என் அருமை அமெரிக்கா நண்பர் அவர்களின் அழகான பதிவு ..நீங்களும் படித்து பாரெங்களேன் ....கீதா அம்மா ..அருமையான பதிவு ..படிக்க படிக்க திகட்டாத ..அம்மா ..மகன் ..மரு ..மகள் ...அற்புதமான குடும்ப அமைப்பு பதிவு ..கடவுளுக்கு நன்றி வாழ்த்துக்கள் ..
————————
அம்மா ஒரு மறை கழண்ட கேஸ் என்ற அபாயகரமான உண்மை அம்பிளிகள் கார்டு அறுபட்ட ஆறாவது விநாடியிலேயே என் பயல்களுக்கு புரிந்து போனது
அம்மா ஒரு மறை கழண்ட கேஸ் என்ற அபாயகரமான உண்மை அம்பிளிகள் கார்டு அறுபட்ட ஆறாவது விநாடியிலேயே என் பயல்களுக்கு புரிந்து போனது
அதென்ன கன்றாவியோ தெரியாது பயல்கள் பிறந்த க்ஷணத்தில் இருந்து எனது நாக்கையும் மூளையையும் இணைக்கும் நரம்பு பாதித்து இரண்டுமே கூட்டணி இன்றி தனித்து நின்று நோட்டா வை விட குறைத்து ஓட்டுக்கள் வாங்கி டெபாசிட் இழக்கும். பயல்களைப் பார்க்கும் நொடியெல்லாம் நாக்கு தானாகவே புஜிஜூ பப்பூயோ கூபூஉ என்ற அர்த்தமற்ற கொஞ்சல்களை உதிர்த்தவாறே இருந்தது
சரி பயல்கள் வளர்ந்து பெரியவங்களாகும் போதாவது இந்த பிரச்சினை தீருமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ராகுல் காந்தி கூட வளர்ந்து பிரதமராகும் வாய்ப்பு இருந்ததேயொழிய எனது கொஞ்சல் பிரச்சினை தீரும் வழியாய்த் தெரியவில்லை
ஒவ்வொருமுறை பயல்களைப் பார்க்கும் போதும் விக்கல் தும்மல் இருமல் மாதிரி ஏதோ ஒரு கொஞ்சல் வார்த்தை புறப்பட்டு வந்து சேரும். கெட்ட கேட்டிற்கு ரைமிங் வேறு
பெரியவன் “ அம்மாவின் யானை” சின்னவன் “அம்மாவின் பூனை”.இது “ அம்மா'ஸ் புலி” “அம்மா'ஸ் எலி” என்று அவ்வப்போது வேறுபடும். . மொபைலில் “Amma’s Yaanai calling” என்று வந்ததைப் பார்த்து என் தோழி..”Zoo ல இருந்து யாரோ கூப்படறாங்க” என்றாள்
ஆன பூன என்று கூப்பிட்டதற்கு என்ன என்று கேட்டிருந்த பயல்கள் சிறிது காலம் கழிந்து திரும்பிப் பார்க்காமல் அலட்சியப்படுத்தியவுடன் பல அதிர்ச்சி தரும் வெரைட்டியான ரைமிங்குகள் என்னிடம் இருந்து புறப்பட்டன. “மொட்டைய போட்ட கூபாபுல்”….. “சேட்டையை பண்ணிட்ட கூபாபுல்” . இது ஒரு சாம்பிள் “கூபாபுல் “க்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் கேட்டுவிட்ட நாகு சித்தப்பா நான் கொடுத்த பொழிப்புரையில் bull fight ring இல் தெரியாமல் அகப்பட்ட வடிவேலு கணக்கில் ஆகிவிட்டார்.
சிறிது காலம் பயல்களை “அதியமான் “ “தொண்டைமான்” என்று கூப்பிட்டுப் பார்த்தேன். திரும்பவில்லை. வரலாறு புரியாத பசங்கள் . அதை செல்லமாக சுருக்கி “ அதி ..”, “தொண்டை..” என்று தொண்டை வரள கத்தியும் பயனில்லை.
“குஞ்சாமிர்தம்’ “குஞ்சன்ஜங்கா” சற்று புன்முறுவலை வரவழைத்தது. ஆனாலும் பழைய குருடி கதவ தெறடி என்பது போல்…”Amma’s யானை” என்ற முதல் கட்டத்திலேயே நின்று விட்டது.
“குஞ்சாமிர்தம்’ “குஞ்சன்ஜங்கா” சற்று புன்முறுவலை வரவழைத்தது. ஆனாலும் பழைய குருடி கதவ தெறடி என்பது போல்…”Amma’s யானை” என்ற முதல் கட்டத்திலேயே நின்று விட்டது.
பயல்களுக்கு மீசை அரும்ப ஆரம்பித்து , தாங்களே கார் , ஓட்டக் கற்று வீட்டை விட்டு தத்தம் ஹாஸ்டெல்களில் வாழ ஆரம்பித்த பின்னும் மனசு என்னவோ அவர்களுக்கு ரெண்டு இட்லி ஊட்டி தலை சீவி ஸ்கூல் வேனில் ஏற்றிவிட்ட காலத்தை விட்டு நகர மறுக்கிறது.
என்ன சொல்ல வந்தேன் என்று புரியாமல் சுற்றி சுற்றி வருகிறேன் அல்லவா? இதோ வந்து விட்டேன் …….சில காலம் முன்பு அம்மாவின் யானை லவகேசம் வெட்கம் நாணம் எதுவுமின்றி காலால் கோலம் போடாமல் கண்ணுக்கு நேராய் பார்த்து தான் காதல் வயப்பட்டிருப்பதை சொன்னதும் ஆழ்ந்த தூக்கத்தில் என்னை யாரோ எழுப்பி ஒரு கூடை பன்னீர் புஷ்பத்தை கொட்டியது போல் இருந்தது. தூக்கத்தில் இருந்து திடீரென்று விடுபட்ட அதிர்ச்சி பன்னீர் புஷ்பத்தின் வாசம் இரண்டும் ஒரு சேர தாக்கின.
அட கடவுளே இப்ப தான் டயபர் மாற்றிவிட்டு இட்லிக்கு அரைக்க வந்தார் போல இருக்கிறது…. உளுந்து அரைத்து முடிவதற்குள் இத்தனை வேகமாகவா வளர்ந்தார்கள்!!!!! சந்தோஷம் கலந்த திகைப்பு மனத்தைக் கவ்வியது. ஓஹோ இது குழந்தை அல்ல…… குமரன் ….ஆகிருதியாய் வளர்ந்து காதலுக்கும் கல்யாணத்துக்கும் தயாராகிவிட்ட குழந்தை. இனி கங்காருவ்வை போல் நான் வயிற்றில் கட்டிக் கொண்டு சுத்த முடியாது. இறக்கி வைக்கும் தருணம் வந்து விட்டது.
எண்ணங்கள் சுற்றி சுற்றி வந்தன. நான் என் கணவர் இரு பயல்கள் என்ற வட்டத்தை பெரிதாக்கி இன்னொரு பெண்ணை உள்ளே விட வேண்டும். இனி இது போல் தத்துபித்து கொஞ்சல்கள் பினாத்தல்கள் எதுவும் கிடையாது. பயல்கள் “லூசாம்மா நீ?” என்றால் பொறுத்துக் கொள்ளலாம் மருமகள் சொன்னால் பொறுத்து கொள்வேனா?
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதோரு உருண்டை உன்னிகிருஷ்ணனைப் போல் எனக்கும் அடைத்தது.
இனி எங்கள் நால்வருக்கும் இடையே மட்டுமான இடக்குகள் சீண்டல்கள் கிண்டல்கள் கொஞ்சல்கள் எல்லாம் ஒரு மாற்று குறையத்தான் போகிறது
விசேஷங்கள் முடிந்து திரும்பும்போது ஏகாம்பரம் மாமா எப்படி ஏப்பம் விட்டார் என்ற அறிவுபூர்வமான விவாதங்களோ , அம்மாவின் பூனை இன்டெர்ர்வியூவில் எப்படி சொதப்பினான் என்ற ஆராய்ச்சியோ பண்ண முடியாது. மூன்றாம் மனுஷி முன் என் பிள்ளைகளை நான் மரியாதை கொடுத்தல்லவா நடத்த வேண்டும்…. என்ன கொடுமை சரவணன்!!!

எனக்கும் ஒரு பெண் குழந்தை இருந்திருக்கலாம் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கழிவிரக்கம் தோன்றியது… அவன் வர போகும் மருமகளை வீட்டிற்கு கூட்டி வந்து அறிமுகப் படுத்துவதாய் சொன்ன அன்றிரவு தூக்கத்தில் தத்துபித்து கனவுகள். அதில் பல முதியோர் இல்லங்கள் “ அம்மா இன்னிக்கு கிறிஸ்துமஸ் அதனால இன்னிக்கு எங்களோட வந்துடு “ என்று சின்னவன் எழுப்புவதற்கு கனவுக்குள் கனவு. ரேவதி சங்கரன் “இனிமே மருமகள் தான் மகள்” என்று உரலில் பாக்கு இடித்தபடி ஏதோ சொல்கிறார். நீயா நானா கோபிநாத்…. “மைக்க அவங்க கிட்ட குடுங்க அழாம சொல்லுங்கம்மா” என்று TRP ரேட்டிங்குக்கு அலை பாய்கிறார்.
சடாரென்று எழுந்தேன். என் மேல் எனக்கு கோபம் வந்தது. எத்தனை அழகான தருணம். என் குழந்தை கம்பீரமாய் கண்ணியமாய் என்னிடம் அவனது விருப்பத்தை சொல்லி இருக்கிறான். தன்னம்பிக்கையுடன் என்னிடம் அறிமுகப் படுத்த மருமகளைக் கூட்டி வருகிறான். சந்தோஷமாய் எதிர்கொள்ளாமல் என்ன அபத்தம் இது.
அந்தப் பெண் வந்தாள்…. பதட்டங்கள் குழப்பங்கள் எல்லாவற்றையும் மறந்து ஹா ஹா ஹி ஹீ என்று அளவளாவினேன். பயல்களின் சிறு வயது சேட்டைகளை அவள் உல்லாசமாக கேட்டு ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் பரீட்சை எழுதிவிட்ட நிம்மதி பிறந்தது
அவள் புறப்படும் வேளை வந்தது. பயல் அவளை ரயில் ஏற்ற கிளம்பினான். அவள் செருப்பை மாற்றிக் கொண்டிருக்கையில் மகனை பார்த்தேன். அப்போது எது நடக்கக் கூடாது என்று வேண்டி இருந்தேனோ அது நடந்தது… யெஸ்…… தண்ணீர் கூட குடிக்காமால் எவ்வளவு அடக்கி வைத்தும் என்னை மீறி கொஞ்சல் வந்தே விட்டது. அவன் கன்னத்தை கிள்ளி.. “Amma’s யானை” என்றேன்.
ஒரு வினாடி வெட்கம் கலந்த தர்மசங்கடமான மௌனம் நிலவியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்திருக்க..
மருமகள் மெல்ல என்னைப் பார்த்து முறுவலித்தாள்…… நிசப்தம் கலைத்து தன் கன்னத்தை என் பக்கம் ஸ்லோ மோஷனில் மெல்ல நகர்த்தினாள்….. தன் கையை என் தோளில் போட்டு கிட்டே வந்து என்னிடம் மெல்ல கொஞ்சலாக…”Who am I …..I am Amma’s……..?” என்றாள் …அந்த முகத்தை அப்போது தான் பக்கத்தில் பார்த்தேன் … ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று என்னிடம் இருந்த அதே படபடப்பு கலந்த ஆசையும் ஏக்கமும் அங்கு பிரதிபலித்தது………
இது இரு குடும்பங்கள் இணையும் “Merger” அல்லவா ……என் பயலை யாரோ வாங்கப்போகும் “acquisition” என்று படித்த நான் ஏன் குழம்பினேன்
மெல்ல அவளை அணைத்து….”You are amma’s கிளி” என்றேன்.

அம்மாவின் யானை …..கிளியென்றால் என்னவென்று அவளுக்கு மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டு போனது…….. கிளி…”Oh I am amma’s கிளி´ என்று கொஞ்சிக் கொண்டு போனது.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக