சனி, 17 ஏப்ரல், 2021

கேள்வி : எப்படி உங்கள் தொழில், குடும்பம் கடந்து இவ்வளவு எழுத முடிகின்றது?

என் பதில் :


வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒவ்வொரு ஆணுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான விசயம் அளவுக்கு அதிகமான பொறுமை. நிதானம். சகிப்புத்தன்மை.  இது ஏன் பெண்களுக்குத் தேவையில்லையா? என்று கேட்கத் தோன்றும். உண்மை. அதில் சில சட்டச் சிக்கல் உள்ளது.

பெண்கள் என்பவர்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள் என்று எந்தப் பாத்திரமாக உங்களுடன் இருந்தாலும், வாழ்ந்தாலும் அவர்களின் எண்ணங்கள், நோக்கங்கள் எதுவும் கடைசி வரைக்கும் உங்களுடன், உங்கள் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப் போய்விடும் என்று எண்ணம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள்.

திருமணம் ஆகும் வரையிலும் அவர்களின் எண்ணங்கள் வேறு. திருமணம் ஆனதும் அவர்கள் எண்ணங்கள் வேறு. குழந்தைகள் பிறந்ததும் அவர்கள் நோக்கம் மாறும். குழந்தைகள் வளரும் போது, வளர்ந்த பின்பு முற்றிலும் அவர்கள் வேறொரு ஜீவனாக மாறியிருப்பார்கள்.  உடல்வாகு முதல் உள்ள அமைப்பு வரைக்கும் எல்லாமே மாறி இருக்கும்.

நீங்கள் எத்தனை ஆராய்ச்சி செய்தாலும், எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும் அவர்கள் மாறவே மாட்டார்கள். அவர்கள் கடைசி வரைக்கும் அவர்களாகவே இருப்பார்கள்.  என் கணவன், என் குழந்தைகள் என்று அவர்கள் சொல்லலாம்.  ஆனால் அவர்களின் முழு உணர்வும் வெளியே வருவது அபூர்வம்.

மது, மாது இருந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தேவைப்பட்ட பணத்தை சம்பாரித்துக் கொண்டு வா? என் தேவைகளை நிறைவேற்று? என்று சொல்லும் காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கை வந்து நிற்கின்றது. தாய் என்ற வார்த்தைக்குள் இருந்த அனைத்தும் காலப் போக்கில் மாறிவிட்டது.

ஆனால்......

அளவான ஆசைகள், எதார்த்தம் புரிந்த மனைவி, இதயத் துடிப்பை எகிற வைக்காத ம மகன்  இருந்தால் உங்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு வாய்ப்பு உருவாகும்.

நன்றி ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக