞ்சல்கள் நினைவுகள் மலருந்துகொண்டே இருக்கும் ..
காலையில் அப்பா ஆய் வருதுப்பாவில் ஆரம்பித்து இரவு சிறு சிறு கதைகள் பேசி தூங்கவைப்பது வரை அவனுக்கு எல்லாமே நான் தான்.....அதுவும் தொட்டில் குழந்தையாக இருக்கும்பொழுது இரண்டு மணிநேரம் ..மூன்று மணிநேரம் தொட்டில் ஆட்டிவிட்டு கைவலிக்கிறது என்று மெதுவாக தூக்கிட்டானா என்று பார்த்தால் கொட்ட கொட்ட முழித்து பொக்கைவாயால் சிரித்துக்கொண்டிருப்பான்...அதைப்பார்த்தவுடன் கைவலிக்க தொட்டிலாட்டியது எல்லாம் வலியும் மறந்துவிடும் ..
மொபைலில் டாக்கிகங் டாம் பொம்மையை காணும் பொழுதெல்லாம் மகனின் நினைவுகள் வந்து செல்லும் எனக்கு இப்படியிருக்க..எனது கணிணியில் விவரம் தெரியும் பொழுது அவனுக்கு பிடித்த கதை பாடல்கள் ..அதிகம் குழந்தை பாடல்கள் மலையாள மொழியில் அதிகம் இருந்தது ...சிரித்துக்கொண்டு இருப்பான் ..என்னுடைய இரவு நேர அலுவுலக பணியை கொஞ்சம் காலம் ஆக்கிரமித்துக்கொண்டான் ..
பணியின் காரணமாக மகனை பிரிந்திருக்கும் நாட்கள் மகனின் நினைவுகள் வரும் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது...ஆனால் மகனுக்கு என் நினைவுகள் வரும் பொழுதெல்லாம் அவனுக்கு கஸ்டமாய் இருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.....
ஷ்யாமுக்கு நான் தான் அகிலமும் என்னை பிரிந்திருக்கும் காலங்கள் அது இன்னும் பெரும் துயரத்தை தந்திருக்கும்......
ஒரு தந்தையைப் பொருத்த வரை மகனின் இளவயது குறும்புகள் பேச்சுக்கள் என்பது நினைத்து நினைத்து குதூகலப்படும் விஷயம். எங்கேனும் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனே பெற்ற மகனும் அவனது குறும்புகளும் மனதில் தோன்றி ஒரு புன்சிரிப்பை தற்செயலாக செயலாய் வரவழைக்கும்.
எப்பொழுது சனி ..ஞாயிறு தினங்கள் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்போம் நானும் ,ஷ்யாமும் ..கோவையின் சனிக்கிழமை காலை துவங்கும் நேரு மைதானம் ..வ .உ .சி ,மைதானம் ..GE DE நாயுடு அருங்காட்சியகம் ,GE DE Car அருங்காட்சியகம் ..மதியம் கீதா கபே ..மதிய உணவு ..சிறுது நேரம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் படிக்கும் புத்தக அலமாரி ..மாலை நேரம் வா .உ சி சிறுவர்பூங்காவில் சுற்றி குதிரை சவாரி ...சிறுவர் பூங்காவில் சென்று ..தூரி விளையாட்டு ,சறுக்கு விளையாட்டு ..வீடு வந்து சேர்வதற்கு உற்சாகம் மிகுதியாக இருக்கும் ..ஆனால் ஷியாம் ..இன்னும் கொஞ்சம் விளையாடி விட்டு செல்லலாம் என்று அடம் ..பின் சமாதான படுத்தி அழைத்துவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் ..இப்பொழுது வளர்ந்துவிட்டான்..நண்பர்கள் வட்டம் சேர்கிறது ..வாழ்க்கை சூழல் ..பிறந்தது முதல் ..10 வயது வரைதான் அப்பாவின் தேவை ...நாமும் அதற்கு தகுந்த முறையில் தூரத்தில் இருந்து நம் கண் அசைவில் மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும் ..வளர்கிறான் என்று மனதை நாம் தான் கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளவேண்டும் ..

என்னதான் இருந்தாலும் அந்த சிறுவயது நினைவுகள் மலர்ந்துகொண்டே இருக்கும் ..உள்ளே பொங்கி வரும் அன்பு பாசம் காதல் எல்லாவற்றையும் பெரும் போராட்டத்தோடு அடக்கிக் கொண்டு வெளியில் கடுமையும் கண்டிப்புமாக மகனை பெரிய ஆளாக்கத் துடிக்கும் ஒவ்வொரு தந்தையின் கஷ்டமும் அரை பிரசவத்திற்கு சமம்....தற்காலங்களில் நம்மை சுற்றி நடக்கும் சூழ்நிலைகள் ..பாசம் நேசம் ..சொந்தங்களின் உறவுமுறை ,நண்பர்கள் வட்டம் ..கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறதா ..இல்லை இன்னும் பாசப்பிணைப்புகள் கூடுமா ...

வாழக்கை பயணம் நகர்கிறது ..ஷியாம் பிறந்தது முதல் சுற்றுப்பயணங்கள் கோவை ..பெங்களுரு ..திருவனந்தபுரம் ..உடுமலை .சேலம் ....ஓட்டன்சத்திரம் ..தேனீ ..போடி ...என ..கார் பயணங்கள் .அதிகம் ஷியாம் மன தையரியத்துடன் வெளி உலக தொடர்பு வளர்வதற்கு மிக பயனுள்ளதாக இருந்தது .. 

குழந்தை வளர்ப்பு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம்.தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், 

கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்! மனம் வளம் பெறும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதனங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்! 

இன்றோடு 11 வயது முடிந்து 12 வயதை தொடும் ஷ்யாமுக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
உளவியல்......

உங்களை விட அழகில் குறைந்த ஒருவரை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா?

கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளலாம் ...

40 வயதாகிவிட்டால் இதே அழகு என்ன கூடாவேவா வர போகிறது?

35யை தாண்டினால் ஆணுக்கு முடிகொட்டுவதும் பெண் என்றால் முகத்தில்

சுருக்கம் ஏற்படுவதும் தானே நியதி?

இயற்கையை நம்மால் கட்டுப்படுத்தவா முடியும்?

வயதானவர்களின் அழகே அவர்கள் நரை முடி தானே?

பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகாக தான் தெரியும். வயது அப்படி.

அழகை வைத்து தான் வாழ்கிறோம் என்று ஒருவர் கூற முடியுமா இப்பிரபஞ்சத்தில்?

வாலிபமும் இளவயதும் மாயையே.

நம் கண்ணில் அழகிருந்தால் பார்ப்பது அனைத்தும் அழகாகவே தெரியும்.

பிடித்தவர்கள் தான் உலகின் பேரழகிகளாக, பேரழகன்களாக தெரிவார்.

அழகு அகத்தில் இருப்பது என்பதை நம்புவதே இல்லை. அழகு மனதில் இருக்கிறது.

திருமணத்திற்கும் அழகிற்கும் ஏன் முடிச்சி போடுகிறீர்கள்?

திருமணத்தின் தேவை ஆண் என்ற ஒரு மனமும், பெண் என்ற ஒரு மனமும் தான்.

அழகை வைத்து வாழ முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அன்பை வைத்து வாழலாம்.

திங்கள், 16 செப்டம்பர், 2019

அச்சு ஊடகம் 2019
(ஜோதிஜி )
ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும் குடும்பத்தினர் திட்டும் அளவிற்கு வார இதழ்களுக்கு செலவளிக்கும் தொகை நாளுக்கு நாள் எகிறிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் ஆசையுடன் விருப்பத்துடன் செலவளித்தேன். புதிய படம் பார்க்க ஆர்வமாகச் செல்பவர்கள் போலப் புதிதாக ஏதாவது ஒரு இதழ் வந்தால் வாங்கி ஆசிரியர் குழு முதல் மற்ற அனைத்தையும் ஆராய்ச்சி செய்வதுண்டு. ஒரே செலவு அதுவும் அதிக செலவு என்பது வார இதழ்களுக்காகவே இருந்தது.

வீட்டுக்கு வரும் தினசரிகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், வாரந்தோறும் வந்து கொண்டிருக்கும் சகலவிதமான வார இதழ்கள், தோன்றும் போது ஆங்கில தமிழ் தினசரி, இது தவிர மற்ற புத்தகங்கள் என்று வாங்கிக் கொண்டிருந்தேன். என் பொறுமை எல்லை மீறிக் கொண்டே வந்தது. எவரைத் திட்ட முடியும்?

ஒவ்வொரு முறையும் படித்து முடிக்கும் போது இந்த காகிதத்தை மலம் துடைக்கப் பயன்படுத்தக்கூடக் கூடாது என்பதாகத் தோன்றியது. காரணம் ஒரு சிறிய துணுக்கு செய்தியைக் கவர் ஸ்டோரியாக மாற்றுவது, அப்பட்டமாக மிரட்டல் ஜர்னலிசம், ஒரு எழுத்தாளர் தங்களுக்குப் பேட்டி அளிக்க மறுத்து விட்டார் என்பதற்காக அவர் சிக்கலில் மாட்டிய போது அடுத்தடுத்த இதழ்களில் அவரைப் பற்றிக் கவர் ஸ்டோரி வெளியிட்டும் செல்ப் எடுக்காத கேவலம், கல்வித்துறையில் உள்ள ஊழல்களைப் பற்றிப் பேச மறுத்து சூரப்பா எந்த ஊரிலிருந்து வந்தார்? என்ற ஆராய்ச்சிக் கட்டுரை என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் விபச்சாரத்னமாகவே மாறிய கொடுமையை உணர்ந்து மொத்தமாகவே நிறுத்தும் சூழல் உருவானது. கிட்டத்தட்ட மூச்சு அதன் பிறகே இயல்பாகச் சுவாசிக்க முடிந்தது.

தமிழ்த்திரைப்பட உலகம் அழிந்தால் அந்தத் துறையில் இருப்பவர்கள் வருத்தப்படுவதை விட பிரபல்யமான வார இதழ்கள் தான் வருத்தப்படும் அளவிற்கு சினிமா சினிமா என்று தொடக்கம் முதல் கடைசி பக்கம் வரைக்கும் சினிமா ஜர்னலிசமாக மாறிய கொடுமையும் இப்போது உள்ளது.

இதில் கட்சி ஆதரவு, மத ஆதரவு என்ற கொள்கையின் அடிப்படையில் படிப்பவர்கள் மனிதர்களே அல்ல என்ற நோக்கத்திலும் தினசரியில் உள்ள ஆசிரியர்கள் அறம் என்றால் கிலோ என்ன விலை? என்கிற நிலைக்கும் வந்து சேர்ந்து குப்பைகளை வீட்டுக்குள் தினமும் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

சில மாதங்களுக்கு வார இதழ்களில் ஆசிரியராக பணியாற்றுபவர்களின் மாறுதல்கள் நடந்தது. கொஞ்சமாவது இவர் ஏதாவது ஒரு கட்டுரை எழுதியிருப்பார்? அதற்காகவாவது வாங்கலாம் என்ற எண்ணமும் அதன் பிறகு தவிடுபொடியானது.

குழந்தைகள் எழுதும் நான் முதல்வரானால்? என்கிற இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் சூடுபிடிக்கத் தொடங்கியது. எழுத்துப் பிழைகள்? இது தமிழா? என்று நாம் யோசிக்க வேண்டிய கட்டுரைகள் என்று தமிழனைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கின்றது.

மொத்தத்தில் நான் எழுதுவது தமிழ். நீ வாசிப்பது உன் தலையெழுத்து? நான் கொடுப்பது தான் செய்தி? உனக்குப் புரிந்தால் என்ன? புரியாவிட்டால் என்ன? என்ற நோக்கத்தில் தான் ஒவ்வொரு நிர்வாகமும் என் கடன் பிணி செய்து கிடப்பதே என்று மாறத் தொடங்கியது.

ஆதாரம் தேவையில்லை. அவசரம் தான் முக்கியம் என்ற நோக்கத்தில் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு செய்திகளுக்கும் பின்னால் உள்ள உளவியல் தாக்குதல்களைத் தமிழர்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதனை விட இவர்களின் வியாபாரம் எப்படி உள்ளது? என்பதனை ஒவ்வொரு முறையும் எப்போதும் வாங்கும் பெட்டிக் கடைக்காரரிடம் தவறாமல் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு.

நாங்கள் முன்னிலை. நாங்கள் நம்பர் 1 என்ற கட்டியம் கூறி அலறும் வார இதழ்கள் பாதிக்குப் பாதி என்கிற நிலைக்கு வந்துள்ளது. 50 இதழ்கள் எப்போதும் விற்கும்? இப்போது 20 கூட போகமாட்டுது என்கிறார்கள். ஆனால் பெருமை பீத்தலுக்கு இங்கே குறைவில்லை.
அதாவது நாங்கள் திருந்த மாட்டோம். நீங்கள் திருந்தக்கூடாது தான் எங்கள் முதன்மையாக நோக்கம் என்பதாகத் தான் எனக்குத் தோன்றுகின்றது.
இது பராம்பரியமான இதழ், 50 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் சந்தையில் வெற்றிகரமாக இருக்கின்றோம் என்பது உண்மை தான்.
விபச்சாரம் என் தொழில்? அதில் என்ன தவறு உள்ளது? என்று யாராவது பொது வெளியில் உரக்கச் சொன்னால் உங்கள் பார்வை எப்படியிருக்கும்? அவர்களைப் பற்றி உங்கள் நினைப்பு எப்படியிருக்கும்?

சனி, 14 செப்டம்பர், 2019

இன்று பொறியாளர் தினம் ,


இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல். அத்தகைய சிறப்பு பெற்ற பொறியாளர்களுக்கான "பொறியாளர்கள் தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.
கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.
இவரின் பெருமையைப் போற்றும் விதமாக, இந்திய அரசு 1955 ஆம் ஆண்டு, இந்திய நாட்டின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்கி, அவரைக் கௌரவித்தது. அவரின் பிறந்தநாளான செப்டம்பர் 15 தேதி பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் முதன்மைப் பொறியாளரை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள இந்தத் தினம், பொறியியல் துறையின் மகத்துவத்தையும் பறைசாற்றுகிறது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. 
அப்படிப்பட்ட நம்ம மாப்பிள்ளை  மற்றும் தம்பிகளுக்கும்  இனிய பொறியாளர் தின வாழ்த்துகள்!


அறிவு பொக்கிஷம் "அறிஞர் அண்ணா"(நெஞ்சம் மறப்பதில்லை)
(புதுவை வேலு.............)

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்னும்  இறை கோட்பாட்டையும்,

"கடமை கண்ணியம் கட்டுப்பாடு" என்னும் வாழ்வியல் கோட்பாட்டையும்
உலகுக்கு உவந்தளித்த உதய சூரியனுக்கு, பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இன்று வயது 106.( அண்ணாத்துரை பிறந்த தினம்: 15-9-1909)

தமிழர்களின் நெஞ்சங்களில் மஞ்சமிட்டு, புகழால் உயிர் வாழும் உன்னதத் தலைவர்.அறிஞர் அண்ணா என்று சொன்னால்  அது மிகையாகாது. தமிழுக்கு அவர் ஆற்றிய அருஞ்சிறப்புகளை  இன்று  நினைவு கூறுவதை தமிழர்களாகிய நமது" நெஞ்சம் மறப்பதில்லை"

அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909-ல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்தார்.

மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர்.

1934-ல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.
அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால்.... ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது.
 ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.

பெரியாரின் பாசறையில்…
இளைஞர் அண்ணா, பெரியாருடன் ஏன் இணைந்தார் என்பதற்கு அவரது பதில்: “பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள்தான் எனக்கு மிகவும் பிடித்தன.
 கல்லூரியை விட்டு வெளியே வந்ததும் அவரிடத்தில்தான் நான் சிக்கிக்கொண்டேன். அன்று முதல் அவர்தான் என் தலைவர்.” திராவிடர் கழகத்திலிருந்து 1949-ல் பிரிந்த பிறகும் பெரியார் அளித்த நல்லுணர்வுகளை அண்ணா தொடர்ந்து போற்றிவந்தார்.

 1967-ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற நிகழ்வு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
1967 பிப்ரவரியில் சென்னை மாநில முதல் அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

தொலைநோக்குப் பார்வை

1960-ம் ஆண்டில் ஹோம்லேண்ட் ஆங்கில வார ஏட்டில், ‘குறைந்தபட்சம் ஆயிரம் கோடி ரூபாய் நிதியாவது சென்னை மாநிலத்துக்கு ஒதுக்குக’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்…
சமமான வளர்ச்சி, பணவீக்கத்தையும், பற்றாக்குறை நிதியாக்கத்தையும் சீர்செய்தல், மாநிலத்தின் தொழில் வளங்களை வளர்த்தெடுத்தல், வேளாண் துறையின் சிக்கல்களை நீக்குதல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுதல், தூத்துக்குடி துறைமுகத்தைப் பெரிய துறைமுகமாக மாற்றுதல், கடலோரப் பகுதிகளில் கப்பல் தொழில்களைக் கட்டமைத்தல், சூரிய சக்தியைப் பயன்படுத்தல், நிலச் சீரமைப்புக்கும், சாலை அமைப்பதற் கும் பெரும் மக்கள் படையை உருவாக்குதல், சென்னை நகர வளர்ச்சிக்காகப் பெருநகர் திட்டத்தை உருவாக்குதல் ஆகியன அண்ணா முன்மொழிந்த முன்னோடித் திட்டங்களாகும்.
 இந்தக் கட்டுரையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘அனைவரையும் உள்ளடக்கும் திட்டம்’(இன்க்ளூசிவ் பிளான்) என்கிற புதிய கருத்தை முன்மொழிந்தார்.
11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-12) ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’(இன்க்ளூசிவ் குரோத்) என்ற கருத்துருவை இந்தியாவில் நடுவண் அரசு வலியுறுத்தியது. ஆழமான பொருளியல் சிந்தனையைத் தொலைநோக்குப் பார்வையோடு அண்ணா 1960-ம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அண்ணாவின் படைப்புகள்:
1939 –கோமளத்தின்கோபம்
1942 –களிங்கரணி
1943 –பார்வதி-B.A
1943–சந்ரோதயம்
194-சிவாஜிகண்டஇந்துசாம்ராஜ்யம்
1946–வேலைக்காரி -
1946–குமரிகோட்டம்
1948–நல்லதம்பி
1948–ஓர்இரவு
1953–சொர்கவாசல்
1955–சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்

குறிப்பிடத்தக்க படங்கள்:

1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1982 – நீதிதேவன் மயக்கம்

காலவரிசை:
1909  – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்
1930  – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.
1934  – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
1935  – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938  – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
1944  – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
1948–அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி”  திரையிடப்பட்டது.
1949  – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.
1962  – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1967  – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968  – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.
1969  – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.
1969–பிப்ரவரி3ம்தேதிதன்னுடைய   59 வது வயதில்சென்னையில்காலமானார்.
1972–அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.
1978  – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.
1987  – திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.
2010-அண்ணாநூற்றாண்டுநூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.
அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்”  என பெயரிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்  தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தற்போதிய திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது. 

சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை”  என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு  சென்னையில்  நிறுவப்பட்டது.

அறிஞர் அண்ணா 1931 தொடங்கி 1969 பிப்ரவரி வரை தனது நிகரற்ற உரைகளில், எழுத்துகளில் பொதுவுடைமை, பகுத்தறிவு, இடஒதுக்கீடு போன்ற மானுட வளர்ச்சிக்கான அடிப்படைக் கூறுகளைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.
 சீரான சிந்தனை, செறிவான சமூக நோக்கு, அதிகாரக் குவியல்மிக்க டெல்லிக்கு அடிபணிந்து போகாத ஆட்சிமுறை ஆகியவற்றை முன்னிறுத்தித் தமிழ்நாட்டுக்குச் சரியான தடம் அமைத்துக் கொடுத்தார்.
தன்னைக் கடுமையான முறையில் யார் பேசினாலும் ஏசினாலும் கவலை கொள்ளாமல் கொள்கை சார்ந்த நெறிகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதுதான் அவருக்கு வெற்றியை வழங்கியது.

தமிழன்னைக்கு சிறப்பு சேர்த்த  தமிழ்க் குடிமகன்  அறிஞர்அண்ணா அவர்கள் இன்று நம்மிடையே இல்லையாயினும்,அவரின் புகழ் அணயா விளக்காய்  தமிழர்களின் நெஞ்சங்களில் ஒளி விளக்காய் திகழ்கிறது.

அறிஞர் அண்ணாவின்  செப்டம்பர்  15.. பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தன் வசிய குரலால்... கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அண்ணன் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார் அண்ணா.

சி.என்.எ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் "தளபதி". பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான்.

பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து "திராவிட முனேற்ற கழகம்" என்ற தனி கட்சி கண்டார். இருந்த போதிலும் பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார்.

அண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் கரகரத்த குரலில் வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றளும் பெற்றவர்.

அண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொது கூட்டங்களில் பேசக்கூடியவர்.அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது. அப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது "மாதமே சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை"......என்பதே அந்தப் பேச்சு.

அறிஞர் அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராக பதவி வகித்தார். 1962 இல் அண்ணா மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டசபையில் இடம்பெற்றிருந்த பொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசகட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை அண்ணாதுரை அருமையாக பதில் கூறினார்.

"நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னையும்,கழகத்தையும் அதில் தீவிரமாக ஈடு படுத்திகொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும்,தி.மு.க விற்கும் கிடைத்தது. 1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார் அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார்.

அண்ணா தலை சீவமாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார் மோதிரமும்,கைகடிகாரமும் அணிவது கிடையாது. என்னை காலண்டர் பார்க்க வைத்து,கடிகாரம் பார்க்க வைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே இந்த முதல்வர் பதவி என்று அடிக்கடி சொல்லிகொள்வார். மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

அண்ணா அவர்கள் சாதுர்யமாக பேசுவதில் வல்லவர். ஒரு முறை தமிழக சட்டசபையில் எதிர் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அண்ணாவை பார்த்து " உங்களுடைய(ஆட்சியின்) நாட்கள் எண்ணப்படுகின்றன " என்று சொன்னதும் அண்ணா அதற்கு," என்னுடைய ஒவ்வொரு அடியும் அளந்து வைக்கப்படுகிறது" என்று பதிலடி கொடுத்தார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.

ஓர் இரவு திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (360 பக்கங்கள் கொண்டது) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார். முன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள், அதனால் ஊறுக்கு வெளியில் நின்று அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன் என்பார்.

ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமைக் கொண்டவர் அண்ணா. அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்கவைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. யேல் (yale ) பல்கலைகழகத்தில் அவர் ஆற்றிய உரை ஒரு வரலாற்று சம்பவம்.

யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார் அண்ணா, உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கிலஎழுத்துகளான ‘A,B,C,D' ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார்.உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார்.

அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் 'D' என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார். ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் Because என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - "Nosentence ends with because because‘Because' is a conjunction".

"கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும். அதுபோன்றே " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ,மறப்போம் மன்னிப்போம்,கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும்,பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.

சரித்திர நாயகன் வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1970 ம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான " கின்னஸ் ".

அண்ணாவின் மனைவி பெயர் ராணி. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.தன் அக்கா மகள் சௌந்தர்யாவின் குழந்தைகளான பரிமளம்,கௌதமன்,இளங்கோ,ராஜேந்திரன் ஆகியோரை தத்தெடுத்து வளர்த்தார். முதல்வராக அவர் இருந்து மறைந்த போது அவரிடம் இருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம்,ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு,நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூ. 5000, மைலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ.5000. இவை மட்டும்தான் அவர் விட்டு சென்ற சொத்துக்கள். ஆனால் எண்ணற்ற தம்பிகளை தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கி வைத்து விட்டு மறைந்தார் அண்ணா.
உடுமலை வரலாறு🌳🌳🌳🌳with V.K.Selvaraj...in Udumalaipettai..

1967 ல் சென்னை மாநில சட்டமன்றத்
தேர்தல் நடைபெற்ற பொழுது,
உடுமலை தொகுதி சட்டமன்ற தேர்தலில் "புனிதர்" சாதிக் பாட்சா அவர்கள் தி.மு.கழகத்தின் சார்பில்
வேட்பாளராக நின்றார்.

அந்த தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தேர்தல் பிரச்சாரத்திற்க்காக மேற்கொண்டார்.

உடுமலையில் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.
அண்ணா அவர்கள் முனீர் அவர்கள்
இல்லத்தில் தங்கி இருந்தார்.

ஜல்லிபட்டியில் நடைபெறும் கூட்டத்திற்க்கு செல்ல தயாராக இருந்தார்.

அதற்க்கு முன் அங்கு செல்வதற்க்கு ஒரு அம்பாசிடர் காரில், வேட்பாளர் சாதிக்,
உடுமலை வெ.காளியப்பன்( எனது தந்தையார்) , நிருபர் சீனிவாசன்
மற்றும் பலர் சென்றனர்.

அப்போது உடுமலை போடிபட்டியில்,
அண்ணா அவர்களை தாக்குவதற்க்கு
பலர் கும்பலாக தயாராக இருந்தனர்.

அங்கு வேல், கம்பு , தடிகள் , எண்ணெய் காய்ச்சிய பாத்திரங்கள் சகிதமாக இருந்தனர்.

கார் வருவதைப் பார்த்த அவர்கள் அண்ணா தான் வருகிறார் என்று நினைத்து அந்த காரை தாக்கினார்கள்

எது நடந்தாலும், காரை நிறுத்தாமல்
செல்ல சொல்லி அங்கு இருந்தவர்கள் தாக்கியும் கார் நிற்க்காமல் அடியை வாங்கிக்கொண்டு ஜல்லிபட்டி சென்றது.

அங்கிருந்து அண்ணாவுக்கு தகவல் சொல்லப்பட்டு, அண்ணா அவர்கள் அந்த கூட்டத்திற்க்கு வருவது தவிற்க்கபபட்டது.

பின்னர் காரில் சென்றவர்கள்
தளி, வழியாக கோமங்கலம்
சென்று அங்குள்ள தபால் நிலையத்தில் டில்லியிலுள்ள நாஞ்சில் மனோகரன் அவர்களுக்கு "தந்தி' மூலம்
பேரறிஞர் அண்ணா அவர்களை
கொல்ல முயற்சி! என்று தகவல் கொடுக்கின்றனர்.

அந்த தந்தியை பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் காலையில் டில்லி பாராளுமன்றத்தில்,
நாஞ்சில் மனோகரன் அவர்கள்,

தமிழகத்தில் எங்கள் இயக்கத்தின் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை கொல்ல முயற்சி செய்துள்ளனர், என்று கொந்தளிப்புடன் பேசினார்.


அந்த செய்தி கேட்டு நாடே கொந்தளிப்பை ஏற்படுத்தியது🌱🌳🌳🌳🌳