புதன், 31 அக்டோபர், 2018

Karthic KVT:

வளரும் தொழில் முனைவோர் வரிசையில்
அடுத்த நம் சொந்தம் :-

SPM TRANSPORT ...

சிவா என்றும் spm என்றும் நட்புவட்டத்திலும் தொழில்சதுரங்கத்திலும்
அழைக்கப்படும்
பரமசிவன் .S

உடுமலையை அடுத்த சோமவாரபட்டியை பூர்வீகமாக கொண்டிருப்பினும் தற்போது இடம்பெயர்ந்து தொழில்செய்வது தீபாலபட்டி

நமது அறக்கட்டளையின் ஆரம்பகால கட்டமைப்பில் இருந்தே நம்முடன் கரம்கோர்த்து அறம் செய்து வந்தாலும்
திருமணகோலத்தில் முறைப்படி அறக்கட்டளையில் இணைந்த முத்தான முதல் தம்பதி எனும் பெருமைக்கு சொந்தக்காரர்

பாரம்பரியமான குடும்பத்தில் கடைக்குட்டியாய் தோன்றி
பள்ளிப்படிப்புடன் ஏட்டுக்கல்வியை
நிறுத்தி தனது அனுபவம் மற்றும்
திறமையால் தற்போது
இரு கனரக வாகனத்தின் உரிமையாளராய் இயங்கிவருபவர்

மோட்டார் மற்றும் வாகனத்துறையில் அதிகம் ஆர்வம் பெற்று விளங்கினும்
விவசாயத்திலும் அதிக அக்கறையுடன் ,பொறுப்புடன் செயல்படும் இளைஞர்

நமது பண்ணை மற்றும் தொழிற்கூட தயாரிப்புகளை ஓரிடத்துலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பிவைக்க தயங்காமல் தொடர்புகொள்ளலாம்

இவரின்  தொடர்பு எண்:
 9842173809

 8778879195...

இங்ஙனம் .
கார்த்தி SR ..
கம்பளவிருட்சம் தொழிலசார்பு குழுமம்
www .kambalavirucham .in
கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
www.manamangalayam.in
உடுமலைப்பேட்டை ..
இராஜகம்பளாதார் தேவராட்டம் ...

கிராமத்தில் அழுத்தமாக ஒலிக்கும் உறுமி சத்தம். ஆட்டக்காரர்களின் அசைவில் அத்தனை ரம்மியமாக வெளிப்படும் சலங்கை ஒலிச் சத்தம். இசையும், நடனமும் ஒருங்கே சேர்ந்த அழகிய நாட்டுப்புறக்கலை. கிராமங்களில், மார்கழி மாதம் முழுவதும் ஆடி தமிழர் திருநாளான தைத்திருநாளை கொண்டாடுகின்றனர். பாரம்பரியம் மாறாத இந்த தேவராட்டக் கலை உடுமலைப்பகுதியின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கூடுதல் உற்சாகம்.
தை மாதம் துவங்கும் பொங்கல் விழாவிற்கு உடுமலை பகுதி கிராமங்கள் மார்கழி மாதத்திலேயே தயாராகின்றன. அடர்ந்த பனியை அகற்றி அனலாக உருமிஇசை ஒலிக்கிறது. கொட்டும் பனியில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தேவராட்டம் எனப்படும் உருமி ஆட்டம், சலங்கை மாடு மறித்தல் (சளகெருது ஆட்டம்), கும்மி ஆட்டங்களை பார்ப்பது மிகவும் அலாதியான அனுபவங்களில் ஒன்று.
தேவராட்டத்திற்காக இரவு நேரங்களில் இசைக்கும் உருமி கிராமம் தோறும் மார்கழி மாதம் முழுவதும் கிராமங்களில் எதிரொலிக்கும். தேவராட்டம் என்பது தேவர்களால் (கடவுளால்) ஆடப்பட்டது என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. இறைவனை வழிபடவும், வேட்டைக்குச் செல்லும்போது பாவனை ஆட்டமாகவும், மழை, திருமணம் போன்ற விசேஷச காலங்களில் சடங்காட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது.
தேவராட்டத்தில் 32 அடவுகள் உள்ளன. ஒவ்வொரு அடவுகளும் மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், ஒவ்வொரு மனிதனுக்குத் தேவையான உடற்பயிற்சிகளின் வெளிப்பாடாகவும் உள்ளது.
தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உருமி மேளம் மற்றும் காலில் கட்டப்படும் சலங்கை ஆகும். ஆட்டக்காரர்கள் மினு மினுப்பான தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். உருமி மேளத்தின் மூலம் ஆட்ட அடவுகளுக்கு ஏற்ப சுதி ஏற்றப்படுகிறது.
தேவராட்டம் ஆடப்படும்போது, ஊதப்படும் ஒவ்வொரு விசில் சத்தத்திற்கும் இடையே அடவுகள் மாற்றப்படுகிறது. பங்கேற்கும் அனைவரும் ஒரே நேரத்தில் இசைக்கு ஏற்ப சீராக கால்களையும், கைகளையும், உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்களுக்கு விருந்து.
ஆட்டத்தின் துவக்கத்தில் மெதுவாக துவங்கும் அடவு மாற, மாற வேகமும், உருமி சத்தமும், சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்சநிலைக்குச் செல்கிறது. ஆட்டம் துவங்கும் போது உருமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லும் அடவுக்கு வரும்போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது. ஒயிலாக பாடலுடன் சேர்த்து ஆடப்படுவது ஒயிலாட்டம் எனப்படுகிறது.
இதன் அசைவுகள் மனிதனின் அனைத்துப் பாகங்களையும் அசைத்துப் பார்க்கும். ஒயிலாக ஆடப்படும் ஆட்டம் ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடுவது தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது. மார்கழி மாத பனி இரவில் முன் பனி காலத்தில் ஆடப்படுகிறது.
தை பிறந்ததும் ஆட்டக்காரர்கள் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோயிலுக்கு சலங்கை மாடு புடைசூழச் சென்று தேவராட்டம் ஆடி தங்களது மார்கழி மாத ஆட்ட விரதத்தை முடிக்கின்றனர். இது இப்பகுதி மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்துள்ள நிகழ்வாக இருக்கிறது.
இந்த கலை அழியாமல் இருக்க உடுமலைப்பேட்டையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஜல்லிப்பட்டி, தளி, பெரிய கோட்டை, கம்பாளப்பட்டி போன்ற கிராமங்களில் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தற்போது தேவராட்ட பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 29 அக்டோபர், 2018

திரு .ரவிச்சந்திரன் ....திரு .மதன்குமார் ....
கரப்பாடி...உடுமலைப்பேட்டை
R M Collections  ...பூசாரிப்பட்டி  ...

கரப்பாடி ...அழகிய தென்னைமரங்கள் சூழந்த பசுமை மரங்கள் நிறைந்த கிராமம் ...ரவிச்சந்திரன் மாப்பிள்ளையின் பிறந்த ஊர் பள்ளிக்கல்வி முடித்தவுடன் ..பின்னலாடை திருப்பூரின் வாசம் தொற்றிக்கொண்டது ..ஒரு சிறு பின்னலாடை நிட்டிங் நிறுவனத்தில் சேர்ந்து படி படியாக தொழிலை கற்றுக்கொண்டு ..கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பகுதி நேர கல்லூரியில் ஆடை வடிவைமைப்பு தொழில் கல்வி கற்றுக்கொண்டு .தன் தனிப்பட்ட நுண்ணவரிவு கொண்டு புது புது டிசைன்களை உருவாக்கி ..தான் நினைத்து ஆடை வடிவைமைப்பு மூலம் வளர்ந்து வருவது மகிழ்ச்சி உரியது ..வளர்ச்சிக்கு உரிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் மூலமும் ...அழகான இன்றைய இளைஞர்களுக்கு விரும்பும் வகையில் பனியன்களை தயாரித்து ..விற்பனை செய்வது மகிழ்ச்சி ..இதை சந்தைப்படுவதற்கு ..பிளிப்கார்ட் ..அமோசான் ..போன்ற தொழில்நுற்பங்களை பயன்படுத்தி விற்பனை செய்வது கேட்டு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..அதுவும் நம் கம்பள சமுதாயத்தில் தொழில்முறை வியாபாரங்களை அவ்வளவு எளிதில் செய்யமாட்டார்கள் ...மாப்பிள்ளையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையுடன் வியாபார போட்டி களத்தில் ..எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் வளர்ந்து வருவது ..நமது சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் ..நம் சமுதாயத்திற்கு மாப்பிள்ளையின் பங்கு ..வளரும் இளைய சொந்தங்களுக்கு ஆலோசானைகள் வழங்கி வளர வழிசெய்யவேண்டும் என்பது எனது அன்பான கோரிக்கை ..அதற்கு கம்பளவிருட்சம் தொழில் சார்பு குழுமம் ..உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உங்களின் பொன்னான வியாபார கருத்துக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது ..உங்களின் பணிநேரம் போக ..பொன்னான விலைமதிப்பு மிக்க நேரத்தை  வரும் மாதங்களில் ஒருமணி நேரம் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் .இது நம் சமுதாய சொந்தங்களுக்கு பெரிதும் உதவும் ..உங்களின் நண்பர் சொந்தம் மதன்குமார் அவர்கள் .,..தற்பொழுது புதிதாக துவங்கி நல்லமுறையில் பூசாரிப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் ...கடையில் வித விதமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழகான நவநாகரீக உடைகள் அருமையாக உள்ளது ...அதுவும் கிராமத்து மண் கமழும் தாராபுரம் சாலையில் அமைந்த இருப்பது மகிழ்ச்சி ..கடையை தம்பி ..மதன்குமார் அவர்கள் வெகு சிறப்பாக நடத்தி வருவது மகிழ்ச்சி ...

தம்பி மதன்குமார் அவர்கள் பொறியியல் படித்திவிட்டு கடையை நிர்வகித்திருப்பது அருமை ..நம் கம்பள இளைஞர்கள் சுய தொழில் இறங்கி இருப்பது வளரும் .வரும் இளைய தலைமுறை குழந்தைச்செல்வங்களுக்கு தன்னம்பிக்கையளிக்கிறது ...தம்பி மதன்குமார் அவர்களின் தொழில் திறனை ..வரும் நாட்களில் தனிப்பதிவில் பதிவிடுகிறேன் ..விருட்சத்தின் விதைகளாக வளர்ந்து வர வாழ்த்துகிறது ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..
கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம்
உடுமலைப்பேட்டை ...
www.kambalavirucham .in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு






சனி, 27 அக்டோபர், 2018

என் அருமை உடுமலைப்......பேட்டை ...பெரிய.......கோட்டை ...நவீன்குமார் மாப்பிள்ளைக்கு. 

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Intro
Life Goes Nothing..first and last cry in between days to live to smile. ☺
Works at Aquasub Engineering
Student
Studied at Mech at kit coimbatore
Studied at DME in rmptc clg
Went to oxford hr sec school...

Life Goes Nothing..first and last cry in between days to live to smile. ☺
Works at Aquasub Engineering
Student
Studied at Mech at kit coimbatore
Studied at DME in rmptc clg
==========================================

என் அருமை காளாஞ்சிப்பட்டி பொம்மு ராஜ்    மாப்பிள்ளைக்கு  ... என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
Intro
Studied at Christian College of Engineering and Technology
Went to Christian College Of Engineering & Technology

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681
கம்பளவிருட்சம் அறக்கட்டளை 
உடுமலைப்பேட்டை ..
திரு .அருண்ராஜ் -மாலதி -மணமக்கள் திருமண வரவேற்பு நிகழ்வு
உடுமலைப்பேட்டை ..

இன்று மாலை எனது நண்பர் கேரள தமிழ் பேராசிரியர் கண்டிமுத்து அவர்களுடன் ..மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வுக்கு சென்றிருந்தது மிக்க மகிழ்ச்சி ..
என் ஆசிரியர் நண்பர்கள் குமரலிங்கம் ஆசிரியர் திருநீலகண்டன் ,ஓவிய ஆசிரியர் மதன்குமார் ,
பெதப்பம்பட்டி என் .வீ .பள்ளி ஆசிரியர் நண்பர்கள் சக்திவேல் ,ஆசிரியர் முருகேஷ் அவர்கள் ,
பொட்டிநாயக்கனூர் தலைமை ஆசிரியர் சீத்தாராமன் அவர்கள் ,
ஓட்டுநர் ஆண்ட்ரு அவர்கள் ,எனது பள்ளி தோழர் கண்ணன் அவர்கள் ,
A .நாகூர் பள்ளி ஆசிரியர் செல்வகுமார் ..ஆகியோருடன் சந்தித்து கலந்துரையாடியது பயனுள்ள திருமணவிழாவாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி

ஆசிரியர் நண்பர் முருகேஷ் அவர்கள் திருமண வரவேற்பு விழாவில் பாடல்கள் பாடியது மிக அருமை ..ஆசிரியர் நண்பரின் வகுப்பில் பாடம் எடுத்து தான் பார்த்துஇருக்கிறேன் ..பக்கத்தில் உக்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் ..அவரது தொலைபேசியில் இருந்த பாடல் ஒலித்தது ..பாடல் அருமை என்று பாராட்டினேன் ..நானும் ஓரளவுக்கு பாடுவேன் என்றார் ..பாடுங்களேன் ஆசிரியர் நண்பர் திடீர் என்று அழைத்து மைக் கொடுத்து எங்களுக்காக பாடுங்களேன் என்று கேட்டுக்கொண்டோம் ..அருமையான குரல்வளம் ஒரு மணிநேரம் அழகான பாடல்கள் பாடி திருமண சொந்தங்களை மகிழ்வித்தது அருமை ..ஆசிரியருக்குள்  இப்படி ஒரு திறமை என்று நேரில் பார்த்து பாடிய பாடல்கள் அருமை ..உங்கள் குரல் வளத்திற்கு பாராட்டுக்கள் ...

திரு .அருண்ராஜ் -மாலதி -மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..



வெள்ளி, 26 அக்டோபர், 2018

சிலம்பாட்டம் ...

"சிலம்பம்" என்ற சொல் "சிலம்பல்'' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்" என்ற பெயருண்டு.

கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்" என்ற பெயர் ஏற்பட்டது. 

திருக்குறளில் "கோல்" என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே"என்ற வரிகள் மூலம், "தண்டு" என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி" என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.


இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது
You Tube...காணொளி..ஷியாம் சுதிர் சிவக்குமார்  ..தகமை .காம் (thagamai .com )

வியாழன், 25 அக்டோபர், 2018


இன்று நம் கார்த்தி மாப்பிள்ளையின் பிறந்தநாள் ...

மாலை அந்திமயங்கும் நேரம் .தங்கள் துறை சார்ந்த வேலைகளை முடித்துக்கொண்டு .மாப்பிள்ளையின் பிறந்த நாளையும் ஒரு பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொண்டோம் .கிடைத்த நேரம் 45 நிமிடங்கள் . அருமை ..இன்றைய வளரும்  இளைய சொந்தங்களுக்கும் ,பல துறை தளங்களில் பணிபுரியும் நம் மாப்பிள்ளைகள் ,தம்பிகளுடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ...தற்பொழுது நடைபெறும் வியாபாரமுறைகள் பற்றியும் ,அதை எப்படி நடைமுறை படுத்துவது பற்றியும் அதற்கான வழிமுறைகள் ஏற்படுத்துவது பற்றியும் பேசியது மகிழ்ச்சி ..
கார்த்தி SR -மின்னணுவியல் ,
ஜெயக்குமார் - நிட்டிங் துறை
சதாசிவம் -தொல்லியல் துறை
மனோகரன் -இயந்திரவியல் துறை
செந்தில்குமார் -மினரல் நிறுவனம்
தினேஷ் பாபு -ஒளி ஒலி  தொழிநுட்பத்துறை
வெங்கடேஷ் -உடுமலை கணினி துறை
பொன் தமிழரசன் -காற்றாலை துறை
சிவக்குமார் - நிதியில் துறை
இன்றைய நாள் ஒரு விருச்சத்தின் விதைகளாக வளரும்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் தொழில் சார்பு குழுமம்
உடுமலைப்பேட்டை ..
www.kambalavirucham.in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு ...  

புதன், 24 அக்டோபர், 2018

T .கார்த்திக்குமார் ....பன்முகத்தன்மை  (கார்த்தி SR - 9787923028)
படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...
எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..
இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....
எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..
.வருங்கால தமிழ்நாடு வீரபாண்டிய  கட்டபொம்மன் பண்பாட்டு கழக பேச்சாளர்...
கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக
உடுமலைப்பேட்டை K .வல்லகொண்டாபுரம் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழக கிளை செயலாளர்
தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன்  வெளிகொண்டுவருபவர் ...
பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக ,
தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக ....
கம்பளத்து குமரிகளின் "அன்பு" செல்லப்பிள்ளையாக
நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக ..
என் அருமை மாப்பிளைக்கு
என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681






செவ்வாய், 23 அக்டோபர், 2018

மணிராஜ் சவுண்டு அண்ட் லைட்டிங்ஸ் 
Maniraj Sounds and Lightings....
பொட்டையம்பாளையம் -உடுமலைப்பேட்டை 

தினேஷ் மாப்பிளை தந்தை கூலி வேலைக்கு சென்று தன் உழைப்பின் மூலம் சிறு அளவில் இந்த ஒளி ஒலி அமைப்பு ஏற்படுத்தி நடத்திவந்தார் ..அதன் பின் நம் மாப்பிள்ளைகள் தினேஷ் கோவையில் தொழில் துறை பயிற்சி படித்துவிட்டு 
தன் தந்தைக்கு உதவுவதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு தற்பொழுது நல்ல முறையில் வளர்ந்து வருவது மகிழ்ச்சி .தற்பொழுது மணிராஜ் தம்பியும் பி.காம் படித்துவிட்டு அண்ணனுக்கு உதவியாக உள்ளது மகிழ்ச்சி ..

நமது சமுதாய சொந்தங்களின்  எந்த ஒரு திருவிழா என்றாலும் பொட்டையம்பாளையம்   "மணிராஜ் சவுண்ட் சர்வீஃச்"தான். கல்யாணம், கோவில் திருவிழா, சடங்கு , வாலிபர்களின் கைப்பந்து விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும், மணிராஜ் சவுண்ட் சர்வீஃச் தான் ஒலி&ஒளி அமைப்பு செய்வார்கள். முதன் முதலில்  ஊரில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும்போது இரண்டு சக்கர மோட்டார் பைக்கில்  குழாய் ஃச்பீக்கரை பக்கவாட்டில் கட்டிக்கொண்டு ஒரு வண்டியும், ஆம்பிளிபைய‌ர் மற்றும் ரிக்கார்டுகளை கேரியரில் வைத்துக்கொண்டு ஒரு வண்டியும், ட்யூப் லைட் மற்றும் சீரியல்செட் லைட்டுகளை  இன்னொரு வண்டியிலும் வைத்துக்கொண்டு மதியம் வாக்கில் கெள‌ம்பிவிடுவார்கள். தற்பொழுது மாப்பிள்ளைகள் நான்கு  சக்கர ஜீப் புதுவரவு ....

ஒரே நேரத்தில் பல விழாக்களுக்கு ஒலி & ஒளி அமைப்பு செய்யும்போது, நம் மாப்பிள்ளைகள் போன்ற‌ பல இளவட்டங்களுக்கு தனி ஆவர்த்தனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிடும். மைக் செட் ஓனர் தினேஷ் , யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிச் செல்வார். இரவு முழுக்க விழித்து , இடைவிடாமல் பாட்டுப் போடும் பணி தம்பி மணிராஜ்க்கு கிடைக்கும். அதில் இடை இடையே மைக்கில் பேச வாய்ப்பு கிடைக்கும். பதின்ம வயதில் ஊரில் இப்படி குரல் ஒலிப்பது பெரிய கெத்தாக எடுத்துக்கொள்ளப்படும். "பழைய மற்றும் புத்தம் புதிய பாடல்களுக்கு, மணிராஜ்  சவுண்ட் சர்வீஃச். உங்களின் திருமணம் மற்றும் அனைத்து இல்ல விழாக்களுக்கும் சிறந்த முறையில் ஒலி ஒளி அமைத்துக்கொடுக்கப்படும்" என்று நட்ட நடு ராத்திரியில் விளம்பரம் செய்துவிட்டு அதை இமாலய வெற்றியாக அடுத்த நாள் டீக்கடையில் கொண்டாடப்படும். அதுவும் பகல் நேரத்தில் ஊர் குமரிகள் ரோட்டில் நடமாடும்பொது, தங்கள் வெளம்பரக் குரலை ஒலிக்க விட பெரும் போட்டி இருக்கும் விடலைகளிடம்.

கல்யாண வீடுகள் அல்லது பொதுவான குடும்ப விழாக்களில் ஒலி&ஒளி அமைப்பது பெரிய விசயமாக இருக்காது. வீட்டில் போடப்பட்டுள்ள கொட்டகையில் இரண்டு குழாய் ஃச்பீக்கர் , அந்த வீடு இருக்கும் தெரு முக்கில் ஒன்று அல்லது  இரண்டு குழாய் ஃச்பீக்கர் என்று கட்டிவிட்டால் ஒலி அமைப்பு முடிந்துவிடும். கொடுக்கும் காசுக்கு ஏற்ப  குழாய் ஃச்பீக்கர் எண்ணிக்கை மாறும். ஃச்பீக்கர் கட்டி முடிந்தவுடன் மூங்கில் கம்புகளை தெருவில் நட்டு அதில் ட்யூப் லைட்டுகளை கட்டி , சீரியல் பல்புகளையும் போட்டுவிட்டால் ஒளி & ஒலி அமைப்பு வேலை முடிந்துவிடும். அதற்குப்பிறகு விடிய விடிய ஏதாவது பாடல்களைப் போட்டுக்கொண்டு இருந்தால் போதும். சில‌ நேரங்களில் விழாநடக்கும் வீட்டில் இருந்து யாராவது பொடுசுகள் வந்து  "எங்க மாமா இந்தப் பாட்டு போடச் சொன்னாக"  , "எங்க அக்கா இந்தப்பாட்டு போடச் சொன்னாக" என்று நேயர் விருப்ப பட்டியல் கொடுத்துவிட்டுப்போவார்கள்.  தெரிந்த குமரிப் பொண்ணுகள் இருந்தால் அவர்களுக்கான ஃச்பெசல் பாட்டுக்கள் கேட்காமலேயே ஒலிபரப்பு செய்யப்படும்.தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகள் விழாக்களில் கலக்குவார்கள் ...இப்படித்தான் நம் ஊரு விழாக்களில் மக்கள் மனதில் இடம்பிடித்து ..மணிராஜ் சவுண்டு சர்வீஸ் வளர்ந்து கொண்டு உள்ளார்கள் ..தற்பொழுது புதிய தொழிநுட்ப வசதிகளுடன் ஒளி பெருக்கிகள் வந்துள்ளதால் ..விழாக்களுக்கு தேடி வந்து பணிகளை தந்துகொண்டுள்ளார்கள் ..இனி வரும் காலம் அரசியல் ,கோவில் திருவிழா .எந்த ஒருவிழா என்றாலும் தினேஷ் அண்ட் மணிராஜ் மாப்பிள்ளைகளை காணலாம் ..முத்து மஹால் ,GK மஹால் ,ST ரத்தினவேல் மண்டபம் ,.என்று கல்யாண மண்டபத்திலும் காணலாம் ..கடந்த வாரத்தில் நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு விழாவிற்கு ஒலி அமைப்பு செய்த மாப்பிளைகளின் திறமைகளுக்கு கிடைத்த வரவேற்பு அவர்களின் சுய தொழில் காட்டும் ஆர்வம் ..பொது தளத்தில் எப்படி பெயரை நிலைநாட்டவேண்டும் என்பதை கடந்த இரண்டு வருடங்களாக பார்த்து வருகிறேன் ....இரண்டு மாப்பிள்ளைகள் பணிகள் இப்படி என்றால் ..தினேஷ் மாப்பிள்ளையின் இளையவர் ஒருவர் திரு .கார்த்திகேயன் -சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்துகொண்டுள்ளார் ..இவர் இரண்டு சகோதர்களுக்கு தக்க வழிகாட்டியாக உள்ளதை அறிந்து நம் சமுதாயத்தில் இப்படி இளைய சொந்தங்கள் இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் ..இனி நம் கம்பள சமுதாய விருச்சத்தின் விதைகளாக ,கிளைகளாக வளர வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம் 
www.kambalavirucham.in 
எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு (KVE )
உடுமலைப்பேட்டை 

திங்கள், 22 அக்டோபர், 2018

 உடுமலைப்பேட்டை கம்பள விருட்சம் அறக்கட்டளை  செயல்குழு உறுப்பினர் திரு  செந்தில்குமார் கண்ணுசாமி அவர்கள் வழிகாட்டியத்தின் மூலம் திரு . T. குருமூர்த்தி -B ,Sc chemistry அவர்களுக்கு  பொள்ளாச்சி அடுத்து உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பிணை பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்-வேலைவாய்ப்பு தகவல் -சின்னசாமி ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம்
www.kambalavirucham .in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

இன்று மாலை நேரம் .கொடிங்கியம் திருமண மண்டபம் .

..புது மாப்பிளை ..வி .சந்திரசேகர் அவர்களிடம் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக திருமணதற்கு வாழ்த்துவிட்டு ...30 நிமிடங்கள் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ..

தம்பி .ஆறுச்சாமி -பூவலபருத்தி தம்பியிடம் பேசியதும் மிக்க மகிழ்ச்சி ..தம்பி கேரளவாசி ...நிதியியல் துறை மற்றும் விற்பனை துறையில் பணியாற்றி கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சி

தம்பி ..செல்வக்குமார் ..ஐஸ் வேர்ல்ட் ...தம்பியை முகநூலில் அறிமுகம் ..தம்பி நம் இளைய சொந்தங்களுக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பு பற்றி பேசியதை பற்றி நினைவு படித்தினார் ...நன்றி

இன்று மூன்று பேரிடம் இரண்டு ஆண்டு கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் , வளர்ச்சியை பற்றி மூன்றுபேரிடம் கல்வி ,வேலைவாய்ப்பு ,கோவில் வரலாறு ..பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி ...புதிதாக ஆரம்பித்த நமது www.kambalavirucham,in செயல்பாடுகள் ,நமது கம்பள சமுதாய நிகழ்வுகள் .அனைத்தும் இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று பேசியது மிக்க பயனுள்ள நிகழ்வாக அமைந்தது .. மாற்றம் நம்மிடமிருந்து விருட்சத்தின் விதைகளாக ...

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பள விருட்சம் அறக்கட்டளை
www.kambalavirucham .in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை



சனி, 20 அக்டோபர், 2018

குணா ...ஸ்டிக்கர்ஸ் -வளரும் தொழிலதிபர்
உடுமலைப்பேட்டை .....
உங்கள் வாகனமும் குடும்பப் பெருமையை பேசட்டும்! அசத்தும் 'ஸ்டிக்கர்ஸ்'
தம்பி தன் கடுமையான 15 வருட உழைப்பில் சுயதொழில் கற்றுக்கொண்டு நம் சமுதாயத்தில் வளரும் தொழில்முனைவோராக வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..தன் தேடல் இத்துறையில்தான் என்பதை உணர்ந்து கொண்ட குணா அவர்கள் தனது சிறு சிறு வாடிக்கையாளர் நினைக்கும்  லோகோவை தன கைவண்ணத்தில் கணினி மூலம் நாம் நினைப்பதை ஸ்டிக்கர் மூலம் கொண்டுவருவதில் திறமையை கண்டு பல முறை வியந்துள்ளேன் .

இந்த தொழில் இறங்குவதற்கு முன் குணா தம்பி அதற்காக குறிப்பிட்ட இலக்குகள் எதுவுமின்றி தமிழ்நாடு  முழுவதும் ஒரு பயணியாக சுற்றித்திரிந்த காலகட்டத்தில் அவரை ஈர்த்த விஷயம் வாகனங்களின் மீது ஒட்டப்படும் விதவிதமான ஸ்டிக்கர்களும், அவற்றின் உள்ளடக்கமும். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில்  எல்லாப் பகுதியிலும் உள்ள ஆட்டோமொபைல் உரிமையாளர்களுக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையுண்டு. எல்லோருமே அவரவர் கொள்கை, நம்பிக்கை, ரசனை சார்ந்த விதவிதமான ஸ்டிக்கர்களை, வாசகங்களை தங்கள் வாகனங்களின் சுவர்களில் ஒட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று தம்பி குணா கூறும்போது தொழில் அவருடைய திறமை வெளிப்படுகிறது

தம்பி பயணங்களில் தனக்கு முன்னாலிருக்கும் வண்டிகளில் ஏதேனும் வித்யாசமான ஸ்டிக்கர்கள் பார்த்தால் இதுபோன்று டிசைனில் உருவாக்கவேண்டும்  என்று தேட ஆரம்பித்துவிடுகிறார்

இந்நிலையில்தான் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்பவும், ரசனைக்கேற்பவும் குடும்ப ஸ்டிக்கர் வடிவமைப்பதற்காக தற்பொழுதுள்ள போட்டி சூழ்நிலையில் தன்னை தனி திறமையுடன் வெளிப்படுத்த முடிகிறது .

தம்பி தற்பொழுது உயர்தர வினைல் காகிதத்தில் 3M அளவில் ஒளி ஊடுருவக் கூடியதாகவே உள்ள ஸ்டிக்கர்கள் கொண்டு அச்சிடுச்சு தருகிறார் . அப்போதுதான் அது ஒரு கோட்டோவியம் போல் தெரியும் என்பதற்காக இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்

உடுமலை பகுதியில் வாகனங்களில் விதவிதமான வாசகங்களை ஒட்டிச் செல்லும் மனிதர்களை ,இளைஞர்களை பார்க்கும்போது ..தம்பி குணா அவர்களின் நினைவு தான் வரும் ..தம்பி குணா கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் தம்பி அடித்து தந்த கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் லோகோ தான் இன்று உலகம் முழுவதும் கம்பள கொடி போல் பட்டுஒளி வீசி பறந்துகொண்டிருக்கிறது .....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் தொழில் சார்பு குழுமம்
கீர்த்தி வீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு
உடுமலைப்பேட்டை ...

வெள்ளி, 19 அக்டோபர், 2018

 திருமதி .சுதா சின்னச்சாமி -பல்லடம் ...
சாதனா ஆடை வடிவமைப்பாளர்
Sathana Fashion Designer-Palladam 
ஆள் பாதி, ஆடை பாதி என்பதெல்லாம் அந்தக் காலம். ஆடைதான் இன்று ஒருவரின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பெண்களின் ஆடைகள் என்றால் சொல்லத் தேவையில்லை. இழைகளே தெரியாத அளவுக்குக் கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் கோலோச்சுகின்றன. திருமணம், திருவிழா, பிறந்தநாள் விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்ற பிரத்யேகமான உடைகள் கிடைக்காதா என்று ஆதங்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களின் அந்த ஆதங்கத்தையே தன் அடையாளத்துக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் திருமதி .சுதா சின்னச்சாமி . இவரின் கைவண்ணத்தில் சாதாரணத் துணியும் பளபளக்கும் தோற்றத்தைப் பெற்றுவிடுகிறது.
பல்லடம் ..பா வடுகபாளையத்தை  சேர்ந்த நமது சொந்தம் திருமதி சுதா சின்னசாமி , அந்தப் பகுதியின் பெயர் சொல்லும் டிசைனர். கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்புப் பெண்களும் இவருடைய வாடிக்கையாளர்கள். இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் உடையின் அளவை மட்டும் கொடுக்கின்றனர். மற்றபடி எந்த மாடல், என்ன டிசைன் என்பதையெல்லாம் திருமதி சுதா சின்னசாமி  விருப்பத்துக்கே விட்டுவிடுகின்றனர். இதற்குக் காரணம், வாடிக்கையாளரின் உடல் வாகு மற்றும் அவரவர் முகத்தோற்றத்திற்கேற்ற வகையில் புதுப் புது டிசைன்களை சுதா சின்னச்சாமி அறிமுகம் செய்துவிடுவார்.திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் கடந்த 15 வருடங்களாக பெண்கள் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார் ..பொள்ளாச்சி ,பல்லடம் ,பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் ..இவர் வடிவைமைத்த பெண்கள் ஆடைகள் தமிழ்நாட்டையும் தாண்டி பிரபல துணிக்கடைகளில் விற்பனையாகி உள்ளது என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறது கம்பளவிருட்சம் தொழில் குழுமம் ..
பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன.
சிறுமியருக்கு மிடுக்கான தோற்றத்தை தரும் மஸ்தானி
பண்டிகை என்றதும் குழந்தைகளுக்கு நினைவுக்கு வருவது புத்தாடைதான். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வண்ணமயமான விதவிதமான ஆடைகள் அவ்வப்போது புதிய புதிய வடிவமைப்பில் புதிய வரவாக வந்துள்ளன. ஏராளமான புதிய மாற்றங்களும், வண்ண கலவையும் கொண்ட இந்த ஆடைகள் தீபாவளி பண்டிகைக்கு ஏற்றவாறு அதிக வேலைப்பாடும், செட்டுகள் நிறைந்தவாறு உருவாக்கப்படுகிறது. 
தீபாவளி பண்டிகைக்கு என பெண் குழந்தைகள் அணியும் ஆடை சற்று பிரம்மாண்ட தோற்றத்தை அளித்திட வேண்டும். அது மட்டுமின்றி அழகிய வடிவமைப்பு, பிரகாசமான வண்ண சேர்க்கை, லேஸ் மற்றும் எம்பிராய்டரி வேலைப்பாடு என அனைத்திலும் தனி கவனத்துடன் நேர்த்தியான நுணுக்க வேலைப்பாட்டுடன் ஆடைகள் உருவாகின்றன.
 பெண் குழந்தைகளுக்கு என லெஹன்கா, அனார்கலி, சுடிதார், பிராக், பாவாடை - சட்டை, மாடர்ன் டிரஸ்ஸிங், ஜீன்ஸ் டி-ஷர்ட் என பலவிதமான ஆடைகள் உள்ளன. இவையனைத்திலும் ஆண்டுக்கு ஆண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு மெருகேற்றப்பட்ட ஆடைகளாய் புதிய வடிவமைப்புகள் தரப்படும். அத்துடன் தீபாவளி ஸ்பெஷல் என்றவாறு சில ரகமும் வெளிவரும்.
தீபாவளிக்கு உகந்த பாரம்பரிய ஆடைகள் :
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகள் அணிவது உண்டு. தீபாவளி என்பதில் பெரும்பாலும் பாரம்பரிய ஆடைகள்தான் அணிவது உண்டு. அதாவது முன்பு பாவாடை சட்டை. பிறகு சுடிதார், பைஜாமா, அனார்கலி போன்றவை பாரம்பரிய ஆடைகளின் வரிசையில் இணைந்தன. சுடிதார் மற்றும் சல்வார் போன்றவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு அனார்கலி போன்றவை வந்தன. தற்போது மஸ்தானி, சல்வார் நீட்ஸ், லெஹன்கா சோளி, பாட்டியாலா சூட்ஸ், ரிவர்சுபின் ஜாக்கெட் போன்றவை வந்துள்ளன.
புதிய நெட் லெஹன்கா சோளி ஆடைகள் :
பெண்களின் ஆடைகள் அதிக பளபளப்பும், பிரகாசமான வண்ணத்திலும் இருக்கும். லெஹன்கா ஆடைகளின் பாவாடை மற்றும் மேல் சோளி சட்டையும் அதற்கேற்ற துப்பட்டாவும் உள்ளன. இதில் பாவாடை அமைப்பு அதிக பிரகாசமான வண்ணத்துடன் நெட் துணிவகையில் தங்க சரிகை வேலைப்பாடு முழுமையாகவும், கீழ்புறம் அகலமான லேஸ் பார்டர் (அ) சரிகை பார்டர் கொண்டவாறு உள்ளது. இதற்கேற்ற மேல் சட்டை அமைப்பு இடுப்பு பகுதி வரை நீண்டவாறு கீழ்பகுதியில் பார்டர் உள்ளவாறு உள்ளது.
லெஹன்கா சோளி செட்டில் கூடுதலாக நெட் துணியிலான மெல்லிய கோட் அமைப்பு கொண்ட மாடல்களும் வருகின்றன. இதிலேயே சில வகைகள் இரட்டை பாவாடை அமைப்பு கொண்ட முழு ஆடை அமைப்பாய் உள்ளது. இதில் கீழ் வரை பெரிய பாவாடை மற்றும் மேல் சற்று உயர்ந்த குட்டை பாவாடை மேல்புறமாய் உள்ளவாறு உள்ளது. மேல் சட்டை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு அழகுடன் விளங்குகிறது.
புதிய வரவான மஸ்தானி :
திரைக்கு வந்த ஒரு பாலிவுட் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடைதான் தற்போது மஸ்தானி என்றவாறு தீபாவளி புதிய வரவாக வந்துள்ளது. இது லெஹன்கா போன்றதும் அல்ல, சோளி அமைப்பும் அல்ல. இரண்டிலும் சற்று மாறுப்பட்ட ஆடை அமைப்பு. அதாவது மேல் சட்டை அமைப்பு கால் பகுதி வரை நீண்டவாறு உள்ளது. இதன் நடுவே ஸ்ட்ரெயிட் கட் உள்ளது. இதற்கு இணையாக கீழ் பகுதி பாவாடை அமைப்பு உள்ளது. அழகிய வேலைப்பாடு மற்றும் எம்பிராய்டரி செய்ய கோட் அமைப்பும், ஸ்லீவ்லெஸ்-யும் கச்சிதமான தோற்றத்துடன் உள்ளன. மஸ்தானி ஆடை பெண் குழந்தைகளுக்கு மிடுக்கான தோற்றத்தையும், பிரம்மாண்ட அமைப்பையும் தரவல்லதாக உள்ளது. 
நமது சொந்தம் திருமதி சுதா சின்னச்சாமி அவர்கள் ,சின்னச்சாமி அவர்களுக்கு தன் குடும்பத்தின் சுமைகளை பெரும் பொறுப்புகளை பொறுப்புடன் இரண்டு குழந்தைச்செல்வங்களையும் பேணிக்காத்து ..தங்களின் வளரச்சி யே சமுதாயவளர்ச்சி என்று கம்பள பெண் தொழில் முனைவோர் முதன்மையாகயாகவும் நம் கம்பள பெண்குழந்தைச்செல்வங்கங்ளுக்கு வழிகாட்டியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ..நமது கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமம் ..அவர்களுக்கு வியாபார வளர்ச்சிக்கு தகந்த வங்கி கடன் உதவி ஆலோசானைகள் வழங்கும் .நமது கம்பள விருட்சம் தொழில் குழுமத்தில் அவரின் பங்களுப்பும் உள்ளது ..அவரின் ஆலோசேனைகள் கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமத்திற்கு நமது பெரும் உதவியாக உள்ளது நன்றி..விருச்சத்தின் விதைகள் ..இனி ஆலமரமாக தன் விழுதுகளை கிளைபரப்பும் ..
இங்ஙனம் 
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 
கம்பள விருட்சம் தொழில்சார் குழுமம் 
உடுமலைப்பேட்டை .
www.kambalavirucham.in 
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு 









புதன், 17 அக்டோபர், 2018



கட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்! - சி.ஆர்.பார்த்திபன்
`
வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் பேட்டி

கட்டபொம்மன் வரலாறு இருக்கிறவரை சிவாஜி நிலைப்பார், ஜாக்சன் துரையான நானும்!

``கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை... வானம் பொழிகிறது; பூமி விளைகிறது... உனக்கேன் கிஸ்தி?" - முதல் இந்திய விடுதலைப் போர் வட இந்தியாவில் 1857-ல் தொடங்கியதாக புத்தகங்களில் புகுத்தப்பட்ட வரலாற்றைப் பொய்யாக்க உதவிய ஓர் ஆவணம், இந்த வசனம். 1857-ல் இருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்து இப்படி அழகுத் தமிழில் பேசியிருப்பானா எனத் தெரியாது. ஆனால், ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து அவன் வாழ்ந்து மடிந்தது நடந்த வரலாறு. 1799- ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட, பின்னாளில் அவனது வரலாற்றை எல்லோருக்கும் எளிதாகப் புரியவைத்தது, சிவாஜி கணேசன் நடித்த `வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம். படத்தில் `என்ன மீசையை முறுக்குகிறாயா... அது ஆபத்துக்கு அறிகுறி' என்றபடி, கட்டபொம்மனை சிறைபிடிக்க உத்தரவிட்ட ஆங்கிலத் தளபதி ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். " நீர் தான் ஜாக்சன் துரையா ? " என கட்ட்பொம்மன் சொல்லும் காட்சி சட்டென நினைவில் வர, அவரைச் சந்தித்தோம்.

``வயசு 90-ஐ நெருங்கிடுச்சு. 100 படங்களுக்கு மேல் நடிச்சுட்டேன். `ஏன், அண்ணே அண்ணே சிப்பாயண்ணே'னு சிவாஜி புள்ளகூடயே பாடினேன். ஆனாலும், ஜாக்சன் துரை பாத்திரம்தான் மக்கள் மனசுல பதிஞ்சிடுச்சு. ஒரு வருடத்துக்குமேல ஓடின படமாச்சே...'' - நடக்க வாக்கர் உதவி தேவைப்படுகிற போதும், பார்த்திபனிடமிருந்து நடுக்கமின்றி வருகின்றன வார்த்தைகள்.

``என் பூர்வீகம் வேலூர் பக்கம். மூதறிஞர் ராஜாஜியின் பங்காளிங்க நாங்க. பள்ளி நாள்களிலேயே நடிப்பு எங்கிட்ட வந்திடுச்சு. காலேஜ் படிக்க அப்போவே லயோலாவுக்கு வந்தேன். அங்கே படிச்சப்போவும் நடிச்சேன். பிறகு தலைமைச் செயலகத்துல வேலை. அங்கே இருந்த நாடகக்குழு கூப்பிட்டுச்சு. ரெண்டு மூணு வருடத்துல வேலையை விட்டுட்டு நடிக்கக் கிளம்பிட்டேன். அப்போதான் `பராசக்தி' ரிலீஸ் ஆகியிருந்தது. அதுவரைக்கும் நடிப்பு வருதுனு நடிச்சுக்கிட்டு இருந்தவன், சிவாஜி நடிப்பைப் பார்த்துட்டு ஒரு ஆசையோட நடிக்கத் தொடங்கினேன். நாடகம், சினிமானு எடுத்துக்கிட்டா ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, என்.டி.ஆர்னு ஆறு முதலமைச்சர்கள்கூட வேலை பார்த்துட்டேன்.


`ஜெமினி' ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன், ராமண்ணா, பி.ஆர்.பந்துலு, ஶ்ரீதர் தொடங்கி... கங்கை அமரன், பாக்யராஜ் வரைக்குமான இயக்குநர்கள் எனக்கு வாய்ப்பு தந்தாங்க. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரவிச்சந்திரன், சிவக்குமார், ஜெய்சங்கர். பிறகு, ரஜினி, கமல் பிரபு, விஜய்காந்த், கார்த்திக், சத்யராஜ் இவங்க எல்லோருடனும் நடிச்சுட்டேன். சிவாஜியுடன் நடிச்ச படங்கள்தான் அதிகம். ஒரு படத்துல..." என நிறுத்தினார்.

சிவாஜி கணேசன்....

எதையோ நினைவுகூர விரும்புகிறார் என நினைத்தோம்.

``ஒரு படம் என்ன சார்.. எல்லாப் படத்திலேயும் அவரோட அந்தக் குரல் இன்னொரு சிவாஜி. `சிம்மக் குரலோன்'னு சும்மா சொல்லலை. அந்தக் குரலால் நானே ஈர்க்கப்பட்டேன். என்னை அவரோட ரசிகன்னு சொல்லவும் தயங்கமாட்டேன்'' என்றவரிடம், `வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் குறித்துக் கேட்டோம்.

``நம்மள்ல யாரு கட்டபொம்மனை நேர்ல பார்த்தது?! இப்போ உள்ள தலைமுறைக்கு சிவாஜிதான் கட்டபொம்மன். வசதி வாய்ப்பு இல்லாததாலேயே மண்ணுக்காகப் போராடிய எத்தனையோ பேரை மறந்துட்டோம். கட்டபொம்மனை அப்படி மறந்துடக்கூடாதுனு அவர் நினைச்சிருக்கார். நான் கேள்விப்பட்டவரை, அவர் கட்டபொம்மன்மேல அவ்வளவு பிரியமுள்ளவரா இருந்திருக்கார். அந்தப் பிரியமே அப்படியொரு வரலாற்றுக் காவியம் உருவாகக் காரணமாச்சு. எனக்கு என்னோட படிச்ச ஒருத்தர் மூலமா அந்தப் படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அப்போ நாடகங்கள்ல பொதுவா எனக்கு போலீஸ் ஐ.ஜி கேரக்டரா கிடைச்சுக்கிட்டு இருந்தது. எனக்கே லேசா சலிப்பு தட்டியிருந்துச்சு. ரெண்டொரு சமயம் சிவாஜிகிட்ட இதைச் சொல்லி ஆதங்கப்பட்டிருந்தேன். இந்தப் படத்துல கமிட் ஆனப்போ, `என்ன பார்த்திபா... போலீஸ் கேரக்டரா கிடைக்குதேன்னு சொன்னியே, இப்போ வெள்ளக்கார துரை கேரக்டர் கிடைச்சிருக்கு சந்தோஷமானு கேட்டார். `அதுவும் போலீஸ் வேலைதானே'னு சொன்னேன். `அடப் படவா'னு சிரிச்சார்.

படம் ரிலீஸாகி அப்படியொரு வெற்றி. எனக்கும் அதுவரை இல்லாத ஒரு புகழ். `கிஸ்தி, திரை..' வசனமும், `துடிக்கிறது மீசை' வசனமும் பிரபலமாகி இன்னைக்குவரைக்கும் பள்ளிப் பிள்ளைங்க இந்த வசனத்தைப் பேசிக்கிட்டிருக்காங்க. கட்டபொம்மன் மறைஞ்சாச்சு. சிவாஜி போயிட்டார். ஆனாலும், அந்தப் படத்தைப் பத்தி நாம பேசுறோம். வருங்காலத்திலும் பேசுவாங்க. கட்டபொம்மன் வரலாறு நிலைச்சிருக்கிற வரை, தமிழ் மக்கள் சிவாஜி கணேசனையும் மறக்கமாட்டாங்க. கூடவே இந்த ஜாக்சன் துரையையும் மறக்கமாட்டாங்க!'' என்றவர்,

``எனக்கு என்னன்னா, வேலூர் பக்கம் பிறந்தவன் நான். கிட்டத்தட்ட கட்டபொம்மன் காலத்திலேயே எங்க ஊர்லேயும் வெள்ளைக்காரங்களுக்கு எதிராப் புரட்சி செஞ்சாங்க. ஆனா பாருங்க, வெள்ளைக்காரன் கேரக்டர்தான் எனக்குப் புகழ் தந்தது. `வீரபாண்டிய கட்டபொம்மன்' ரிலீஸாகி ரெண்டு வருடத்துல `கப்பலோட்டிய தமிழ'னுக்குக் கூப்பிட்டு வெள்ளைக்கார ஜட்ஜா நடிக்கச் சொன்னாங்க. அதுலயும் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடினவங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறதுதான் என் வேலை. ஒரு படத்துலயாச்சும் சுதந்திரத்துக்காகப் போராடுறவனா நடிக்க முடியாம போச்சே!'னு யோசிச்சுப் பார்த்திருக்கேன். அந்த ஆசை நிறைவேறாமலேயே போயிட்டதுல வருத்தம்தான்" என்கிறார்.

`இப்போ சினிமா பார்ப்பதுண்டா' என்றோம்.

``நடிக்கிறதை நிறுத்தி 20 வருடமாச்சு. ஒருசிலர் இன்னைக்கும் நான் ஒருத்தன் இருக்கிறதை ஞாபகம்வெச்சு சினிமா விழாக்களுக்குக் கூப்பிடுறாங்க. முடிஞ்சா போயிட்டு வர்றேன். முன்னாடி சினிமாவுல நடிக்கணும்னா, அழகா கலரா இருந்தா மட்டுமே முடிஞ்சது. இன்னைக்கு அப்படியில்லைனு தெரியுது. என்னைக் கேட்டா, சினிமாவுக்குனு ஒரு அழகு இருக்கணும். எப்போவாச்சும் பையன் சில படங்களைப் போட்டுக் காட்டுனா, பார்ப்பேன். அதுல, அந்த சேதுபதி (விஜய் சேதுபதி) நடிக்கிறது நல்லா இருக்கு. `நல்லா நடிக்கிறப்பா'னு பேசி வீடியோ அனுப்பினேன். மறுநாள் வீட்டுக்கு வந்துட்டான். ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிட்டுப் போனான். இப்போ நீங்க கட்டபொம்மன் நாள்களைப் பத்திப் பேசறீங்க. சினிமா பத்தி என்ன பேசினாலும் எனக்கு ஆர்வம்தான். ஆனா, உடம்பு தொடர்ந்து உட்கார்ந்து பேச ஒத்துழைக்கிறது இல்ல தம்பி." என்றார். அவரது உடல் சின்ன ஓய்வைத் தேட, பேட்டியை முடித்து விடை பெற்றோம்.

நன்றி :விகடன்
அய்யனார் ராஜன்


வியாழன், 11 அக்டோபர், 2018

கம்பள விருட்சம் தொழில்சார்பு  குழுமம் .....

நம் கம்பளவிருட்சம் குழுமம் புதிதாக தொடங்கியுள்ள வியாபார குழு ஒருங்கிணைப்பு மூலம் நம் சொந்தங்களை ஒன்றிணைப்பது ..கடந்த இரண்டு மாதங்களாக செயல்பாட்டினை தொடங்கி சிறப்பாக செயல்படுத்திக்கொண்டுள்ளோம் ..தொழில் சார் பு குழுமத்தில் ..இன்றைய வளரும் இளம் தொழில் முனைவோர்களை கண்டருந்து..அவர்களுக்கு சரியான வழிகாட்டல்கள் ,ஆலோசானைகளை வழங்கி அவர்களின் பொருட்களுக்கு சந்தைப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் கம்பளவிருட்சம் தொழில் சார் குழுமம் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தயாராக உள்ளது என்பதை  மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்
இங்ஙனம்
கம்பளவிருட்சம் தொழில்சார் குழுமம் .. 
புது வரவு ....செல்பேசி

எனக்கு என்று எந்த ஒரு பொருளும் வாங்குவதற்கு ஆர்வம் வருவதில்லை .ஆடைகள் ..வாகனம் .வாங்குவதற்கு ,பள்ளி ..கல்லூரி ..முடிய பெற்றோர் பார்த்து வாங்கி தருவதை ..பயன்படுத்துக்கொள்வேன் ..முதன் முதலில் வேலைக்கு சென்று ..பொருட்களை வாங்குவதற்கு என் நண்பர் உதவுவார் ...பிராண்டட் பொருட்கள் ..விலையும் குறைவாக இருக்கும் ...அதில் தனித்துவம் இருக்கும் ..திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஒரு கெத்து வருவதற்கு ஆடைகள் ..வாகனம் ..சொத்துக்கள் ..வாங்கவதற்கு அன்புடன் தோழி (மனைவி )உதவுவார் ..வாழக்கையில் ஒரு கட்டத்திற்கு பிறகு என் ஜூனியர் நண்பர்..அவர்களை அழைத்து செல்வேன் ...தற்பொழுது இருக்கும் புது வரவு ஆடைகள் .அருமையாக தேர்ந்து எடுத்து தருவார்கள் ..அருமையான தைலகம் பார்த்து ஆடைகைளை வடிவமைத்து தருவார்கள் .நாம் உடுத்தும் .ஆடையில் தானே நமது செயல்பாடுகளை  வெளிப்படுத்த முடியும் ..
இன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு எனக்கு என்று பார்த்து ..பார்த்து ..வாங்கிய   செல்பேசி..J 7..டியோ சாம்சங்  ...என் மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ..எனது பணிகளுக்கு தங்கு தடையின்றி சமுதாய பணி ..நான் தினம் தோறும் காதலிக்கும் எனது விற்பனை .பணி..தொய்வின்றி பணியாற்ற எனது செல்பேசி மிக உதவிகரமாக இருக்கும் என்பது ஐயமில்லை ...தொழிநுட்பம் வளர்ந்து வரும் சூழலில் செல்பேசி இன்றியமையாதது ..புது வரவு வந்துவிட்டது ..இத்தனை வருடம் உழைத்த செல்பேசி என்ன செய்ய முடியும் ...பாதுகாப்பாக (உயிர்மூச்சு )பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது தான் ..புது வரவு வந்தவுடன் ...ஏற்றி விட்ட ஏணி படிகளை தூக்கி எறியாமல் ...வாழ்க்கையில் ..நண்பராக இருந்தாலும் .கட்டிய மனைவியாக இருந்தாலும் ...சொந்தங்களாக இருந்தாலும் ..நான் வளர்ந்த வந்த பாதையை மறவாமல் இருப்பது நலம் ... நன்றி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681...

செவ்வாய், 9 அக்டோபர், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை
இரண்டாம் ஆண்டு பொதுக்குழு
அக்டோபர் ..7...2018..
வரவு மற்றும் செலவு கணக்குகள் :-


நம் சொந்தங்கள் அளித்த
நன்கொடைகள் வரவாக வைக்கப்பட்டு
அதன் மூலம் அன்றைய செலவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன


அதன் வகையில் அன்பளிப்பாளர்களாக

01. திரு. அசோகன் சீனிவாசன்
                                                      - 11600

02. திரு. ராஜேந்திரன்             - 500

03. திரு. தனசேகர்பொம்மையா -500

04.திரு. முருகராஜ்                   - 2000

05. திரு. காளிமுத்து               - 2000

06. திரு. சின்னச்சாமி            - 1000

07. திரு.  சின்னச்சாமி பல்லடம்-500

08. திரு.பொம்முசாமி               -1000

09. திரு. சாமிகுணம்                 -500

10. திரு. கார்த்திகேயன்           - 1000

11. திரு. இந்திரகுமார்                - 500

12. திரு. பொன்வேல்                 - 500

13. திரு. சிவக்குமார்                   - 3000

14. திரு. மாரிமுத்து                     - 1000

15. திரு. தினேஷ்பாபு                - 2000

16. திரு. செந்தில்குமார்            -1000


அன்பளிப்பு வகையில்

மொத்த வரவு ;- 28,600/=

செலவினங்கள் :-

மண்டபம் & கிளினிங்:-  3300

மளிகை & சமையல்   :- 4673

சேர் & டேபிள்& பாத்திரம்:- - 1000

வண்டி வாடகை   :- 350

கேமரா & ப்ரஜெக்டர் ;- 1000

மைக்செட்                   :- 2000

மேடை & ப்ளக்ஸ்       ;- 3000


மொத்த செலவு      :- 15,323


மீதி :- 13,277 \==


இத்தொகை

இனையதள கட்டமைப்பிற்காக செலவிடப்படும் என்பதையும்

பொதுக்குழுவிற்காக அறக்கட்டளை சந்தா மற்றும் சேமிப்பில் இருந்து
ஒரு ரூபாய் பணமும் செலவிடப்படவில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்


இங்ஙனம்
 பொருளாளர்
கம்பள விருட்சம்  குழுமம்
உடுமலைப்பேட்டை ..
www .kambala virucham .in


எத்தனை நகரங்கள் அசுர வளர்ச்சி அடைந்து மெட்ரோ சிட்டியாக மாறினாலும்

நமது உடுமலைப்பேட்டை மட்டும் இன்னும் டவுண் என்னும் அந்தஸ்து மாறாமல்.. கிராமங்களின் தலைநகரமாக விளங்குகிறது...

1.எங்கள் ஊர்ப் புறங்களில் மாட்டுச் சாணி வாசம் வீசும்.. சாக்கடை நாற்றம் வீசாது...

2. போக்குவரத்து இருக்கும்.. ஆனால் நெரிசல் இருக்காது..

3 சில நகரங்களில் இரவு விடிய விடிய பஸ் வசதி இருக்கும் போது எங்கள் டவுணில் எல்லா ஊருக்கும் கடைசி பஸ் ஒன்பது மணிக்கு மேல் இல்லை.. காரணம் தோட்டத்தில் மாடுகன்றுகளோடு விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாக வெளியூர் போக மாட்டாங்க.. அப்படியே போனாலும் கோயிலுக்குப் பழனி, வேலைக்குத் திருப்பூர், பெரிய வேலைனா கோயம்புத்தூரு அவ்வளவு தான்.. எதுக்கு விடிய விடிய பஸ்..

4..பாண்டிச்சேரி, கோவா, ஊட்டி னு போய் காசக் கரியாக்கி கூட்டத்துல நிம்மதி இல்லாமல் வர்றத விட குறைவான செலவில் திருமூர்த்தி அமராவதி னு அமைதியாக தனிமையில்  சொர்க்கத்திற்குப் போயிட்டு வந்திரலாம்..

5.சுத்தமான கடைவீதிகள். மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாத இடங்கள்.கனிவான பேச்சு.. அமைதியை உடைய நகரம்..

6.கரிசல் மண் சேறு, கரும்புச் சாறு வாசம், கன்னுக்குட்டியின் ஓட்டம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ், எப்போதாவது வரும் இரயில், பிராண்டட் மினிஷோரூம்ஸ், திருமூர்த்தி தண்ணீர், காற்றாலை அழகு, எல்லாவற்றிற்கும் மேலாக நாகரிகம் கலந்த எதார்த்தமான வஞ்சகம் இல்லாத வாங்.. போங்.. கொங்கு தமிழ்.

மற்ற பெரிய நகரங்களுக்குக் கிராமமாக
நமது ஊர் கிராமங்களுக்குத் தலைநகரமாக..

இதெல்லாம் பார்க்கையில் இன்னும் பல  நூற்றாண்டுகள் உடுமலைப்பேட்டை நகரம் இப்படியே இருக்க வேண்டும் என்ற ஆசை விரிகிறது...😀😍😊😊ஏன் என்றால்


உடுமலையில் சுற்றி நம் கிராம சொந்தங்கள் இருக்கும் மக்கள் ...மனதில் சூது ..வாது  தெரியாத ...வெள்ளந்தியான  மனம் கொண்ட நம் மக்கள் இருப்பதால் தான் ..மண் மனம் மாறாது ...இருப்பதால் ..அரசு துறை என்றாலும் ..தனியார் துறை என்றாலும் ...இங்கு வரும் மக்கள் ..உறவு முறை சொல்லி அழைப்பதால் ...வேற ஊருக்கு மனசு வரமாட்டேங்கதுங்க ....வாழ்க வளமுடன் .. .


திரு P .தனசேகர் .கனகவேணி ...ஓசூர் .....(சேகர் பொம்மய்யா )

என் அருமை தம்பி அறிமுகம் ஆனது 6 வருடங்களுக்கு முன்னர் முகநூலில் ..இவரின் நம் கம்பள சமுதாய வரலாறுகளை முகநூலில் பகிரும்பொழுதான் இவரின் நட்பு வட்டம் எனக்கு கிடைத்தது ..வாரம் ..வாரம் இவர் எழுதும் பதிவுகள் ..கம்பளத்தார் சொந்தங்களை ஒன்றிணைக்க ஒரு அழகான சொந்தம் கிடைத்தது மகிழ்ச்சி ...விருதுநகர் ..தூத்துக்குடி ..சென்னை ...சேலம் ..என்று நம் சொந்தங்கள் எங்கு எல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பணியில் கிடைக்கும் விடுமுறை நாளை நம் சமுதாய முன்னேற்றத்திற்கு ..வளர்ச்சிக்கு தன்னால் ஆனா விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்து ..வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளார் ...தம்பியின் திருமணத்திற்கு கூட நம் மாப்பிள்ளைகள ..தம்பிகளுடன் சேர்ந்து கலந்துகொண்டு வாழ்த்திவிட்டு வந்தோம் ..உடுமலையில் எந்த ஒரு கம்பளத்தார் விழா  என்றாலும் ..இனி தம்பியின் பங்கேற்பு இருக்கும் ..உடுமலையில் சுற்றி இருக்கும் மனதில் சூது ..வாது  தெரியாத ...வெள்ளந்தியான  மனம் கொண்ட நம் சொந்தங்கள் ..கல்வி ..வேலைவாய்ப்பு எல்லாத்துறைகளும் இருப்பதால் தம்பியுடன் நட்பு வட்டம் அதிகரித்துக்கொண்டே உள்ளது ..தம்பி தற்பொழுது சொந்தமாக பேக்கரி தொழில் வளரும் தொழிலதிபர் தற்பொழுது வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி..தம்பி படித்தது பொறியியல் துறை ...படிப்பு என்பது வெறும் கல்வி மட்டும் தான் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கையுடன் சாப்ட்வேர் பணி ...இன்ஜினியரிங் துறை என்று தடம் பதிக்காமல் ..வியாபாரத்தில் நம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று ..பேக்கரி தொழில் இறங்கி பட்டையை கிளப்பிகொண்டுஇருக்கிறார் ...இதற்கு என் அன்பு தங்கையும் அதற்கு பக்கபலமாக இருப்பது தன்னம்பிகையின் சாட்சி ..இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவரின் நண்பர்கள் ..சாப்ட்வேர் .வெளிநாடு என்று பணியில் இருந்து ..கார் ..பங்களா என்று ..மாட மாளிகைளோடு இருப்பார்கள் ..வங்கி கொடுக்கும் கடன் தொகையில் ..தவணை கட்டிக்கொண்டு இருப்பார்கள் ..தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வேலை எப்பொழுது மெயில் வரும் என்று கவலை இல்லாமல்...எந்த சூழ்நிலையிலும் ..தொழில்கைவசம் உள்ளது ..எதுக்கும் கவலை படவேண்டியது இல்லை என்று தன்னம்பிக்கையுடன் வாழக்கையை அழகாக எடுத்து செல்லலாம் ..நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையும் தம்பிக்கு தொழில் சார்பாக பக்கபலமாக இருக்கும் ..தம்பி நம் கம்பளவிருச்சம் அறக்கட்டளை முதலாண்டு  ஆண்டு கலந்துகொண்டு ..இரண்டாம் ஆண்டு குடும்பத்துடன் கலந்துகொண்டது மற்றட்ட மகிழ்ச்சி ..தம்பியும் நம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு  தகந்த ஆலோசானைகள் வழங்கி இரண்டு வருடங்களாக சொந்தங்களுக்கு தூரம் என்றும் தடையாக இல்லை என்று தனது பங்களிப்பை அளிப்பது அவரின் சமுதாய அக்கறையையும் நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கு விருச்சத்தின் விதைகளை தூவி வளர்ந்து  அதன் கனிகளை தருவதற்கு பங்களிப்பு என்றும் வரலாற்றில் செதுக்கி வைக்கும் என்பது ஐயமில்லை ...தம்பியின் பேச்சுக்கள் ..இணைய தளத்தில் நேரம் இருக்கும் பொழுது கேட்டு பாருங்கள் ...தன்னம்பிக்கையினை நமக்கு தருவார் ..நமது கம்பள விருச்சத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஏன் அழைத்தேன் என்று உங்களுக்கு இப்பொழுது தெரியும் .இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ..தம்பியிடம் அனல் தெறிக்கும் வளர்ச்சிக்கான சமுதாய கருத்துக்களை எதிர்பார்த்தேன் ..தம்பி என்னை போன்று மகிழ்ச்சியான சொந்தங்களை பார்த்தவுடன் ..திருமூர்த்தி மலையின் காற்று .இதமான சூழ்நிலையில் குறைவாக பேசி .மற்ற சொந்தங்களுக்கு நேரத்தை அளித்துவிட்டார் ...சேகர் பொம்மய்யா தம்பி போன்றவர்களால்தான் ..நம் வளரும் குழந்தைச்செல்வங்களுக்கு சமுதாயம் ..கல்வி ,பண்பாடு ..கலாச்சாரம் என்று சரியானா  திசையை நோக்கி கொண்டுசெல்ல முடியும் என்பது என் நம்பிக்கை ...விருச்சத்தின் விதைகளாக வளர்வோம் ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..
9944066681....
கம்பள விருட்சம் அறக்கட்டளை
உடுமலைப்பேட்டை ..
visit ...us ....www .kambala virucham .in









ஞாயிறு, 7 அக்டோபர், 2018

Karthic KVT:
07/10/2018
ஒட்டுமொத்த தமிழகத்துக்கும்
ரெட் அலர்ட் கொடுத்து திரும்பப் பெற்ற நாளின்
அதிகாலை நேரம் ..

ஏகோபித்த எதிர்பார்ப்புக்கிடையில் ஆதவன் மெல்ல தன் புத்தொளிகற்றைய பூமியில் பாய்ச்சிய தருணத்தில் மெய்சிலிர்த்து
அடுத்தடுத்து நிகழ்த்தும் அட்டவனை பணிகளை அசைபோட்ட படி
எனது இருசக்கர வாகனத்தின் இயந்திரத்துக்கு உயிர்கொடுத்தேன்

பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தோழனாய் வந்துசேர்ந்தான் என் தமையன் திருப்பதி தேவராஜன் ...

திட்டமிட்ட நேரத்தை விட சில மணித்துளிகள் அதிகமாக செலவானதாலும்
உயிர்த்தோழன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும்
வாலிபனாய் எனது மைந்தன்
பொன். தமிழரசன் காத்திருந்தலும்
மேலும் ஓர் பரபரப்பு மனதில் தொற்றிக்கொள்ள
நேற்று அடாத மழையிலும் சஞ்சீவி மலையடிவார சந்தையில் தேடித்தேடி தரம்பிரித்து வாங்கிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு
எனது தமையன் செந்தில்குமாரையும்
சேர்த்துக்கொண்டு
மூவராக வந்துசேர்ந்தோம்
தளி கோட்டை மரியம்மன் கோவிலுக்கு ...

மாற்றத்தையும் முன்னேற்றத்தையும்
ஒருங்கே விதைக்கும் மற்றொரு அண்ணனான ஆசிரியர் மாரிமுத்து அண்ணாவையும் சேர்ந்து
பஞ்ச பாண்டவர்களாய்
பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தை அனுக

செல்பேசி உயிர்பெற்று செல்லமாய் சினிங்கியது மறுமுனையில் ஒலித்தது தலைவரின் குரல்

நமஸ்காரம் மாப்பிள்ளை
நா கெளம்பிட்டனுங்க !!
இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பமுங்க

அட்வகேட் சாரு அக்கா எல்லோரும் சேர்ந்தே வர்றோருமுங்க என்றபடிஇனைப்பை துண்டித்தார்

அடுத்தடுத்த தேவைகளை அட்டவனை படி தயார் செய்து முடிக்கவும்
சொந்தங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்

இத்தகைய பரபரப்புக்கிடையில்
உடலியக்கம் நடைபெற
உருபொருள் தேடி
உடல் தன் வேலையைச் செய்யவே
நால்வரும் இனைந்து
இட்லி மற்றும் தக்காளி தேங்காய் சட்னிகளுடன் முடித்தோம் எங்கள் காலைச்சிற்றுண்டியை ...

இத்தகு இடைவெளியில் இடம் கேட்டு தொடர்பு கொண்ட எனது அண்ணன் சண்முக சுந்தரம்

நேனு பொள்ளாட்சின உண்டி கெளம்பேனு கெடிமேடு வழியாத ஒத்து மனிசொந்தாலு எவரேசி உண்டிதே ராவச்சு என்று தொடர்புகொண்ட அசோகன் மாமா

மண்டபம் தளிய தாண்டி போகனுங்களா மாப்பிள்ளை  என்றபடி இடம் வந்த காளிமுத்துமாமா
தளில இருந்து பஸ் மாறனுமா?  என்றபடி வந்து சேர்ந்த செல்வராணி அக்கா

வரும்போதே வரவேற்பிற்கு மாதுளை திராட்சை ஆப்பிள் ஆரஞ்சு பழங்களுடன் வந்துசேர்ந்த கார்த்தி அண்ணா
செயலாளர் வந்ததும் செயல்வேகமெடுக்க
குறித்த நேரத்தில் வந்த கேப்டன் நித்தி மாமா மற்றும் மணிராஜ் சவுண்ட் சர்வீஸ் தினேஷ் மாமா
கேமரா & புரொஜெக்டருடன் நுழைந்த நண்பர் வெங்கடேஷ்
இன்னும் பல சொந்தங்கள் முன்னிலையில்
முருகராஜ் அண்ணனை தலைமேற்று வழிநடத்த முன் மொழிந்தேன்
அதை பொருளாளர் தமிழரசன் வழிமொழிய
இனிதே துவங்கியது இரண்டாமாண்டு கலந்தாய்வு

முன்னின்று வழிநடத்த மேகனந்தன் மாமா செந்தில் அண்ணா
சிறப்புரையாற்ற வருகைதந்த கல்வியாளர் சக்திவேல் மற்றும்
அனுபவ உரை வழங்க கொடிங்கியம் சீனிவாசன் மாமா
மக்கள் பாடகர் வேலுமணி ஆகியோரை மேடையேற்றி உரைபகற தொகுப்பாளர் மாரிமுத்து அண்ணன் அழைக்க

அடுத்து வந்து இணைந்து கொண்டனர் தனசேகர் மாமா
மனோகர் அண்ணா
ராஜபாண்டியன்அண்ணா

ஆகியோரை வரவேற்று வரவேற்புரை நான் முடிக்க

அடுத்து வந்து வாசித்தார் செயலாளர் ஆண்டறிக்கை அதைத்தொடர்ந்த
பொருளாளர் நிதி அறிக்கை

நா போடிபட்டி தாண்டிட்டேன் மாரியம்மன் கோவில் ஸ்டாப்புனு
முன்னாடியே மெசேஜ் போடமாட்டீங்களா என்று திட்டியபடி வந்து சேர்ந்த வழக்கறிஞர் சிவரஞ்சனி

அரசுத்தேர்வுகள் பற்றி எடுத்துரைத்த
சிறப்பு அழைப்பாளர் சக்திவேல்
அவருக்கு பொன்னாடை போர்த்தி
நினைவு பரிசை நல்கி மரியாதை செலுத்திய ஊரக வளர்ச்சித்துரை ஜெயப்பிரகாஷ்அண்ணா

அதைத்தொடர்ந்து
மக்கள் இசை பாடல் மூலம் வரலாற்றை முன்மொழிந்த மக்கள் பாடகர் வேலுமணி அண்ணா
அவருக்கு மரியாதை  செலுத்திய செந்தில்ராமன்அண்ணா

எதிர்கால திட்டங்கள் பற்றி எடுத்துரைத்த சிவக்குமார் மாமா

அனுபவ உரை கொடுத்த சீனிவாசன் மாமா

இனையதளம் அறிமுகம் செய்து கருத்தளித்த அசோகன் மாமா

என அடுத்தடுத்த வரிசைபடுத்தி
அடுக்குகடுக்கு மொழிபகன்று அழகுத்தமிழில் எடுத்துரைத்த மாரிமுத்து அண்ணா

இடையே உறவினர் அனைவருக்கும்
தேநீர் உபசாரம் செய்த
சண்முகவடிவேல்
காளிமுத்து
கேப்டன்
என விழா நிகழ்வுகள் சூடுபிடிக்க
சிறப்புறை ஆற்றிய
சுக்காம்பட்டி பாளையக்காரர்
ராஜேந்திர குமார பாண்டி அண்ணா
தனசேகர் மாமா
விரிவுரை கொடுத்த சாமிகுணம் சித்தப்பா
தன் கருத்தை தயக்கமின்றி எடுத்துரைத்த
அர்ஜுன் மாப்பிள்ளை

சிந்து கவி தந்தையின் சிறப்புரை வரிகளுடன் சமுகத்தை மேம்படுத்த நினைக்கும் காளிமுத்து

வீடுதோறும் ஓர் குடியுரிமை பணிபுரியும் அதிகாரியை உருவாக்க கனவு காணும் திருப்பதி தம்பி
தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் சின்னச்சாமி அண்ணா
சிறுசேமிப்பின் மகத்துவத்தை எடுத்துரைத்த ஜெகதீஸ்வரி அக்கா
சுய உதவிக்குழுக்கள் பற்றி உரையாடிய
செல்வராணி அக்கா

அரசுத்துறைகள் பற்றி எடுத்துரைத்து
RC வருமான வரி தொடர்பான சந்தேகங்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்க என்ற சாமிகுணம் சித்தப்பா
என அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் ஆனந்தக் கூத்தாடி
அன்பளிப்புகளை அள்ளிவழங்கி விழா சிறக்க உதவி செய்த உள்ளங்களும்
ஒரு சொட்டு துளியின்றி விலக்களித்த வருணனுக்கும்
நன்றியுரை பகன்று நாட்டுப்பண் பாடி நிறைவு செய்தோம் இன்றைய கலந்தாய்வை


இனிவரும் காலம்
     இனிமேலும் தொடரும் ......

வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழ்நாட்டு மழைக்கு ரெட் அலர்ட் .... 

ஆனால் கம்பள விருட்சத்திற்கு மட்டும் கீரின் அலர்ட் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு இயற்கையை மிஞ்சுமா? அடாது மழைபெய்தாலும் . . . . .விடாது பொதுக்குழு நடைபெறும் வீரம் விளைந்த மண்ணில் வீறு கொண்டு எழுவோம் தளி பாளையப்பட்டில் சிலைகளாக இருக்கும் நம்முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள், நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம், வாருங்கள் அடலேறுகளே . .  
வரவேற்கிறது கம்பள விருட்ச அறக்கட்டளை உங்களுக்கான நேரம் துவங்குகிறது, இப்பொழுதே புறப்படத் தயாராகுங்கள் மகிழ்ச்சி மனதில் மட்டுமே எழுத்தில் மட்டுமல்ல, சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவோம் என்று எதிர்காலத் தலைமுறைக்கு வித்திடுவோம், கம்பள விருட்ச அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழு ரெட் அலர்ட் நாளிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது என்ற வரலாற்றில் பதிவு செய்வோம். மறைந்து போன வரலாற்றைக் கொண்டு வந்தது கம்பள விருட்சஅறக்கட்டளை மறைந்து போகாமல் இருக்கவே கம்பள விருட்ச அறக்கட்டளை முன்னெடுக்கிறது. வாருங்கள் வரவேற்கிறோம், வருகை தாருங்கள் கம்பள விருட்சத்தின் செயல்பாட்டு விதைகளாவோம். நமது எதிர்கால தலைமுறைக்கு பண்பாட்டையும் கல்வியையும் விழிப்புணர்வையும் வேலை வாய்ப்பையும் கொண்டு செல்வோம் வாருங்கள் சொந்தங்களே , வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது கம்பள விருட்ச அறக்கட்டளை

கம்பளவிருட்சம் அறக்கட்டளை
ஒருங்கிணைப்பு குழு

வியாழன், 4 அக்டோபர், 2018

கனவுலகில் இல்லை  கண்முன்னே கனலாய்த் தெறிக்கும் கம்பள விருட்சம்

கம்பள விருட்சம் அறக்கட்டளை

இனிதாய் வளரும்  இரண்டாம்   ஆண்டு  பொதுக்குழு
வீரம் விளைந்த மண்ணில்
ஆம் தளியில் வாருங்கள் உறவுகளே,

தளி கோட்டை மாரியம்மன் சமுதாய நலக்கூடத்திற்கு

ஓய்வெடுக்கும் ஞாயிறில் ஒய்வில்லாமல் உங்களோடு  07.10.2018
காலை  முதலே மகிழ்வாய்  தொடங்குவோம்   (9.30 மணிமுதல்)

அறக்கட்டளையின் ஆணிவேராகவும், கௌரவம் பார்க்காமல்  நமது குலத்தின்  கௌரவத்திற்காகப் பாடாற்றும் கௌரவத் தலைவர்  வழக்குரைஞர் முருகராஜ்  தலைமையில்

நமக்காகவே உழைக்கும்  முன்னோடி சொந்தங்கள் திரு. வ.மேகானந்தன், திரு.கே.செந்தில்குமார் முன்னிலையில்

நமது குலத்தின் வீர ஜக்கதேவியே வந்திருந்தோரை வரவேற்பு முகத்தான் செல்வி கோ. மகாலட்சுமியின் வரவேற்புரையில்

முத்தான முதலாண்டு சாதனைகளை ஆண்டறிக்கையாக  செயலாளர் கார்த்திகேயன் வாசித்தளிக்க

வரவும் செலவும்  நமக்கல்ல நமது  சொந்தங்களுக்கே  என்று வந்ததை வரவில் வைத்து செய்ததை செலவில்  வைத்து கம்பள விருட்சத்தின் வெள்ளை அறிக்கையாக பொன் தமிழரசன் சமர்ப்pக்க

நம்மையும் நம் செயல்பாட்டையும் வாழ்த்துரைக்கும் விதத்தில் திரு. ஆ. ராஜபாண்டியன், திரு. த.சேகர் பொம்மையா, இவர்களுடன் நமது தாய்க்குலத்தின் பேராதரவை  தெரிவிக்கும் வகையில்  வழக்குரைஞர் ஆ. சிவரஞ்சனி, திருமதி. எஸ்.செல்வராணி.

இவை  மட்டுமா நிகழ்வை  சிறப்பு சேர்க்க  வருகை தரும் சிறப்பு விருந்தினர்களாக
தனி வட்டாட்சியர் மதிப்புமிகு  வே. முத்துராமன்,
வணிக வரித்துறையின் அலுவலர் மதிப்புமிகு எம்.சாமிகுணம்,
கருத்தாளர்களாகவும், கல்வியாளராகவும், மதிப்புமிகு என். குமரன்
கல்வியாளராகவும், ஆதரவாளராகவும். திரு. ஆர். சக்திவேல்

நம்மையும் நம் நேரத்தையும் வீணாக்காமல் இருக்க இடையில் கலை நிகழ்ச்சிகள்,
இவை மட்டுமல்ல,  இனத்தின் விடியலை வேகமாக முன்னெடுக்க  சமூக ஊடகத் தளத்தில் இனத்தின் இணைய தளத்தைத் துவக்கி வைப்பவர் திரு. அசோகன் சீனிவாசன்,

இதுவரை செய்ததும். வெள்ளோட்டமே இனி வருவதுதான் உண்மையான தேரோட்டம் என அறக்கட்டளையின்  எதிர்கால நோக்கங்களை எடுத்துரைக்க உடுமலை சிவக்குமார்,

இவையனைத்தும் இனிமேலும் தொடர நன்றி எனும் சொல்லால்  சொல்லாமல்  அதையும் முறைப்படுத்திட திரு. எஸ்.ஆர். கார்த்திக்குமார்.

இவையனைத்தும் நிகழ்ச்சித் தொகுப்பாக்கி தொய்வில்லாமல், தோய்வில்லாமல்  உங்களிடையே  கனிரசமும், நவரசமும் இயல், இசை , நாடகம் எனத் தொகுத்து வழங்கும்  ஆசிரியர் பி.மாரிமுத்து.
இவையனைத்தும் நமக்காகவும், நம் இனத்தின் சொந்தங்களுக்காகவும், திட்டமிட்டு செய்யப்படுகிறது.

வாருங்கள் கூடிடுவோம். தளியில்   இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவை

சிறப்பாக நடத்தி வெற்றி விழாவாகக் காண்பித்திடுவோம்.

விழுதுகளை மதிப்போம் !  சமூக ஆர்வலர்களை மதிப்போம் ! பொறுப்பாளர்களை போற்றுவோம் !

புதன், 3 அக்டோபர், 2018


கம்பளவிருட்சம் அறக்கட்டளை -இரண்டாம் ஆண்டு பொதுக்குழு

சிறப்பு விருந்தினர் ...

திரு என் .குமரன் ...கல்வியாளர்

உடுமலை நகருக்கு பெருமை சேர்த்த என்.குமரன் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பணியில் உள்ளார் . தராசு பத்திரிகையானது உச்சகட்ட விற்பனையில் இருக்கும்போது இதழில் செய்தியாளராகவும். தராசு மக்கள் மன்றத்தில் மாநில அமைப்புச் செயலளாராகவும் பணியாற்றியுள்ளார். தராசு மக்கள் மன்றம் சார்பாக 1989 ஆம் ஆண்டு உடுமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். தற்போது திருப்பூரில் குமரன் பிரஸ் பதிப்பாளராக உள்ளார். தற்போது மாணாக்கர்களின் கல்வியில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இரண்டு நூல்கள் கல்வி தொடர்பாக வெளியிட்டுள்ளார். ஸ்காலர்சிப் (தமிழில்). How to Get Educational Loans to study in India and Abroad என்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இரண்டு புத்தகங்களும் மருத்துவம். பொறியியல், வேளாண்மை கல்விகள் பயிலுவதற்கு வங்கிக்கடன் பெறுவது எப்படி? தனியார் நிறுவனங்கள் கல்வி நிதி உதவி எவ்வாறு கொடுக்கின்றன என்பதைப் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

இவர் எழுதி வரும் கல்வி கடன் விழிப்புணர்ச்சி பற்றி எழுதிவரும் இதழ்கள் நாணயவிகடன் ,தினமணி ,தினமலர் ,இந்தியன் எக்ஸ்பிரஸ் ,தமிழ் இந்து ,ஆகியவாகும் ..

நமது உயர் கல்வி கற்கும்  குழந்தைச்செல்வங்கள் இவரின் சிறப்புரையை கேட்டு பயனடைவதற்கு நமது கம்பள விருட்சம் அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு பொதுக்குழுவிற்கு வருகை தருவது மிக்க மகிழ்ச்சி ...

கம்பளவிருட்சம் அறக்கட்டளை
விழா ஒருங்கிணைப்பு குழு ..