உடுமலை மண்ணிலிருந்து மிளிரும் தேசிய சாம்பியன் ....
உடுமலை மண் எப்போதும் வீரத்திற்கும் ,விளையாட்டுக்கும் பெயர் பெற்றதை நிரூபித்துக்கொண்டே உள்ளது ..உடுமலைப்பேட்டை எப்பொழுதும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது .
உடுமலைப்பேட்டை ஆர் .கே .ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சி .என் .நித்தின் ஆதித்யா .வயது ஒன்பது ஸ்கேட்டிங் விளையாட்டுவீரர் ,கடந்த 5 ம் தேதி முதல் 7 ம் தேதிவரை கோவா மாநிலத்தில் அகில இந்திய அளவிலான skating experts council committe நடத்திய கோவா ஸ்கேட்டிங் திருவிழாவில் பங்கேற்று ,500 மீட்டர் பிரிவில் 3 ம் இடம் வென்று வெண்கல பதக்கமும் ,ரிலே பிரிவில் முதலிடம் பெற்று தங்க பதக்கமும் வென்றுள்ளார் .இதன் மூலம் சர்வேதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் .
இதே மாணவர் கடந்த ஆண்டு நவம்பரில் பீகார் மாநிலத்தில் ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்ட்டிவிட்டி அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்த 2 வது அகில இந்திய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் முதல் முறையாக பங்கேற்று 500 மீட்டர் ,1000 மீட்டர் பிரிவுகளில் முறையே 3 ம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது .
மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்ற இம் மாணவர் விடா முயற்சியும் ,தன்னம்பிக்கையுடன் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார் ..உடுமலை மண் எப்போதும் வீரத்திற்கும் ,விளையாட்டுக்கும் பெயர் பெற்றதை நிரூபித்துக்கொண்டே உள்ளது ..உடுமலைப்பேட்டை எப்பொழுதும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது .மேலும் அவர் வெற்றிகளை குவிக்க ,பயிற்சி அளித்த ..சி .என் .நித்தின் ஆதித்யா அவர்களுக்கு துணை நிற்கும் ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி -கும் ..உடுமலைப்பேட்டை ஆர் .கே .ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும்.,சி .என் .நித்தின் ஆதித்யா,பெற்றோர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக