செவ்வாய், 27 ஏப்ரல், 2021

 கேள்வி :  இளம் வயதில் தோன்றாத தொழில் முனைவோராக வேண்டும் என்ற உந்துதல், நாற்பது வயதிற்கு மேல் அதிகம் தோன்றுவது ஏன்?


என் பதில் : 


வாழ்க்கை நாற்பதில் ஆரம்பிக்கிறது என்ற கூற்றை பார்த்து இருப்பீர்கள்.


அது ஓரளவு உண்மை தான் என்று நினைக்கிறேன்.


20 இல் மன முதிர்ச்சி கொஞ்சம் கம்மி தான். பிற கவன சிதறல்கள் அந்த வயதுக்கு உரிய கோபம், காதல் சுழற்சிகள், வேலைக்கு போய் கொண்டு இருப்பினும் அதனை தாண்டிய நுண் கல்வி சிந்தனை இல்லாமல் சிதற கூடிய காலம் தான். தவறு இல்லை. 25 வயது என்று வைத்து கொள்வோம். நான் துருக்கி சென்றேன் டென்மார்க் சென்றேன் என்று ஒரு நண்பர் இன்ஸ்ட்டா போஸ்ட் போடும் போது வருடம் முடிவதற்கு முன்னர் நாமும் ஒரு லடாக் லே ஆவது விசா கிடைக்கலேன்னாலும் போக வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கும்.


ஆனால் இதே 20-30 வயதுக்குள் தான் மூன்று வேலை கூட சளைக்காமல் செய்ய, படிக்க வலு இருக்கும்


30 கள் பெரும்பாலும் குடும்பம் மற்றும் வேலை இரண்டை எப்படி சமாளிப்பது இதிலேயே சென்று விடுகிறது. வீடு கட்ட வாங்கிய கடன், குடும்பம் குழந்தை பற்றி தீவிர பிளானிங், ஒவ்வோர் செலவு அல்லது பெரியோர்களுக்கான பிரச்சனைகள் இவற்றை சமாளிப்பது. இந்த நேரத்தில் எனெர்ஜி ஆற்றல் உண்டு ஆனால் அளவுக்கு மீறி குடும்ப சுமையை அதிகமாக்கி யோசிக்கின்றது மனம். நண்பன் இரண்டு குழந்தை பெற்று கிறீன் கார்டு வாங்கி விட்டான்...நாம இன்னும் ரேஷன் கார்டு கூட வாங்கலையே என்று பல ஆண்களே கூட புலம்புவதை பார்த்து உள்ளேன். ஆண்களே என்று ஏன் சொன்னேன் என்றால் பெண்களை விட சற்று கம்மியா புலம்புவார்கள். ஆக இந்த 30-40 பெரும்பாலும் உறவுகள் குடும்ப கவன சிதறல் எண்ணிலடங்கா உள்ளது. 


தினுசு தினுசாக இதில் பிரச்சனை. அந்த பிரச்சனைகளை காசாக்கும் நீதி மன்றங்கள். இதில் தப்பான பெண்டாட்டியை தேர்வு செய்த ஆணின் கதி அளவுக்கு அதிகமான கோடிகளை வக்கீலுக்கும் எக்ஸ் க்கும் கொடுப்பது இதனால் வாழ்க்கை வெறுப்பது. கேட்கவே வேண்டாம் பெண்கள் என்றால் முத்திரை குத்தப்படும் இன்னும் ஏகப்பட்ட காயங்கள். ஒரு குழந்தை இல்லேனா கூட இவளை குற்றம் சொல்லும் சமூகம் அதற்கு அவள் பொறுப்பே இல்லேன்னாலும்..விடாது. ஆக உறவு பிரச்சனை மாபெரும் அளவு ஆகும் போது எங்க தான் மற்றதை பற்றி சிந்தனை.



40 இல் உலகம் என்றால் என்ன..வாழும் காலங்களின் முக்கியத்துவம் உண்மையை புரிந்து கொள்ள தொடங்குகிறது மனம். குடும்பம் அல்லது பிற நண்பர்களுக்கு மட்டும் கொடுத்த முக்கியத்துவம் தவிர உண்மையில் மனிதன் தன்னை நேசிக்க தொடங்குவதும் 40 கள் ...


பிறருக்கு மட்டும் கொடுத்து ஏழை ஆனேனே - திருமங்கை ஆழ்வார் பாசுரத்தில் வருவது போல யோசிக்காமல் ரோபோட் போல குடும்பம் இல்ல நட்பு இல்ல கவன சிதறல்கள் தாண்டி மீண்டு வந்து ..உண்மையில் தனக்கு என்ன வேணும்? என்பதை யோசித்துதெளிவு பிறக்கிறது.


நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிறிய வயதில் மிக புகழ் பண உச்சிக்கு போகும் பலர் காணாமல் போய்'விடுவது அதிகம். ஏனெனில் அனுபவம் என்பது கம்மி.


அரவிந்து சாமி அவர்களே ரோஜா பம்பாய் போன்ற பல படங்கள் தனக்கு கொடுத்த புகழ் அங்கீகாரம் மகுடம் மிக அதிகம் என்றும் ஏற்க முடியாத நிலமை என்றும், குடும்பம் விரிசல் பட்டு கஷ்டப்பட்டு stroke வரை சென்ற அனுபவத்துக்கு பின்னர் தன் 40க்கு மேல் இன்னோர் புது வாழ்க்கை...பாதை மாற்றம் வெற்றி இதனை பற்றி ஓர் நேர்காணலில் சொல்லி இருந்தார்.


ஆகவே தான் 40 தாண்டிய பின்னரே பலர் உண்மை டெஸ்டினி பற்றி யோசிக்கின்றனர்.


ஜோதிட காரணங்கள் கூற முடியும் என்னால் ஆனால் வேண்டாம். அறிவியல் காரணங்களே யோசிப்போம்....என்ன தான் ஜோதிடம் மாற்ற முடியாத கர்மா பற்றி சொன்னாலும் இங்கு இருக்கும் பல நல்ல உள்ளங்கள் அந்த விளக்கங்களை ரொம்ப ஏற்பதில்லை. பிடிக்கவில்லை அதனை நான் மதிக்கிறேன். 

40 க்கு மேல் தெளிவு கிடைத்து டெஸ்டினி புரிந்து கவன சிதறல் இல்லமல்...இது ஒன்னு நாம செஞ்சால் போதும் என்ற அளவு அருமையான தீர்மானத்துக்கு வருகிறது மனது.


இந்த வயதில் மன்னித்தல், மறத்தல், இன்னும் பார்வைக்கு எப்படி இருக்கிறோம், எடை போடுதல் எல்லாத்தையும் மனிதன் ஓரளவு எளிதாக தாண்டுகிறான்.


ஆக 20-30 எனெர்ஜி சற்று குறைந்தாலும் அனுபவ ஞானமும், தெளிவும், நோக்கமும் புரிவதிலும், யாரும் எதுவும் கூட வரப்போவதில்லை என்று உணர்ந்தும் மனிதன் தன் குறிக்கோளை விரைவில் அடைகிறான் . 40 முதல் 60 ஒவ்வோர் மனிதனின் மிக மிக அற்புத காலம் என்றே எண்ணுகிறேன். இந்த வருடங்களில் ஏற்படும் வெற்றி, உயர்வு, சமூக பணி, செயல் திறன், focus பல கதவுகளை திறக்கிறது.


நன்றி...


என்றும் அன்புடன் சிவக்குமார் 

994406661


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக