கேள்வி : ஒரு வங்கியில் நிரந்திர வைப்பு தொகையில் (Fixed deposit) முதலீடு செய்த பின்பு, அந்த வங்கி திவாலாகிவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்குமா?
என் பதில் :
வைப்புத் தொகையோ, சேமிப்புக் கணக்கோ, எதுவாகினும் தனியார் வங்கிகளிலோ அ பொதுத் துறை வங்கிகளிலோ தாங்கள் வைத்திருக்கும் சேமிப்பு தொகை வட்டியையும் சேர்த்து ரூபாய் 5 லட்சம் வரை வைத்துக் கொள்வது நல்லது. இந்த உச்ச வரம்பை தாண்டும் பட்சத்தில், வங்கிகள் திவாலானால் , ரூபாய் 5 லட்சம் வரை DICGC என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பை தருகின்றன. இந்த உச்ச வரம்பை தாண்டும் பட்சத்தில் , இன்சுரன்ஸ் கம்பெனி ஏமாற்றம் தர வேண்டியதிருக்கும்.
இதற்கு மேல் போடுவதாக இருந்தால், தங்களது மனைவி பெயரில் ரூபாய் 5 லட்சம் வரையும், தங்கள் மனைவி மற்றும் தங்களையும் இணைத்து joint account மூலமாக மற்றொரு ரூபாய் 5 லட்சம் ஆக மொத்தம் ரூ 15 லட்சம் இருவரையும் சேர்த்து ஒரு வங்கியில் போடுவது நல்லது. குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் தலா ரூபாய் 5 லட்சம் வரை அவர்கள் பெயரில் போடலாம். வட்டியையும் சேர்த்து ரூபாய் 5 லட்சம் தான் இன்சூரன்ஸ் நிறுவனம் தரும்.
பொதுத்துறை வங்கிகளில் , எந்த உச்ச வரம்பும் இன்றி வைப்புத் தொகை வைத்திருப்பவர்களுக்கு, அரசாங்கம் கொடுத்து விடும் என பாராளுமன்றத்தில் சில காலத்திற்கு முன்பு, அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். இருப்பினும், தாங்கள் பல வங்கிகளில் இந்த லிமிட் தாண்டாது வைப்பது நல்லது.
பல அரசாங்க கொள்கை முடிவுகள், சமீப காலமாக மாறிக் கொண்டு வருவதால், மக்கள் கவனமாக நம் உழைப்பால் சேர்த்த பணத்தை இழந்து விடக் கூடாது என்பது எனது கருத்து. வட்டிக்கு ஆசை பட்டு உள்ளதையும் இழந்து விடக் கூடாதல்லவா ? வைப்புத் தொகை போடும் முன்பு DICGC இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று அந்த வங்கியிடம் கேட்டு போடவும்.
நன்றி. வணக்கம்.
V .K .சிவக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக