வியாழன், 11 ஜூன், 2020

என்னுடைய கேள்வி :...அரசாங்க வேலை கிடைத்தால் வாழ்க்கை செட்டில் ஆகி விடும். இந்த வரிகள் பல இளைஞர்களின் ஆற்றல் மிக்க கனவுகளை புதைத்து கொண்டிருக்கிறதா?

பதில் :..என் நண்பர் மாரிமுத்து  அவர்களுடையது



ஆற்றல் மிக்க…பேராற்றல் மிக்க கனவே அரசு வேலையை அடைவது தானே…

அதற்குக் காரணம் நம்முடைய இளைஞர்கள் அல்ல. நம்முடைய சமூகம் கட்டமைக்கப்பட்டதே அதேபோல் தான்.

உதாரணமாக என்னையும் என் நண்பனையும் வைத்தே சொல்கிறேன்.

மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவன் நான். எத்தனையோ முயற்சி செய்தும் அரசு வேலை கிடைக்கவில்லை…தனியார் பள்ளி ஒன்றில் நடுநிலை பள்ளி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். சொற்ப சம்பளம். வேலை நிரந்தரம் கிடையாது.

அடுத்து என் நண்பன். அவனுக்கும் அரசு வேலை கிடைக்கவில்லை. எனினும் நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கைகட்டி வேலை செய்ய மாட்டேன் என்று கூறி, சம்பந்தமே இல்லாத பிசினஸை துவக்கினான். அவன் குடும்பமும் பிசினஸ் செய்யும் குடும்பமல்ல. தாயும் தந்தையும் அரசு ஊழியர்கள். பிசினஸ் என்ற பெயரில் அப்பா அம்மா சம்பாத்தியத்தில் ஒட்டிக்கொண்டிருந்தான்.

அடுத்து திருமண பேச்சு வந்தது. ஒரே தரகரிடம் எங்கள் இருவருக்கும் பெண் தேடும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ( பெற்றோரால்) எங்கள் பெற்றோரும் நண்பர்களே.

எங்கள் இருவரின் பெற்றோரும் ஒரே ஒரு லாஜிக்கை தரகரிடம் முன்வைத்தார்கள். 'எங்க பசங்களுக்கு தான் அரசு வேலை கிடைக்கவில்லை; எனவே வர்றவளாவது அரசு உத்தியோகத்தில் வேண்டும்' என்பதே அது.

ஆனால் என்ன ஆனது?

எனக்கு அரசுப்பணி பெண் கிடைக்கவேயில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பெண்ணே கிடைக்கவில்லை. 'தனியாரில் உத்யோகமா…வசதி வேறு இல்லையா…சாரிங்க' இது தான் பதில்.

இதே, என் நண்பனுக்கு உடனேயே செட்டாகி விட்டது. அவனுக்கு கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தான் என் திருமணம் நடந்தது. அதுவும் அந்த தரகர் மூலமாக அல்ல. அப்பா தான் தேடி பிடித்து பார்த்து செய்தார். நான் கைபிடித்தவள் பத்தாவது வரை மட்டுமே படித்தவள். என்னை விடவும் ஏழ்மையான குடும்பம். 1998 ல் திருமணம் நடந்தது.

இவ்வாறான கதி எனக்கு மட்டும் நேர்ந்ததல்ல. இன்றும் பல இளைஞர்களும் சந்தித்து வரும் பிரச்சினை தான் இது. இன்று தனியார் துறையிலும் பெயர்பெற்ற கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் தப்பித்து விடுவார்கள். ஆனால் தனியாரிலும் சுமாரான அமைப்புக்களில் வேலை செய்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். வரதட்சிணை கொடுமைக்கு எதிராக அரசாங்கம் செய்த பிரச்சாரம் போல் இக்கொடுமைக்கும் ஒரு பிரச்சாரம் தேவை.

மாற வேண்டியது பெண்களும் பெற்றோர்களுமே.

கனவாவது கத்தரிக்கையாவது.

நன்றி ....
உட்பிரிவுகள் பேசுவது ஒருக்காலும் எனக்கு ஏற்புடையதன்று.  இராஜகம்பளம் என்றால் சில்லவார், கொல்லவார், தோக்கலவார் என்ற முப்பெரும் பிரிவுகளை இணைத்து தான் நம் முன்னோர்கள் குறிப்பாக  இராஜகம்பள மகாஜன சங்கமாகட்டும், பண்பாட்டுக்கழகமாகட்டும் செயல்பட்டு வருகிறது.  அந்த அமைப்புகளை பின்பற்றியே எங்களைப் போன்ற மிகச்சிறிய சங்கங்களும் செயல்பட்டு வருகிறது.  தமிழகத்தில் உள்ள ஒரே பெரிய சமுதாய அமைப்பு பண்பாட்டுக்கழகம் மட்டுமே. முப்பிரிவையும் அரவணைத்து சென்றே இதுவரை வழிகாட்டி வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் சமூக வலைதளங்களிலும் சில வாட்ஸ் அப் குரூப்பில் மட்டுமே சிலர் குல ரீதியாக பெருமை பேசிக்கொண்டுள்ளதை பார்க்கிறோம். முதலில் குல ரீதியாக தொடங்கியது பின்னர் இன ரீதியாக பேசத்தொடங்கினர்.  அது எப்பொழுதிலிருந்து என்றால் திருமலை நாயக்கர் "கொல்லவார் " என்று சமீபத்தில் நடிகை ஒருவரின் ஆய்வை ஒட்டி குல ரீதியாக பேசியவர்கள் தீடீரென "கொல்லவார் " அல்லது "கொல்லா " நாங்களே என்று நிரூபிக்க முயல்கிறார்கள்.  இதில் இதுவரை வழக்கமாக உள்ள "கொல்லவார்"களைக் காட்டிலும் திடீர் கொல்லவார்கள் மிக அதிகமாக தங்களை கட்டமைக்க முயல்கிறார்கள்.  கல்யாண வீடானாலும் நான் தான் மாப்பிள்ளை,  எழவு வீட்டிலும் நானே என்ற மனப்பான்மையில் ஒரு குரூப் சுற்றி வருவதை காண முடிகிறது.  இந்தப்பதிவில் கூட இராஜகம்பளம் 7 மாவட்டங்களில் 200 கிராமங்களில்....... என்று செல்வது அப்படியானால்  மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது.  பண்பாட்டுக்கழகம் 40 ஆண்டுகலாக மிகவும் கஷ்டப்பட்டு கட்டமைத்து பல ஜமீன்களும், பெரியோர்களும் ஒன்றிணைந்து   கட்டிக்காத்துவரும் ஒற்றுமையை  சிறு பிள்ளைகள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து கொட்டுவது போல் செய்வது இந்தக்கால சூழலுக்கு ஏற்றதா? எப்பொழுதும் ஒற்றுமையே பலம் என்பதை உணராது எழுதி என்ன பயன்? இனம் கல்வியில் சற்றே தட்டுத்தடுமாறி முன்னேற முயலும் சூழலில் இடஒதுக்கீடுக்கு ஆபத்து வரும்போல் உள்ளது. அப்படி வந்தால் அதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? ஏற்கனவே அரசியலும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ள நிலையில்,  நிலபுலங்களையும் இழந்து வருகிறோம்.  சவால்கள் மலையளவு நம் குழந்தைகள் முன்னே உள்ள நிலையில் ஒற்றுமைக்கு வழி வகுக்காமல், குலம், பிரிவு, வகை என்று பேசித்திரிவது தகுமா? நாம் எத்தனை அமைப்புகளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிரிவினை என்பதை சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் முளையிலேயே கிள்ளி எறிவதே எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும்.


அருமை சொந்தமே ..அருமையான பதிவு ...விழிப்புணர்வு பதிவு ...நன்றி வாழ்த்துக்கள்

சொந்தமே ...சுப்பு கல்வி அறக்கட்டளை ....கம்பள விருட்சம் அறக்கட்டளை ...ராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை ...வசந்தகால மலர்கள் கல்வி அறக்கட்டளை ...இந்த அறக்கட்டளைகளைகளையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் ...

நன்றி .சொந்தமே ....நம் சமுதாயம் என்றாலும் ...பொது தளத்தில் அரசு துறை ...தனியார் துறை ..வரலாற்று துறை ...தொல்லியல் துறை ..என்று கம்பள விருட்சம் அறக்கட்டளை பயணிக்க தொடங்கி 3 வருடங்கள் ஆகிறது ...நம் வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள நல சங்கம் -சென்னை ...போன்றே ...உங்களுடன் நாங்களும் வளர்க்கிறோம் ...

கண்டிப்பாக சொந்தமே ...என் அணுகமுறையும் இதுவே ...


சரியாக சொன்னீர்கள் .சொந்தமே ..அரசியல் தலைமைக்கு நம் சமுதாயத்தில் அதிகம் உள்ளனர் ...அவர்களுக்கு பின்புலமாக ...பக்கபலமாக இருப்பதே ...என்னுடைய தலையாய பணியும் அதுவே ....

புதன், 10 ஜூன், 2020

உறங்கச் சென்றது முல்லை!...2006....

முல்லையின் மலரும் நினைவுகள் ..

இன்று அலுவலகத்தில் நிகழ்ந்த பிரச்சனை இன்னும் மனதினில் ஓட்டமிட்டுக்கொண்டே இருந்தது... அதையே நினைத்து வண்டியை செலுத்தியதாலோ என்னவோ வழக்கமாய் நின்று பூ வாங்கும் கடையை தாண்டி வந்துவிட்டேன்... அடுத்த சமிக்கையில் வண்டியை நிறுத்திய பொது ஞாபகம் வரவே வண்டியை திருப்பிச்சென்றேன்... எனக்காகவே காத்திருந்தவளாய் பூக்கார பாட்டியும், புன்முறுவலுடன் ஏற்கனவே எனக்காக கட்டி வைத்திருந்த பிச்சி பூ (முல்லை) பொட்டலத்தை நீட்டினாள்!... மீண்டும் வண்டியை செலுத்தும்போதும் அதே சலனம்...
மணி சுமார் ஒரு 7.30 இருக்கும், வீட்டிற்கு வந்ததும் கவனித்தேன் அவள் இன்னும் அலுவகத்திலிருந்து திரும்ப வில்லையென... அலைபேசியில் அவளனுப்பிய குறுஞ்செயதியில், அலுவலக நண்பர்களுடன் வெளியே செல்வதாய் எழுதி இருந்தாள்... வாங்கிவந்த பூவை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு, மனதில் உள்ள நெருடலுடன் சமைத்து சாப்பிட்டேன்.. பின் வரவேற்பறையில் உள்ள அகல் தவிசில் அமர்ந்து புத்தகம் வாசிக்க ஆரமித்தேன்... புத்தகத்தில் மனம் ஈடுபடவில்லை...
மணி சுமார் 10.45 இருக்கும், பரபரப்பாய் வாசலில் இருந்து வீட்டுக்குள் வந்தவள்.. "ஏய், நீ சாப்டியா?" என்றாள்
"நான் சாப்டாச்சு.. நீ?.. உனக்கும் சேத்துதான் செஞ்சி வெச்சுருக்கேன்" என்றேன்
அருகில் வந்து அமர்த்தவள்... "நாங்க எல்லாருமே வெளிலயே சாப்பிட்டோம் டா".. என்று தோளில் சாய்ந்து கொண்டாள் ...
நான் என் அலுவல பிரச்சனையை சொல்ல எத்தனித்த வேளையில்... "ஒரே தலைவலி டா... இன்னிக்கு நாங்க பார்த்த படம் செம்ம மொக்கை".. என்று சொல்லியவாறு மடியினில் தலை சாய்த்து "கொஞ்சம் தலைய கோதி விடுடா" என்று மேலும் கதை கூறினாள்... அவள் கூறிய மற்றும் கூறாத கதைகள் என்னை என் அலுவல பிரச்சனைகளில் இருந்து விலக்கி ஒரு தூர தேசம் கொண்டு சென்றதென்றே சொல்ல வேண்டும்....
இவளை மடி சாய்த்து நிதம் தலை கோதவேனும் "தினம் உனக்கு தலைவலி வரணும்"... என்றேன்... அதை கேட்கும் முன்னே உறங்கியே விட்டாள்...
நாளையேனும் உன் கூந்தலேறுவோம் என்ற மகிழ்ச்சியுடன் உறங்கச்சென்றது முல்லை!.....
கேள்வி :.வேலை நன்றாக செய்பவரை விட வேலை வாங்குபவருக்கு மதிப்பு அதிகமாக இருப்பது ஏன்? அவர்களே பதவியில் உயர்த்தப்படுவது ஏன்?

என் பதில் :...


மூளைக்கு தான் வாத்தியாரே மரியாதை…

புத்தரை ஞாபகம் வைத்திருக்கும் சமூகம் அவரது சீடர்களை ஞாபகம் வைத்திருக்கிறதா…

ஆர்க்கிடெக்ட் அள்ளிக்கொண்டு போய்விடுவான்… கொத்து கம்மி தான்.. சித்தாள் அதைவிட கம்மி… சித்து தான் உடல்ரீதியாக அதிக வேலை செய்திருப்பார்.

காந்திக்கு தான் தேசப்பிதா என்று பெயர். அவர் சொன்னதைக்கேட்டு அவரையும்விட நியாயமாக நடந்தோர் பட்டியல் ஏராளம்.

ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டினாரா.. கொத்தனார் கட்டினாரா..

சிந்தனை ஆற்றல் மிக்கது. வலிமை உடலில் முக்கியமா மனதில் முக்கியமா..

காரியங்கள் சிந்தனையில் உதித்தால் செயல் தொடர்கிறது. தொடர்வதற்கேற்ற மரியாதை தான் அதற்கு. சிந்தனை தான் பாராட்டு பெறுகிறது.

மொட்டை ஐடியா போதாது. நீ பாட்டுக்கு சொல்லிட்டு போயிருவ..எவன் செய்வான் என்பார்கள். நின்று நடத்திக்காட்டவேண்டும்.

பெரிய கோவில் யார் கட்டினார்கள்..

சாஞ்சி ஸ்தூபி யார் நிறுவியது

எல்லா இடத்திலும் சரியான சிந்தனைக்கு தான் மரியாதை. மற்றதெல்லாம் சிரமம் என்றாலும் சுலபம்.

அந்திமழை பொழிகிறது என்று பாடுவது சிரமம் தான்.. ஆனால் அந்த இசையை மனதுள் கொண்டுவந்து பாடவைப்பது சிந்தனை. அந்த ஹம்மிங் யாராலும் எளிதாக பாடிவிட முடியாது . Tv கோபால கிருஷ்ணன் தான் குரலினார் என எத்தனை பேர் அறிவார்கள்… இளையராஜா பாடல் என்றே அறியப்படுகிறது.

உலகம் மோசமானதா இல்லையா...

மாதங்கள் அல்ல, ஆண்டுகள் அல்ல, பிறவிகள் பல எடுக்கலாம், இந்தப் பாடலின் முகப்பு இசையை மட்டுமே ரசிக்க. இன்னும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் மிருதங்கத்தை அணு அணுவாக ரசிக்க. அதை அடுத்தும் பல பிறவிகள் எடுக்கலாம், இந்தப் பாடலின் இரு பின்னணி இசைச் சேர்ப்பை நுகர. அதன் பின்னும் பல பிறவிகள் எடுக்கலாம் டி.வி. கோபாலகிருஷ்ணனின் ஹம்மிங்கை ரசிக்க. ஒரே ஒரு பிறவியும் எடுக்கலாம் மாதவியின் முக பாவனைகளை ரசிக்க ‘தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமயிலே...’

அந்திமொழி பாடலையாவது கேளுங்கள் ...நன்றி ..

https://youtu.be/sL8jk3olC1Q




கேள்வி : ஒருவர் அவர் வயதுக்குரிய மனஉறுதியை பெறாமல் போவதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்க முடியும்?

என் பதில் :


மனஉறுதியோ மனமுதிர்ச்சியோ எப்பவும் வயதை வைத்து வருவதில்லை.நீங்கள் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்தே வருகிறது.

சின்ன வயசுலேயிருந்து இது உன்னால் முடியாது, நடக்காது, நமக்கு எதுக்கு வம்பு, எளிய வழியிலேயே போவோம்னு சொல்லி வளத்துருப்பாங்க.

ஏதாவது நீங்க ஆர்வமா செய்யலாம்னு நினைக்கும் போது இதை நான் முன்னாடியே செஞ்சி பாத்திருக்கேன். இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னா? ஆரம்பிக்கும் போதே முட்டுக்கட்டை போட்டால் எப்படி மன உறுதி கிடைக்கும்.

மனஉறுதி எப்போ வரும். நாம தனியா ஒரு விஷயம் செய்யும் போது. ஏதாவது செய்ய போய் அதில் தோல்வி அடைந்து விழுந்து எழுந்திருக்கும் போது மன உறுதி, தைரியம், தன்நம்பிக்கை எல்லாம் தான வந்துடும்.

உங்க வீட்டுல போய் இப்ப பாக்குற வேலையை விட்டுட்டு ஒரு பிசினஸ் ஆரமிக்க போறன்னு மட்டும் சொல்லி பாருங்க தெரியும்.

தேவையில்லாத அட்வைஸ்லாம் வரும். தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, பக்கத்துவீட்டுகாரங்க, சொந்தகாரங்கன்னு எல்லாரும் அட்வைஸ் பண்ண வந்துடுவாங்க.

எல்லாரும் சொல்றது ஒன்னு தான். ரிஸ்க் எடுக்காத இருக்குறதை காப்பாத்திக்க. எல்லாருக்கு சீக்கிரம் பணக்காரங்க ஆகணும்னு ஆசை ஆனா ரிஸ்க் இல்லாமல்.

வாழ்க்கை இப்படியே போய்டுமா சார்ன்னு கேக்க தோணுது. பெரும்பாலான பெற்றோர்கள் இப்படிதான் பிள்ளைகளை வளர்த்துக்கிட்டிருக்காங்க.



அதுவும் இந்த கொரோனா காலத்தில் இதையெல்லாம் தாண்டி வாழ்க்கையில சில பேர் ரிஸ்க் எடுப்பாங்க. ஊர் என்ன சொன்னா என்ன? உலகம் என்ன சொன்னா என்னன்னு? அவங்கலாம் தான் பல தடைகளையும் தாண்டி உயரத்தையும் மனஉறுதியையும் அடையுறாங்க.

நன்றி ....வாழ்த்துக்கள் ...
கேள்வி : மனைவிகள் எல்லாம் பளிச் பளிச் என்று இருக்கும்போது இந்த கணவன்மார்கள் மட்டும் எப்போதும் பாவமாக இருப்பதேன்?

என் பதில் :..


பொன்னிறமான தோசைக்கு பின்னால்,கரு கருவென தோசை கல் இருப்பதை போல ...

கண்கவரும் சிற்பத்திற்கு பின்னால் , கிழிந்த வேட்டியுடன் ஓர் சிற்பி இருப்பதை போல ...

அழகான ரோஜாமலருக்கு காவலாளியாய் இருக்கும் முற்களை போல தான் தந்தை மார்களும் , கணவன் மார்களும்,

தோசை தாங்கும் வெப்பத்தை விட, தோசைக்கல் பல மடங்கு வெப்பத்தை தாங்கினாலும் ,இறுதியில் அந்த தோசைக்கு கிடைக்கும் அங்கீகாரம் ,தோசைக்கல்லுக்கு கிடைப்பதில்லை.அப்படி பட்ட அங்கீகாரத்தை தோசைக்கல் எதிர்பார்ப்பதும் இல்லை, விரும்புவதும் இல்லை.

சந்தோஷம் என்ற ருசியுடன் ,சிரிப்பு என்ற பொன்னிறம் தோசைக்கு கிடைப்பதே, தோசைக்கல்லின் லட்சியம்.

நன்றி 

செவ்வாய், 9 ஜூன், 2020

 கேள்வி :..நமது வாழ்க்கையின் அங்கமான ஒருவர், நம்மை விட்டு எவ்வளவு தூரம் விலகி போனாலும் , மீண்டும் ஈர்க்கப்பட்டு கட்டாயம் வந்து சேருவார் என்ற நம்பிக்கை உண்மையா அல்லது கானல் நீரா ?

என் பதில் :..


" நாளை ன்னு ஒன்னு இல்லாத போது, கைல எஞ்சி இருக்கது கடந்த காலம் மட்டும் தான்..


தனிமையில் இருக்கும் போது இப்படி பிரிந்து வந்தவர்களை பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்களா??


கிட்டத்தட்ட ஏழு கடல் ஏழு மலை தாண்டி, நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட ஒருவர் நம்மை சந்திக்க வருவது போன்ற காட்சி மணிரத்னம் அவர்களின் படத்தில் வேண்டுமானால் இடம்பெறலாம்..


நிஜவாழ்க்கையில் அதே போல எதிர்பார்த்தால், "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.." என்று சோகப் பாடல் பாட வேண்டியது தான்.. ஒருவரும் திரும்பி வர மாட்டார்..(நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஆனால் முக்கால்வாசி அப்படி தான்.)


நிஜமாக நடந்த ஒரு கதை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆங்கில வார இதழில் வாசித்தேன். 6 வருட காதல், 9 வருட நட்பு.. பிரிந்துவிட்டது. காரணம் செக்ஸ் பெஃபோர் மேரெஜ்.


அந்த ஆணுக்கு, தன் காதலிக்கு தன் மீது நம்பிக்கையில்லை என்ற எண்ணம். காதலிக்கு, காதலன் தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வில்லை என்ற எண்ணம்.பிரிந்துவிட்டனர்.


சில மாதங்கள் கழித்து அந்த பெண்ணிடம் இருந்து அவருக்கு ஒரு மடல் வருகிறது..


என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவருடன் எனக்கு காதல். அவர் என்னை நன்றாக புரிந்து கொண்டுள்ளார். எதற்காகவும் என்னை கட்டாயப்படுத்துவதில்லை. என் உணர்வுகளுக்கு அவரிடம் மதிப்பு உள்ளது..
அவ்வளவு தான்..


காதலும் சுயமரியாதையும் எதிரிகள் என்று நான் படித்திருக்கிறேன்.. காதல் இருக்கும் இடத்தில் சுயமரியாதை இருக்காது. அப்படி இருந்தால் அந்த உறவு நீண்ட நாள் நிலைத்திருக்காது..


பிரிந்து போன ஒருவர் சுயமரியாதை பார்த்துக்கொண்டு இருந்தால் திரும்பி வர நினைக்க மாட்டார்.. ரெண்டு பேருமே அப்படி இருந்தால் அந்த உறவின் ஆயுட்காலம் அவ்வளவு தான்..


நமக்கு தெரியும், பள்ளிக் கூடம் படிக்கும் போதே காதல் வயப்படுவது இந்த காலத்தில் அதிகமாகிவிட்டது. இந்த காலத்தில் எந்த பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுகிறார்கள்.??


அன்பு பாசம், அக்கைறை, முன்னுரிமை, ஆறுதல், பாதுகாப்பு உணர்வு இதெல்லாம் ஒருவரிடம் இருந்து கிடைத்தால், மனித மனம் அதை விரும்பும்..


இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால், பிரிந்து சென்றவர்களுக்கு வேறு ஒரு புது உலகம் உருவாகி இருக்கலாம். 'தே தே ப்யார் தே' என்று ஒரு படம் உள்ளது. அதில் அஜய் தேவ்கன் தான் லீட்.. 50 வயது. ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு 25 வயதில் ஒரு பெண்ணும் 20 வயதில் ஒரு ஆணும் இருக்கையில், தன் மகளின் வயதுடைய ஒரு பெண்ணிடம் காதல் வரும்..


Human heart is like WiFi.. if it goes away from its dear one, it catches another network..


இதையெல்லாம் நான் தவறு என்றோ சரி என்றோ சொல்லவில்லை..


அன்போ, காதலோ அல்லது ஒரு உறவோ நம்மிடம் இருக்கும் வரை தான் நமக்கு சொந்தம்.. நம்மை விட்டு பிரிந்து விட்டால், பிரிவின் வலி, தனிமை போன்றவை ஏற்கனவே கஷ்டப்படுத்திக் கொண்டு இருக்கும். இந்த சமயத்தில் ஆறுதலான ஒரு நட்போ ஏதோ ஒன்று அந்த வலியை மறக்க செய்தால், நமது மனம் அவரது துணையை விரும்ப ஆரம்பித்துவிடும்.


திரும்பி வந்தால் வரட்டும். வருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்க வேண்டாம். எதையும் எதிர்பார்க்காமல் நாம் நமது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது நல்லது..

நன்றி ...வாழ்க்கை வாழ்வதற்கு ..

திங்கள், 8 ஜூன், 2020

கேள்வி : வாழ்க்கையைப் பற்றி யாரும் உங்களிடம் சொல்லாத சில விஷயங்கள் எவை?

பதில் :...

கர்மாவை பற்றி யாரும் என்னிடம் கூறியது இல்லை. நான் என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது. மேலும் படித்து அறிந்து கொண்டேன்.. சிறு வயதில் "வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான்" என்ற பழமொழியை படித்து இருப்போம்.

ஆனால் அதன் அர்த்தத்தை நான் வெகுநாட்களாக தவறாக புரிந்து கொண்டிருந்தேன். நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு கிடைக்கும். அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை.


எனக்கு ஒரு கொள்கை உள்ளது. யாரையும் பாதிக்காத வரை எதுவும் தவறில்லை. ஆனால் அது தவறா இல்லையா என்பது கர்மாவின் தீர்ப்பு என்று பிறகு தான் புரிந்து கொண்டேன்.

உதாரணமாக,

நான் என்னுடைய ஒருவேளை உணவை பாதி சாப்பிட்டு மீதியை சாப்பிட முடியாமல் வீணாக்கி விடுகிறேன். நான் வீணாக்கிய உணவு ஒருவருடைய பசியை போக்காது. யாருக்கும் பாதிப்பு இல்லை. இது என்னுடைய கொள்கை.

ஆனால் என்றைக்காவது ஒருநாள் எனக்கு பசிக்கும் போது என்னால் உண்ண முடியாத நிலை வரும். (அனுபவமும் உள்ளது)இது தான் கர்மாவின் கொள்கை.

ஒருவர் என்னை ஏமாற்றினால் வேறு ஒருவரால் அவர் ஏமாற்றப்படுவார். நான் ஏமாற்றப்பட்டது முன்ஜென்மத்திலோ அல்லது எப்போதோ நான் செய்த என்னுடைய கர்மவினை.

என் பெற்றோரின் முன்னிலையில் என்னுடைய சுதந்திரம் என்ற பெயரில் நான் ஏதேனும் தவறு செய்தால் நாளை என் பிள்ளை என்னை எதிர்த்து ஏதேனும் ஒரு தவறு செய்வார். அதுவும் ஒருவகையான கர்மா.


ஒருவரை பிறரிடம் அவர் அறியாமல் அவதூறாக பேசினால் நான் அறியாமல் என்னை யாரேனும் பேசுவார்கள்.

கேள்வி :..தனிமையின் வலி எப்படி இருக்கும்? அதனை அனுபவித்துள்ளீரா?


பதில் :..


நீங்கள் ஒரு அழகான காதல் காவியம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் போக போக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 30 பக்கங்கள் உள்ளன.

அப்போது பார்த்து உங்கள் வீட்டிற்க்கு விருந்தினர், அதுவும் நெருங்கிய உறவினர் வருகின்றனர். உங்கள் அம்மா உங்களை அழைத்து அவர்களுடன் அமரும் படி கூறிவிட்டு அவர்களுடன் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு நீ பேசிக் கொண்டிரு என்று கூறி உங்களை அவர்களுடன் உட்கார விட்டுவிட்டு அவர்களுக்கு ஏதேனும் சமைக்க சென்று விடுகிறார்..

அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்???

நாம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் நமது உடல் பொருள் ஆவி அனைத்தும் அந்த நாவலில் தானே இருக்கும்.?

எனக்கெல்லாம், இவிங்க லாம் நம்ம இன்டெரெஸ்ட்டா கத படிக்கிறப்ப தான் வரணுமா? அப்படியே வந்தாலும் இந்த அம்மா ஏன் நம்மல தொந்தரவு பண்றாங்க என்று இருக்கும்.

Situation 2:

இன்னொரு நாள் ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். அதுவும் பயங்கர ஆர்வமாய் ஸ்வாரஸ்யமாய் போய்க் கொண்டு உள்ளது. அப்போது பார்த்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வா வெளிய போலாம். கோவிலுக்கு போய்ட்டு அப்படியே எங்கயாச்சும் வெளில போலாம் என்று அழைக்கிறார்கள்.

அப்போது நமது மனநிலை எப்படி இருக்கும்??

இப்போது தான் கோவிலுக்கு போக வேண்டுமா?? இந்த நல்ல நாளைக்கு தான் நான் இந்த படத்த பாக்கணுமா? என்று இருக்கும். அப்போதும் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து சேரும் வரை நினைவு முழுக்க அந்த படத்தில் தானே இருக்கும்.

Situation 3:

மறுநாள் ஒரு தேர்வு இருக்கிறது என கொள்வோம். நல்லா படித்தவர்களுக்கு இடையூறுகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜாலியாக தான் இருப்பார்கள். அதே போல சுத்தமாக படிக்காதவர்களும் அப்படி தான். ஆனால் இந்த அரைகுறை கேஸ்கள் ஒரு வாரத்திற்கு முன்பே இந்த வாட்ஸப், facebook, இன்ஸ்டாக்ராம் என அனைத்து சோசியல் மீடியாவையும் logout அல்லது அன்இன்ஸ்டால் செய்துவிட்டு முட்டி முட்டி படித்துக்கொண்டிருப்பார்கள். அரைகுறை கேஸ். எவ்வளவு படித்தாலும் பத்தாது போலயே ஒரு மனநிலை தான் எப்போதும் இருக்கும்.


அந்த மாதிரி ஒரு தேர்வு மறுநாள் என கொள்வோம். அப்போது பார்த்து அங்க போயிட்டு வா.. இங்க போய்ட்டு வா என்று ஒரு நாள் முழுவதும் செலவழியும் படி ஏதேனும் ஒரு வேலையை கொடுத்தால் எப்படி இருக்கும்??

அம்மா படிக்கணும் ம்மா என்றால், என் அம்மா இத்தன நாள் படிக்காததையா இன்னிக்கு ஒரு நாள் படிக்க போற? என்பார்.

Situation 4:

ஒருநாள் எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

திடீரென உங்கள் அம்மா எழுப்பி இன்னிக்கு ஒரு விசேஷம். மறந்துட்டேன். குளிச்சுட்டு வா.. போய்ட்டு உடனே வந்துரலாம். வந்து தூங்கலாம் என்று எழுப்பினால் எப்படி இருக்கும்??

நிம்மதியா தூங்க கூட முடியலையே என்று தோன்றுமா?

எனக்கெல்லாம் அழுகையே வந்துவிடும்..

Situation 5:

ஒரு வேலை மும்முரமாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை அழைத்து வேறு ஒரு வேலை உங்கள் அம்மா சொல்ல, உங்கள் அப்பா ஒரு வேலை சொல்ல, உங்கள் பாட்டி ஒரு வேலை சொல்ல எல்லாரும் அவசரம் என காலில் சுடுத்தண்ணீர் ஊற்றி கொண்டு பைத்தியம் பிடிக்க செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்??

இந்த வீட்டில் இல்லாமல் பேசாமல் எங்கேனும் ஓடிவிடலாம் என்று தோன்றுமா??

கொஞ்சம் கோபத்தை வெளியே காட்டிவிட்டாலும் என் அம்மா பத்ரகாளி ஆகிவிடுவார். அடுத்து ஒரு வாரத்திற்கு எந்த ஒரு வேலையும் என்னிடம் சொல்ல மாட்டார். சரியாக பேச மாட்டார்..

இந்த எல்லா சூழ்நிலையிலும் ஒரு முறையேனும் நாம் தனியா இருந்தால் இந்த தொல்லை எல்லாம் இருக்குமா என்று தோன்றும் தானே.. அடிக்கடி நான் நினைப்பேன் ஹாஸ்டலுக்கு கூட பேசாம போய்ரலாம்.

தனிமையின் வலி எப்படி இருக்கும்? அதனை அனுபவித்துள்ளீரா?

இங்குள்ள தனிமை என்பது எதை குறிக்கிறது என தெரியவில்லை. அதாவது எல்லாரும் இருக்கும் போது ஒரு தனிமை உணர்வு இருக்குமே.. காதல் தோல்வியின் தனிமை, பிடித்தவரின் பிரிவின் தனிமை போன்றவை.

ஆனால் யாருமில்லாத தனிமையை தான் நான் முற்றிலும் விரும்புவேன். நமக்கு ஒரு வேலையை இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும்.

ஏதேனும் படிக்க இருக்கும். அது போர் அடித்தால் வேறு பொழுது போக்கு புத்தகம் படிப்பேன். அதுவும் மொக்கையாக தோன்றினால் படம் பார்ப்பேன். அதுவும் பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். வேலை இருந்தால் தான் வெளியே செல்வேன். அந்த வேலைகளையும் சீக்கிரம் முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட தான் பார்ப்பேன்.

தனிமை என்பது வலியா அல்லது சுகமா என்பது நாம் அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது.

சும்மா இருக்கும் மனம் உலைகளம் என்று கூறுவார்கள். அப்படி சும்மா இருக்கவிடாமல் நமக்கு நாமே ஏதேனும் ஒரு வேலையை கொடுத்துக் கொண்டால் தனிமை கூட நன்றாக தான் இருக்கும்.

நன்றி ....
கேள்வி :.பெண்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கும் அளவு ஆண்களுக்கு இருப்பதில்லையே ஏன்?

பதில் :...

பெண்களை விட ஆண்களுக்குத்தான் சகிப்புத்தன்மை அதிகம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கான விளக்கத்தை அளிக்கிறேன்.

முதலில் சகிப்புத்தன்மை என்றால் என்ன என்று பார்க்கலாம்.

உதாரணத்திற்கு,

ஒரு ஆசிரியரை எடுத்துக்கொள்ளலாம். வீட்டில் தன்னுடைய இரண்டு குழந்தைகள் சத்தமாக பேசி சிரித்து விளையாடினால், ஏன் சத்தம் போடுகிறீர்கள்? அடித்து விடுவேன் என்று மிரட்டும் தொனியில் அடக்கலாம். அதே ஆசிரியர் பள்ளியில் 20 பிள்ளைகள் சத்தம் எழுப்பினால் அடித்து விடுவேன் என்றெல்லாம் மிரட்ட முடியாது. அமைதியாக இருக்குமாறு சொல்லத்தான் முடியும். ஒருவரே இருவேறு இடங்களில் தன்னுடைய சகிப்புத் தன்மையை மாற்றிக் கொள்கிறார்.


ஒரு அலுவலகத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்த விஷயத்தை நான் ஆமோதித்தால், எனக்கு சகிப்புத்தன்மை உண்டு என்று அர்த்தம்.


எனக்கும் என் நண்பருக்கும் இருவேறு விதமான கருத்துக்கள் இருந்தபோதும் நட்பை துண்டித்து விடாமல் தொடர்ந்தால் அதற்கும் சகிப்புத்தன்மை என்றுதான் பெயர்.


இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கலாம். சகிப்புத் தன்மை அதிகம் கொண்டவர் ஆண்களா அல்லது பெண்களா என்று.

இவ்வாறு கருத்திலும் செயல்பாட்டிலும் இருக்கும் சகிப்புத்தன்மையை பார்த்தோம். அடுத்தது முக்கியமாக மருத்துவத்துறைக்கு வரலாம். சகிப்புத்தன்மை பற்றி அறிய சிறந்த உதாரணம் மருத்துவத்துறை.


இந்தியாவில் ஆண்-பெண் மருத்துவர்களின் சதவிகிதம் ஏறத்தாழ சமமாக இருந்தபோதிலும், மருத்துவத் தொழிலை தன் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து செய்பவர் ஆண் மருத்துவரே.


இந்தியாவில் மகளிர் மருத்துவத்தைப் பற்றி Dr.ராஜேஷ் மற்றும் Dr.மம்தா அவர்கள் AIIMS க்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்கள். அவர்கள் இன்னும் இந்தியாவின் மருத்துவத்துறையில் ஆண்களின் ஆதிக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.(பெண்ணியவாதிகளே ஆணாதிக்கம் என்று அவசரமாக படித்து விடாதீர்கள்).


கிராமம் முதல் நகரம் வரை பெண் மருத்துவர்களுக்கு தொடர்ந்து தேவை இருப்பினும், பெண்களால் திருமணம் குழந்தைப்பேறு குடும்பம் என்ற கட்டமைப்பை தாண்டி சமுதாயத்திற்கு தொடர்ந்து சேவை புரிய வரமுடியவில்லை.


அறுவை சிகிச்சை என்று வரும்பொழுது ஆண்களே கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் ஒரு அறுவை சிகிச்சைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே ரத்தம் சதை எலும்பு நரம்பு என்று சகித்துக் கொண்டு எல்லாவற்றுடனும் போராடவேண்டும்.



இயல்பாக பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு தொடர்ந்து நின்றுகொண்டு அறுவை சிகிச்சை செய்ய இயலாது. இக்காரணத்தினாலேயே பெண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை துறையை தேர்ந்தெடுக்க தயக்கம் கொள்கிறார்கள்.


புகழ்பெற்ற மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரிவில் சென்று பாருங்கள். ஆச்சரியம் கொள்வீர்கள். ஆண் மருத்துவர்களே இத்துறையில் சிறப்பாக செயல்படுகிறார்கள். பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லையென்றால் ஒரு ஆண் மருத்துவரால் எவ்வாறு இத்துறையில் சிறப்பாக செயல்பட முடியும்.


என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், பெண்ணானவள் தன்னுடைய கணவர் குடும்பம் என்று வரும் பொழுது மட்டுமே எவ்வளவு வேண்டுமானாலும் சகித்துக் கொள்வாள்.



ஆனால் பொதுவெளியில் ஒரு ஆணால் மட்டுமே பாரபட்சமின்றி சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள முடியும்.

நன்றி ....

ஞாயிறு, 7 ஜூன், 2020

பிடித்தவர்கள் எல்லோரும் அழகான மௌனமாகவும் , நல்லதொரு மெல்லிய இசையைப் போன்றும் இருக்கிறார்கள் ..

   பிடிக்காதவர்கள் மூளையை வீணாக்கும் பெரும்  இரைச்சலாக மட்டுமே இருக்கிறார்கள்..

இங்கு இரைச்சல்களே அதிகம்.. நல்லதொரு மெல்லிய இசையையும் மௌனத்தையும் உணரவே முடிவதில்லை...

https://youtu.be/gS3SEhTOjeg

சனி, 6 ஜூன், 2020

கேள்வி :..நம்பிக்கை துரோகத்தை சகித்து கொள்வது எப்படி?

என் பதில் :..

நம்பிக்கை துரோகம் நமது உள்ளத்தை மட்டுமல்ல உடலையும் உருக்கும். அந்த நொடியில் கண்டிப்பாக , கோபம், வலி, அவநம்பிக்கை, அதிர்ச்சி போன்றவை நம் உடலை தாக்கும். அடுத்து நம் மனதை எந்த அளவிற்கு அது தாக்கும் என்றால், யார் அதை செய்தது, எந்த விஷயத்தில் செய்தது என்பதை பொறுத்தது.

ரொம்ப உணர்ச்சிபூர்வமான விஷயத்தில் நமக்கு நம்பிக்கையான ஒருவர் இதை செய்திருக்கும்போது, எப்படி மீண்டு வருவது? எத்தனையோ வழிகள் சொல்லப்பட்டாலும், முதலில் செய்ய வேண்டியது இதுதான்.

அது நம்மை ரொம்பவும் காயப் படுத்தும் என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். . இதயத் தாக்குதலுக்கு இணையானது அது. அதன் தொடர்ச்சியாக வரும் மனச் சோர்வு ….. யாரோ நம்முடைய இதயத்தை வேரோடு பிடுங்கி, தூக்கிஎரிந்தது போல…வெறும் சூனியமாய் ஆனது போல, உடம்பிலுள்ள சக்தி எல்லாத்தையும் பிழிஞ்சு எடுத்தது போல….உடம்பே பற்றி எறிவது போல…இதயமே சுக்கு நூறாய் ஆனது போல…

அந்த வலி ..அனுபவிக்கத்த்தான் வேண்டும்….ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது…. எல்லோரும் அந்த கட்டத்தை தாண்டித்தான் வந்திருக்காங்க. நாமளும் தாண்டனும். தாண்டுவோம்.

அடுத்தது ….நம்பிக்கை துரோகம் செய்த நபர்… அவர் எந்த அளவுக்கு நமக்கு முக்கியமுன்னு பார்க்கணும். இந்த காரியத்தை தெரிந்தே செய்தாரா? நாம படறகஷ்டம் அவருக்கு தெரியுமா? அதற்க்கு வருத்தப்படுறாரா? நம்மையே கேட்டுக்கணும்.சந்தர்ப்பம் கிடைச்சால், அவர் வேண்டினால், அவர் தரப்பையும் கேட்போம். பிறகு முடிவு செய்வோம், நம்முடைய அடுத்த கட்ட வாழ்க்கை பயணத்திற்கு அவர் தேவைதாணா? தேவை என்றால் அவரை மன்னிக்க பழக வேண்டும். கஷ்டம் தான். நமக்கு நாமே கொஞ்சம் டைம் கொடுப்போம். அவர் நமக்கு செய்த, நமக்கு தெரிஞ்சவங்களுக்கு செய்த நல்ல காரியத்தை ஞாபகப்படுத்திக்குவோம். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மேலிருந்த பழியுனர்ச்சியை துடைப்போம். இது போல திரும்பவும் நடக்காம இருக்க வழி தேடுவோம்.

முடியாதா? பிரியறதுக்கு தயாராவோம். அதுதான் நல்லது.

கடைசியாக"நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோமின்னு" பயணத்தை தொடருவோம். நமக்கு நாமே அடிக்கடி சொல்லி கொள்வோம். நடந்த தவறுக்கு நாம் காரணம் இல்லையின்னு.நம்மை நாம் காயப்படுத்திகாம இருக்கிறது ரொம்ப முக்கியம். அதே போல மத்தவங்க செய்ததையும் நியாயப்படுத்த வேண்டாம்.

இது நடந்ததாலே மனுஷங்க மேல நாம வச்சிருந்த நம்பிக்கை குறையக்கூடாது. எல்லோரும் ஒன்னு கிடையாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது இங்கே செல்லுபடி ஆகாது.நம்பிக்கை வைக்கிறதுக்கு எத்தனையோ பேர் உண்டு..உங்களைப்போல..இந்த ஒரு சம்பவம் எவ்வளவு கெட்டதானாலும் நம்ம வாழ்க்கையை மாற்ற கூடாது. நாம எப்போதும் போல திறந்த மனசோடவே இருப்போம். அதை ஒரு அனுபவமா எடுத்துக்குவோம். அந்த வலி? அது தான் நாம் இன்னும் மனிதத்தன்மையோட இருக்கோம்னு காட்ற விஷயம்.. அது இந்நேரம் வடுவாயிருக்கும். இல்லேனாலும் பின்னாடி ஆயிடும். உடைஞ்ச இதயம்? இருக்கிரதிலேயே உடைய உடைய வலிமையாறது அது தானாம். அப்புறம் என்ன?


வாழ்க்கை வாழ்வதற்கே ....