புதன், 31 ஜனவரி, 2018




My Dear Shyam...
கண்ணு தூங்கிட்டியாம்மா
இன்னும் இல்லம்மா தூக்கம் கண்ணை அசத்துது..
.
அப்பா .தூங்குனப்புறம் என்ன பா நடக்கும்..''
நீ கண்ணை மூடுவே..வெளியிலே நடக்குற எதுவும் தெரியாது..கொஞ்ச நேரத்திலே நல்லா தூங்கிடுவே.
ஆனா நீ காலையிலே இருந்து பார்த்தது நெனச்சது, பேசினது. விளையாடினது, சண்டை போட்டது எல்லாம் தூக்கத்திலே .உனக்குள்ளே கனவிலே வந்து போகும்..
அப்ப கண்ணுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்குமா?
அப்புடித்தான்
அது எப்புடி.. ஒரு நாள் பூரா நடந்தது முழுசும் ஒரு ராத்திரி கனவுல வருமா?
ஆமாம் கண்ணு வரும்... அதான் மூளை பகல்லே சிந்திக்கிற தைவிட ராத்திரிலேஎதான் அதிகமா வேலை செய்யுதாம்..
எதுக்கு அந்த வேலை ராத்திரிலே
அப்பத்தான் நீ நிம்மதியா பழச தேவையில்லாததை மறக்க முடியும்..
எதுக்கு பழச மறக்கணும்
பழச மறந்தா தான் புதுசு புதுசா நெறைய விஷயம் உள்ளே போகும்.
சரி சரி இப்ப தூங்கு..
, அப்பா...அப்பா இன்னும் ஒரேஒரு விஷயம்.
என்ன சொல்லு சாமி..
இப்படி தெனம் கனவு காணுறோம் ..ஆனா மனசிலே ஒண்ணுமே நிக்கலியே..
ஆமாம் சாமி.. எல்லா கனவும் 95% கனவு கண்ணு முழ்ச்சி 30 நிமிடத்திலே மறந்துடும்.
ஏ அப்பா அப்புடி..
அதையே நெனச்சுகிட்டு இருந்தா உடலுக்கு குழப்பம் வந்துடும்லே..அதான்..
சரி கண்ணு தூங்குடா.

திங்கள், 29 ஜனவரி, 2018


உடுமலை மண்ணிலிருந்து மிளிரும் தேசிய சாம்பியன் ....

உடுமலை மண் எப்போதும் வீரத்திற்கும் ,விளையாட்டுக்கும் பெயர் பெற்றதை நிரூபித்துக்கொண்டே உள்ளது ..உடுமலைப்பேட்டை எப்பொழுதும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது .

உடுமலைப்பேட்டை ஆர் .கே .ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சி .என் .நித்தின் ஆதித்யா .வயது  ஒன்பது ஸ்கேட்டிங் விளையாட்டுவீரர் ,கடந்த 5 ம் தேதி முதல் 7 ம் தேதிவரை கோவா மாநிலத்தில் அகில இந்திய அளவிலான skating experts council committe நடத்திய கோவா ஸ்கேட்டிங் திருவிழாவில் பங்கேற்று ,500 மீட்டர் பிரிவில் 3 ம் இடம் வென்று வெண்கல பதக்கமும் ,ரிலே பிரிவில் முதலிடம் பெற்று தங்க பதக்கமும் வென்றுள்ளார் .இதன் மூலம் சர்வேதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார் .
இதே மாணவர் கடந்த ஆண்டு நவம்பரில் பீகார் மாநிலத்தில் ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்ட்டிவிட்டி அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் நடந்த 2 வது அகில இந்திய சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் முதல் முறையாக பங்கேற்று 500 மீட்டர் ,1000 மீட்டர் பிரிவுகளில் முறையே 3 ம் இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது .

மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி பெற்ற இம் மாணவர் விடா முயற்சியும் ,தன்னம்பிக்கையுடன் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார் ..உடுமலை மண் எப்போதும் வீரத்திற்கும் ,விளையாட்டுக்கும் பெயர் பெற்றதை நிரூபித்துக்கொண்டே உள்ளது ..உடுமலைப்பேட்டை எப்பொழுதும் சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது .மேலும் அவர் வெற்றிகளை குவிக்க ,பயிற்சி அளித்த ..சி .என் .நித்தின் ஆதித்யா அவர்களுக்கு துணை நிற்கும் ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி -கும் ..உடுமலைப்பேட்டை ஆர் .கே .ஆர்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும்.,சி .என் .நித்தின் ஆதித்யா,பெற்றோர்க்கும்   மனமார்ந்த வாழ்த்துக்கள் ...





ஞாயிறு, 28 ஜனவரி, 2018

நமது சொந்தம் ...ஆசிரியர் ...திரு .தளி மாரிமுத்து அவர்களின் பிறந்த நாள் இன்று ..என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.வாளவாடி பள்ளியில் பணிபுரிந்து வருகிறார் ..இவரும் என்னைப்போன்று ..கடந்த நான்கு வருடங்களாக நம் சமுதாய நிகழ்வுகள் எது நடந்தாலும் அதில் கலந்துகொண்டு சிறப்பு செய்து வருகிறார் ,கம்பள விருட்சம்


அறக்கட்டளையின் -உறுப்பினர் ..செயல்குழு உறுப்பினர் ... அறக்கட்டளைக்கு ஆக்கமும் ,ஊக்கமும் தந்து ..அறக்கட்டளைக்கு அருமையான செயல்திட்டங்களை வகுத்து ..அதை நடைமுறைப்படுத்த தன்னால் ஆனா அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் ..தற்பொழுதும் கூட கட்டபொம்மன் பேரணி விழாவிற்கு காலைஉணவு அளித்து நம் சொந்தங்களுக்கு தன் மனநிறைவை வெளிப்படுத்தினார்..கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு வருமானம் வருவதற்கான சீட்டு எண்ணிக்கையை அதிகப்படுத்தி ..வரும் கசர் தொகை அறக்கட்டளை நிதிக்கு சேருமாறு ஆலோசனை வழங்கினார்..வரும் காலங்களில் அறக்கட்டளையின் மூலம் திட்டங்களை தயாரித்து ...அரசு துறைக்கு செல்வதற்கான குரூப் 4 ..பயிற்சி அளிக்கும் முறைகளை வரும் ஆண்டுமுதல் நடத்த ஏற்பாடுகள் செய்துகொண்டு உள்ளார் .கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ...  
திருப்பூர் கதை சொல்லி சதீஷ்குமார் ......

இன்றைய ஞாயிறு அழகான ,பனிபடர்ந்த காலை தளி ஜல்லிபட்டி வீரம் விளைந்த மண்ணில் ...சிறுவயதில் நமக்கு எல்லாம் பாட்டிகள் ,தாதாக்கள் ,கதை சொல்லி நம்மை வளர்த்தார்கள் ..இப்போது இருக்கும் சூழ்நிலைகள் ,,கதை சொல்வதற்கு பெற்றோர்களுக்கு நேரம் ..காலம் வாய்ப்பதில்லை ..அல்லது ..குடும்ப உறவுகளை முறிக்கும் காலகட்டத்தில் ..சிறு குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை ,சிந்திக்கும் திறமை வளர்க்க,குழந்தைகளோடு மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்து உற்சாகத்துடன் இருந்தது மனதுக்கு மகிழ்ச்சி ... தளி ஜல்லிபட்டி நூலகர் திரு .லட்சுமணசாமி அவர்களின் ஏற்பாடு செய்த நிகழ்வு அருமை ..இன்றைய காலை திரு. “கதை சொல்லி” சதீஷ்குமார் அவர்கள்  படைப்பாற்றல் வளர்த்தல், தன்னம்பிக்கைக் கட்டமைத்தல், கவனித்தல் & கூர்மைத்திறன் மேம்படுத்துதல், நட்பு & உறவு வளர்த்தல் போன்ற சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மேடை விளையாட்டு, கண்ணாடி-பயிற்சி, உடல் ஒத்திசைவுச் செயல்பாடு, கதை சொல்லும் பயிற்சி, ஆகியன கற்பிக்கப்பட்டன ...இந்த கதை சொல்லி சதீஷ்குமார் அவர்களின் உற்சாக துள்ளலுடன் ..குழந்தைகளுக்கு மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை ...இயற்கை வளத்தை காப்பாற்ற ,வளர்ப்பதற்கான விழ்ப்புணர்வு நாடகங்கள் ,பாடல்கள் ,அருமையான நிகழ்வாக இன்றய ஞாயிறு அமைந்தது ..வாழ்த்துக்கள் 

திங்கள், 22 ஜனவரி, 2018

உழைப்பால் உயர்நதவர்..திரு .தி .சின்னசாமி ..

தன்னம்பிக்கை ...திரு .தி .சின்னசாமி ...பிறந்த ஊர் தளி ஜல்லிபட்டி ..பாளையக்காரர்கள் வசித்த ஊர் ...அதனால் தானோ ...எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை தளரவிடாமல் ..வாழ்க்கையில் யாருடைய வழிகாட்டல்கள்  இல்லாமல் ..தன் சுய சிந்தனையில் பள்ளிப்படிப்பு படிக்கும் போதே ..தந்தையின் மறைவு..பேரிழப்பு ..தாய் மற்றும் கூட பிறந்த இரண்டு சகோதரிக்ளிக்கு,,,தந்தை செய்யவேண்டிய கடமைகளை ..ஒரு சிறு குறையும் இல்லாமல்  .திருப்பூர் மண்ணில் காலடி எடுத்துவைத்து ..பனியன் நிட்டிங் நிறுவனத்தில் சேர்ந்து... தன் கடுமையான உழைப்பால் ...30வருடகால தன் கடமை தவறாமல் ..ஒரு கூட்டு குடும்பமாக எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் ..தன் வாழக்கையையும் அமைத்துக்கொண்டு ..தன் மனைவியின் ஒத்துழைப்போடு ..இரண்டு அழகான குழந்தைச்செல்வங்களுடன்...சரியான திட்டமிட்ட சேமிப்பு மூலம் ...கனவு இல்லத்தை ...கட்டயமைத்து இன்று பல்லடம் நகரத்தில் புதுமனை புகுவிழா நடத்தி நம் சொந்தங்களையும் ..நண்பர்களையும் அழைத்து ஆசிபெற்றது மிக்க மகிழ்ச்சி ...தன்னம்பிக்கை மனிதர்களின் விழாவுக்கு சென்று வந்தது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சி ..சின்னசாமி அவர்கள் நமது கம்பள விருட்ச அறக்கட்டளையின் உறுப்பினரும் ..நன்கொடையாளரும் கூட ,நம் கம்பள சமுதாய இனப்பற்றாளரும் கூட .....இவரின் தன்னம்பிக்கை வார்த்தைகள் ..வழிகாட்டல்கள் ..இன்னும் எங்களுக்கு தேவைப்படுகிறது ...என் சார்பாகவும் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாகவும் ..வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பாகவும் ..வாழ்த்துக்கள் ... 

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

நம் கம்பள சமுதாயத்தில் ....ஒரு மைல்கல் ....
THE TAMIL NADU COMMERCE INSTITUTES ASSOCIATION..)
Coimbatore ...Tripur ..district .
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் கோவை -திருப்பூர் மாவட்ட சங்க கிளையில் பொன்விழா ஆண்டு கூட்டம் கோவை குஜராத் சமாஜம் உள் அரங்கில் 21-01-2018 -ம் நாள் ஞாயிற்று கிழமை காலை 9.00 மணியளவில் துவங்கியது .
கூட்டத்திற்கு கோவை திருப்பூர் மாவட்டங்களின் தலைவர் திரு .முருகவேலு தலைமை வகித்தார் ..பொன்விழா ஆண்டு சங்க கூட்டத்திற்கு நீதியரசர் திரு வீ .தங்கராஜ்  M .A .M .L .,அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஒரு எழுச்சி உரையாற்றினார் .நீதியரசரின்  பேச்சு  அனைவரின் கவனைத்தயும் ஈர்த்தது .தட்டச்சு கல்வி கல்வித்துறையிலும் வேலைவாய்ப்பு துறையிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பேசினார் ..
நீதி துறையிலும் ,கல்வி துறையிலும்  மற்றும் வேலைவாய்ப்புத்துறையிலும்
தட்டச்சர் ,மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியின் முக்கியத்துவத்தையும் பயிலாக உரிமையாளர்கள் மாணவ ,மாணவிகளுக்கு எவ்வாறு இந்த பாடங்களை கற்பிக்கவேண்டும் என்றும் ,தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளில் சுருக்கெழுத்தாளர் பணி எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து அதனால் அவருக்கு தேடி வந்த பதவி உயர்வுக்கும் பற்றி பேசியது கூட்டத்தினர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது .குறுகிய நேரமே பேச ஒதுக்கப்பட்டதால் ஒரு சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் பேசிவிட்டு தன உரையை முடிக்கும் தருவாயில் நீதியரசர் திரு .வீ .தங்கராஜ் அவர்கள் தன் கூட்டு குடும்பத்தில் சுமார் 150 பேர்இன்னமும் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர் .அனைவர்க்கும் ஒரே சமையல்தான் என்று கூறியதும் கூட்டம் நெகிழ்ச்சியில் ,மகிழ்ச்சியில் ,வியப்பில் ஆழ்ந்தது கூட்டத்தில் அனைவரும் பாராட்டி வியந்தனர் ...ஒரு சிறிய செய்தியை பேசி நீதி யரசர் தன் உரையை முடித்தார் ...

கூட்டத்தின் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் தலைவர் திரு .T .ரவிச்சந்திரன் கலந்துகொண்டார் .மற்றும் ஒரு சிறப்பு விருந்தினராக கோவை பண்டிட் நேரு வித்யாலத்தின் தாளாளர் .திரு .மாரியப்பன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் .
பொன்விழா ஆண்டு மலரை வணிகவியல் பள்ளிகளின் மாநில தலைவர் வெளியிட சிறப்பு விருந்தினர் நீதியரசர் திரு .வீ .தங்கராஜ் அவர்கள் ,பண்டிட் நேரு வித்தியாலயத்தின் தாளாளர் .திரு .மாரியப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டனர் .

இந்த பொன்விழா ஆண்டு கூட்டத்தில் உடுமலைப்பேட்டை திரு .K .முருகவேல் அவர்கள் ,கோவை திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களின்  தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் .பொள்ளாச்சி திரு .கே.ஸ் .ராமன்  நன்றிகூற கூட்டம் இனிதே முடிவுற்றது ..

இன்று நடந்தவணிகவியல் பள்ளிகளின் விழாவில்  நமதுகம்பள பண்பாட்டு கழக  சமுதாய இரு பெரும் தலைவர்கள்..கலந்துகொண்டு சிறப்பித்தது ..நம் சமுதாய வளர்ச்சிக்கு ..முன்னேற்றத்திற்கும் ..ஒரு மைல்கல் ...நம் வருங்கால எதிர்கால கம்பளக்குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெருதும் உதவும் ..நம் சமுதாய சொந்தங்கள் ..இது மாதிரி முன்னோடி நிகழ்வுகள் கலந்துகொண்டால் ..நம் குழுவுக்கு பகிருங்கள் ..வாழ்த்துக்களுடன் .உங்களின் .சிவக்குமார் உடுமலைப்பேட்டையிலிருந்து ....

மன்னிக்கவும் ...இனி வரும் காலங்களில் ...இது மாதிரி விழாக்கள் என்றால் முன்னரே அறிவித்து விடுகிறேன் சார் ...நமது நீதியரசர் கேட்டார் ..நம் சொந்தங்கள் யாரவது உள்ளார்களா ..என்று கேட்டார் ..உங்களின் பெயரைத்தான் சொன்னேன் ..நீங்கள் இருப்பது காளப்பட்டி அருகில் ..விழா சிறப்புரை உரை முடிந்து ..அவருடன் மருதமலை அழைத்துச்சென்று முருக கடவுளின் தரிசனம் செய்துவிட்டு ...மதியம் சிறப்பு விருந்தினருக்கு விழக்கமிட்டியினர் அன்பு கட்டளை செய்து இருந்தனர் ..மதியவிருந்து எங்களுடன் தான் என்று ...நேரம் குறைவாக இருந்ததால் ..preplan செய்யமுடியவில்லை சர்ர் ...












வெள்ளி, 19 ஜனவரி, 2018

அருமையான சந்திப்பு ...

இன்று மாலை அருமையான சந்திப்பு ...நம் சமுதாய சொந்தம் திரு .தங்கவேல் நாயக்கர் ...பெரியகோட்டை ...அய்யாவிடம் பேசியதில் ..நம் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் ..மதிப்பில் அடங்காதது ...சமுதாய நிகழ்வுகள் ...ஆழந்த சிந்தனையோடு பேசியது ..நம் வருங்கால தலைமுறை எப்படி இருக்கவேண்டும் ..எப்படி இருந்தது ..தற்பொழுது நம் இளையசொந்தக்களின் வளர்ச்சி ..கல்வி ..பொருளாதாரம் ..கூரிய சிந்தனையோடு உரையாடியது .நம்மையும் ஊக்கப்படுத்தி ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் செயல்பாடுகளை கேட்டு அறிந்தார் ..ஊக்கம் ..ஆக்கம் அளிப்பதாக கூறியுள்ளார் ..அதுவும் நம்ம மாப்பிளை செந்தில்ராம் அவர்களின் உரையாடல் மூலம்  ..30 வருடகால நிகழ்வுகளை தங்கவேல் அய்யா நம்மிடம் பகிர்ந்து நம் சமுதாய  இளைஞர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ..தொடரும் சந்திப்புகள் ..நாளை நம் சமுதாய இளைய தலைமுறை உடுமலையில் 23 வருடங்களுக்கு முன் இங்கு வந்து தன் அயராத ..கடுமையான உழைப்பின் வளர்ந்த புதிய தொழில்முனைவோரின் சந்திப்பு நிகழ்வை பகிர்கிறேன்..நன்றி




திரு .திருமூர்த்தி ....கல்வித்தகுதி பள்ளிப்படிப்பு ...விவசாயத்தொழில் ..சத்தியமங்கலம் ...விவசாயம் தன் தந்தையிடம் கற்றுக்கொண்டது ... கடந்த 5 வருடங்களுக்கு முன் இவரை ..முகநூல் மூலம் சந்திப்பு ...திருமூர்த்தி அவர்களின் நட்பு ..65 வயது இளைஞர் சுபாஷ் கிருஷ்ணசாமி அய்யாவின் மூலம் நட்பு கிடைத்தது ...இவரின் தோட்டத்தில் ..50 பேர் கொண்ட விவசாய சந்திப்பு ..மூன்று நான்கு வருடங்கள் முன் இவரின் நட்பு தற்பொழுது வரை தொடர்கிறது ..நம்மாழ்வார் அவர்களின் நட்பு மூலம் ..இவரின் தோட்டத்தில் விவசாய முறைகளை  பயிற்சி அளித்துள்ளார் ...நம்மாழ்வார் பவானி நீரின் அருமையை ..தன்போராட்டம் மூலம் ஈர்க்கப்பட்டு ...இயற்கை விவசாயம் செய்து கொண்டு .எதிர்கால இளைஞர்களுக்கு விழிப்புணர்வு அளித்து பதிவிட்டு ...செய்தித்தாள்கள் ..டிவி ஊடகங்கள் மூலம் வெளியுலகத்திற்கு வெளிவந்துள்ளார் ..மிகவும் அருமையான நண்பர் ...இவரின் மூலம் ..கடலூர் ...தருமபுரி coop forest ..பியாஸ் மனுஷ் ...பொள்ளாச்சி ...கடவூர் ...வானகம் ...இந்த விவசாய நண்பர் மூலம் பயணித்து வாழ்க்கையில் மலரும் நினைவுகள் ....இவரின் நட்பு கிடைத்தது பெரும் பாக்கியம் ...உங்களிடம் பகிர்வதில் பெருமைகொள்கிறேன் ...

வியாழன், 18 ஜனவரி, 2018



வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!
பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:
ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:
இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.
வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:
வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:
ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்
இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:
ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:
வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்
குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:
நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.
சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

புதன், 17 ஜனவரி, 2018



இன்று மரியாதை நிமித்தமாக ...நம்ம மாப்பிள்ளை நித்தி யை சந்தித்து விட்டு வந்தேன் ..நம்ம மாப்பிள்ளையை சந்திக்க சென்றபொழுது .இன்று A .வாடிப்பட்டி ..திரு .ராமசாமி அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..70 வயது இளையஞரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..சில நிமிடங்கள் பேசினாலும் ..பேசுவதற்கு இனிமையானவர் .திரு .ராமசாமி (அலைபேசி எண் .9786336938) அவர்கள் ..கார் ,கனரக வாகனங்கள் ..விற்பனை செய்து வருபவர் என்று அறிந்ததும் எனக்கு மற்றட்ட மகிழ்ச்சி ..அவருடன் புகைப்படம் எடுக்க இயலவில்லை ...மற்றொரு நாள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது ...புகைப்படம் பதிவிடுகிறேன் ...கேப்டன் நித்தியானந்தம் மாப்பிளை அறிமுகம் செய்து வைத்தார் ..நித்தி மாப்பிளைக்கு நன்றி ....எ.வாடிபட்டியில் இருந்து ..இந்த இளைஞர் இரு சக்கரவாகனத்தில் காற்றில் மிதந்து வருகிறார் என்றபோது எனக்கு ஆச்சரியம் ..இவரை பார்க்கும் போது ..தன்னம்பிக்கை கூடுகிறது ..அவரின் வியாபார தொடர்புகள் வேண்டுவோர் ..70 வயது இளைஞரை தன்னம்பிக்கை சொந்தத்தை தொடர்புகொள்ளலாம் ...வாழ்த்துக்கள் ..

நன்றிகள் :கார்த்தி SR ..தமிழரசன் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்


செவ்வாய், 16 ஜனவரி, 2018

கரப்பாடி ராக்ஸ் .....

இன்று ஆல்கொண்டம்மன் கோவிலுக்கு ....சீரும் காளையுடன் ..அடிவள்ளி ஜக்கம்மாள் கோவிலில் இருந்து ...எங்க வீட்டு மகாலட்சுமிகளுடன் தொடங்கி வைத்த தேவராட்டதுடன் ...ஆட்டம் ...பாட்டம் ...கொண்டாட்டம் ..நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகளுடன் ...மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த திருவிழா ...ஆல்கொண்டம்மன் மக்கள் வெள்ளத்தில் நீந்தி ..அடிமேல் அடிவைத்து ..தேவராட்டம் ...சலிகெருது ..சீரும் காளையுடன் .நம் சொந்தங்களுடன் ..கலந்துகொண்டு வந்தது மகிழ்ச்சி .நேரம் சென்றது கூட தெரியவில்லை ...அந்தளவுக்கு ..பக்தி பரவசத்துடன் ..வணங்கி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி ...இந்தஆண்டு இயற்கை சோதிக்காமல் ..விவசாயம் செழிக்க ...கால்நடைகள் அபிவிருத்தி பன்மடங்கு பெருகி செல்வம் செழிக்க  ஆல்கொண்டம்மன் ..அனைவர்க்கும் அருள்புரிவாராக .... பொங்கல் விழா 2018...
\
இன்று ...என் வாழ்நாளில் மறக்க முடியாத ...நாள் ...43 வயதில்  தேவராட்டம் ஆடியது ...எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ...உடுமலைப்பேட்டை தேவராட்டத்தை எங்கள் வீட்டுக்கு வந்த சொந்தங்களுடன் ...தளி ஜல்லிபட்டியில் சிறுவயதில் பார்த்து ..இருக்கிறேன் ..தேவராட்டம் ஆடுவதுக்கு கொஞ்சம் கூச்சம் ..அச்சம் ..எங்கே தப்பாக ஆடிவிடுமே என்ற பயம் காரணமாக ...விளையாட ஆர்வம் கொள்ளவில்லை ...இன்று ..அடவள்ளி ஜக்கம்மாள். யை .. வேண்டி ஆடி பார்த்துவிடுவோமே என்ற ஆர்வத்தில் ..ஆல்கொண்டம்மன் கோவிலில் ...எனக்கு தெரிந்த பயிற்சி இல்லாமல்  2 நிமிடங்கள் ஆடியது மற்றட்ட  மகிழ்ச்சி ...எனக்கு ஊக்கம் கொடுத்த நம்ம மாப்பிள ..கார்த்தி திருப்பூர் மாப்பிள்ளைக்கு நன்றி ...

திங்கள், 15 ஜனவரி, 2018

குழந்தை செல்வங்களுடன் ...மனம் நிறைந்த பொங்கல் ..

நேற்றும் இன்றும் ...குழந்தை செல்வங்களுடன் கொண்டாடிய பொங்கல் அருமையான மனதிற்கு மிக்க மகிழ்ச்சி ..எதிர்பாராவிதமாக சந்தித்த ஷியாம்சுதிருடன்  இருந்த ஒரு மணிநேர துளிகள் ...இந்த வருடம் முழுவதும் மனதுக்கு தாங்கும் வல்லமை படைத்தது.
குழந்தை செல்வங்களுடன் ..சலிகெருது ஆட்டம் ...தேவராட்டம் ..பொங்கலன்று வெளியூர் இருந்து வந்த ... தம்பி ..அக்கா ,மச்சான் ..அவர்களின் குழந்தைகளுடன் ...நம்ம மாப்பிள்ளைகள் ..தம்பிகள் .நம் சொந்தங்களுடன் சேர்ந்து .. ...பொங்கல் திருவிழாவை கொண்டாடியது ..புதுவிதமான மகிழ்ச்சியும் ..இன்னும் வாழ்வில் கடக்கவேண்டிய பொறுப்பும் ..சமுதாய சிந்தனைகளுடன் ..முன்னேற்றங்கள் ...கல்வி ,வேலைவாய்ப்பு ..வரலாற்று நிகழ்வுகள் ..அதிகம் உள்ளது ...நம் இளைய சொந்தங்களுடனும் ..நம் சமுதாய தலைவர்கள் ,பெரியவர்களுடன் ..ஒருங்கிணைந்து செயல்பட இந்த தைத்திருநாள் வழிவகுக்கும் .இன்று மறைந்து வரும் திருவிழாக்கள் பற்றி நம் எதிர்கால குழந்தைச்செல்வங்களுக்கு ...கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு  உள்ளது .....வாழ்த்துக்கள் ...ஆசிர்வாதங்களுடன் ...வரவேற்போம் ...


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

மாட்டு பொங்கல்

மாட்டு பொங்கல் -15th Jan 2018
இது உழவர்கான நாள், சூரியனுக்கான நாள், எல்லா மகிழ்ச்சியும் கொண்டு நீங்கள் வாழ எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

என் செல்ல ஷியாம் சுதிர் சிவகுமார் .......ன்  இனிய குலதெய்வமான மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ...உடுமலைப்பேட்டை .....மாட்டுப்பொங்கல் ..2018...
தை பிறந்தால் வழி பிறக்கும்.....

சனி, 13 ஜனவரி, 2018

பொங்கல் ...காப்பு கட்டுதல் முறை

அழகான விடியல் ...எங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளுடன் காலைநேரத்தில் பொங்கல் திருவிழாவிற்கு தேவையான ..கரும்பு ..மஞ்சள்கொத்து ...ஆவாரம்பூ..மாவிலை இழைகளுடன் இன்று உடுமலைச்சந்தையில்
பொங்கல் திருவிழா கூட்டத்துடன் கொள்முதல் செய்தது மகிழ்ச்சி .. ..போகி முடிந்து மாலை அந்திமயங்ககும் வேளையில் நம் வீட்டில் வேப்பம் இழையுடன் சேர்த்து சிறுபீளையும் வீட்டின் முற்றத்தில் காப்பு கட்டுப்படும்

கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்! 


காப்பு இலைக்கொத்தில், மாவிலை, ஆவாரை, தும்பை உள்ளிட்ட மூலிகைகளும், சிருபீளையும் இருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு, மாவிலை, காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் பிராண வாயுவை சீராக்கும் தன்மை மிக்கது, அதுபோல சிறுபீளை நச்சுத் தன்மை மிக்க பூச்சிகளை விரட்டி, சுற்றுப் புறத்தை விஷப் பூச்சிகள், விஷக் கிருமிகளிடமிருந்து காக்கும் இயல்புடையது.
இதனாலேயே, வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர். அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர்.
இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்....
நம் முன்னோர்கள் நமக்கு வாழ்வியலை அழகாக தமிழர் திருநாளை கொண்டாட கற்றுக்கொடுத்துஇருக்கிறார்கள் ...நம் வருங்கால தலைமுறைக்கு இதை சிதறாமல் கொடுக்கவேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது ...என்றும் உங்களுடன் ஷியாம் சுதிர் சிவக்குமார் ...பொங்கல் 2018....தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..முதல் நாள் ....நாளை இன்னும் பட்டையை கிளப்பும் துள்ளிவரும் பொங்கலுடன் நாளை ...சந்திப்போம் ....

வெள்ளி, 12 ஜனவரி, 2018

Karthic SR கம்பள விருட்சக் குழுமம்:

அந்நிய ஏகாதிபத்தியம் மற்றும் உலகமயமாக்கள் கொள்கைகளால் உருத்தெறியாமல் சிதைக்கப்பட்டு எச்சங்களாய் மீண்டிருக்கும் உள்ளூர் வரலாறுகளை மீட்டெடுக்கும் முயற்ச்சியின் முதற்படியாக

1.தளி பாளையத்தை ஆண்ட மக்கள் மன்னர் கீர்த்தி வீரர் எத்தலப்பர் நினைவாக நினைவுத்தூன் அமைக்கவேண்டியும்

2. அவர் தொடர்பான ஆவணங்களை அரசு வருவாய்துறை பதிவேடுகளில் பதிவுகள் ஏற்படுத்தவும்

3. அவர் தொடர்பான செய்திகளை மாவட்ட பாடத்திட்டத்தில் கொண்டுவரவும்

4. மக்கள் மற்றும் செய்தித்தொடர்புத்துறையின் கீழ் எத்தலப்பர் தொடர்பான ஆவணங்கள் பதிவிடவும்

5. எத்தலப்ப மன்னர் மற்றும் அவர் வம்சாவளியினரின் கற்சிலைகளை பாதுகாத்து பராமரிக்கவும்

மாவட்ட வருவாய் அலுவலரை சந்திந்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களாக

1. திரு. லெனின் பாரதி
2. திரு.  சிவக்குமார்
3. திரு. அருட்செல்வன்
4. திரு. கொழுமம் ஆதி
5. திரு. கார்த்திக்குமார்

ஆகியோரால் மனு அளிக்கப்பட்டு மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்க எடுக்க ஆவனசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலரான திரு. பிரசன்ன ராமசாமி அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தார்

இன்று இளைஞர்களின் வழிகாட்டி விவேகானந்தர் பிறந்த நாள் நிகழ்வாக  .....இன்று சிறிய சமுதாய பணி 
தேன் என்றவுடன் எப்படி இனிப்பு சுவை தெரிகிறதோ ...அதுபோன்று தேனீ காரா ....பாசக்கார பாரதி மாப்பிளைக்கு ...என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . இன்று எழுச்சிமிகு இளைஞர்களுக்கு விடுதலை முழக்கங்கங்களை ...வேரூன்ற செய்த விவேகானந்தர் பிறந்த தினம் ...அன்று பிறந்த நாள் கொண்டாடுவது மிகவும் சிறப்பு ....


நம் அறக்கட்டளைக்கு ...உறுப்பினராகவும் ...பிறந்த நாளுக்காக ...அவர் உறுப்பினர் சந்தா ...அவரால் முடிந்த நிதி அளிப்பதாகவும் தெரிவித்து உள்ளார் ...டிரஸ்ட் குழுவுக்கு தெரிவிப்பது என் கடமை ..kvt முதன்மை குழுவில் இந்த செய்தி சேராது என்று தெரியும்...இதன் மூலமாவது தெரிவிக்கலாம் ..என்று இதில் பதிந்துள்ளேன் .....தேவையில்லாமல் போடமாட்டேன் ...வெகு விரைவில் ...தகந்த நபர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ...நான் எப்பவும் ...களப்பணிக்கு ..மற்றும் இன்னும் அதிகம் பொறுப்புள்ள சேவைகள் காத்துஇருக்கிறது ...விரைவில் விடைபெற்றுவிடுவேன் ...

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

தேனிக்கார பொண்ணு .....

இன்று ஞாயிறு சந்திப்பு .,...தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில்  நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம்  செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி  அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு  இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார் ..அவர் நம்மிடம் தெரிவித்த தகவல்களை ..நம் சமுதாய மக்கள் இவரிடம் தகவல்களை பெற்று ..பயனடைவதுக்கு இந்த பதிவு ...அவர் பொறுப்பு வகிக்கும் குழுவிற்கு ..திருப்பூர் மாவட்டத்தில்
பெண் தொழில் முனைவோர்களை கண்டறிந்து பெண்கள் 12 பேர்கள் கொண்ட குழுக்களை அமைத்து ..அவர்களுக்கு அரசு அளிக்கும் ,சிறு சேமிப்பு வங்கி கணக்கு மாதம் 100 ரூபாய் செலுத்தி அதன் மூலம் தேவைப்படும் பெண்களுக்கு அதை உதவி தொகையாக தரப்படும் ,அக்குழுக்களில் அதன் செயல்களை தீர்மானமாக  நிறைவேற்றப்பட்டு.அரசு துறைமூலம் வங்கிகளில்  தையல் பயிற்சி ,காளான் வளர்ப்பு ,கால்நடை வளர்ப்பு ,சிறுதொழில் தொடங்குவதற்கு மானியத்தோடு கடனுதவி அளிக்கப்டுகிறது.. இவரின் செயல்படும் விதம் ...நம் சமுதாய மக்கள் வேலைவாய்ப்பு இன்று இருக்கும் இத்தருணத்தில் இவரின் மூலம் அக்குழுக்களில் சேர்ந்து ஒரு சிறந்த சிறுதொழில் முனைவோராக வளர அனைத்து உதவிகளை செய்து தருவதாக சொல்லி உள்ளார் ..இவர் நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளது ..நம் அறக்கட்டளைக்கு பெருமை ...இன்னும் புது தொழில் வாய்ப்புகளை நம் அறக்கட்டளைக்கு அளித்த நம் சமுதாயமக்களுக்கு உதவுவதாக கூறியுள்ளார் ..அவரின் கணவர் செந்தில்குமார் அவர்கள் ஜில்லெபநாயக்கன்பாளையம் ஊரில் பொறியியல் துறையில் கட்டமைப்பு வல்லுனராக உள்ளார் .இரண்டு பெண்குழந்தைச்செல்வங்களுடன் ..அழகான நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னுதாரணமாக வழிகாட்டியாக உள்ளார்,திருமதி செல்வராணி அவர்களுக்கு ஊக்கம் ,ஆக்கமும் தந்து நம் மக்களுக்கு முன்னேற அனைத்து உதவிகளையும் செய்துகொண்டு உள்ளனர் ..தேனீ காரா பொண்ணு வீரம் மிகுந்த பெண் என்பதை இன்று நேர்முக உரையாடலில் தெரிந்தது .. ..நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள்...


இன்று காலை நேரம் ஆனைமலை சாலையில் உள்ள எரிசனம்பட்டி என்னும் கிராமம் ..இனிமேல் கிராமம் என்று சொல்லவேண்டியது இல்லை பஞ்சயாத்து யூனியன் கா ..விரைவில் வளர்ந்து வரும் ஊர் ...

சனி, 6 ஜனவரி, 2018


அமெரிக்காவில் உள்ள டார்லிங்டன் பிட்ஸ்பர்க் நூலகத்திலுள்ள நமது பாஞ்சாலங் குறிச்சி கோட்டை, சக்கம்மாள் கோவில், கோட்டையின் வரைபடம் மற்றும் பாபநாசம், குற்றாலம், பாளையங்கோட்டை, நாம் சில நாள் இருந்து சண்டை செய்த கமுதிக் கோட்டை
மருது சகோதரா்களுடன் இணைந்து போர் நடத்திய சிறுவாயல் காடு மற்றும் காளையார் கோவில் கோட்டை...
அப்பப்பா...
அனைத்து ஓவியங்களும் மலைக்க வைக்கிறது...






.

வெள்ளி, 5 ஜனவரி, 2018

Subash Krishnasamy shared your post.
January 5,
மாபெரும் அஹிம்சாவாதிகள்கூட ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்றுதான் சொன்னார்கள். அவர்கள்கூட என் நண்பர் Sivakumar Kumar இடம் பாடம் கற்க வேண்டும்...காரணம் ஆயிரம் முறை அறைந்தாலும் அறைபட்ட கன்னத்தின் வலியைவிட அறைந்த கை எப்படி வலித்ததோ என்று முத்தமிடும் குணம் அவருடையது!....🙏🙏🙏🙏🙏🙏
பொங்கல் என்று வந்தாலே ..முதலில் ...கரப்பாடி ராக்ஸ் ...முதலில் வருவார்கள் ...அடுத்தது ..பெரியகோட்டை பாய்ஸ்  ,கொடிங்கியம் பாய்ஸ்  ,ராஜாவூர் பாய்ஸ் ,பொன்னேரி பாய்ஸ் ..கம்பாலப்பட்டி பாய்ஸ் ..வாழ்த்துக்களுடன் வரவேற்கும் பொங்கல் வழிபாடு ....

பழைய செய்திகள் அதிகம் வராது ..வேறுபட்ட தகவல்கள் ,,புது புது நிகழ்வுகள் அனைத்தும் உள்ளடங்கிய செய்திகள் பகிரப்படுகிறது ...

மாப்பிள ...புது வரவு ..முடிந்த அளவு தான் ...அவர்களின் குடும்பம் வரவு செலவு ,அவர்களின் சேமிப்பு போக ..கொடுப்பார்கள் மாப்பிள ...யாரையும் கட்டாயப்படுத்தி வாங்கவும் கூடாது ..இப்போது ..இது நாள் முடிய நிதி அளித்தவர்கள் ...தானாக முன் வந்து கொடுத்தது தான் மாப்பிள ..இது தான் நல்ல ..முனேற்றம் .,வளர்ச்சியும் கூட ...வாழ்த்துக்கள்

இதுக்கே ...இப்படி ஜெர்க் ஆகா கூடாது ...கலக்கல் பொங்கல் விழாக்கள் ...கலக்கல் .கட்டபொம்மன் jan 26th .வாகன பேரணி ...இருக்கிறது ..அது முடிந்து ..பிப்ரவரியில் தளி எதுலப்பர் விழா இருக்கிறது ...ஜனவரி ...பிப்ரவரி ...எல்லாம் நம் விடுதலைக்கு பாடுபட்ட பாளையக்காரர்கள் விழா இருக்கிறது ...வடிவேல் சொன்ன மாதிரி ..போக .போக ...தானா பழகிவிடும் ...

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ...
உடுமலைப்பேட்டை ...இரு சக்கர ,நான்கு வாகன பேரணி அருமையான flex ...அழகாக ..வீரம் மிகுந்ததாக உள்ளது ..தண்டபாணி மாப்பிள ...விழாக்களை  நம் இளைய சொந்தங்கள் கையில் பொறுப்பாக கையில் எடுத்துக்கொண்டார்கள் ...நம் சமுதாய பெரியவர்களின் ஆலோசனை படி ...வழிகாட்டின் படி ..நன்றி ...
இன்று தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி..கடந்த 5 வருடங்களாக  ..முகநூல் ,வாட்ஸாப்ப் குழுவில் ,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ..வியாபார கம்பெனிகள் ,வியாபார நண்பர்கள் ..திருப்பூர் ,பெருந்துறை ,கோவை ,கேரள ,கர்நாடக ,ஆந்திர ..இண்டஸ்ட்ரியல்  கிளீனிங் யார்ன் வேஸ்ட் வியபார நண்பர்கள் அனுப்பிய வாழ்த்து செய்திகள் ..கோவை ,ஜோயலுக்காஸ் ,RMKV ,சென்னைசில்க்ஸ் ,PSR சில்க்ஸ் ,நல்லி சில்க்ஸ் ,ஸ்ரீதேவி சில்க்ஸ் , அனுப்பிய வாழ்த்துமடல் ...மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் ...பழைய நினைவுகளை ..திரும்ப திரும்ப ..வருடம் தவறாமல் ..நினைவு படுத்துகிறது ...இந்த வாழ்த்துக்கள் எல்லாம் ..ஷ்யாமின் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும் ...என் மேல் அன்புகொண்ட சொந்தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,நன்றிகள்...

அப்படி எல்லாம் இல்லைங்க  ...வாழ்க்கையில் அதையெல்லாம் தாண்டி வந்தாகிவிட்டது ...ஜென் நிலைக்கு ...இடி ,மின்னல் ,சுனாமி ,இனிமேல் வந்தால் கூட ...எதையும் மனதில் ஏற்றி நம்மை நிலைகுலை வைக்க இடம் அளிப்பதில்லை ...திடமான மன வலிமை ,நம்பிக்கை என்னும் கட்டத்தில் நகர்கிறேன்  ...நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு வாழ்க்கை பயணம் இனிமையாக நகர்த்தி கொண்டு ..அதுவும் ,நண்பர்கள் ,பொதுநல நிகழ்வுகள் ,சமுதாய சொந்தங்கள் .,குறிப்பாக நம்ம மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ,அண்ணன்கள் ,பல துறைகளில் பணியாற்றும் வல்லுனர்களுடன் ...வாழ்க்கை பயணம் தொடர்கிறேன் ...அதுவும் என் இனிய வயதான பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து ...அவர்களின் வாழ்க்கையில் நிறைவான சந்தோசத்துடன் ..ஆரவாரமாக வாழ்க்கைப்பயணம் மகிழ்ச்சுடன் நகர்கிறது ...

எனக்கும் ஆசை தான் ...எனக்கு இந்த குழுவில் இல்லாத சொந்தங்கள் ..மற்ற குழுக்களில் இருக்கிறார்கள் ...செய்தி .சென்றுஅடையவேண்டும் ...27 வாட்ஸாப்ப் குழுக்கள் இருக்கிறது ..நம் சமுதாயம் மற்றும் .11 குழுக்கள் உள்ளது மற்றவை ..வியாபாரம் தொடர்பான ..ஆடிட்டர் அஸோஸியேஷன் ,சிவில் என்ஜினீயர் அஸோஸியேஷன் ,கடவுள் மறுப்பு இயக்கங்கள் ,ஆன்மீக குழுக்கள் , ..,எழுத்தாளர்கள் ,ஊடகவியாளர்கள் ,கல்வியாளர்கள் ,இத்தனை குழுக்களை நிர்வகித்து .....என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன் ..இது அல்லாமல் ,முகநூல் ,பிளாக்கர் ,இன்ஸ்டாகிராம் ,இதையும் நிர்வகிப்பது கொஞ்சம் கடினம் ...முடிந்தவரை முயற்சிக்கிறேன் ..இது எல்லாம் என் வேலைநேரம் போக ...தினம்தோறும் ,,5 புதியவாடிக்கையாளரை ..பார்க்கவேண்டும் ...இதில் விவசாய நண்பர்களும் அடக்கம் ...வார விடுமுறை யன்று ...பயணங்கள் ,ஆன்மீக வழிபாடுகள் இருக்கும் மலைக்கோவில்கள் ..இதை என் உடல் ஆரோக்கியதற்கும் மிக முக்கியம் ...மீண்டும் கேள்விகள் வந்தால் ..விடையளிக்கிறேன் ..சளைக்காமல் ..அப்போதுதான் புது புது ,சிந்தனைகள் உருவாகிறது ...நன்றி ....






புதன், 3 ஜனவரி, 2018

ஆளுமை ....தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆளுமை என்றவுடன் என் நினைவுக்கு வருவது என் தோழியை கூறலாம்  ..நல்ல தோழியை அன்பானவர்  பிறந்தது முதல் நான் நன்கு அறிவேன் ..இவர் பிறந்தவுடன் ..தாய்ப்பால் (சர்க்கரை தண்ணி ) ஊட்டியவர் எனது தாயார் .எனது தாயார் அடிக்கடி சொல்லுவார் ..அவர்கள் பெற்றோர்களும் சொல்லுவார்கள் ...இந்த தோழிக்கு தாய்ப்பால் முதலில் கொடுத்தவர் என்று ..அதனால் தான் ..தைரியம் ,வேகம் ,வந்திருக்கும் என்று பல நேரங்களில் யோசித்தது உண்டு .சிறு வயதில் கொஞ்சம் சூட்டிப்பு ..கொஞ்சம் குறும்புகள் ,சுட்டித்தனம் ...விளையாட்டு ,சிறுவயது கல்வி என்றும் முதலிடம் ..அழகான கிராம கூட்டு குடும்ப கட்டமைப்பு ..வீட்டை சுற்றி அத்தை ,மாமா ,பெரியம்மா ,பெரியப்பா ,,தம்பி ,அண்ணன்கள் ,தாத்தா ,பாட்டி ...விளையாடுவதற்கும் ,குழந்தைகளுக்கு கதை சொல்வதற்கும் ஏற்ற கிராம சூழ்நிலை தானாக அமைந்தது ...வளர ,வளர ,குழந்தைகளின் கல்வியின் முக்கியத்துவம் கருதி பெற்றோர்கள் ..நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள் ..நகர பள்ளியில் சேர்ந்து ..பத்தாவது வகுப்பில் மதிப்பெண் 437 ..பெற்று சிறந்த முறையில் ...மேல்நிலை வகுப்புக்கு செல்கிறார் ..அங்கும் தோழிகளின் நட்புவட்டம் பெருகுகிறது ..ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டம் ,தன்னை சுற்றி அழகான நட்புவட்டத்தை அமைத்துக்கொள்கிறார்...அவர்களின் வட்டம் ஆசிரியர்கள் ..பள்ளியின் தோழிகள் என்று விளையாடி மேல்நிலை தேர்விலும் 1010 மதிப்பெண்கள் பெற்று ...நான் படித்த  வித்யாசாகர்  கல்லூரி பயின்று ...செம கலக்களுடன் ..இளநிலை ,முதுநிலை பட்டம் பெற்று வெளியில் வந்தார் ...ஆனால் 10 வகுப்பு ,12 வகுப்பு ,கல்லூரி படிப்பு என்று தன் தந்தைக்கு சிரமம் கொடுத்ததில்லை...ஒரு பெண் என்பவள் தன்னம்பிக்கையுடன் படித்து ..வேலைவாய்ப்பு தேடி ...தன் சுயகாலில் நிற்கறார்களோ அப்போதே வாழ்க்கையில் பாதி வெற்றயடைந்துவிட்டதற்கு ஒரு முன்னேற்றம் ..திருமணம் .தன் .மனதுக்கு பிடிக்கிமோ ..பிடிக்காதோ ...பெற்றோர்கள் மணவாழ்கைகைக்கு அடிகோலும்போது ..தங்களின் மகன் ,மகளையோ ஒரு வார்த்தை ..அல்ல அல்ல பத்துமுறை மற்றும் தங்களின் நெருங்கிய தோழிகள் ,கூட பிறந்தவர்களுடன் கேட்டு ..திருமண வாழ்க்கைக்கு நிச்சியம் செய்யவேண்டும் ...ஏன் தங்களின் குடும்பம் செழிக்க ..தலைமுறைகள் செழிக்க ..வாழப்போகும் குடும்பத்தில் மகிழ்ச்சி,குடும்ப உறவுகளை பேணிக்காக்க காக்கவேண்டிய பொறுப்பும் ,கடைமையும் உள்ளது ..அதை தன்னை முழுமையா நம்பும் கணவனுக்கு எந்த தீங்கும் கொடுக்காமல் ..அவனோடு மூச்சுக்காற்றாய் ..வாழ்க்கையில் பயணிக்கவேண்டிய பொறுப்பும் ,கடமையும் மனைவி என்ற கடவுளுக்கு உண்டு ..அதை சில நேரங்களில் மறந்து விடுகிறார்கள் ..கணவனும் தன் உலகமும் மனைவி மட்டும் தான் என்று எண்ணி ..தனக்கு என்று எதையும் சேர்க்காமல் ...வாழ்வின் கடைசிக்கலாம் முடிய நம்பிக்கையுடன் இருப்பவன் கணவன் ..அதை சிலநேரங்களில் தன சுய லாபத்துக்கு ..தன் சுய சந்தோசத்திற்கு பலிகடா ஆக்கிவிடுகிறார்கள் .இதை தன் கடைசி காலா வாழ்வின் விளிம்பில் நினைக்கும் போது ..அந்த நிகழ்வுகளில் பயனை அடைகிறார்கள் . ...
தன் கணவன் ..திருமணம் முடிந்ததும் தான் பணியாற்றும் நிறுவனத்தில் வேலைக்காக சேர்த்து ..அங்கு நல்ல முறையில் பணியில் பெயருடன் ..அந்த நிறுவனம் ..பெண்களை  வேலைக்கு எடுக்காத காலம் ..தன் கணவனின் முயற்சியில் வேலை வாய்ப்பு பெறுகிறார்...விற்பனை துறையில் அதிகம் போட்டி உள்ள நிறுவங்களின் விற்பனையை முதல் கிளையாக கொண்டுவருகிறார் ..நிறுவனத்திலும்  தன கணவனுக்கும் நல்ல பெயர் ..தன் கணவனும் நல்ல திறமையால் ...தங்களின் வாழ்க்கைக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்குகிறார்கள் ..பெற்றோர்களுக்கு எந்த சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார் ..அவர்கள் நன்கு படிக்க வைத்ததே பெரிய சொத்து .கல்வி தவிர வாழ்க்கையில் என்ன வேண்டும் ...தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றதற்கு தேவையான வாகனம் சொந்த உழைப்பின் மூலம் வாங்கினார்கள் ..சொந்த பந்தங்களின் விழாக்கள் ,கோவில் ,என்று எந்த நிகழ்வு என்றாலும் முதல் ஆளாக வருவார்கள்..தன்னை சுற்றி இருக்கும் சொந்தங்களுக்கும் ...உதவிகள் செய்து ..தங்கள் கூடப்பிறந்ததவர்களுக்கும் உதவி செய்து அவர்களையும் முன்னேற்றுகிறார்கள் ..அதன் பின் தங்களுக்கு என்று இடம் ,வீடு வாங்குவதற்கு தங்களின் உழைப்பின் மூலம் வாங்கவது ..இருக்கும் மகிழ்ச்சி அளவிடமுடியாது ..அதற்குள் தங்களுக்கு அழகான ஒரு ஆண்குழந்தை கிருஷ்ணா அவதாரம் போன்று தங்களின் குடும்பத்தில் வந்து மகுடம் சூட்டுகிறார்.அதுவும் கிருஷ்ணர் பிறந்ததுக்கு ...நான்கு வருடம் தவம் இருந்து ...தங்களின் குடும்ப சுக துக்கங்களை பொறுத்து கொண்டு ,தங்களின் கிருஷ்ணர் இந்த உலகில் எந்த சிரமமும் இல்லாமல் வளர்வதற்கு இந்த பாடுபடுகிறார்கள்...இதை விட வேற என்னவேண்டும் இந்த உலகில் ..தன் குழந்தை வளர்ப்பில் சிறு சறுக்கல் ..வரும்போது வேலையில் யாரவது ஒருவரின் வேலைவாய்ப்பை தியாகம் செய்யவேண்டும் தங்களின் கிருஷ்ணருக்கு ஆக ...அப்பிடியொரு முடிவெடுக்கவேண்டிய பொறுப்பு தன கணவனுக்கு முதலில் வாய்ப்பு ..அப்போது தன கணவனும் ..தன் தோழிக்கு எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் ...ஒரு வீட்டில் இருந்து கிருஷ்ணரை கவனித்து கொண்டு ..வியாபாரத்தையும் கவனிக்க தகுந்த கொஞ்சம் சிரமம் இல்லாத வியாபாரம் சிறிய அளவில் ..குறைந்த லாபம் தொழிலை நடத்திக்கொண்டு முன்னேற்றம் காண்கிறார் ..அதன் மூலம் குழந்தைக்கு எந்த சிரமம் இல்லாமல் ..வளருகிறார் ..வியாபாரம் தங்களின் சுற்றுப்பகுதியில் பறந்து விரிந்து ,அருகே இருக்கும் மாநிலங்களுக்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கிறது ..அதற்கு பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் ,நஞ்சம் அல்ல ...அடுத்த நிகழ்வு ..வியாபாரத்திற்கும் ,வாடகை வீட்டில் இருந்து ..சொந்த வீடு ,வியாபாரதற்கான இடமாக தேர்வு செய்து ..நல்ல வளர்ச்சியும் காண்கிறது ..அதற்குள் தன கணவனின் வியாபார நிறுவனத்தில் ...மாதம் முடியும் போது வியாபாரம் எவ்வளவு என்று கேட்பார்கள் ..இந்த மாதம் டார்கெட் வந்துவிட்டது என்று சொன்னால் ..அதைகேட்கவில்லை ..உங்களின் குடும்ப வியாபாரம் எப்படி போகிறது என்று கிண்டலாகவும் ,நக்கலாகவும் கேட்கும் பொழுது கொஞ்சம் மனது சங்கடப்படும் ...அதற்காக கவலைப்பட்டால் முடியாம ...நம் குடும்பம் நிறுவனம் வழங்கும் சம்பளத்தில் வீட்டு வாடைகைக்கே பத்தாது பிறகு எப்படி ..திருமண வாழ்க்கையில் 10 வருட கால உழைப்பு ..சிதறும் போது கொஞ்சம் மனம் வருத்தப்பட்டது ...வாழக்கையில் ..தன்னை வளர்த்திய ,தன்னை நம்பி ஒரு ஜீவன் இருக்கும் போது ...அந்த சிறு கஷ்டத்திற்கு நினைக்க கூடாது ..என்ற நம்பிக்கையுடன் ..வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை மிக சாதுரியமாக தாண்டி ...மனா எழுச்சியுடன் ...புத்துணர்ச்சிடன் ...வாழ்ந்து காட்டவேண்டும் ...என்ற குறிக்கோளை எண்ணி பயணிப்பது எவ்வளவு ஆனந்தம் ...அற்புதம் ...இதுவும் ஒரு உளவியல் ரீதியான திடமான நம்பிக்கையை வாழ்க்கையில் கற்கவேண்டும் என்று உலகம் நமக்காக காத்துக்கொண்டுள்ளது ..வெற்றியுடன் பயணத்தை தொடர்வோம் ...இன்று அருமையான அந்த தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...38 அகவை என்பது வாழ்க்கையின் முக்கிய திருப்பம் வர வாழ்த்துக்கள் தோழிக்கு ...


































செவ்வாய், 2 ஜனவரி, 2018



என் அருமை அமெரிக்கா நண்பர் அவர்களின் அழகான பதிவு ..நீங்களும் படித்து பாரெங்களேன் ....கீதா அம்மா ..அருமையான பதிவு ..படிக்க படிக்க திகட்டாத ..அம்மா ..மகன் ..மரு ..மகள் ...அற்புதமான குடும்ப அமைப்பு பதிவு ..கடவுளுக்கு நன்றி வாழ்த்துக்கள் ..

Geetha Chandra......................................

#Trainன்றிகிறுக்கியது#4
———————————
அம்மாவின் யானை
————————
அம்மா ஒரு மறை கழண்ட கேஸ் என்ற அபாயகரமான உண்மை அம்பிளிகள் கார்டு அறுபட்ட ஆறாவது விநாடியிலேயே என் பயல்களுக்கு புரிந்து போனது
அதென்ன கன்றாவியோ தெரியாது பயல்கள் பிறந்த க்ஷணத்தில் இருந்து எனது நாக்கையும் மூளையையும் இணைக்கும் நரம்பு பாதித்து இரண்டுமே கூட்டணி இன்றி தனித்து நின்று நோட்டா வை விட குறைத்து ஓட்டுக்கள் வாங்கி டெபாசிட் இழக்கும். பயல்களைப் பார்க்கும் நொடியெல்லாம் நாக்கு தானாகவே புஜிஜூ பப்பூயோ கூபூஉ என்ற அர்த்தமற்ற கொஞ்சல்களை உதிர்த்தவாறே இருந்தது
சரி பயல்கள் வளர்ந்து பெரியவங்களாகும் போதாவது இந்த பிரச்சினை தீருமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ராகுல் காந்தி கூட வளர்ந்து பிரதமராகும் வாய்ப்பு இருந்ததேயொழிய எனது கொஞ்சல் பிரச்சினை தீரும் வழியாய்த் தெரியவில்லை
ஒவ்வொருமுறை பயல்களைப் பார்க்கும் போதும் விக்கல் தும்மல் இருமல் மாதிரி ஏதோ ஒரு கொஞ்சல் வார்த்தை புறப்பட்டு வந்து சேரும். கெட்ட கேட்டிற்கு ரைமிங் வேறு
பெரியவன் “ அம்மாவின் யானை” சின்னவன் “அம்மாவின் பூனை”.இது “ அம்மா'ஸ் புலி” “அம்மா'ஸ் எலி” என்று அவ்வப்போது வேறுபடும். . மொபைலில் “Amma’s Yaanai calling” என்று வந்ததைப் பார்த்து என் தோழி..”Zoo ல இருந்து யாரோ கூப்படறாங்க” என்றாள்
ஆன பூன என்று கூப்பிட்டதற்கு என்ன என்று கேட்டிருந்த பயல்கள் சிறிது காலம் கழிந்து திரும்பிப் பார்க்காமல் அலட்சியப்படுத்தியவுடன் பல அதிர்ச்சி தரும் வெரைட்டியான ரைமிங்குகள் என்னிடம் இருந்து புறப்பட்டன. “மொட்டைய போட்ட கூபாபுல்”….. “சேட்டையை பண்ணிட்ட கூபாபுல்” . இது ஒரு சாம்பிள் “கூபாபுல் “க்கு என்ன அர்த்தம் என்று தெரியாமல் கேட்டுவிட்ட நாகு சித்தப்பா நான் கொடுத்த பொழிப்புரையில் bull fight ring இல் தெரியாமல் அகப்பட்ட வடிவேலு கணக்கில் ஆகிவிட்டார்.
சிறிது காலம் பயல்களை “அதியமான் “ “தொண்டைமான்” என்று கூப்பிட்டுப் பார்த்தேன். திரும்பவில்லை. வரலாறு புரியாத பசங்கள் . அதை செல்லமாக சுருக்கி “ அதி ..”, “தொண்டை..” என்று தொண்டை வரள கத்தியும் பயனில்லை.
“குஞ்சாமிர்தம்’ “குஞ்சன்ஜங்கா” சற்று புன்முறுவலை வரவழைத்தது. ஆனாலும் பழைய குருடி கதவ தெறடி என்பது போல்…”Amma’s யானை” என்ற முதல் கட்டத்திலேயே நின்று விட்டது.
பயல்களுக்கு மீசை அரும்ப ஆரம்பித்து , தாங்களே கார் , ஓட்டக் கற்று வீட்டை விட்டு தத்தம் ஹாஸ்டெல்களில் வாழ ஆரம்பித்த பின்னும் மனசு என்னவோ அவர்களுக்கு ரெண்டு இட்லி ஊட்டி தலை சீவி ஸ்கூல் வேனில் ஏற்றிவிட்ட காலத்தை விட்டு நகர மறுக்கிறது.
என்ன சொல்ல வந்தேன் என்று புரியாமல் சுற்றி சுற்றி வருகிறேன் அல்லவா? இதோ வந்து விட்டேன் …….சில காலம் முன்பு அம்மாவின் யானை லவகேசம் வெட்கம் நாணம் எதுவுமின்றி காலால் கோலம் போடாமல் கண்ணுக்கு நேராய் பார்த்து தான் காதல் வயப்பட்டிருப்பதை சொன்னதும் ஆழ்ந்த தூக்கத்தில் என்னை யாரோ எழுப்பி ஒரு கூடை பன்னீர் புஷ்பத்தை கொட்டியது போல் இருந்தது. தூக்கத்தில் இருந்து திடீரென்று விடுபட்ட அதிர்ச்சி பன்னீர் புஷ்பத்தின் வாசம் இரண்டும் ஒரு சேர தாக்கின.
அட கடவுளே இப்ப தான் டயபர் மாற்றிவிட்டு இட்லிக்கு அரைக்க வந்தார் போல இருக்கிறது…. உளுந்து அரைத்து முடிவதற்குள் இத்தனை வேகமாகவா வளர்ந்தார்கள்!!!!! சந்தோஷம் கலந்த திகைப்பு மனத்தைக் கவ்வியது. ஓஹோ இது குழந்தை அல்ல…… குமரன் ….ஆகிருதியாய் வளர்ந்து காதலுக்கும் கல்யாணத்துக்கும் தயாராகிவிட்ட குழந்தை. இனி கங்காருவ்வை போல் நான் வயிற்றில் கட்டிக் கொண்டு சுத்த முடியாது. இறக்கி வைக்கும் தருணம் வந்து விட்டது.
எண்ணங்கள் சுற்றி சுற்றி வந்தன. நான் என் கணவர் இரு பயல்கள் என்ற வட்டத்தை பெரிதாக்கி இன்னொரு பெண்ணை உள்ளே விட வேண்டும். இனி இது போல் தத்துபித்து கொஞ்சல்கள் பினாத்தல்கள் எதுவும் கிடையாது. பயல்கள் “லூசாம்மா நீ?” என்றால் பொறுத்துக் கொள்ளலாம் மருமகள் சொன்னால் பொறுத்து கொள்வேனா?
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதோரு உருண்டை உன்னிகிருஷ்ணனைப் போல் எனக்கும் அடைத்தது.
இனி எங்கள் நால்வருக்கும் இடையே மட்டுமான இடக்குகள் சீண்டல்கள் கிண்டல்கள் கொஞ்சல்கள் எல்லாம் ஒரு மாற்று குறையத்தான் போகிறது
விசேஷங்கள் முடிந்து திரும்பும்போது ஏகாம்பரம் மாமா எப்படி ஏப்பம் விட்டார் என்ற அறிவுபூர்வமான விவாதங்களோ , அம்மாவின் பூனை இன்டெர்ர்வியூவில் எப்படி சொதப்பினான் என்ற ஆராய்ச்சியோ பண்ண முடியாது. மூன்றாம் மனுஷி முன் என் பிள்ளைகளை நான் மரியாதை கொடுத்தல்லவா நடத்த வேண்டும்…. என்ன கொடுமை சரவணன்!!!
எனக்கும் ஒரு பெண் குழந்தை இருந்திருக்கலாம் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கழிவிரக்கம் தோன்றியது… அவன் வர போகும் மருமகளை வீட்டிற்கு கூட்டி வந்து அறிமுகப் படுத்துவதாய் சொன்ன அன்றிரவு தூக்கத்தில் தத்துபித்து கனவுகள். அதில் பல முதியோர் இல்லங்கள் “ அம்மா இன்னிக்கு கிறிஸ்துமஸ் அதனால இன்னிக்கு எங்களோட வந்துடு “ என்று சின்னவன் எழுப்புவதற்கு கனவுக்குள் கனவு. ரேவதி சங்கரன் “இனிமே மருமகள் தான் மகள்” என்று உரலில் பாக்கு இடித்தபடி ஏதோ சொல்கிறார். நீயா நானா கோபிநாத்…. “மைக்க அவங்க கிட்ட குடுங்க அழாம சொல்லுங்கம்மா” என்று TRP ரேட்டிங்குக்கு அலை பாய்கிறார்.
சடாரென்று எழுந்தேன். என் மேல் எனக்கு கோபம் வந்தது. எத்தனை அழகான தருணம். என் குழந்தை கம்பீரமாய் கண்ணியமாய் என்னிடம் அவனது விருப்பத்தை சொல்லி இருக்கிறான். தன்னம்பிக்கையுடன் என்னிடம் அறிமுகப் படுத்த மருமகளைக் கூட்டி வருகிறான். சந்தோஷமாய் எதிர்கொள்ளாமல் என்ன அபத்தம் இது.
அந்தப் பெண் வந்தாள்…. பதட்டங்கள் குழப்பங்கள் எல்லாவற்றையும் மறந்து ஹா ஹா ஹி ஹீ என்று அளவளாவினேன். பயல்களின் சிறு வயது சேட்டைகளை அவள் உல்லாசமாக கேட்டு ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் பரீட்சை எழுதிவிட்ட நிம்மதி பிறந்தது
அவள் புறப்படும் வேளை வந்தது. பயல் அவளை ரயில் ஏற்ற கிளம்பினான். அவள் செருப்பை மாற்றிக் கொண்டிருக்கையில் மகனை பார்த்தேன். அப்போது எது நடக்கக் கூடாது என்று வேண்டி இருந்தேனோ அது நடந்தது… யெஸ்…… தண்ணீர் கூட குடிக்காமால் எவ்வளவு அடக்கி வைத்தும் என்னை மீறி கொஞ்சல் வந்தே விட்டது. அவன் கன்னத்தை கிள்ளி.. “Amma’s யானை” என்றேன்.
ஒரு வினாடி வெட்கம் கலந்த தர்மசங்கடமான மௌனம் நிலவியது. அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் பார்த்திருக்க..
மருமகள் மெல்ல என்னைப் பார்த்து முறுவலித்தாள்…… நிசப்தம் கலைத்து தன் கன்னத்தை என் பக்கம் ஸ்லோ மோஷனில் மெல்ல நகர்த்தினாள்….. தன் கையை என் தோளில் போட்டு கிட்டே வந்து என்னிடம் மெல்ல கொஞ்சலாக…”Who am I …..I am Amma’s……..?” என்றாள் …அந்த முகத்தை அப்போது தான் பக்கத்தில் பார்த்தேன் … ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று என்னிடம் இருந்த அதே படபடப்பு கலந்த ஆசையும் ஏக்கமும் அங்கு பிரதிபலித்தது………
இது இரு குடும்பங்கள் இணையும் “Merger” அல்லவா ……என் பயலை யாரோ வாங்கப்போகும் “acquisition” என்று படித்த நான் ஏன் குழம்பினேன்
மெல்ல அவளை அணைத்து….”You are amma’s கிளி” என்றேன்.
அம்மாவின் யானை …..கிளியென்றால் என்னவென்று அவளுக்கு மொழிபெயர்த்து சொல்லிக் கொண்டு போனது…….. கிளி…”Oh I am amma’s கிளி´ என்று கொஞ்சிக் கொண்டு போனது.........
தங்கமான தங்க பாப்பாவிற்கு ..இந்த பதிவு ...கணிதம் ...

சத்யேந்திரநாத் போஸ் வங்கத்தில் பிறந்த ஒரு கணிதவியல், இயற்பியல் விஞ்ஞானி. கொல்கத்தாவில் படிப்பை முடித்துவிட்டு, தன் 22வது வயதில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். (புகழ் பெற்ற ஜெகதீஷ் சந்திர போஸ் இவரது ஆசிரியர்).
பின்னர் டாக்கா பல்கலைக் கழகத்தில் ரீடராகச் சேர்ந்தார். இவரது வகுப்புத் தோழரும் சகவிஞ்ஞானியு மான மெக்னாட் சாஹாவுடன் இணைந்து சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.
சத்யேந்திரநாத் போஸ்...1894 ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி 1974 (80 ஆண்டுகள்)
மாக்ஸ் பிளாங்க்கின் குவாண்டம் பிசிக்ஸ் கோட்பாடு பற்றி ஆராய்ச்சி செய்து ஓர் ஆய்வுத்தாளை லண்டனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ஓர் அறிவியல் இதழுக்கு அனுப்பினார் சத்யேந்திரநாத் போஸ். ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை. தன் ஆராய்ச்சி முடிவு சரியானதே என்பதில் உறுதியாக இருந்த போஸ், தன் ஆய்வுத் தாளை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி அவரது கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் முக்கியத்துவத்தை உடனடியாக உணர்ந்து கொண்ட ஐன்ஸ்டீன் அதை ஜெர்மன் மொழியில் தானே மொழியாக்கம் செய்து ஒரு புகழ்பெற்ற ஜெர்மானிய இதழுக்கு அனுப்பினார். போஸின் கட்டுரை அந்த இதழில் வெளியானது. அவருக்கு அயல்நாட்டு விஞ்ஞானிகளின் அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைத்தன.
தன்னுடன் வந்து பணியாற்றுமாறு போஸை அழைத்தார் ஐன்ஸ்டீன். அவர்கள் இருவரது உழைப்பில் உருவானது தான் போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் கொள்கை. மின்காந்தக் கதிர் வீச்சின் சிப்பங்கள் புள்ளியியலின்படி எப்படி நடந்துகொள்ளும் என்பதே போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் கொள்கை. இவர்களது கோட்பாட்டிற்கு லூயி டி பிராலி, எர்வின் ஷ்ரோ டிங்கர், பால் டிராக், ஹைசன்பர்க் போன்ற பிரபல விஞ்ஞானிகளின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைத்தன. போஸைக் கவுரவிப்பதற்காகபோஸ் புள்ளியியலின்படி நடந்துகொள்ளும் துகள்களுக்கு `போஸான்’ என்று பெயரிட்டார் பால் டிராக். நம் இந்திய நாட்டு விஞ்ஞானி ஒருவரின் பெயரால்தான் போஸான் துகளுக்கு அந்தப் பெயர் கிடைத்தது என்பது நம் நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும்...என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்..!
போஸ் ஆராய்ச்சியில் மட்டுமல்ல, இசையிலும் நாட்டம் உடையவராக இருந்தார். வயலின் போன்ற ஒரு இசைக் கருவியை அவருக்கு இசைக்கத் தெரியும். சத்யேந்திரநாத் போஸுக்கு 1954-ம் ஆண்டு பத்மபூஷண் விருது கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவரை நாடு மறந்துவிட்டது. ஜே.சி. போஸ், பிசி. ரே, எம். சாஹா, சி.வி. ராமன் போன்ற இந்திய விஞ்ஞானிகள் இங்குள்ள குறைபாடுகளையும் சூழலையும் தாண்டி அறிவியல் துறையில் சாதனைகள் நிகழ்த்திக் காட்டினர். அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் இந்தியாவில் அவர்களைப் போதுமான அளவு நாம் கொண்டாடி மகிழவில்லை. கிரிக்கெட் வீரர்களையும் சினிமா நடிகர்களையும் அவர்களது சாதனைகளுக்காகக்கொண்டாடுகிறோம். அதில் தவறு இல்லை. அதே சமயம், அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய நம் நாட்டு விஞ்ஞானிகளை உரிய முறையில் கவுரவிக்க, கொண்டாட ஏன் தவறுகிறோம் எனப்து வியப்பு.!
பிப்ரவரி 28 தினத்தை சர் சி.வி. ராமன் நினைவாக தேசிய அறிவியல் நாளாக அனுசரிக்கிறோம். சத்யேந்திரநாத் போஸ் பிறந்த ஜனவரி முதல் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக‌ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஜனவர் 1ம் நாளை தேசிய விஞ்ஞானிகளின் நாளாகவும் மத்திய அரசு அறிவிக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்து.
இன்று அந்த மாபெரும் கணித இயல்பியல் மேதை சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் 141 ம் பிறந்தநாள். ஒரு சிறு நினைவு கூறல். 



திங்கள், 1 ஜனவரி, 2018

வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya-Kattabomman)
சுதந்திர போராட்ட வீரர் -பிறப்பு: ஜனவரி 3, 1760
Veerapandiya Kattabomman (1760 - 1799)
தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு.
பிறப்பு: ஜனவரி 3, 1760
பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: அக்டோபர் 16, 1799
தொழில்: மன்னர், போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?
“வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
போர்
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள்
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
தூக்கு மேடை எயரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.
இறப்பு
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாறை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்கள் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தை சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே பிரதிபலித்திருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், பலருக்கும் சிவாஜி கணேசன் அவர்களே நிவைக்கு வருவார். அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். சிவாஜியின் நடிப்பைப் பிறரும் விதமாக, எகிப்து பட விழாவில், அவருக்கு ‘சர்வதேச விருது’ கிடைத்தது.
மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்
கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் நினைவிடம் உள்ளது.
கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.
1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக ஒரு புதிய நினைவு கோட்டை கட்டியது. மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.
அவரது அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
அவர் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கயத்தாறில், அதாவது இன்றைய NH7 இல், கட்டபொம்மன் அவர்களுக்கு மற்றுமொரு நினைவுச்சின்னம் இருக்கிறது.
அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இரு நூறாம் ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் முத்திரையை வெளியிட்டது.
இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாகக் கருதப்படும் விஜயனாரயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.
1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும் வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.👍👍💐💐🤺🤺🏹🏹🏹🏹